Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று 'லீப்' வருட நாள்

Featured Replies

இன்று 'லீப்' வருட நாள் 29/02/2012

leap-day-150x150.jpg

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும்.

தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை 400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!

லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.

  • முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.
  • நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
  • ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753 க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொது மக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களை இழந்து விட்டதாக நினைத்தனர்!
  • 1930 களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக( ஞாயிறு விடுமுறை) இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில் வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால், இந்த முறை, அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.

பழங்காலத்தில் லீப் வருடம்:

  • முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.
  • ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
  • சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.

2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:

  • இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான, நோய்களை ‘rare disease’ என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

  • தொடங்கியவர்

கேள்வி 01 : லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது :D ‘ பொன்னான பிறந்த நாளை’ :D கொண்டாடுவார்கள்?

கேள்வி 02 : ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும். நூற்றாண்டுகள் வரும்போது அவை மிகுதி இல்லாமல் எந்த எண்ணால் வகுக்கப்ப்படும்?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

(1) 4 வருடங்களுக்கு ஒருமுறை

(2) 400 ஆல் ........... :D

  • தொடங்கியவர்

சரியான விடைகள் சகோதரி :D

(1) பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!

(2) 400 ஆல்

http://www.a2ztamilnadu.com/tamilnews/what-is-special-about-leap-year/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அகூதா.

இன்று எனக்கு பழக்கமான ஒருவர் தனது பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். :D

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி அகூதா.

இன்று எனக்கு பழக்கமான ஒருவர் தனது பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். :D

இவர்களும் கொண்டாடுகிறார்கள் :D

Notable Leap Day birthdays:

1468 – Pope Paul III (d. 1549)

1904 – Jimmy Dorsey, American bandleader (d. 1957)

1916 – Dinah Shore, American singer and actress (d. 1994)

1920 – Howard Nemerov, U.S. poet and Pulitzer Prize for Poetry (d. 1991)

1920 – Fyodor Abramov, Russian novelist (d. 1983)

1956 – Aileen Wuornos, American serial killer (d. 2002)

1960 – Tony Robbins, American motivational speaker

1964 – Lyndon Byers, Canadian hockey player and Boston radio personality

1972 – Antonio Sabàto, Jr., actor best-known for work on General Hospital

1976 – Ja Rule, U.S. rapper

1984 – Cam Ward, goalie with Carolina Hurricanes

1984 – Mark Foster, of Foster the People

http://www.thestar.com/living/article/1138161--leap-day-2012-what-you-need-to-know

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அகூதா.

இன்று எனக்கு பழக்கமான ஒருவர் தனது பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். :D

யார‌து உங்கட‌ மகனா?...எனது வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கோ அண்ணா :)

கிரிக்கெட் மட்ச் விளையாடும் போது இடையில் வந்து மனுசிக்கு போன் அடிக்கேக்க மனுசி வரச்சொல்லி உடன ஓடிபோக இரண்டு மணித்தியாலத்தில் முதல் மகன் பிறந்தான்.

1996 FEB 29 அதே மாதிரி மனுசி போன் அடிக்க ஓடிப்போனேன்.சுகபிரசவம் வேண்டுமா என்று ஊசி போட்டதால் FEB 29 பிறக்க வேண்டிய இரண்டாவது மகன் MARCH 1 ST அதிகாலை பிறந்தான் .அன்றிரவு சிறிலங்கா - இந்தியா உலக கோப்பை மாட்ச் ஓடிப்போய் ஒரு ரேஸ்ரோறேண்டில் பார்த்தேன் .சிறி லங்கா அந்த மாதிரி வென்றது.

நாளை அர்ஜுனின் பிறந்த தினம்

  • தொடங்கியவர்

நாளை அர்ஜுனின் பிறந்த தினம்

அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

ஜூனியர் அர்ஜுனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.birthday_cake027.gif

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அர்ஜூனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அர்ஜுனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தகவலுக்கு நன்றி அகூதா.

இன்று எனக்கு பழக்கமான ஒருவர் தனது பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். :D

குமாரசாமி அண்ணை எங்களுக்கு சோதனை வைத்தாரோ அல்லது தெரியாமல் எழுதினாரோ தெரியாது .லீப் வருடத்தில் பிறந்தால் பதினெட்டாவதுபிறந்தநாள் வராது.

லீப் என்றதும் நினைவு வந்தது எழுதினேன்.பிள்ளைகள் வளர்ந்துவிடார்கள் பாட்டிஎல்லாம் இல்லை வீட்டுடன தான். வாழ்த்துகளுக்கு நன்றி.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அகூதா.

இன்று எனக்கு பழக்கமான ஒருவர் தனது பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். :D

என்னை கவித்திட்டியே அண்ணா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணை எங்களுக்கு சோதனை வைத்தாரோ அல்லது தெரியாமல் எழுதினாரோ தெரியாது .லீப் வருடத்தில் பிறந்தால் பதினெட்டாவதுபிறந்தநாள் வராது.

எனக்கும் முதல்லை ஒருகோதாரியும் விளங்கேல்லை.... :blink:

என்ரை கூட்டுகள்ளை ஒண்டு சொல்லிச்சிது நாளைக்கு 18வது பிறந்தநாள் கொண்டாடுறன் குமாரசாமி நேரமிருந்தால் வாருமன் கூடியிருந்து பியரடிப்பம் எண்டான் பாவி.......எனக்கும் அவன் பியர் எண்டு சொன்னவுடனை வாயூறத்தொடங்கீட்டுது...விடுவனே?????முந்தியொருக்கால் என்ரை பிறந்தநாளுக்கு ஆரோ கொண்டுவந்து தந்த அளவில்லாத சட்டையை என்ரை மனுசி ரீமேக் பண்ணி தர......... நானும் ஜக்கற்ரிலை படிஞ்சிருக்கிற கிச்சின் மணம்போக உள்ள சென்ருகள் எல்லாம் விளாசி அடிச்சுக்கொண்டு நறுமணத்தோடை போய் நிண்டன்.அவனுக்கும் பேய்ச்சந்தோசம் :icon_mrgreen: கொண்டு போன பரிசுகெட்டபரிசை குடுத்துட்டு நானும் போன அலுவலை பாக்கத்தொடங்கீட்டன் :wub: ..அலுவல் முடிய நானும் வந்துட்டன். :D

இண்டைக்கு மத்தியானம் வேலையாலை வீட்டை வந்து யாழை பாத்தால் அர்ஜுன் அண்ணை உள்ளதை புட்டுவைச்சவுடனை :o எனக்கு அந்த பிறந்தநாள்காரனை இழுத்துப்போட்டு உளக்கோணும் மாதிரி கிடந்துது.....எண்டாலும் என்ரமனதை நானே சாந்தப்டுத்திக்கொண்டு(என்ரை ஆளுக்கு இந்தவிசயம் தெரிஞ்சால் கதை வேறை)என்ரைகாரை(பென்ஸ்)எடுத்துக்கொண்டு..அதுவும் அந்தமாதிரி றேஸ்பண்ணிக்கொண்டு போய் அவன்ரை வீட்டுக்கு முன்னாலை நிண்டன்....அவனும் நேற்றையான் பியர் ருசியிலை சிங்கம் திருப்பியும் வந்திட்டுது எண்டுறமாதிரி நக்கலாய் பாத்தான் :( எனக்கு அதைபாக்க சுள்ளெண்டுது.....அந்த உரையாடலின்ரை தமிழ்வடிவம் பின்வருமாறு.

நான்:- பண்டி நாயே?

கெல்முட்:-என்னடாப்பா என்னநடந்தது...என்ன கண்ணெல்லாம் சிவத்துப்போய்கிடக்கு என்ன நேரத்தோடையே மழை போலை கிடக்கு?

நான்:-விசர்க்கதையை விடு...எனக்கேன் பொய் சொன்னனி?

கெல்முட்:-நானென்ன பொய்சொன்னனான்...உனக்கென்ன விசரே?

நான்:-கெல்முட் இஞ்சைபார்....நீ ஏன் எனக்கு 18வது பிந்தநாள் எண்டு பொய்சொன்னனி????

கெல்முட்:-எட அதே பிரச்சனை.....இஞ்சைபார் நான் 29-02- 1940 லை பிறந்தனான்...விளங்கிச்சுதோ.....உனக்கு விளங்காது அது நல்லவடிவாய் எனக்குத்தெரியும்...இருந்தாலும் சொல்லுறன் கேள் கண்ணா கேள்.....டேய் குமாரசாமி வருசாவருசம் என்னைப்போலை ஆக்களுக்கெல்லாம் மாசி 29லை பிறந்தநாள் கொண்டாடுற சந்தர்ப்பம் வரவே வராது.....எண்ட படியாலைதான் அந்த நாள் எங்களுக்கு பொன்நாள்.நாலு வருசத்துக்கு ஒருக்கால்த்தான் கொண்டாடுவம்...அதுவும் அந்தமாதிரி

நான்:-எனக்கு நீ சொன்னதிலை உடன்பாடு இல்லை....எண்டாலும் நாலைஞ்சுநாளையாலை திரும்பிவருவன் கெல்முட் சூஸ்

DSC_0008.jpg

அண்ணை இந்த பனியன் தான் என்னை பேக்காட்டினவன் :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.