Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு

Featured Replies

இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.

ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்மானத் துள்ளமையை அடுத்து தனக்கான ஆதரவைத் திரட்டிக்கொள்வதில் கொழும்பு தீவிரமாக உள்ளது.

இலங்கையிலிருந்து டில்லிக்கு விரைந்த உயர்மட்டக் குழு, ஜெனிவாவில் தமக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க உதவுமாறும், இது விடயம் தொடர்பில் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேசி, சாதகமான பதிலொன்றைத் தருமாறும் கோரியுள்ளது.

இதற்கு புதுடில்லி தரப்பிலிருந்து உறுதியான சாதகமான பதிலொன்று கொழும்புக் குழுவினருக்கு கிடைக்கப்பெறவில்லை.

இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்று தாம் தீவிரமாகப் பரீசிலித்து வருகின்றனர் என்றும் இலங்கை விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் சமரசம் பேசமுடியாது என்றும் புதுடில்லி ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.

இராஜதந்திர வழிமுறைகள் தோல்வியை நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், தாம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லியும் நிராகரித்துள்ளமையால் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் ஆதரிக்கப்போவதாக வாஷிங்டன் பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளை ஆழமாக மதிநுட்பத்துடன் பரிசீலித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா மாநாடு ஆரம்பமானாலும் இலங்கை விவகாரம் தொடர்பில் மார்ச் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்திலேயே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் எனவும் அறியக்கூடியதாகவுள்ளது.

http://news.lankasri.com/view.php?22Gp7bc3LI24eM29302jQgdd3QjR20j923e4SLLcb3pGu2

இறைவன் அவசரப்பட வேண்டாம்.அமெரிக்காவும் நோர்வேயும் கொடுத்த அழுத்ததில் மன் மோகன் உறைந்து இருப்பதாகாக் கேள்வி.அது தான் கூடான்குளம் அணு உலைப் போராட்டத்துக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு தருவதாக வேறு கூறி உள்ளார்.அமெரிக்காவின் சொற்படி நடக்காவிட்டால் இந்தியாவிற்க்குள்ளயே இவர்களுக்கு பல ஆபத்துக்கள் காத்திருக்கு ,பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிரங்கமாக ஈரானையும் ,பங்களாதேசையும், ரஷ்சாவையும் வடபகுதிக்கு அழைத்து சென்றால் இந்தியா சும்மா பார்த்து கொண்டிருக்காது தானே இந்தியாவுக்கும் கொஞ்சம் சுய மரியாதையிருக்கும் என நம்புவோமாக....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு. வயிறு குலுங்கச் சிரிப்பவர்கள் மிருகசாதி. நல்ல தீர்ப்பை இறைவன் சொல்லும் நாள் வரும்போது அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது.

70 ஆயிரத்திற்கும் மேல் படுகொலை செய்யப்பட்டு அந்தப்பிணங்களின் மேல் நின்று நடனமாடியதும் இந்த உலகம் தான் என்பதை நாங்கள் மறந்தவிடக்கூடாது.

அன்று சரத் பொன்சேகா (முன்னிலைக் கொலைகாரன்)

இன்று ராஜபக்ஷ (பின்னணி டைரக்ரர்)

எதிர்காலம் இந்தியா, அமெரிக்கா. யப்பான், ஐரோப்பா உட்பட 20 நாடுகள்

ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு இறப்பார்கள.

இவர்களால் தமிழர்களுக்கு ஏதேனும் கிடைக்கும் என்று தமிழர் நினைத்தால் அது முட்டாள் தனம்.

தங்களுக்காக செய்து கொள்ளும் நடவடிக்கைகள் எங்களுக்கு சாதகம்போல் தெரிகின்றது.

இதை நாங்கள் பாவிக்க வேண்டுமே தவிர இந்தச்சகதிக்குள் மீண்டும் சிக்கித்தவிக்கக்கூடாது.

துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்ட உயிர்கள் (ஆவிகள்) பழிவாங்கியே தீரும்.

இதில் எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கும் என்பது தெரியாது. ஆனால் அது உண்மை

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானமே சிறிலங்கா அரசுக்குச் சாதகமானது.அதில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை இல்லை என்றே தெரிகிறது.இதனைக் கூட சிறிலங்கா எதிர்க்கிறது.இதுவரை சர்வதேச விசாரணை கோரிய மேற்குலக நாடுகள் கூட இத் தீர்மானித்தின் மூலம் உள் ஊர் விசாரணையையே கோர வேண்டி இருக்கும்.இத் தீர்மானம் ஜெனிவாவில் முறையடிக்கப்படுவதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானமே சிறிலங்கா அரசுக்குச் சாதகமானது.அதில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை இல்லை என்றே தெரிகிறது.இதனைக் கூட சிறிலங்கா எதிர்க்கிறது.இதுவரை சர்வதேச விசாரணை கோரிய மேற்குலக நாடுகள் கூட இத் தீர்மானித்தின் மூலம் உள் ஊர் விசாரணையையே கோர வேண்டி இருக்கும்.இத் தீர்மானம் ஜெனிவாவில் முறையடிக்கப்படுவதே நல்லது.

உங்கள் கருத்து, சரியானது போலவே தெரிகின்றது. ஆனால் எதற்கும் ஒரு ஆரம்பப் புள்ளியொன்று, தேவை. சிங்களம் தனது ஆணைக்குழு அறிக்கையை எப்படியும் நடைமுறைப் படுத்தாது! இதுவே, ஒரு சர்வ தேச விசாரணையொன்றுக்கு, வழி சமைக்கலாம். அத்துடன் இந்தியாவையும், திருப்திப் படுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது! சர்வதேச விசாரணை வருமிடத்து, இந்தியாவே குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய நாடாகும்!இந்தியாவின் காந்தீய அகிம்சை முகமூடி கிழிந்து போனால், இந்தியாவால் சில வருடங்கள், கூடத் தாக்குப் பிடிக்க முடியாது! இந்தத் தீர்மானம், முறியடிக்கப் பட்டால், எங்களுக்காக, யார் சர்வதேச விசாரணையைக் கோரப் போகின்றார்கள்? மலையொன்று, எமக்கும் நீதிக்குமிடையே படுத்திருக்கின்றது!

//மலையொன்று, எமக்கும் நீதிக்குமிடையே படுத்திருக்கின்றது! //

மலை தகர்க்கப் படாமல் எமக்கு நீதி கிடைக்காது.மலையைத் தகர்ப்பதே சரியான போராட்டப் பாதை ஆக இருக்க முடியும்.

கூடான்குளம் அணு உலை போன்ற போராட்டங்களின் மூலமும் இந்தியாவிற்குள் எழும் மற்றைய தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் ஆதரித்துச் செயற்படும் புலம் பெயர் ஈழத் தமிழரின் போராட்டமே சரியான போராட்ட வழி முறையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

//மலையொன்று, எமக்கும் நீதிக்குமிடையே படுத்திருக்கின்றது! //

மலை தகர்க்கப் படாமல் எமக்கு நீதி கிடைக்காது.மலையைத் தகர்ப்பதே சரியான போராட்டப் பாதை ஆக இருக்க முடியும்.

கூடான்குளம் அணு உலை போன்ற போராட்டங்களின் மூலமும் இந்தியாவிற்குள் எழும் மற்றைய தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் ஆதரித்துச் செயற்படும் புலம் பெயர் ஈழத் தமிழரின் போராட்டமே சரியான போராட்ட வழி முறையாக இருக்கும்.

உங்கள் பாதை, சரியானதே நாரதர்! மிகத் தெளிவானதும் கூட!

ஆனால், இப்போது தமிழன் சாப்பிடுவதற்கும், அழுவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறான்! அவ்வளவுக்கு, இராணுவத்தினதும், ஒட்டுக்குழுக்களதும், ஆதிக்கம் கோலோச்சுகின்றது! இந்தத் தீர்மானம், இராணுவத்தை, எமது மண்ணிலிருந்து அகற்றவாவது உதவாதா? இராணுவம் அகற்றப்பட்டால், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களாவது குறையாதா? நைனாதீவுக்குப் போகும் சிங்களவன், சிறுநீர் கழிக்கும்போது, இராணுவம் வெளியில் காவல் நிற்கிறது! இது தான் அவர்கள், உருப்படியாக, A-9 பாதை முழுவதும், செய்கிறார்கள்! மக்களின், இயல்பு வாழ்க்கைக்கு, இந்தத் தீர்மானம் கொஞ்சமாவது உதவக் கூடும், என்றே கருதுகின்றேன்!

அடுத்த, 20ஆவது தொடரிலேயே ஐ.நா. சுயாதீன விசாரணையை வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

இந்த 19 ஆவது தொடர் சிங்களத்திற்கான இறுதியும் தெளிவாகவும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம்.

ஆனால், இங்கே மேற்குலகம் மற்றும் இந்தியா வேண்டுவது தமிழர் உரிமைகளை அல்ல, தமது நலன்களுக்கு உள்பட்டு சிங்களத்தை செயல்படவே.

சிங்களம் அதற்கு இணங்கப்போவது இல்லை. அந்த இடைவெளிக்குள் நாம் எமது உரிமைகளை பெறல் வேண்டும்.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தால் இயல்பு வாழ்க்கை மீளத் திருப்பப் போவதில்லை.ஏனெனில் சிறிலங்கா அதற்க்கு உடன் படப் போவதில்லை.கோதபாய மிகத் தெளிவான பதிலை வழங்கி உள்ளார். இதற்க்குப் பின்னரும் அமெரிக்காவும் இந்தியாவும் என்ன செய்ய முடியும்? மேற்குலகம் பொருளாதாரத் தடைகளை விதித்தால் அதன் அழுத்தன் சிங்கள மக்கள் மீது விழுந்து அவர்கள் தெருவில் இறங்கிப் போராடினால் ஆட்ச்சி மாறலாம்.அதனை நோக்கி அமெரிக்கா மேற்குலகம் திரும்பினால் அத் தோடு சேர்த்து தமிழரும் வ்ட கிழக்கில் இராணுவத்தை வெளியேற்றச் சொல்லிப் போராடினால் எதாவது மாற்றம் வரலாம்.

இதனை விடுத்து இந்தக் கூட்டத் தொடரின் அமெரிக்கத் தீர்மானம் என்பது சிறிலங்கா அரசுக்கு இன்னொரு ஆணைக் குழுவை அமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இருக்கும்.இதனை தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருப்பது இந்தியா.

சர்வதேச விசாரண கோரி புலம் பெயர் அமைப்புக்கள் நடாத்தும் போராட்டங்களை, இந்தியா மேற்குலக அரசுகளுடன் பேரம் பேசி திசை திருப்பி வருகிறது.

மேற்குலகமும் இந்தியாவும் மாலைதீவில் செய்ததை போன்று ஒரு மாற்றத்தை கொண்டுவர இயலாமையினால் எமது பிரச்சனையை முன்னெடுக்கின்றார்கள்.

மகிந்தா பலமாக இருப்பதும் தொடர்ந்து சீனாவுடன் உறவுகளை வளர்ப்பதும் எமது பக்கம் உலகம் பார்வையை வைத்திருக்க உதவும் முக்கிய காரணிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு எதிர்க்கட்சி வேண்டும் என்று அண்மையில் அமெரிக்கா கூறியதாக நினைவு..! மகிந்தவின் அரசியல்தான் இவர்களது திட்டங்களைக் காலிபண்ணிவிட்டது..! :D

பிரேரணை, இலங்கை அரசு அமைத்த ஆணைக்குழு தமிழர்களுக்கு ஓரளவு நீதியை வழங்கியுள்ளது என்பதுபோல்த்தான் கொண்டுவரப்படும். அந்த ஊகம் சரியாகவிருக்குமாயின் ஏன் இலங்கையரசு இந்த பிரேரணையை எதிர்க்கிறது என்பது எல்லோருக்கும் விளங்கத்தக்க நுணுக்கம் அல்ல. நன்மைக்கோ அல்லது தீமைக்கோ இலங்கையின் உள்னாட்டு (தமிழ் சிங்கள) அரசிலை சர்வதேச அரங்கில் விவாதிப்பது கணவன்-மனைவின் அன்றாட குடும்ப புடுங்குப்பாடுகளை கோட்டுக்கு கொண்டுசெல்வது போலாகும். இதை இலங்கை அரசு அயலவரின் சமரசமுயற்சிகளாகப் பார்க்காமல் விவாகரத்து வழக்காகவே பார்க்கும். இதில் மனித உரிமைகள் அமைப்புக்கள், இலங்கை இதுவரையில் நடக்கவில்லை என்று வாய்ச்சொல்லில்மட்டும் மறுத்துவரும் குற்றச்சாட்டுக்களுக்கு, சட்ட ரீதியான, மறைய அங்கத்தவ நாடுகள் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிரூபணங்ககளை வெளிவிடும். இது பல, சந்தர்ப்ப சூழ்நிலையுடன் பயனிக்கும் நாடுகளுக்கு இலங்கை போர்க்குற்றவாளி என்பதை ஏற்கவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருங்கால மர்வுகளை சிக்கல்ப்படுத்தும். அமெரிக்கா போன்ற வலுவான நாடுகள் (அல்லது அமெரிக்கா மட்டும்) தம்மிடம் இருக்கும் எந்த தடயத்தையும் இந்த அமர்வில் வெளியிடா. அவற்றை வெளியிடுவதால் அச்செயல் இலங்கைக்கு எதிரான அபிப்பிராயத்தை மட்டும்தான் வளர்க்க பயன்படும். அந்த நிலை அமெரிக்காவின் கட்டுப்பட்டை மீறி சில இடை-வலு நாடுகளைச் செயல்ப்படவைக்கும். அத்தாவது, இந்த நாடுகள், இலங்கை விசையத்தில் அமெரிக்காவின் தலைமையின் கீழ் இல்லாமல், தமது திசையில் பயணிக்க முயலும். இது அமெரிக்கா விரும்பாத விளைவுகளையும் இலங்கையில் ஏற்படுத்தாலாம். எனவே பிரேரணை விவாதத்தின் போது மேலைநாடுகள் தமது நிரூபணங்களை வைத்து பிரேரணையை முன்னேற்ற இந்த முறை முயலமாட்டா. மாற்றாக அந்த ஆவணங்களை இன்னமும் சிலகாலம் மறைத்து வைத்திருந்து இலங்கையை தனிப்பட்ட முறையில் மிரட்டமட்டும் பாவிக்கும். தேவைப்படும்போது இராமபாணமாக மாற்றி போர்க்குற்ற விசாரணை ஒன்றில் அவற்றைப்பவித்து மகிந்த சகோதரர்களை சர்வநாசம் செய்துவிடும்.

பிரேரணையின் முதலில் LLRC ஆணைக்குழு முடிவுகளை இலங்கை அரசு தானாக ஐ.நாவில் சமர்ப்பிக்க ழைக்கப்படும். அரசு மறுக்கும் தறுவாயில் தாயாரிக்கப்பட்ட பிரேரணை வாசிக்கப்படும். பெரும்பாலான வாக்கிய உரைச்சாரம் இலங்கையில் போரின் வேதனைகளில் இருந்து மீள்வதற்காக இலங்கை அரசால் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தபட்டு விசாரணைகள் நிகழ்த்தப்பட்டதை ஐ.நா அவதானித்திருப்பதை (recognize) க் காட்டுவதற்காகவே வசனமிடப்பட்டிருக்கும்.

ஆணைக்குழு இலங்கையின் நல்ல திசை நகர்வாகப் பாராட்டப்படும்.

பிரேரணையின் போது போற்றப்படும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள்:

அ). வடக்கு, கிழக்கின் இராணுவ வெளியேற்றம்.

ஆ). சகஇராணுவக்குளுக்களின் கட்டுப்பாடு.

இ). இறந்தவர்களின் மதிப்பீடு, காணாமல் போனோரின் உறவினரின் முறைப்பாடு.

ஈ). அரசாங்கங்களின் கவனிப்பற்ற (போருக்கு காரணமான) இனப்பிரச்சனை.

இலங்கை மந்தகதியில் நகர்வதாக குறைப்பட்டுக்கொள்ளப்படும்.

பரிந்துரையில் கண்டிக்கப்படும் பற்றாக்குறைகள்:

அ). ஆணைக்குழுவின் பற்றாத அதிகாரம் போர் குற்றவாளிகளை இனம் காணத்தவறிவிட்டது.

ஆ). போரை நீதியான போராக வருணித்தது (இது சாத்தியம் குறைந்தது).

மேலும் சர்வதேசம் நடுநிலை வகிப்பதாகக் காட்டப்படும். நல்லனவற்றை நடை முறைப்படுத்தவும் பற்றாக்குறைகளை இலங்கை நிவிர்த்தி செய்யவும் இலங்கைக்கு ஆள், பொருளாதார உதவிகள்(நிபந்தனைகளுடன்) வழங்க முன்வந்து உறுதிமொழிகள் வழங்கப்படும்.

இலங்கையின் நகர்வுகள்:

தெளிவாக இரண்டு வேறு வேறான முரண்பட்ட பாதைகள்; அத்தோடு இரண்டு முகங்களையும் காட்ட வேறு வேறான ஆளணிகள் பயன்படுத்தப்படும். இந்த ஆளணித்தேவையை சம்மளிக்கவும் ஒரு காரணமாக 50-100 என்ற தொகையில் ஐ.நாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

1. எதிர்க்கட்சியின் பாணிப்போக்கு:

வழமையான, விசையம்(பக்கமல்ல) சாராத, நிபந்தனை அற்ற(எதிரியின் எதிரிபோன்ற) நண்பர்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில், இந்தியாவிலும், மூன்றாம் நாடுகளிலும் வாங்கத்தக்க புது அதிகாரிகளின் தேடல் தொடரப்படும். ஏற்கனவே இலங்கையில் ஐ.நா, மேற்குவின், நாடுகளின் காரியாலங்களின் முன் நீதி கோரி போராட்ட நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இலங்கை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் கொடிய பிரேரணையை இலங்கை தோற்கடிக்க பிரட்டாத கல்லில்லை என்பது போல சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரம் நடைபெறும். நாடுகளை நாடி பிடித்து, எதிர், ஆதரவு நாடுகளின் கணக்கை வைத்து பிரேரணை வருவதை தடுக்க முடியுமா என்பது கணிக்கப்படும். இலங்கையில் போரின் போது தமிழ் மக்களுக்கு நேர்ந்த இழப்புகள், நடந்த கொடுமைகள் போன்ற கருத்துக்களில் இலங்கையால், பிரேரணை ஒன்று வருமாயிருந்தால் மென்போக்கும், வராததாக இருந்தால் கடும்போக்கும் காட்டப்படும்.

2. ஓத்துப்போகும் ஆளும் கட்சிப்போக்கு:

சிங்கள மக்களால் அறுதிப்பெரும்பாண்மையாக அரசாங்கம் தெரியப்பட்டிருப்பது மீண்டும் ஒருதடவை நாடுகளுக்கு நினைவூட்டப்படும். (அதாவது அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்கிறது, அவர்களின் எண்ணங்களை மதிக்கிறது). இலங்கையின் சர்வ மக்களும் அரசஜனநாயகமீதில் அசையாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; எனவே மேற்கு நாடுகள் இலங்கைக்கு ஒவ்வாத ஜனநாயகப்பாதையில் இலங்கையைத்தள்ளி மக்களின் நமபிக்கையை தகர்க்கக்கூடாது என்று கேட்கப்படும். சர்வதேச தலையிடு நாடாளுமன்றம் குலைந்து போகச்செய்யும். இது அரசு திட்ட மிட்டிருக்கும் தமிழ் மகளுக்கான அரசியல் தீர்வு நிறைவு காணாமல் போகச்செய்துவிடும். எனவே இனிமேலைய இந்த மாதிரி பிரேரணைகள் இலங்கையால் சகித்துக்கொள்ள முடியாதது என்று விளங்க்கப்படுத்தபடும். தீர்வு 13+ போல ஒன்று வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் ஆக்கபடும் என்றும் இதன் காலம் தாழ்வுக்கு கூட்டமைப்பின் இன்னமும் கைவிடப்படாத பயங்கரவாதமும், போர்க்குற்ற செயல்களும் என்பதுபோல் காரணம் காட்டப்படும்.

மேலதிக வழமையான வாதங்கள்: இலங்கை குறுகிய காலத்தில் கூடிய பங்கு LLRC ஆணைக்குழுவின் பரப்புரைகளை செயல்ப்படுத்திவிட்டது. எஞ்சியிருக்கும் சிலவான மற்றவற்றை செயல்ப்படுத்துவதற்காக சர்வதேசம் வழங்க வரும் உதவியகளின் நிபந்தனைகள் இலங்கையின் இறைமையில் கையைவைத்து இலங்கையை அடிமைப்படுத்துவதாக இருப்பதால் மக்களுக்காக அந்த உதவிகள் ஏற்கப்படாது மறுக்கப்படும்(மறுப்பு பிரேரணைக்காலம் மட்டும்தான், பின்னர் முடிவு பின் கதவால் மாற்றப்படும்).

பிரேரணை வருவதை தமது வாக்குக்கள் மூலம் சீனா, ருஸ்சியா போன்ற பலமானதும், இலங்கையின் லஞ்சப்பணத்தை நம்பி வாக்களிக்காததுமான நாடுகள் தடுக்க முயலும். பிரேரணை வந்துவிட்டால் பிரேரணையில் தீர்மானிக்கபட்ட முடிவுகளை எற்றுக்கொள்ள வாக்களிப்பதிலிருந்து விலகலாம். ஏன் எனில் முடிவு இலங்கைக்கு சாதகமாக முடிக்கப்படும். அதை எதிர்ப்பது இலங்கையின் நன்மைகளை எதிர்ப்பதாக வசனமிடப்பட்டிருக்கும்.

எல்லா அசைவுகளையும் தமிழருக்கு மட்டும் சாதகமாக கற்பனை செய்து பார்க்க வேண்டுமாயின் வரும் கால பிரேணைகள் எடுக்க கூடிய திசையாக, பொருளாதரத்தடை, போர்க்குற்ற விசாரணை, வடக்கு -கிழக்கு சர்வசன வாகெடுப்பு, தமிழருக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு என்றுதான் போகும். இந்த எப்பிசோட்டுக்களில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ இன்னுமொருமுறை தமிழமக்களை உசுப்பி ஆயுதபோராடத்திற்கு தயார்ப் படுத்தி வழி நடத்திசெல்லும் காட்சிகள் சேர்த்துப் படமாகப்படமட்டா.

Edited by மல்லையூரான்

காலை வாரிவிடுவதில் மட்டும் கைதேர்ந்த இந்தியக் காட்டுமிராண்டிகளை நம்புவது - மண் குதிரையை நம்புவதைப் போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.