Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவா பிரேரணைக்கு 30 நாடுகள் முழு ஆதரவு ;விவாதம் இப்போது வேண்டாம் என்கிறது அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

un%20human_rights_council.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மெக்ஸிக்கோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் பெல்ஜியம் ஆகியன ஐந்து நாடுகளில் ஒன்று அல்லது ஐந்தும் கூட்டாகப் பிரேரணையை முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது.

பிரேரணை அனேகமாக நிறைவேறிவிடும் என்ற நிலையில், அதிலிருந்து தப்ப இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரத்தை விவாதிக்க வேண்டாம் என்றும் பதிலாக ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தினதும் மனித உரிமைகள் நிலையை மீளாய்வு செய்யும் கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறுகையில் இலங்கை விவகாரத்தையும் விவாதிக்கலாம் என்றும் ஜெனிவாவில் உள்ள இலங்கைக் குழு கேட்டுள்ளது.

இலங்கையின் இந்தக் கோரிக்கையை சாதாகமாகப் பரிசீலிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு எதிராகக் கடந்தமுறை கனடாவால் கொண்டுவரப்பட இருந்த பிரேரணை, இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுப்பதாக இருந்தது என்றும் தற்போது கொண்டு வரப்பட உள்ளது "பிரகடனப் பிரேரணை''யாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

பிரகடனப் பிரேரணை மூலம் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பது பிரகடனப்படுத்தப்படும். அதன் பின்னர் அது இலங்கை அதைச் செய்கிறதா என்பது கண்காணிக்கப்படும்.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் தப்புக்கணக்கு போடுகின்றார்கள். இந்த ஜெனிவாத்தொடரில் தமிழருக்கான இனப்பிரச்சனைத்தீர்வு பற்றி ஏதும் விவாதிகக்கப்படவில்லை. போர்க்குற்றம்சாடுதலே பெரும்பங்காக உள்ளது. அதுவும் போரைச் செய்தவனே நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்பது பேச்சாக இருக்கின்றது.

இதைவிட தமிழர்களின் நியாயப+ர்வமான உரிமைகளைக் கொடுக்கவேண்டும் என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? இந்த விவகாரம் தமிழர்களின் உரிமையைப்பெற்றெடுக்க உறுதியாக இருக்கும் என்று பார்த்தால்கூட அதன் பின் தமிழர்உரிமை பற்றிய எந்த கோட்பாடுகளும் இல்லையே.

இது அரசாங்கத்திற்கும், சர்வதேச நலன்களுக்கும் இடையேயான பிராந்தியநலன் சமபந்தப்பட்டதாகவே கருதமுடியும்.

இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையேயான உறவுகள் பலமாகி சர்வதேசம் என்று கூறிக்கொள்ளக்கூடிய நாடுகளின் பிராந்தியநலன்கள் நல்லபடி கவனிக்கப்படுமாயின்தமிழர்கள் இங்கு மீண்டும் ஓரம்கட்டல்தான் நடைபெறும். சப்பந்தரின் பகிஸ்கரிப்பு சிலவேளை சரியானதாக இருக்கலாம். தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு என்பது இங்கு விவாதப்பொருளாக இருக்காது.

சிலவேளை இலங்கைக்கு இன்னும் காலஅவகாசம் கொடுப்தற்குத்தான் இங்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அபாறுத்து இருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளின் நலன்கள் செயல்படாத சர்வதேசிய மற்றும் பிராந்திய அரசியல் வரலாற்றில் எப்பவும் இருந்ததில்லை. இல்லாத ஒன்றின் அடிப்படையில் நாம் விவாதிக்க முடியாது.நலன்கள் அடிப்படையில் செயல்படும் நாடுகளோடுதான் நாம் அரசியல் செய்தாக வேண்டும்.

எல்லா விமர்சனங்களோடும் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 அமர்வு தமிழர்களின் சமகால அரசியலில் மிக முக்கியமானதாகும். இதன் முடிவுகளை வைத்துத்தான் தோற்றுபோய் கையறு நிலையில் உள்ள நாம் அடுத்த நகர்வுக்கான சாத்தியங்களை கணிக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அமர்வுகளில் கலந்துகொள்வதில்லையென முடிவு எடுத்துள்ளது. கூட்டமைப்பின் முடிவு மாபெரும் தவறு என கஜேந்திரகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு தப்பான இராசதந்திரமல்ல. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக புலிகள்மீதும் குற்றச்சாட்டப் பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்புக் கலந்துகொண்டால் விவாதத்தைத் தள்ளிப்போடவோ திசை திருப்பவோ முனையும் இலங்கைக்கும் அதன் ஆதரவு ஆதரவு அணிக்கும் மட்டும்தான் வாய்பாகிவிடும்.

குறச்சாட்டுக்களை நிராகரிக்க ஆதாரங்கள் இன்றி புலிகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் நியாயப் படுத்தும் முயற்ச்சி இன்னும் மோசமானதாகவே அமையும்.மேலும் இலங்கை தனது வளமையான இராசதந்திரத்தைப் பயன்படுத்தி அமரிக்காவையும் கூட்டமைப்பையும் முரண்பட வைத்துவிடும் ஆபத்துமுள்ளது. . புலிகள்மீதான குற்றச் சாட்டுக்களை முனிலைப் படுத்தி நிகழ்ச்சிகளைத்த் திசை திருப்ப வாய்ப்பாகிவிடும்.

நோக்கங்கள் எதுவாக இருப்பினும் அமரிக்காவின் முன்னெடுப்பினால் மட்டுமே போர்க்குற்றம் இன்னமும் வலுவுடன் உள்ளது. அமர்வைப் பயன்படுத்தி

இலங்கை கூட்டணிமீது சில நிபந்தனைகளை திணிக்க சர்வதேச ஆதரவைக் கோரும் ஆபத்துமுள்ளது. . இதுபற்றி மேற்படி அமர்வில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்புக்கள் கவனமாக இருக்கவேண்டும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 அமர்வில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிட்டால் பந்து எப்பவும் இலங்கை அரசின் பக்கத்திலேயே இருக்கும். அதைச் சமாழிக்க இலங்கை அரசுக்கு வல்லமை இல்லை. கூட்டணி இலங்கை அரசின் நெருக்கடிகளை பங்குபோட்டுக்கொள்ளவேண்டும் என்று கஜேந்திரகுமார் விரும்ப மாட்டார். மேலும் கூட்டமைப்பு அமர்வில் புலிகள் தொடர்பான விடயங்களில் அமரிக்காவுடன் முரண்பட நேர்வதும் இலங்கை அரசுக்கே சாதகமாக அமையும்.

விவாதம் இப்போது வேண்டாம் என்கிற அரசு விவாதத்தை திசை திருப்பவே கூட்டமைப்பின் பிரசன்னத்தை பயன்படுத்தும்.

தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டம் இதுவாகும் கூட்டமைப்பு பங்குபற்றியே ஆகவேண்டும் என்று என்று கஜேந்திரன் வலியுறுத்துகிறார்.

தமிழ் மக்கள் வரலாற்றில் முக்கியமான திருமலைத் தேர்தலில் சம்பந்தரை வீழ்த்த எதிர் வேட்பாளரை நிறுத்தியதுபோன்று இலங்கை அரசுக்கே சாதகமாக அமையக்கூடிய ஒரு நிலைபாட்டை வலியுறுத்தக்கூடாது என்று பணிவன்புடன் கஜேந்திரகுமாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே.. காலத்திற்கேற்ப நல்லதொரு கருத்து..! :rolleyes:

ஜெனிவா கூட்டத்தொடர் முதற்படி மட்டுமே..! அது மனித உரிமை பற்றிப் பேசக்கூடிய ஒரு இடம் மட்டுமே..! அங்கே இனப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை..! அதுவே சரியான செயலும் கூட..!

ஆனால் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டுள்ளன என்று நிறுவப்படும் பட்சத்தில், அதன் ஒரு தொடர்ச்சியாக தமிழருக்கான உரிமைகள் இன்னொரு தளத்தில் விவாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது..! :rolleyes:

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அமர்வுகளில் கலந்துகொள்வதில்லையென முடிவு எடுத்துள்ளது. கூட்டமைப்பின் முடிவு மாபெரும் தவறு என கஜேந்திரகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு தப்பான இராசதந்திரமல்ல. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக புலிகள்மீதும் குற்றச்சாட்டப் பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்புக் கலந்துகொண்டால் விவாதத்தைத் தள்ளிப்போடவோ திசை திருப்பவோ முனையும் இலங்கைக்கும் அதன் ஆதரவு ஆதரவு அணிக்கும் மட்டும்தான் வாய்பாகிவிடும்.

உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.

மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அமைப்பு, கூட்டமைப்பு. கூட்டமைப்பு ஜெனீவாவை தவிர்த்து மற்றைய சர்வதேச,ஐ.நா. உட்பட்ட அரங்குகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாயக மக்கள் நிலை பற்றியும் சிங்களம் செய்யும் இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்தும் கூற வேண்டும். அங்கே நல்லிணக்கம் இல்லை பொருளாதார அபிவிருத்தி நடக்கவில்லை என்பதை கூறவேண்டும்.அதன் மூலம் சிங்களம் தமிழருக்கு எந்த அரசியல் தீர்வையும் தராது என்பது கூறப்படல்வேண்டும்.

தமிழர்கள் தப்புக்கணக்கு போடுகின்றார்கள். இந்த ஜெனிவாத்தொடரில் தமிழருக்கான இனப்பிரச்சனைத்தீர்வு பற்றி ஏதும் விவாதிகக்கப்படவில்லை. போர்க்குற்றம்சாடுதலே பெரும்பங்காக உள்ளது. அதுவும் போரைச் செய்தவனே நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்பது பேச்சாக இருக்கின்றது.

இதைவிட தமிழர்களின் நியாயப+ர்வமான உரிமைகளைக் கொடுக்கவேண்டும் என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? இந்த விவகாரம் தமிழர்களின் உரிமையைப்பெற்றெடுக்க உறுதியாக இருக்கும் என்று பார்த்தால்கூட அதன் பின் தமிழர்உரிமை பற்றிய எந்த கோட்பாடுகளும் இல்லையே.

இது அரசாங்கத்திற்கும், சர்வதேச நலன்களுக்கும் இடையேயான பிராந்தியநலன் சமபந்தப்பட்டதாகவே கருதமுடியும்.

இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையேயான உறவுகள் பலமாகி சர்வதேசம் என்று கூறிக்கொள்ளக்கூடிய நாடுகளின் பிராந்தியநலன்கள் நல்லபடி கவனிக்கப்படுமாயின்தமிழர்கள் இங்கு மீண்டும் ஓரம்கட்டல்தான் நடைபெறும். சப்பந்தரின் பகிஸ்கரிப்பு சிலவேளை சரியானதாக இருக்கலாம். தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு என்பது இங்கு விவாதப்பொருளாக இருக்காது.

சிலவேளை இலங்கைக்கு இன்னும் காலஅவகாசம் கொடுப்தற்குத்தான் இங்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அபாறுத்து இருந்து பார்ப்போம்.

நிச்சயம் இதன்மூலம் மட்டுமே எமக்கு நிரந்ததீர்வு கிடைக்காது. ஆனால், இது படிக்கல்லாக அமையும்.

2009 இல் முள்ளிவாய்க்கால் பின்னராக நாம் இருந்த நிலைக்கு இன்று இந்த நிலைமையில் நாம் உள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவிஞர்

தங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்

கூட்டமைப்பின் தற்போதைய தகுதி என்பது கிணற்றுக்குள்ளிலிருந்து கிடைக்கும் கயிற்றைப்பிடித்துக்கொண்டு தமிழ் மக்களை மேல கொண்டுவந்துவிடுவது என்பதால் அதுவே அதே கயிற்றை பிடித்து சமுத்திரத்துக்குள் இழுத்துவிடப்படக்கூடிய நிலையை தவிர்க்க வேண்டும் என்ற பொறுப்பும் உள்ளது. எனவே தனக்குத்தேவையான அளவுக்கே அதை பயன்படுத்தணும். இன்றைய அவர்களது முடிவு அதையே குறிக்கின்றது.

நெடுக்கு சொன்னதுபோல்

எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுத்து போட்டுவிட்டு எல்லாருக்கும் பைபை சொல்ல வைப்பதே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கமுடியும். முன்னைய பேச்சு வார்த்தைகளில் இணைத்தலைமை நாடுகள் என்றொன்று தானாகவே பிறந்து எம்மை சுற்றி வளைத்ததை மறந்துவிடமுடியுமா?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின் மாற்று உபாயங்கள் கண்டன தீர்மானத்தை விட கனதியாகலாம்

un-human-rights-council-in-geneva.jpgஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும்.

குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

அண்மையில் கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கும் என்று அறிவித்திருந்தனர்.

அமெரிக்காவின் பின்புலத்துடன் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது என்பது உறுதி. ஆனால் அதை யார் கொண்டு வரப்போவது என்று தெரியவில்லை. இந்தக் கேள்வி இலங்கை அரசையும் குழப்புவதாகவே தெரிகிறது.

முன்னதாக அமெரிக்காவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவே கூறியுள்ளனர்.

எனவே அமெரிக்கா அல்லாத இன்னொரு நாடு தான் இதனைக் கொண்டுவரப் போகிறது என்று தெளிவாகியுள்ளது. அந்த நாடு எது என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு கட்டத்தில் கனடா இந்த முயற்சிகளில் இறங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. காரணம், ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில் கனடா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றது.

ஆனால் அதற்குப் போதியளவு ஆதரவு கிடைக்காமல் போக, தீர்மானத்தைக் கொண்டு வருவதில் இருந்து நழுவிக் கொண்டது. எனவே கனடா இம்முறை அந்த முயற்சியைத் தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆனால் அமெரிக்காவோ, கனடாவோ இந்த முயற்சியில் இறங்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பலமாக உள்ளது. ஏனென்றல் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் இறங்கினால் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் குழம்பிப் போய் தீர்மானத்தை எதிர்த்து விடும் என்ற பயம் அமெரிக்காவுக்கு உள்ளது.

எனவே மற்றொரு நாட்டின் மூலம் தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முனைவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது பக்கம் உள்ளதாகக் கூறும் அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடு ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையில் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தை நேரடியாகக் கொண்டு வர முடியாது.

ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அது ஒரு உறுப்பு நாடு அல்ல. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஏதாவது ஒரு நாட்டின் மூலம் வேண்டுமானால் அதைச் செய்யலாம்.

இரு வாரங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே இந்த முயற்சியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபடலாம் என்ற கருத்து வலுவடைந்தது.

ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு, ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சுவீடன் கொண்டு வந்தது.

அப்போது போரின்போது எந்த மீறல்களும் நடக்கவில்லை என்று இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா,போன்ற நாடுகள் அடித்துக் கூறின. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்து ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின.

அதற்குப் பின்னர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் எப்போது தொடங்கினாலும் இலங்கைக்கு நெருக்கடிகள் வருவது போல இருந்தன. ஆனால் கடைசியில் அவை விலகிக் கொண்டன.

கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்தது.

இம்முறை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி விட்டது. அதன் மீதான நடவடிக்கை அதாவது, பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை வைத்தே இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரியும் பொறுப்புக் கூறுவதற்கு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், எத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் அதனை முறியடித்து விடுவோம் என்கிறது அரசாங்கம். நட்பு நாடுகளின் பக்கபலம் இருப்பதாகவும் அரசாங்கம் சொல்லிக் கொள்கிறது.

இந்தமுறை அரசாங்கம் தென் அமெரிக்க நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

இந்த முயற்சியில் அவ்வளவாக பலன் கிட்டவில்லை என்று தகவல்கள் வெளியான போதும் அது எந்தளவுக்கு உண்மை என்பதை ஜெனீவா கூட்டத்தொடரின் போது தான் உணர முடியும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோவைக் கொண்டு தடுத்து விடும் என்ற வகையில் கூட செய்திகள் வெளியாகின்றன.

ஐ.நா பாதுகாப்பு சபையில் தான் வீட்டோ அதிகாரம் உள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எந்த நாடுமே நிரந்தர உறுப்பு நாடு அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் மாறிக் கொண்டிருக்கும். ஒரே நாடு அடுத்தடுத்து இரண்டு முறை உறுப்புரிமை பெற முடியாது.

இதற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் கூட விதிவிலக்கல்ல. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் குறைவு என்றே கூறலாம்.

இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் மீது 32 தடவைகள் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீட்டோ அதிகாரம் இருந்திருந்தால் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலை காப்பாற்றியிருக்கும்.

ரஷ்யா, சீனா, கியூபாவின் ஆதிக்கத்தில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உள்ளது என்பதையும் கவனித்தாக வேண்டும். ஏற்கனவே மனிதஉரிமைகள் அமைப்புகள் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.

இதனால் தான் வடகொரியா, கம்போடியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, சீனா, ரஷ்யாவின் கையில் சிக்கியிருப்பதற்குக் காரணம், ஆபிரிக்க, தென் அமெரிக்க, ஆசிய நாடுகளிடம் உள்ள அதிகளவு உறுப்புரிமைதான்.

ஆபிரிக்காவுக்கு 13 இடங்களும் ஆசியாவுக்கு 13 இடங்களும் லத்தீன் அமெரிக்காவுக்கு 8 இடங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 இடங்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 7 இடங்களும் மனிதஉரிமைகள் பேரவையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவை அல்லது சீனாவை சார்ந்திருப்பவை. இந்தப் பகுதி நாடுகள் பலவற்றுக்கு அமெரிக்காவையோ மேற்குலகையோ பிடிக்காது. எனவே தமது நலனுக்காக சீன, ரஷ்ய சார்பு நிலையை பேணிக் கொள்கின்றன.

இவற்றை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க முனைகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மேற்குலக நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பலமான நிலையில் இருப்பதாக கூறமுடியாது. இதனால் தான் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தப் போதிய காலஅவகாசம் இல்லை என்றும், பொறுப்புக்கூறுவதற்காக இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும்,ஜெனிவாவில் அரசாங்கம் வாதங்களை முன்வைக்கவுள்ளது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று கூறமுடியாது.

ஆனால், ஒன்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் தோற்கடிக்கப்பட்டாலும் கூட மேற்குலக அழுத்தங்கள் குறையப் போவதில்லை.

ஜெனிவாவில் இந்த நாடுகள் தோல்வி காணுமாக இருந்தால் இலங்கை மீதான அழுத்தங்களைப் பிரயோகிக்க மேற்குநாடுகள் மாற்று உபாயங்களைக் கடைப்பிடிக்கும். அவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கண்டனத் தீர்மானத்தை விடவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.

- கே.சஞ்சயன் (தமிழ்மிரர்)மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரது பலவீனம் தாம் எப்போதும் தோற்போம் என்ற ஒரு எண்ணம். 

அவன் போலே போடவில்லை,  அதற்குள் விக்கட் அவுட் என்று புலம்புவது. 

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சிக்கு சுரேஸ் பிறேமசந்திரன் பேட்டியளிக்கையில் சம்பந்தர்/சுமந்திரனின் தனிப்பட்ட முடிவாக தான் இருக்கும் எனவும் (ஐ.நா கூட்டத்துக்கு சமூகமளிக்காதது) ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கூட்டமைப்புடன் சேர்ந்து முடிவு எடுக்கப்படவில்லை என கூறி இருப்பது கூட்டமைப்பின் இராசதந்திரத்தை பிசுபிசுக்க வைத்துள்ளதே??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடத்துவது சிங்களவனின் ஒருவித இராஜதந்திரனகர்வு இந்த நகர்வை தமிழர்கள் தரப்பு முறியடித்தால் எமக்கு வெற்றி கிட்டும்.

மாறாக அக்டோபர் மாசம் வரைக்கும் சிங்களவனுக்கு கால அவகாசம் கொடுத்தால் அதற்குள் சிங்களவன் பல தில்லு முல்லுகள் பண்ணி தப்பித்துவிடுவான்.

அதன்பின் ஆறிய கஞ்சி பழம் கஞ்சியாகிவிம் உலகநாடுகள் இந்த விடயத்தை மறந்து வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க புறப்பட்டுவிடும். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குல நாடுகள் இலங்கை என்ன தீர்மானத்தை எடுப்பது என்பது அவர்களுக்குள்ளே உறுதியாயிற்று. இதில் சம்பந்தன் போய் முடிவுகளில் மாற்றங்கள் வரஇடமில்லை என்பதை எல்லோரும் தெரிந்திருக்கவேண்டும். இந்தக் கூட்டத்தொடரில் எடுக்கப்படும முடிவுகளைத் தீர்மானிப்பதற்காகவே கிலாரி தென்னிந்தியாவிற்கும் றொபேட் பிளேக் இலங்கைக்கும் அத்துடன் கூட்டமைப்பு அமெரிக்கவுமாக விஸயம் செய்து இவர்களின் கருத்துகள் அலசி ஆராயப்பட்டு பின்னர் அமெரிக்கா நாடு நாடாக தன்னுடைய ஆட்களை அனுப்பி சார்புநிலைகளைத் திடமாக்கி கூட்டத்தொடரில் என்ன தீர்மானம் எடுப்பது என்பது ஏற்கனவே தீர்மானம் ஆனதொன்று. இங்கு அறிக்கையை வாசிப்பதும் சில எதிர்க்கருத்துக்களை உள்வாங்குவதும் ஆகத்தான் இருக்கும். இலங்கையின் அறிக்கையிலிருந்து அவர்களின் நிலைப்பட்டை அறிதல் என்பனவும் அடங்கும்

தீர்மானத்தில் இருநிலைகள் இருக்கும் அதில் ஒன்று இலங்கை கேட்கவிருக்கும் கால அவகாசத்தைக் கொடுத்தல் அல்லது காட்டசாட்டமான அழுத்தத்தைப் பிரயோகித்தல் இதுவே நாங்கள் எதிர்பhர்க்கக்கூடிய அதிகபட்சம். இதை வைத்துக்கொண்டு சீனாவிடம் நழுவிப்போன இறுக்கமான பிடியை இலங்கையில் வைத்திருத்தல்

சம்பந்தன் செல்லவேண்டுமென்பதுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதேவையில்லை. சம்பந்தன் ஏற்கனவே அமெரிக்காவுடன் தங்கள் நிலையை விளக்கிவிட்டனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அது பற்றிய விடயங்கள் வெளியில் வரவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. காலஅவகாசம் கொடுத்தால் சிங்களவர்கள் திருப்பியும் ஏமாற்றுவித்தை செய்வார்கள். இது அவர்களுக்குக் கைவந்தகலை. காலதாமதமும் கிழித்தெறிதலும் இவர்கள் காலங்காலமாகச் செய்துவரும் பணி.

தீர்மானங்கள் 85வீதம் முடிவாகிவிட்டன. தமிழர்களுக்கு இப்போதைக்கு ஏதும் இல்லை என்பதைத் தமிழர்கள் மனதில் கொண்டு எங்கள் காய்களை தகுந்த இடத்தில் நகர்த்தி வைத்தலே தமிழருடைய இன்றைய கட்டமாக இருக்கவேண்டும்.

காலஅவகாசம் கொடுப்பது நல்லது தான். இல்ங்கை தன்னிலையிலிருந்து மீளாது. இந்தக்கால அவகாசத்தில் இவர்கள் செய்யும் சேட்டைகள் இவர்களை இன்னும் ஆத்திரமூட்டும். இவர்களுக்கிடையில் இடைவெளி அதிகமாகும்போது தான் எங்களுடைய காரியம் மிகவும் முனைப்பாகும். இவாகளுக்கிடையில் இடைவெளியை கூட்டுதல தான் எங்கள் பணியாக இருக்கவேண்டும்

Edited by Raj Logan

காலஅவகாசம் கொடுப்பது நல்லது தான். இல்ங்கை தன்னிலையிலிருந்து மீளாது. இந்தக்கால அவகாசத்தில் இவர்கள் செய்யும் சேட்டைகள் இவர்களை இன்னும் ஆத்திரமூட்டும். இவர்களுக்கிடையில் இடைவெளி அதிகமாகும்போது தான் எங்களுடைய காரியம் மிகவும் முனைப்பாகும். இவாகளுக்கிடையில் இடைவெளியை கூட்டுதல தான் எங்கள் பணியாக இருக்கவேண்டும்

நாளைக்கு நேட்டோ சமாதானப் படை ஈழத்தில் இறங்காவிட்டால் இலங்கையில் தமிழன் இருந்த கதையே இல்லாமல் போக்கப்போகிறது.

நாளை கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கஆதரவாளர்களும் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அமெரிக்காவின் திட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

நாளைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.