Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடரிக் காம்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது....வலைப்பூவில் எழுதும் கேமாவின் ஒரு நினைவுப்பதிவு இது.

கோடரிக் காம்புகள்.

CALUMN4R.jpg

போர் நடந்துகொண்டிருந்த காலத்தின் நடுப்பகுதி.தமிழனின் இரத்தமும் சதையும் காட்டிலும் ரோட்டிலும் காய்ந்து அடையாளம் சொல்லி ,விழி நனைத்து வழி நடத்திக்கொண்டிந்த காலம் அது.

அடர்காடு.மரங்களின் கிளைகளைக் காற்றுத் தடவும் சத்தமின்றி வேறு எதுமற்ற பேரமைதி. சொல்லப்போனால் செத்த தெரு அது.பூச்சி புழுக்களுக்கும் போரின் அழுத்தமும் அவஸ்தையும் இருக்குமோ.காக்கை குருவிகள் கூட புலம் பெயர்ந்திருக்கலாம்.

அங்கு அமைதி கிழித்து ,ஆனாலும் அமைதியாகவே சத்தமில்லாமல் பரபரப்பாக எதையோ செய்துகொண்டிருந்தார்கள் குமரனும் ஈழவனும்.ஈழவன் தெருவுக்கும் பற்றைக்குமாய் பறந்து பறந்து மிதிவெடி வைக்கும் வேலையைத் துரிதமாய் செய்து முடித்துவிட்டு பற்றை பிரித்து பாம்பாய் ஊர்ந்து வந்து சேர்ந்தான் தனக்காய் காவல் காத்துக்கொண்டிருந்த குமரன் அருகில்.

"களைச்சுப் போய்ட்டாயடா மச்சான்.சரியா வேர்க்குது.இந்தா தண்ணி குடி"கொடுக்கிறான் குமரன்.

"பரவாயில்லையடா.பாரன் உவையளை.தங்கட சென்றிக்குப் பக்கதிலயே இப்பிடி மிதிவெடி வெடிக்கும் எண்டு கனவுகூடக் காணாயினம்.சனங்களைக் கொன்று குவிச்சுக் கொண்டிருக்கிறாங்கள் படுபாவியள்.இவங்கட உடம்பில ஒண்டும் மிஞ்சக்கூடாது.எங்கட உயிரை மதிக்காதவங்களுக்கு ஏன் நாங்கள் மட்டும் மதிக்கவேணும்.எங்கட எத்தினை சனங்கள் ஊனமாய்ப் போச்சுதுகள்.படிப்பில்ல பாடமில்லையெண்டு எங்கட பிள்ளையள் காடுவாசாரியாப் போகுதுகள்.போடா....போ.இதில எங்கட உயிர் போனாலும் பரவாயில்லை."

மிதிவெடிகள் - ஆக்கிரமிப்பாளர்களின் அடிமனதைக் கலக்கிடும் போராளிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம்.

டேய்...மச்சான் ஏதாலும் சிலமன்(சத்தம்)கேக்குதோ ?வா போவம்.இனி இதில நிக்க வேணாம்.

வா....வா போயிடுவம்.மழையும் வாறமாதிரிக் கிடக்கு.

அண்ணாந்து பார்த்தான் ஈழவன்.நிலவின் வெளிச்சத்தை மழை மேகம் மறைக்க முயற்சிக்க, முண்டியடித்து தன் வெளிச்சத்தை ஓரளவாவது கொடுப்பேன் என்று அடம் பிடித்ததாக நிலவு மறையாமல் வட்டமாய் தெரிந்துகொண்டிருக்கிறது.ஆனால் இன்னும் முழு நிலவாய் பௌர்ணமியாய் இல்லை.முகில் கூட்டங்கள் இறுக்கிய கைகளாய் ஒன்றையொன்று கெட்டியாய்ப் பிணைந்திருந்தது.எனவே மழை அடர்த்தியாய் அடித்து ஊற்றப்போவதில்லை இப்போதைக்கு.

இருவரும் சற்று வேகமாய் நடந்து பிறகு அமைதியாய் நடக்கத்தொடங்கினர்.

டேய் இனி இவ்விடத்திலயே படுத்திட்டுப் போவம்.அறிவிச்சுவிடு ஒருக்கா.

சரியே.

ம்ம்....சரி எனக்கும் அசதியாக் கிடக்கு என்றான் குமரன்.

அசந்து போனார்கள் அந்தக் குளக்கரையிலேயே இருவரும்.

விடியலின் இனிய இசைகள் மெதுமெதுவாய் கருக்கல் மேடையில் அரங்கேறத் தொடங்கியது. புள்ளினங்கள் பூக்கள் பூக்கும் அழகைத் தாங்கள் மட்டுமே கண்டதாய் தம்பட்டம் அடிகிறதோ கதம்பக் குரலில்.அவ்வளவு மகிழ்ச்சி குரலில்.குளத்தின் அமைதி கலைக்கும் கொக்குகள் படபடவென எங்கோ ஒருமித்துப் பறந்தபடி.

ஈழவன் உசுப்பினான் குமரனை."டேய் மச்சான் எப்பிடித்தான் இப்பிடி நித்திரை கொள்ளுவியோ.எனக்கெண்டா வராதடா.கனவு வந்து வந்து நிம்மதியா படுக்கேலாதடா.அது எப்ப வீட்ல இருந்து வந்தனோ அப்பவே போச்சு.எழும்பு போவம்.பெடியள் பாத்த்துக்கொண்டெல்லே இருப்பாங்கள்."

அது ஈழவன் பிறந்து வளர்ந்த கிராமம்.தன் மண்ணை ரசித்தபடியே நடக்கிறான் ஈழவன். எங்காவது ஒன்றிரண்டு மனித அசைவுகள் தெரிகின்றன.அதுவும் அவசர அவசரமாய்த்தான். அமைதி தொலைத்து அழவே பிறந்த தமிழராய் ஆக்கப்பட்டு கனகாலமாச்சு.

வயசு 18-19 தான் வரும் ஈழவனுக்கு.நம்ப மறுக்கும் உடல்வாகு.O/L படிக்கேக்கையே ஏதோ மன உறுதியோட வந்திட்டான் வீட்டை விட்டு.கடின உழைப்பு.காய்த்த கைகள்.நடு நடுவில கவிதையும் வரும் அவனுக்கு.

அரசியல்வாதி வாறார்

புர்ர்ர்ர்ர் எண்டு காரில

ஏனெண்டு கேக்கிறாய்

பெற்றோல் விலை

ஏறினதைக் கண்டிக்கவாம் !

அம்மா வயோதிபர் மடத்தில

வீட்டு மாடியில

வெளிநாட்டு மீனோட

பேசிக்கொண்டிருக்கிறாராம் மகன்!

ஆனால் பார்வையில் ஒரு தீர்க்கம் கூர்மை.மறைந்தும் மறையாமலும் !

சயனைட்குப்பி...சட்டைக்குள்.இப்போகூட தொட்டுப் பார்த்துக்கொள்கிறான் ஈழவன்.சிரிக்கிறான் குமரன்.

ஏண்டா தொட்டுப் பாக்கிறாய்.நீ விட்டாலும் அது விட்டுப் போகாதடா மச்சான் இனி உன்னை.

சயனைட் - அது அவர்களின் ஆன்மா.உன்னத ஆயுதம்.உயிர் கொடுத்து உத்வேகம் ஊட்டித் தரும் வீர மறவர்களின் தோழன்.

தன் ஊரை ரசித்தபடி நடந்தபடி ஈழவனைக் கடிவாளமிட்டுத் தடுக்கிறது ஒரு நாயின் குரைப்பும் வால் ஆட்டலும்.ஓ....அது அவன் வளர்ந்த வீடு.அவன் வளர்த்த நாய்.அதற்குகூட ஈழவன் என்றே பெயர் வைத்தான்."டேய் எப்பிடியடா உன்னையும் நாயையும் ஈழவன் எண்டு கூப்பிட" என்று அம்மா கூடப் பகிடி பண்ணியிருக்கிறாள்."ஏன் அப்பா சிலநேரம் "ராசாத்தி" எண்டு கூப்பிடுறார்.அது சித்தியின்ர பேரெல்லோ" எண்டு ....வாழ்வின் குடும்ப ஊட்டலில் எவ்வளவு சந்தோஷங்கள்.இழந்தேனா இல்லை இன்னொன்றை இழக்காமல் இருப்பதற்காக ஆயுதம் ஏந்தினேனா!

வீட்டு ஞாபகம் தொண்டை அடைத்து வர கூடவே அம்மாவின் தங்கை அண்ணாவின் ஞாபகமும்.தன்னைப் பெயர் சொல்லாமல் "ராசா" என்றழைத்தபடி மெலிந்த கையால் தலை தடவி உணவு ஊட்டிவிடும் அன்பு கண்ணுக்குள் நிறைய...

குமரன்...அம்மாவைப் பாத்துக் கனகாலமாச்சு.ஒரு சொட்டு நேரம்தான் 5 நிமிஷம் பாத்திட்டு வந்திடுறன்.இதில கவனமா நிண்டு பாத்துக்கொள்ளு.இப்ப வந்திடுவன்.

குமரனைப் பற்றிச் சொல்வதென்றால் ஈழவனின் சிறுவயது சிநேகம்.நாட்டுப் பற்றுள்ள ஆதரவாளன்.தூரத்து உறவினனும் கூட.நம்பிக்கை மிகுந்தவன்.

கருக்குமட்டைப் படலை தள்ளி வீட்டின் முற்றத்தில் கால் வைக்கவே வாழை மரத்தடியில் பாத்திரங்களைச் சாம்பல் போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா "என்ர ராசா" என்றபடி ஓடி வந்து அணைத்துக்கொண்டு "என்ர செல்லம் எவ்வளவு நாளாச்சடா.எப்பிடியணை இருக்கிற" என்றபடி அழத்தொடங்கினாள்.

இதுக்குத்தான் நான் இங்க வாறேல்ல.வந்தா சந்தோஷமா ரெண்டு வார்த்தை பேசிப்போட்டு எல்லாரையும் பாத்திட்டுப் போகவேணும்.

இது ....!

சரி....சரி நான் அழேல்ல.இரு தேத்தண்ணி தாறன் குடி.

இல்லையம்மா நான் ஒரு அவசர அலுவலாய் வந்தனான்.உதால போகேக்க உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான் வந்தனான்.

"இல்லையப்பு என்ர தேத்தண்ணி நான் இன்னும் குடிக்கேல்ல.தங்கச்சியும் அண்ணாவும் குடிச்சிட்டுப் போய்ட்டினம்.நான் பிறகு குடிக்கிறன்.இந்தா இதைக் குடி" என்று ஒரு பித்தளைப் பேணியை தன் முந்தானைத் தலைப்பால் துடைத்தபடி கொண்டு வந்தாள் அம்மா.

அம்மா....உவன் குமரன் வாசலில நிக்கிறான்.அவனுக்கும் குடுங்கோ.என்றபடி அண்ணா, தங்கையைத் தேடத் தொடங்கினான்.

ஈழவன் அப்பா சிறு வயதிலேயே அப்பாவைப் பலி கொடுத்தவன்.அதற்கும் எங்கள் நாட்டுப் பிரச்சனைதான் காரணம்.ஈழவன் இருக்கும் இடத்துக்கும் நகர வைத்தியசாலைக்கும் 10-15 கி.மீ தொலைவு.போவதற்குத் தடை.பாஸ் கிடைக்கவில்லை.பாஸ் கேட்டு ஓடித் திரியவும் அப்பா உயிர் பிரியவும் சரியாக இருந்தது.அப்போ ஈழவனுக்கு 10 வயதுதான் இருக்கலாம்.அண்ணா வேலை தேடிப் போனதாகவும் ,தங்கை பள்ளி போனதாகவும் சொன்னாள் அம்மா.ஏனம்மா படிப்பு ஒரு கேடோ.இருக்கிற நிலைமைல என்று புறுபுறுத்தான் ஈழவன்.

எந்தப் போராட்ட நாடுகளிலும் மனிதத்தை மதிப்பவன் பெரிதும் போராளிகள்தான்.பாசம் நீதி மனிதாபிமானம் நிறைந்தவர்கள்.அதனால்தான் நிராகரிப்பும் ஒதுக்குதலும் ஒவ்வாமையாகிறது. தங்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உயிரையே பணயம் வைத்து தங்களது சுதந்திரந்திற்காகப் போராடுகிறார்கள்.அவர்களும் குடும்பம் பாசம் எனும் பிணைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள்தான்.உறவுகளைப் பிரிந்து தங்கள் விடுதலைக்காக எத்தனை எத்தனை காலங்கள்...

தேநீர் கொடுக்கப் போன அம்மா கையோடு திரும்பி வந்தாள்.

எங்க தம்பி அங்க குமரன் இல்லையே...

அருகில அங்கால இஞ்சால பாத்தனீங்களே அம்மா...

நீங்க சரியாக் கவனிகேல்லப் போல.அவன் அங்கதான் நிப்பான்.

சரி....சரி நான் வாறன்.இன்னொரு நாளைக்கு வாறன்.தங்கச்சி வந்தோடன சொல்லுங்கோ நான் கேட்டனான் எண்டு.

ராசா ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போவனடா.இப்ப சமைச்சிடுவன்.எத்தினை காலமாச்சு என்ர கையால சாப்பிட்டு நீ !

இல்லையம்மா...எனக்கு நிறைய வேலை கிடக்கு.இதால போகேக்குள்ள உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான் ஒரு எட்டு வந்தனான்.பேந்து ஒரு நாளைக்கு வருவன் தானே.

ஈழவன் சொல்லிக்கொண்டு நிற்கும்போதே அதிர்ந்து திரும்புகிறான்.

இரைச்சலுடன் இராணுவ வாகனம் நிற்கும் கணத்தில் பாரமான பதிவுகளின் கனத்தில் பூவரசச் சருகளின் இறப்பு. துள்ளியெழும்பிய ஈழவனால் சிந்தனை தொடுக்கமுன் கொல்லை,கிணற்றடி என்று பின்வேலி முன்வேலி செத்தைகளுக்கூடாக கண்ணுக்கெட்டிய திசையெல்லாம் இராணுவ நிறங்கள்.அவனையே குறி வைக்கும் ஆயுதங்களும் ஆழப் பார்வைகளும்.

குரனைக் காணேல்ல அம்மா சொன்னதின் விளைவு புரிந்தது ஈழவனுக்கு.

இனத்தையே இனம் காட்டிக்கோடுக்கும் கோடரிக் காம்பு அவனாய் இருந்திருக்கிறான் எங்களோடயே.

குமரன் நல்லதே செய்திருக்கிறாய் என் நண்பா....இனத் துரோகி.

தப்பி ஓடவோ ஒளியவோ இடமுமில்லை நேரமும் இல்லை.

ஓ...இங்கயும் ஒரு கொடுப்பனவு எனக்கு.தீர்மானித்துக் கொண்டே "அம்மா இங்க வாணை.சாப்பிடவெல்லே கேட்டனீங்க.இப்ப கொஞ்ச நேரம் உங்கட மடியில படுத்துக் கொள்றன்."

தாய்க்கு புரியவில்லை."வாடா அப்பு...ஏன் திடீரெண்டு இப்பிடி ஒரு ஆசை".

மடியில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அடங்கவும் இராணுவம் "டோய்"என்றபடி நெருங்கவும் தாயின் வயிற்றைக் கட்டிப்பிடித்தபடியே உடைந்த சயனைட் குப்பியின் ஒருபகுதி கயிற்றில் தொங்க வாயெல்லாம் நீலநிறத்துடன் சுதந்திர தாகத்துடன் மீளாத்துயிலில் ஈழவன்.

மாவீரனின் தாய் யாருக்கும் கிடைக்காத பாக்யத்துடன்...மாவீரன் இறந்தால் செய்தியும், அவனது உடையுமே காணக் கிடைக்கும் தாய்க்கு அந்த மாவீரனே முழுமையாக அவளது பெற்று வளர்த்த மடியிலேயே....

"ஐயோ....ஓ....என்ர ரா.....சா"

இராணும் எதிர்பார்க்காமல் அவர்களைக் கடந்து அந்த அபலைத் தாயின் ஓலம் ஊரை நிறைத்து அடங்குகிறது.ஆனால் சுதந்திர ஓலம் அடங்காமல் இன்னும் வீராவேசத்துடன் !

[போர் முடிந்த கட்டத்தில் ஏன் பழையதைக் கிளறுவதுபோல இப்படி ஒரு கதை என்று கேட்பது புரிகிறது தோழர்களே.இது என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.அடுத்து எதிர்காலத்திற்குச் சேமித்து வைக்கும் ஆவணங்களில் இப்படியான நிகழ்வுகளும் ஒன்று.அடுத்து "ஜெகா" வின் சயனைட் கவிதையும் இந்த நிகழ்வை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.இன்னும் ஒன்று...தமிழ்மணத்தில் சென்ற சில வாரங்களாக் ஈழத்துப் பதிவுகளுக்கு யாரோ மைனஸ் ஓட்டுப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் யாராயிருந்தாலும் நம்மவர்கள் நம் இனம்தானே.அவர்கள் செய்யும் இந்தச் செய்கையும் இந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி இதை எழுதத் தூண்டியது.இன்னும் போர்க்கால ஞாபகங்கள் இருக்கிறது.இடைக்கிடை வருவதில் தப்பில்லைத்தானே ?]

ஹேமா(சுவிஸ்)

http://santhyilnaam....%AE%A4%E0%AF%88

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தூய துணியை இணைத்தமைக்கு நன்றிகள்....

மடியில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அடங்கவும் இராணுவம் "டோய்"என்றபடி நெருங்கவும் தாயின் வயிற்றைக் கட்டிப்பிடித்தபடியே உடைந்த சயனைட் குப்பியின் ஒருபகுதி கயிற்றில் தொங்க வாயெல்லாம் நீலநிறத்துடன் சுதந்திர தாகத்துடன் மீளாத்துயிலில் ஈழவன்

இறுதியில் உறவுதான் நிரந்தரம்(இனத்துக்காக உயிர் துறப்பது முட்டாள்தனம்)

தாக்கம்; நிறைந்த படைப்பு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதைக்கு நன்றிகள், சாந்தி!

ஏன் காட்டிக்கொடுப்பவர்களைக் 'கோடரிக் காம்பு' என அழைக்கிறோம்?

சிறிய கோடரியைப் பெரிய பிடி காட்டிக் கொடுப்பதாலா? அல்லது,

தேவையான நேரத்தில் பிடி, கையை விட்டு விடுவதாலா?

இந்தக் கேள்வி, சாந்தியிடமல்ல! எல்லாச் சொந்தங்களிடமும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதைக்கு நன்றிகள், சாந்தி!

ஏன் காட்டிக்கொடுப்பவர்களைக் 'கோடரிக் காம்பு' என அழைக்கிறோம்?

சிறிய கோடரியைப் பெரிய பிடி காட்டிக் கொடுப்பதாலா? அல்லது,

தேவையான நேரத்தில் பிடி, கையை விட்டு விடுவதாலா?

இந்தக் கேள்வி, சாந்தியிடமல்ல! எல்லாச் சொந்தங்களிடமும்! :icon_idea:

கோடாலியின் பிடி மரத்தால்... செய்யப்பட்டது.

அது தன்னுடைய இனமான, மரத்தை தறிக்க.... பெரும் உதவி செய்வதால்...

கோடலிக்காம்பு என்று சொல்வார்கள்.

பிடி இல்லாத கோடாலியால்... மரத்தை தறிக்க முடியாது.

ஃ ஒரு இனத்தை... அழிக்க, அந்த இனத்திலிருப்பவன் உதவி செய்யாவிடில், அதனை அழிக்க முடியாது.

கொசுறுச் செய்தி: ஐரோப்பாவில் இரும்பால் செய்யப் பட்ட கோடாலிப் பிடிகள் தான் அதிகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சிறி!

உங்களுக்கு ஒரு பச்சையுடன், யாழ் களத்தின் ஆஸ்தான வித்துவான் என்ற பட்டத்திற்கும், பரிந்துரை செய்யப் படுகின்றது! :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் நிகழ்ந்தது காட்டி கொடுத்தவரின் பெயர் ஈசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடம் சொல்லியழ???---

இது காலா>காலம் நடப்பது என்று எமை நாமே தேற்றும் முட்டாள் தனமும் மாறணும்.

துயரம் மிகுந்த சம்பவம். நம் மண்ணில் காட்டிகொடுப்பு என்பது இன்றுவரை சர்வசாதாரணமான விடயமாயிற்றே. அது தான் நாம் இன்று நலிந்தவர்களாக ஆனோம். உண்மையின் தரிசனத்திற்கு நன்றிகள். தொடருங்கள் சாந்தி ....

கோதரிபாம்புகள்Snake_caraoke.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.