Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது ! அதிர்சியில் சிறிலங்கா

Featured Replies

http://naathamnews.com/?p=4132

சிறிலங்கா தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது.

இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை

வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்.

அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நாதம் ஊடகசேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்…

அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு இன்று சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவினை அங்கத்துவ பலப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முடியும்.

சிறிலங்கா அரசானது, குறித்த இந்த பிரேரணை வரைவினை, பலவீனப்படுத்தி, தோல்வியுறச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கும்.

இந்நிலையில், தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்ற, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றினை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையின் வரைவில் காத்திரமான உள்ளடக்கத்தையே நாங்கள் எதிர்பார்கின்றோம்.

இதேவேளை, இத்தகைய விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கென இருக்கின்ற பொறுப்புள்ள கடப்பாட்டினை, இந்த பிரேரணை தொடர்பில், சபை பொறுப்புடன் ஆற்றும் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

தகவல்துறை அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் வரைவு :

தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக…

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்…

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (டுடுசுஊ) அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும்

மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று…

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்

Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)

Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights, and other relevant instruments,

Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applicable,

Noting the Report of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and its findings and recommendations, and acknowledging its possible contribution to Sri Lanka’s national reconciliation process,

Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, reevaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement involving devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all, and enact rule of law reforms,

Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law,

1. Calls on the Government of Sri Lanka to implement the constructive recommendations in the LLRC report and take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans,

2. Requests that the Government of Sri Lanka present a comprehensive action plan as expeditiously as possible detailing the steps the Government has taken and will take to implement the LLRC recommendations and also to address alleged violations of international law,

3. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing those steps and requests the Office of the High Commissioner for Human Rights to present a report to the Council on the provision of such assistance at its twenty-second session.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jonathan Miller@millerC4 (Channel 4 news,)

tweeted this today 07.03.12

I'm in Geveva at human rights film fest chairing Sri Lanka debate after screening #killingfields. #Louise_Arbour & @callum_macrae on panel.

Also on Sri Lanka debate panel, Yasmin Sooka, from UNSG's expert group. UNHRC votes on SL on 22/3. Promises to be a bitter showdown

இந்த தீர்மானம் வெற்றி பெற வேண்டும்.

நல்ல செய்தி.இணைப்புக்கு நன்றி.

இந்த வரைபு தீர்மானத்தில் சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் விடயம் இல்லை என்றே எண்ணுகிறேன். ஆனால், இதில் மாற்றங்கள் கொண்டுவந்து, சுயாதீன விசாரணை வற்புறுத்தப்பட்டு, மீளச்சமர்ப்பிக்கப்பட்டு, அது அங்கீகரிக்கப்படலாம்.

இந்நிலையில், தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்ற, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றினை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையின் வரைவில் காத்திரமான உள்ளடக்கத்தையே நாங்கள் எதிர்பார்கின்றோம்.

இதேவேளை, இத்தகைய விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கென இருக்கின்ற பொறுப்புள்ள கடப்பாட்டினை, இந்த பிரேரணை தொடர்பில், சபை பொறுப்புடன் ஆற்றும் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாக பயணிப்போம். சில சறுக்கல்கள் வரலாம், அனைத்தையும் தாண்டி பயணிக்கவேண்டிய நேரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா வானரங்கள் திணறுகின்றன. 

Edited by KuLavi

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..! :rolleyes:

நல்ல செய்தி. ஆனாலும் சர்வதேச விசாரணை பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும். 23 ஆம் திகதிவரை முயற்சியை கைவிட கூடாது.....

அடிக்கிற கைதான் அணைக்கும்

அணைக்கிற கைதான் அடிக்கும்

...........................................................

புயலுக்குப் பின்னே அமைதி - வரும்

துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி

இருளுக்குப் பின் வரும் ஜோதி

இதுதான் இயற்கை நியதி

இருளுக்குப் பின் வரும் ஜோதி

இதுதான் இயற்கை நியதி

.......................................................

எல்லாவிரல்களும் ஒரே மாதிரியல்ல.

எல்லாக்கைளும் ஒரே மாதிரி அல்ல.

தாயின் கை என்றால் அடிக்கிறகைதான் அணைக்கும்.

2009 இல் ஒபாமா பதவியேற்றவுடன், வெள்ளை மாளிகையருகிலும் மற்றய இடங்களும் தமிழ்மக்கள் தாங்கி நின்ற ஒரு பாதகையும், கோசமும் இன்னமும் என் கண் முன் வருகிறது. "Obama You Are Our Only Hope". மேல மாடியால் எட்டிப் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். உலகமெங்கும் ஜனநாயகத்தை போதிக்கும் அமெரிக்கா இதைசெய்ய வேண்டியதை தன் கடமையாக எற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாமும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்.

65 வருடகாலமாக தமிழ் மக்களின் வாழ்வும் வளமும் இரவு பகலாக சூறையாப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்தி மீளக்கட்ட வேண்டுமென்றால் அமெரிக்கா வந்து புகுந்தால் மட்டுமே அது கனவில் தன்னும் இனி நடக்க முடியும். குறை நிறைகளை மறந்து அமெரிக்கா துணிந்து முன்வந்து தமிழ் மக்களின் இன்னல்களைத் துடைக்க வேண்டும். அமெரிக்காவின் நலங்களுக்கு தேவையானவற்றை தமிழ்மண்ணிலிருந்து செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம். இனி ஒருதடவை ஜனநாயக விரும்பிகளான நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படாமல் உண்மை நண்பரகளாக இருப்போம்.

எல்லா தமிழீழ ஆதரவு அமைப்புகளுக்கும், நடை பயணம், கிரிகெட் போராட்டம் செய்யும் சிங்கிள் சிறுத்தைகளுக்கும் நன்றி

அத்தோடு அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கும்(கனடா, பிருத்தானியா, நோர்வே, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா......) நன்றி

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை சிந்திக்க அமெரிக்கா தவறிவிட்டது : தமரா குணநாயகம்

அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தங்களது நகல் பிரேரணையில் எதை எடுத்துரைக்க விரும்புகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியம். அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறு என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அத்துடன் இலங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என அமெரிக்கா கூறியிருக்கிறது.

அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிறதென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்க அரசாங்கம் நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானம் மேற்கொள்கிறதே தீவிர உண்மையான யதார்த்தத்தை பற்றி அமெரிக்கா சிந்திக்க தவறியுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை அவதானிக்கும் மற்ற நாடுகள் இலங்கை சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கின்ற காரணத்தினால் தான் அது தண்டிக்கப்படுகின்றது என்ற உணர்வு வலுப்பெற்றிருக்கிறது. நாம் இலங்கையின் செயல் திறனை குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ மதிப்பீடு செய்யலாகாது. எங்கள் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான இந்தப் புனிதப் போரில் கடைசி நிமிடம் வரை நாம் போராட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமதி குணநாயகம் அளித்த பேட்டியை அப்படியே தருகின்றோம். கேள்வி: இலங்கை மீதான விவாதத்தில் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய நிலைப்பாடு என்ன? திருமதி குணநாயகம்: இப்போது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை ஆதரவான நிலைப்பாடே தலை தூக்கியிருக்கிறது. ஆயினும் இது விடயத்தில் நாம் மேலும் முயற்சிகளை எடுப்பது அவசியம்.

கேள்வி: இப்போது வளர்ந்து வரும் நாடுகள் பல எங்களை ஆதரிக்க முன்வந்துள்ளன என்ற கருத்து உண்மையானதா? திருமதி குணநாயகம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதனால் நம்நாட்டு மக்கள் ஜனாதிபதியை ஒரே குரலில் ஆதரிக்கிறார்கள். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ¤ம் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கப்பாட்டு கொள்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறது. எனவே, ஜெனீவா பேரவையில் இலங்கைக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: பிரிட்டனின் வெளியுறவு காரியாலயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜெரமி பிரவுன், இலங்கை தோல்வியுற்ற நாடு (Fஐலெட் ஸ்டடெ) என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதே கருத்தை நவனீதம்பிள்ளையும் வலியுறுத்தியிருக்கிறாரே?

திருமதி குணநாயகம்: பிரிட்டிஷ் அமைச்சரும் நவனீதம் பிள்ளையும் இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தை ஆதரிக்கிறார்கள். அவர்கள் மனதில் எத்தகைய மாற்றம் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. இவர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நாம் ஏற்க முடியாது. நாம் அவ்விதம் செய்தால் எமது தாய் நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடம் தாரை வார்த்து கொடுப்பதற்கு ஒப்பாக அமையும்.

பயங்கரவாத நாடுகள் அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் (றொகுஎ ஸ்டடெச்) ஈடுபடும் நாடுகள் என்ற அணியில் ஒரு இறைமையுடைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் நாடுகளையும் நாம் சேர்த்துக் கொள்ளலாமே. இலங்கையின் உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொண்டவர்கள் இந்தக் குற்றச்சாட்டை என்றுமே எற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இலங்கை போன்ற ஒரு சிறிய வளர்முக நாட்டின் மீது புரியப்படும் கொடுமைகளை நட்புக்குரிய ஆபிரிக்க, ஆசிய மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகள் கண்டிக்கின்றன. கேள்வி: மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் நடைபெறும் இந்த மோதலை இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் என்று அழைக்கலாமா?

திருமதி குணநாயகம்: இல்லை. இலங்கையை கண்டித்து வரும் இந்த நாடுகள் இலங்கையில் இருந்துவரும் மனித உரிமை பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை. அந்நாடுகள் தமிழர் சிங்களவர் அல்லது வேறு ஏதாவது சமூகம் பாதிக்கப்படுவதை உதாசீனம் செய்வதையே காட்டுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவையில் பொய், புரட்டு, மாறுபட்ட நிலைப்பாடுகள் கையாளப்படுகின்றன. பெரிய வல்லரசுகள் மனித உரிமை பேரவையையும் வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த இப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த வல்லரசு நாடுகள் தாங்கள் முன்னர் ஆட்சி புரிந்த நாடுகளின் இயற்கை மற்றும் பொருளாதார வளங்களை சூறையாடுவதில் ஒரு புதிய ஆர்வத்துடன் செயற்படுவதும், மனித உரிமை பேரவையில் இன்று உருவாகியிருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு காரணமாகும்.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.