Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 மணி நேரமும் சூரியன் - துருவப்பகுதியில்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

north2012020308-150.jpg

பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது.

அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன.

அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபனி துந்திரப் பகுதியாகவே உள்ளது. தரைக்கு கீழும் கூட பனி! வடக்கில் 66.33 அட்ச ரேகைப் பகுதிதான் ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) எனப்படுகிறது. இங்கு ஓர் அதிசயத்தைக் காணலாம். நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார். இது ஜூலை மாதம் நடக்கும். ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பத்தின் அளவு அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். ஆர்க்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் உள்ள/மறையாத பகலும் காணப்படும்.

நாள் முழுவதும் சூரியன்!

வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி. மீ வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறார். இங்கே சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தெரியும். பின்லாந்தின் கால்பகுதி வட ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது. எனவே, அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகரவே/மறையவே மாட்டார். நார்வேயின் சவால்பார்ட் (Svalbard) என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 நாட்கள்) 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக்கொண்டு காட்சி அளிப்பார். அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.

துருவப்பகுதிகளில், 60 டிகிரி அட்ச ரேகைகளுக்கு மேல் போய்விட்டால், அதாவது ஆர்க்டிக்கு தெற்கே/அண்டார்க்டிக்காவுக்கு வடக்கே, அந்திமாலை ஒளியைத் தரும். வெளிச்சம் இருக்கும். மின் விளக்கு இன்றி படிக்கலாம். இந்த தினங்களை செயின்ட் பீட்ச்பர்க் மற்றும் ரஷ்யாவில் வெள்ளி இரவு தினங்கள் (Silver Night Days) என ஜூன் 11 - ஜூலை 2 வரை, இந்த நாட்களில் எல்லாம், கலாச்சார விழாக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு புதிதாக வருபவர்களுக்கு, இரவில் சூரியன் தெரிவதால் உறங்கச் செல்ல கொஞ்சம் பிரச்சினை ஆக இருக்கும்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா நோர்வேக்காரரே?உங்கை இரவுநேரத்திலையும் லைற்வெளிச்சம் இல்லாமல் பேப்பர் வாசிக்கலாம் எண்டுறாங்கள்..உண்மையே? :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நோர்வேக்காரரே?உங்கை இரவுநேரத்திலையும் லைற்வெளிச்சம் இல்லாமல் பேப்பர் வாசிக்கலாம் எண்டுறாங்கள்..உண்மையே? :D

பகல்லை வந்த, பேப்பரை இரவிலை வாசித்தால்... அது, பழைய நியூஸ் எல்லோ..... :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து ஆரம்பத்தில் நான் ஆர்டிக் வட்டகைக்கு மிக அருகில் அதாவது புவியின் பாரிய அளவுடன் ஒத்துப்பார்த்தால் ஆர்டிக் வட்டகையிலேயே சுமார் ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அங்குதான் எனது இரு பிள்ளைகளும் பிறந்தார்கள். இரவு பகல் இரண்டுக்குக்கும் கோடை காலங்களின் நடுப்பகுதியில் வித்தியாசம் காண முடியாது. midnigth summerஅதாவது நடுநிசிக்கோடை (அப்படித்தான் அழைக்கலாமோ தெரியாது) மிகவும் பிரசித்தமானது. அக்காலத்தில் சில ஐதீகப் பழக்கவழக்கங்கள் இங்கு உண்டு, அதாவது ஏழு விதமான பூக்களை பெண்கள் சேகரித்து தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்துத் தூக்கம் கொள்ளும்போது தனக்கு துணயாக வரப்போகின்ற ஆணைக்கனவில் காணலாம் என்பது ஐதீகம். மற்றும்படி ஆர்டிக் வட்டகையைச் சேர்ந்த பிரதேசத்தில் கோடைகாலம் மிகவும் குறுகியது. அனால் அழகானது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற கரடிகள் மிகவும் விசித்திரமானவை அதாவது குளிர்காலம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் காட்டில் தனக்குத் தோதான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து படுத்துவிடும் குளிர்காலம் முழுமைக்கும் அப்படியே தூக்கத்தில் இருந்துவிட்டு ஈஸ்ரர் பெருநாளை கொண்டாடும் காலத்திலேயெ மீண்டும் தனது உறக்கத்திலியுந்து விடுபடும். அதைப்போல் இங்கு வாழ்கின்ற ஒருவகை வௌவால் இனமும் அப்படியே உறைநிலைக்குப் போய் திரும்பவும் உயிர்த்தெழுவதுபோல் தனது இயல்புநிலைக்கு வந்துவிடும்.(இதனை அராச்சியாளர்கள் கைனைற்ரிக் மீழ்சுழற்சி முறைச்சக்தி)சக்தியைப் பயன்படுத்தும் தன்மைய இவ்வுயிரினங்கள் கொண்டிருக்கின்றன எனக் கூறுகிறார்கள்) அதுதவிர இப்பிரதேசத்தில் வாழ்கின்ற அணிலில் ஒருவகை பறக்கும் தன்மையுடையது அதாவது அதனது நான்கு கால்களுக்கும் தொடர்புபடும்படி வௌவ்வாலுக்குள்ளதுபோன்ற சவ்வு அமைப்பு ஒன்று, அது மரத்துக்கு மரம் பாயும்போது பறப்பதற்கும் உதவுகின்றது. தவிர இங்கு காணப்படும் அணில்கள் கோடை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்றாற்போல் நிறத்தினை மாத்திக்கொள்ளும். நீண்டகாலம் ஆர்டிக் வட்டகைப்பகுதியில் வாழ்ந்ததால் இவைபற்றி ஓரளவுக்கு அறியக்கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி Elugnajiru.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நோர்வேயின் மிக வடக்கில் உள்ள University of Tromsø பக்கம் போயிருக்கிறன். எனக்கு அந்தச் சூழலும் அமைதியும் ரெம்பப் பிடிச்சிருந்திச்சுது..!

சூரியன் அஸ்தமனமாகாத நாடு நோர்வே என்று சின்னனில் படித்த ஞாபகம். :)

Edited by nedukkalapoovan

...

இப்பிரதேசத்தில் வாழ்கின்ற கரடிகள் மிகவும் விசித்திரமானவை அதாவது குளிர்காலம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் காட்டில் தனக்குத் தோதான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து படுத்துவிடும் குளிர்காலம் முழுமைக்கும் அப்படியே தூக்கத்தில் இருந்துவிட்டு ஈஸ்ரர் பெருநாளை கொண்டாடும் காலத்திலேயெ மீண்டும் தனது உறக்கத்திலியுந்து விடுபடும். அதைப்போல் இங்கு வாழ்கின்ற ஒருவகை வௌவால் இனமும் அப்படியே உறைநிலைக்குப் போய் திரும்பவும் உயிர்த்தெழுவதுபோல் தனது இயல்புநிலைக்கு வந்துவிடும்.

...

அண்ண, நீங்க எங்கட ஆட்களைச் சொல்ல இல்லைத்தானே? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Elugnajiru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எழுஞாசிறு,

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண, நீங்க எங்கட ஆட்களைச் சொல்ல இல்லைத்தானே? :D:lol:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

aurora is a natural light display in the sky particularly in the high latitude regions.

சாதாரணமாக பூமியை சூரியப்புயல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தனது ஆளுகையைச் செலுத்திக்கொண்டே இருக்கும். தற்போது பரவலாகப் பேசப்படும் இச்சூரியப்புயல் உலகின் வடதுருவத்தில் அனேகமாகக் காணப்படும். நேற்றைய தினத்தில் மிகவும் அடர்த்தியான சூருயப்புயலின் காரணமாக குறிப்பிட்ட சில தானியங்கிக் காசு தரும் இயந்திரங்கள் வேலைசெய்யவில்லை. குளிர் காலத்தில் இப்பகுதியில் காற்றின் ஈரப்பதவிகிதம் மிகவும் குறைவடையும் இதன் காரணமாக ஏனைய நாட்களைவிட காற்றின் வேகம் குறைந்திருக்கும் . மேலும் கும்மென்ற இருள் எங்கும் சூழ்ந்திருக்கும் ஆகையால் சூரியப்புயலின் தாக்கம் எமக்குக் கண்கூடாகவே பார்க்கத்தக்கதாக இருக்கும் அனால் என்ன மிசார வெளிச்சம் இல்லத இடத்திற்குப் போகவேண்டும் அப்போதுதான் அதன் அழகினை இரசிக்க முடியும்.ஏழு நிறங்களைக்கொண்ட முகில்கூட்டமாக வர்ணஜாயம் காட்டும்போது ரசனையுள்ளோர்க்கு மனதைக் கொள்ளைகொள்ளும். நான் இங்கு வந்த ஆரம்பத்தில் இந்நாட்டு மக்கள், இரவுவேளைகளில் வானத்தில் பல நிறங்களையுடைய முகில்களை நீ பார்க்கக்கூடும் அதக்கண்டு பயந்துவிடாதே இது இயற்கையாக இப்பகுதியில் ஏற்படக்குடியது என அறிவுறுத்தியிருந்தார்கள். பல விந்தைகளைக்கொண்ட இப்பகுதியில் நத்தார்ப்பாப்பா குடியிருக்கிறார் தவிர குளிர்காலத்தில் ஆர்டிக் வட்டகைப் பகுதுக்குப் போனால் மான்கள் இழுக்கும் வண்டிலில் நாம் கட்டணம் செலுத்தி சிறிதுதூரம் பயணம் செய்யலாம் தவிர நாய்களால் இழுக்கப்படும் வண்டில்களையும் அதற்கான பழக்கப்பட்ட நாய்களையும் நாள்வாடகைக்குப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்குத் துணயாக பராமரிப்பாளர் கூடவே வருவார் நீங்கள் விரும்பினால். கொசுறுச்செய்தியாக.... இத்தாலி நாட்டின் பிகவும் பயங்கரமான மாபியா தலைவரது மகள் ஒருத்தர் நாய் வண்டிச் சவாரிப்பயணத்தின்போது தொடரூந்துப் பாதையைக் கடக்கும்போது விபத்துக்குள்ளாகி சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டார்.

  • 4 weeks later...

அருமையான அதிசயமான செய்திகளை தந்ததற்கு நன்றி தோழரே .

வாசிக்கும் போதே வண்ணமேக கூட்டங்களின் அழகை என் மனம் கற்பனை காட்சிகளாக படமாக்கியது. நிச்சயம் ஓர் நாள் நேரில் சென்று பார்க்க என் மனம் துடிக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.