Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபையில்... ஆபாசப்படம் பார்த்த அமைச்சர்கள், பதவி விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08-ministers-karnataka.jpeg

கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள்- பிரச்சனையானதால் ராஜினாமா!

பெங்களூர்: கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன.

அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஷூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக உடைகளைக் கழற்றி எறியும் காட்சிகள் வந்தன.

அதைத் தொடர்ந்து இன்னொரு வீடியோவில் ஒரு பெண்ணும் சில ஆண்களும் உடலுறவில் ஈடுபடும் காட்சிகளும் வந்தன. இதை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதியும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோரும் பார்த்து என்ஜாய் செய்கின்றனர்.

மேலும் சுற்றுச் சூழல் துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமரும் இதை எட்டிப் பார்க்கிறார்.

சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த வீடியோவை அமைச்சர்கள் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தனர்.

அமைச்சர்களின் இந்த வீடியோ குஜால் காட்சிகள் நேற்றிரவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரச்சனையில் உள்ள பாஜக அரசுக்கு அமைச்சர்களின் நடவடிக்கைகள் அவப்பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

இதையடுத்து சாவாதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அது என்னுடைய செல்போனே அல்ல. அது அமைச்சர் பாலிமாருடையது. அது ஒன்றும் ஆபாச வீடியோ இல்லை. ஒரு வெளிநாட்டில் ஒரு பார்ட்டியில் பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் வீடியோவைக் காட்டினார். கர்நாடகத்திலும் அது போன்ற பார்ட்டிகள் நடப்பதும், இதனால் நமது கலாச்சாரம் கெடுவதும் குறித்து கவலைப்பட்ட நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். உண்மையில் அது ஆபாச வீடியோவே அல்ல என்றார்.

ஆனால், அது ஒரு புளு பிலிம் வீடியோ என்பதும், ஒரு பிளாக் ஸ்பாட்டில் இருந்து டெளன்லோட் செய்யப்பட்டது என்பதையும் தொலைக்காட்சிகள் விவரமாக சுட்டிக் காட்டியுள்ளன.

இந் நிலையில் அது என்னுடைய செல்போன் அல்ல என்று அமைச்சர் பாலிமார் கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி நேற்றிரவு முதல்வர் சதானந்த கெளடா, மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, இந்த மூன்று அமைச்சர்களையும் பதவி விலக வைக்காவிட்டால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பிரச்சனையாகிவிடும் என எச்சரித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து 3 அமைச்சர்களும் இன்று காலை தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.

முன்னதாக சட்டசபையில் இருந்த கேமராமேன்களில் ஒருவர் கூறியதாவது, கூட்டம் முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கையில் அமைச்சர் சாவாதி எங்கள் பக்கம் அடிக்கடி திரும்பினார். இதனால் சந்தேகம் அடைந்து அவர் இடத்தை ஜூம் செய்தபோது அவர் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது என்றார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுறவு அமைச்சர்

பெண்கள் நலத்துறை அமைச்சர்

இவர்கள் பரவாயில்லை

துறைமுகத்துறை அமைச்சருக்கு ஏன் இந்த வேலை :lol: :lol: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டுறவு அமைச்சர்

பெண்கள் நலத்துறை அமைச்சர்

இவர்கள் பரவாயில்லை

துறைமுகத்துறை அமைச்சருக்கு ஏன் இந்த வேலை :lol: :lol: :D

அவர் தனது கடமையை செய்து இருப்பார் எத்தனை கப்பல் வருகுது எத்தனை கப்பல் போகுது என்று. :icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனது கடமையை செய்து இருப்பார் எத்தனை கப்பல் வருகுது எத்தனை கப்பல் போகுது என்று. :icon_idea: :icon_idea: :icon_idea:

கணக்கு எடுக்கமுடியுமா??? :lol::icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர்...

பள்ளிக்கூடங்களில்... பின் வரிசையில் இருப்பவர்கள் தான்... இப்படியான வேலைகளை செய்வார்கள் :D:lol::icon_mrgreen: .

சட்டசபையில் முன் வரிசையிலிருந்தே... பார்க்க, எவ்வளவு துணிவு வேணும். :icon_idea:

பள்ளிக்கூடங்களில்... பின் வரிசையில் இருப்பவர்கள் தான்... இப்படியான வேலைகளை செய்வார்கள் :D:lol::icon_mrgreen: .

சட்டசபையில் முன் வரிசையிலிருந்தே... பார்க்க, எவ்வளவு துணிவு வேணும். :icon_idea:

துணிவில்லாதவர்கள் எப்படி இந்திய அரசியலில் இறங்குவார்கள்? அதுவும் மந்திரி என்றால் துணிவு, மற்றும் இதர விடயங்களுக்கு கேட்க வேண்டுமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடங்களில்... பின் வரிசையில் இருப்பவர்கள் தான்... இப்படியான வேலைகளை செய்வார்கள் :D:lol::icon_mrgreen: .

சட்டசபையில் முன் வரிசையிலிருந்தே... பார்க்க, எவ்வளவு துணிவு வேணும். :icon_idea:

சிறியண்ணா.. நான் அப்பவே சொன்னனான்.. இந்த பெண்கள் மேம்பாட்டுத் துறையை நீங்கள் பொறுப்பேற்காதேங்கோ எண்டு. கேட்டால் தானே..!

இப்ப பெண்களே பலவீனமான ஆண்களை கவிழ்க்க... இப்படியான வீடியோக்களை செல்போனுக்கு அனுப்பி பார்க்கத் தூண்டிட்டு.. அதை ரகசியமா வீடியோவும் பிடிக்கிறாங்க..! எதுக்கும் கவனமா இருங்கோ..! :lol::icon_idea:

ஹிந்தியாவில இதுக்கெல்லாமா.. பதவி விலகுவாங்க.. என்ன கொடுமையைடா. முதலில அந்த நாட்டில எயிட்ஸை கட்டுப்படுத்துங்கப்பா...! உந்த வெட்டி ஊருக்கு பறையடிக்கிற கலாசாரமும்.. வீட்டுக்குள்ள கும்பி அடிக்கிற வாழ்க்கையும்.. தான் ஹிந்திய தேசத்துக்கு அழிவாக அமையும்..!

மேற்கு நாடுகளில் உடலுறவு (சும்மா ஒரு துவாரமும்.. குழாயும் இணைபடுவதும்.. கலங்களும்.. இரசாயனக் கூறுகளும் நிறைந்த கலவை..பரிமாறப்படுவதும்.. தான் உடல் உறவு..! இதுக்குப் போய் எதுக்கு அதிகம் அளட்டிக்கிறாங்களோ...??!) பற்றி வீடியோக்களும் கருத்தடுப்பு வழிமுறைகளும் பள்ளிகளில் 10 வயதுப் பிள்ளைக்குக் கூட காண்பிக்கப்படுகிறது. அங்கெல்லாம் எயிட்ஸும் பிறப்பு வீதமும் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு.. உயர் தர குடும்பக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. ஆனால் உப்படி.. வெட்டி பந்தா காட்டும் ஹிந்தியாவில்..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த விடயத்தை ஏன் ஒரு செய்தியாக்கினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்றத்திலே இதனை பாரத்தது சிலவேளைகளில் தவறாக இருக்கலாம். மற்றபடி எல்லோரும் இரகசியமாக ஏதோ ஒரு செக்ஸ் வக்கிரத்தை பார்க்கிறார்கள். அல்லது பாரக்க துாண்டப்படுகிறார்கள்.

இன்று எந்த பத்திரிகையில் பெண்களின் உள்ளாடை விளம்பரம் செக்சியாக வரவில்லை. இதை வீட்டில் யாரும் பாரப்பதில்லையோ? அல்லது இது செக்ஸ வக்கிரத்தை துாண்டாதா?

இன்றைய சினிமா சொல்லவே தேவையில்லை.

இது அவனவன் விடயம். இதை ஏன் .............................

பள்ளிக்கூடங்களில்... பின் வரிசையில் இருப்பவர்கள் தான்... இப்படியான வேலைகளை செய்வார்கள் :D:lol::icon_mrgreen: .

சட்டசபையில் முன் வரிசையிலிருந்தே... பார்க்க, எவ்வளவு துணிவு வேணும். :icon_idea:

இதில் இப்படத்தை அனுப்பியவர் யார் தமிழ் சிறியோ (வெளி நாட்டு மின்னஞ்சலாகியபடியால் தான் அவசரப்பட்டு திறந்திருப்பார்கள்)

இந்த விடயத்தை ஏன் ஒரு செய்தியாக்கினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்றத்திலே இதனை பாரத்தது சிலவேளைகளில் தவறாக இருக்கலாம். மற்றபடி எல்லோரும் இரகசியமாக ஏதோ ஒரு செக்ஸ் வக்கிரத்தை பார்க்கிறார்கள். அல்லது பாரக்க துாண்டப்படுகிறார்கள்.

இன்று எந்த பத்திரிகையில் பெண்களின் உள்ளாடை விளம்பரம் செக்சியாக வரவில்லை. இதை வீட்டில் யாரும் பாரப்பதில்லையோ? அல்லது இது செக்ஸ வக்கிரத்தை துாண்டாதா?

இன்றைய சினிமா சொல்லவே தேவையில்லை.

இது அவனவன் விடயம். இதை ஏன் .............................

இதில் இப்படத்தை அனுப்பியவர் காங்கிரசாகக்கூடவிருக்கும்.திட்டமிட்டு செயற்படுத்தியிருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பின் வரிசையில் இருந்து பார்க்க தெரிந்திருக்காது, அதுதான் முன் வரிசையில்.....

இந்த விடயத்தை ஏன் ஒரு செய்தியாக்கினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்றத்திலே இதனை பாரத்தது சிலவேளைகளில் தவறாக இருக்கலாம். மற்றபடி எல்லோரும் இரகசியமாக ஏதோ ஒரு செக்ஸ் வக்கிரத்தை பார்க்கிறார்கள். அல்லது பாரக்க துாண்டப்படுகிறார்கள்.

இன்று எந்த பத்திரிகையில் பெண்களின் உள்ளாடை விளம்பரம் செக்சியாக வரவில்லை. இதை வீட்டில் யாரும் பாரப்பதில்லையோ? அல்லது இது செக்ஸ வக்கிரத்தை துாண்டாதா?

இன்றைய சினிமா சொல்லவே தேவையில்லை.

இது அவனவன் விடயம். இதை ஏன் .............................

உங்களுக்கு ஒரு பச்சை...

சட்ட சபையில் எல்லாருக்கும் ஒரு கோப்பி கொடுத்து இருந்தால் வேண்டாமெண்டா சொல்லி இருப்பாங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒரு பச்சை...

சட்ட சபையில் எல்லாருக்கும் ஒரு கோப்பி கொடுத்து இருந்தால் வேண்டாமெண்டா சொல்லி இருப்பாங்கள்?

ஹலோ... சூறாவளி,

நீங்கள் இளங்கதிருக்கு, பச்சை என்று சொல்லிப் போட்டு... குத்தாமல், மறந்து போட்டியள் போலை கிடக்குது, அதை ஒருக்கா.... குத்திவிடுங்கோ. :D:icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.