Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கப் படைகளின் மிலேச்சத்தனம் மீண்டும் அம்பலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_57838742_reu_grab1.jpg

ஆப்கானிஸ்தானில் சண்டையில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் உடல் மீது அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து.. கொண்டாடி இருப்பது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலவே ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் கைதிகளை கண்ணைக் கட்டி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது மற்றும் கொன்றமை ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காணொளி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க படைத்துறை.. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து தாம் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்க படைத்துறை ஒரு விசாரணையை மேற்கொண்டு குறித்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த வீரர்களை தண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மிகுதிச் சம்பவங்கள் மூடி மறைக்கப்படிருந்தன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

1981 ஆம் ஆண்டு.. தொடங்கி சிறீலங்காவிற்கு கிரமமாக பயங்கரவாத எதிர்ப்பு அல்லது ஒழிப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க.. அமெரிக்க கிரீன்பரேட் போரியல் வழிகாட்டலை வழங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றும் சிறீலங்கா சிங்களப் படைகளும் இதுபோன்ற மற்றும் இதை விட மோசமான மனித குலம் வெட்கித் தலைகுனியத் தக்க மிலேச்சத்தனமான செயல்களை போரின் போது செய்துள்ளமையையும்.. அமெரிக்கா இதுவரை அவ்வாறான செயல்களுக்காக சிறீலங்காவை பகிரங்கமாக கண்டிக்காமல்.. தண்டிக்க முன் வராமல்.. சாக்குப் போக்கு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சிங்களச் சிறீலங்கா இதுவரை இவ்வாறான மிலேச்சத்தனமான செயல்களுக்காக ஒரு ஆக்கபூர்வமான நீதி விசாரணையை மேற்கொண்டு அதன் வீரர்களை தண்டித்ததும் இல்லை..! மன்னிப்புக் கோரியதும் இல்லை. ஆனால் அமெரிக்கா சர்வதேசத்தில் தன் நற்பெயரை காக்கும் பொருட்டாவது வரும் குற்றச்சாட்டுகளின் தன்மைக்கு ஏற்ப விசாரணைகளை மேற்கொண்டு.. முழுமையாக இல்லை என்றாலும் ஒரு சாட்டுப் போக்கிற்காகவாவது அதன் சில வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த விடயத்தில் அமெரிக்கா சிறீலங்கா விட நல்ல நிலையில் உள்ளது.

தொடர்புபட்ட செய்தி கீழே..

Taliban denounce 'US Marines body desecration' video

_57838742_reu_grab1.jpg

The video has not been authenticated and it is not clear who posted it or what its origins are.

Afghanistan's Taliban has condemned a video that appears to show US Marines urinating on dead Taliban fighters.

A spokesman told the BBC: "It is not a human action, it's a wild action that is too shameful for us to talk about."

http://www.bbc.co.uk...d-asia-16524419

Edited by nedukkalapoovan

அமெரிக்கப்படைகளில் சிறுபான்மையினரே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர், அத்துடன் அரசும் ஒத்துக்கொண்டு விசாரணைகள் செய்து தண்டனையும் வழங்குகிறது.

*** ஒளிப்பதிவு - வயது வந்தவர்களுக்கு மட்டும் ***

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் ஒட்டுமொத்த வெள்ளை இனத்தவருக்கே அவமானம்..! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளி வெளியிடப்பட்டதன் காரணமாக சர்வதேச அளவில் அமெரிக்க படைகளுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போக்கும் வகையில் அமெரிக்க அரசும்.. படைத்துறையும் துரிதமாக செயற்பட்டு.. மேற்படி சம்பவத்தோடு சம்பந்தப்பட்டுள்ள குறைந்தது இரண்டு வீரர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளதுடன்.. இச் சம்பவத்திற்கு அமெரிக்க வெளி விவகார மந்திரி கிலாரி கிளிங்டன் தனது நாட்டின் கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன் மேற்படி சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்த உடனடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இதனை விட முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில்.. தமிழ் மக்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்ட சிங்கள பேரின இனவெறி அரசு தனது பொறுப்புணர்ந்து செயற்பட அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் தூண்டாது மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதும் சிறந்தது அல்ல..! இதனை உலகத் தமிழினம்.. இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் முன் நிறுத்தி நியாயகம் கேட்பது எமக்கும் நீதி கிட்ட ஒரு வலுவான அத்திவாரத்தை இடும்..!

தொடர்புபட்ட செய்தி:

US Marines identify 'urination' troops.

_57840852_jex_1287090_de27-1.jpg

At least two of four US Marines shown in a video appearing to urinate on Taliban corpses have been identified, a Marine Corps official has told the BBC.

http://www.bbc.co.uk.../world-16538159

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் உண்மை!

இதைச் சிங்களம், தனது போர்க்குற்றங்களை நியாயப் படுத்துவதற்குத் தூக்கிப் பிடிக்கப் போகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான், இப்படிப்பட்டவர்களை விட ஐந்தறிவு கொண்டமிருகங்கள் மேலானவை.

இந்தக் காணொளி வெளியிடப்பட்டதன் காரணமாக சர்வதேச அளவில் அமெரிக்க படைகளுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போக்கும் வகையில் அமெரிக்க அரசும்.. படைத்துறையும் துரிதமாக செயற்பட்டு.. மேற்படி சம்பவத்தோடு சம்பந்தப்பட்டுள்ள குறைந்தது இரண்டு வீரர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளதுடன்.. இச் சம்பவத்திற்கு அமெரிக்க வெளி விவகார மந்திரி கிலாரி கிளிங்டன் தனது நாட்டின் கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன் மேற்படி சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்த உடனடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இதனை விட முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில்.. தமிழ் மக்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்ட சிங்கள பேரின இனவெறி அரசு தனது பொறுப்புணர்ந்து செயற்பட அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் தூண்டாது மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதும் சிறந்தது அல்ல..! இதனை உலகத் தமிழினம்.. இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் முன் நிறுத்தி நியாயகம் கேட்பது எமக்கும் நீதி கிட்ட ஒரு வலுவான அத்திவாரத்தை இடும்..!

இதுவும் (அமெரிக்கர்கள் செய்தமை) யுத்த குற்றம். இதற்கு அமெரிக்காவும் உலகும் என்ன செய்யப்போகின்றது என்பதில் எமது போர்குற்ற விசாரணைகளும் பின்னப்பட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் ஒட்டுமொத்த வெள்ளை இனத்தவருக்கே அவமானம்..! :icon_mrgreen:

கனடாவில் நடந்த கடனட்டை மோசடிக்கு, வெள்ளையரை பழி வாங்கிவிட்டார் டங்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நடந்த கடனட்டை மோசடிக்கு, வெள்ளையரை பழி வாங்கிவிட்டார் டங்கு. :lol:

தமிழனா கொக்கா :D:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நடந்த கடனட்டை மோசடிக்கு, வெள்ளையரை பழி வாங்கிவிட்டார் டங்கு. :lol:

................

:icon_mrgreen:.......................

  • கருத்துக்கள உறவுகள்

இதன்மூல தாம் செய்ததும் தவறில்லை என்று சிங்களம் வாதாட வாய்ப்பிருக்கிறது. அல்லது அமெரிக்காவின் வாயைக் கட்டிவைக்க இதைப் பயன்படுத்தப்போகிறது.

ஆனால், இது ஒரு மிகப்பெரிய குற்றமே. கொல்லப்பட்டவர்களை அவமதிக்கும் ஈனச்செயல்களில் இதுவும் அடங்கும். அங்கே இறந்தவர்களின் கல்லறைகளைக் கிளறி எலும்புக்கூடுகளை சிதைக்கிறான் சிங்களவன், இங்கோ இறந்தவர் மேல் சிறுநீர் கழித்து மகிழ்கிறான் அமெரிக்கன். ராணுவம், எங்கிருந்தாலும் ராணுவம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.