Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிக்காய் பொரித்தேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சத்திமுத்துப் புலவர் பாடிய பாடல் இது!

வறுமை தாங்காது, பணம் தேடித் புலவர் யாத்திரை போகின்றார்.

போகின்ற வழியில், கடும் குளிரின் அகப்பட்ட புலவர், யாருமில்லாத சத்திரத்தில் படுத்திருந்த படி, வான வெளியை அண்ணாந்து பார்த்த படி, தன்னிலையை, தனது துணைவியாரிடம் தெரிவிக்க விரும்பினார். அப்போது வானில் பரந்த நாரைக்கூட்டம் கண்ணில் பட, மேலுள்ள பாடலைப் பாடுகின்றார்.

சிவந்த கால்களையும், இரண்டு பாதிகளாகப் பிழந்த பனங்கிழங்கைப் போன்ற உதடுகளையுடையை நாரையே, நீயும் உனது கேர்ல் பிரண்டும், தென்திசை நோக்கிப் பறக்கையில், குமரியில் நீராடி, வடதிசைக்கு வரும் வழியில், சத்திமுத்து வாவியில் குளித்து, வருகையில் கூரை நனைந்த சத்திரத்தினுள்ளே, பல்லிகள் சத்தமிடஉள்ள வீட்டில் , எனது வருகையைப் பார்த்திருக்கும் எனது மனைவியைப் பார்த்து, எங்கோ பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், உடுப்புகள் அற்று, காற்றில் நடுங்கிய படி,இரண்டு கைகளாலும், கால்களாலும், உடம்பைப் பொத்தியபடி, பெட்டிக்குள் இருக்கும் பாம்பாக, அடங்கிப் போய் இருக்கும், எனது நிலையை எடுத்துச் சொல்வாயா, என்று பாடுகின்றார்.,

  • Replies 163
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்திமுத்துப் புலவர் பாடிய பாடல் இது!

வறுமை தாங்காது, பணம் தேடித் புலவர் யாத்திரை போகின்றார்.

போகின்ற வழியில், கடும் குளிரின் அகப்பட்ட புலவர், யாருமில்லாத சத்திரத்தில் படுத்திருந்த படி, வான வெளியை அண்ணாந்து பார்த்த படி, தன்னிலையை, தனது துணைவியாரிடம் தெரிவிக்க விரும்பினார். அப்போது வானில் பரந்த நாரைக்கூட்டம் கண்ணில் பட, மேலுள்ள பாடலைப் பாடுகின்றார்.

சிவந்த கால்களையும், இரண்டு பாதிகளாகப் பிழந்த பனங்கிழங்கைப் போன்ற உதடுகளையுடையை நாரையே, நீயும் உனது கேர்ல் பிரண்டும், தென்திசை நோக்கிப் பறக்கையில், குமரியில் நீராடி, வடதிசைக்கு வரும் வழியில், சத்திமுத்து வாவியில் குளித்து, வருகையில் கூரை நனைந்த சத்திரத்தினுள்ளே, பல்லிகள் சத்தமிடஉள்ள வீட்டில் , எனது வருகையைப் பார்த்திருக்கும் எனது மனைவியைப் பார்த்து, எங்கோ பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், உடுப்புகள் அற்று, காற்றில் நடுங்கிய படி,இரண்டு கைகளாலும், கால்களாலும், உடம்பைப் பொத்தியபடி, பெட்டிக்குள் இருக்கும் பாம்பாக, அடங்கிப் போய் இருக்கும், எனது நிலையை எடுத்துச் சொல்வாயா, என்று பாடுகின்றார்.,

ரோமியோ உங்களுடைய இம்சையை தாங்க முடியலையே.... :D

நாரைக்கு அலகுகள்தானே உண்டு அவற்றை நீங்கள் எப்படி உதடுகள் என்று சொல்லாம் :icon_mrgreen: (எனக்கென்னவோ ரோமியோவின் கண்களுக்கு பறவைகளின் சொண்டுகள், பழுத்த இலைகள் எல்லாம் உதடுகள், இதழ்களாக தெரிகிறதுபோல இருக்கு என்னவோ எல்லாம் அசாதாரணமாகத் தெரியுது. ஆளைக் கொஞ்சம் இனி உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.) :o நாங்கள் நிற்கிறது தமிழும் நயமும் பகுதி..... இதற்குள் கேர்ல் பிரண்டைக்கூட்டி வருவது நியாயமா? :unsure:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ உங்களுடைய இம்சையை தாங்க முடியலையே.... :D

நாரைக்கு அலகுகள்தானே உண்டு அவற்றை நீங்கள் எப்படி உதடுகள் என்று சொல்லாம் :icon_mrgreen: (எனக்கென்னவோ ரோமியோவின் கண்களுக்கு பறவைகளின் சொண்டுகள், பழுத்த இலைகள் எல்லாம் உதடுகள், இதழ்களாக தெரிகிறதுபோல இருக்கு என்னவோ எல்லாம் அசாதாரணமாகத் தெரியுது. ஆளைக் கொஞ்சம் இனி உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.) :o நாங்கள் நிற்கிறது தமிழும் நயமும் பகுதி..... இதற்குள் கேர்ல் பிரண்டைக்கூட்டி வருவது நியாயமா? :unsure:

தமிழ் சிறியின் ;உதட்டுச் சாயம்; திரியை வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, உடனே இந்தத் திரிக்கு வந்து கருத்தெழுதப் போக இப்படியாகிவிட்டது! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூதுப்பாடல்கள் வரிசையில் பொதுவாக தனிமனிதத் தூதுகளைத்தான் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன.

எங்களுடைய காலத்தில் மட்டும்தான் இந்தத்தூது ஒரு இனத்தின் தூதாகப் பதியப்பட்டிருக்கிறது.

பண்பாட்டால், மொழியால் ஒன்றித்த இனமாகவும் பூகோளரீதியில் கடலினால் பிரிவுபடுத்தப்பட்ட ஒரு இனமாகவும் வாழும் தமிழினத்தின் இரு வேறு நிலங்களின் ஊடான வாழ்நிலைகளை இந்தத்தூதுப்பாடல் வெளிக்கொணர்கிறது. இந்தத்தூதுப்பாடலைப்பற்றி நிறையவே எழுதலாம்.

தமிழினத்தின் ஒரு பகுதியினர் வாழும் இந்திய நாட்டினால் ஈழத்தில் அதே தமிழினம் அழிக்கப்படும்போது உருவாக்கப்பட்ட பாடல்.

இன்னொரு நூற்றாண்டின் பின்னர் இந்தப்பாடல் தூது இலக்கியத்தின் மிகப்பெரும் பொக்கிசமாகக் கருதப்படும் நிலையை எய்தும். அதேபோல்தான் தூதுக்கவிதைகளும் தொடர்ந்து தூது என்ற பொருளுக்கமைய இருக்கும் படைப்புகளை இந்தத்திரியில் முடிந்தவரை இணைப்போம் உங்களுக்கும் தெரிந்த பற்பல தூது இருக்கலாம் இணையுங்கள். இதோ வாழ்விடத்தால் வேறுபட்ட ஒரே இனம் தன் வாழ்விடத்தின் துயரங்களை கடல்பிரித்த துயரோடு எடுத்து வருகிறது ...

வீசும் காற்றே தூது செல்லு - தமிழ்

நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு

ஈழத்தில் நாம் படும்வேதனைகள் - இதை

எங்களின் சோதர்ர் காதில் சொல்லு

(வீசும் காற்றே தூது செல்லு)

இங்கு குயிலினம் பாட மறந்தது - எங்கள்

வயல்வெளி ஆடை இழந்தது

மங்கைகளின் பெருமங்களம் போனது - சாவு

எமக்கொரு வாழ்வென ஆனது

(வீசும் காற்றே தூது செல்லு)

உங்கள் கொடிமலர் இங்கு மடியுது

ஊர்மனை யாவிலும் சாக்குரல் கேட்குது

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை - உங்களின்

இராணுவம் செய்து முடிக்குது.

(வீசும் காற்றே தூது செல்லு)

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ - கடல்

கை வந்து தாங்கிடும் நீளமல்லோ

எத்தனை எத்தனை இங்கு நடந்திட

எங்களின் சோதர்ர் தூக்கமல்லோ

வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார் - புலி

வீர்ரை காட்டினில் தேடுகிறார்

தாங்க முடியல்லை வேதனைகள் - இதை

தாயகப்பூமியின் காதில் சொல்லு.

வீசும் காற்றே தூது செல்லு)

Edited by வல்வை சகாறா

இப்பொழுதுதான் எம் இனம் பசியாற "கறிக்காய்" பொரிக்கின்றீர்கள் அக்கா! தொடர்க உங்கள் பயணம் எம் விடுதலைப் பாதை வழியே! :)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=VarjKW8WG9c

ஏரிக்கர பூங்காத்தே

நீ போறவழி தென்கிழக்கோ

அட தென்கிழக்கு வாசமல்லி

என்ன தேடிவர தூது சொல்லு…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூது இலக்கியத்தைப்பற்றி இந்த கரிக்காய்த் திரியில் எவ்வளவோ பதியலாம் எல்லாவற்றையும் ஒன்றாகப் பதிவிட்டு வாசிக்கும் உங்களுக்கு வெறுப்பேற்றாமல் சிறிது சிறிதாக சுடச்சுட வடையைச்சாப்பிட்டுக் கொண்டு மெல்லிய சாயம் ஊறிய தேனீர் குடிக்கிற மாதிரி ஒரு சுவையான பதிவாக இதை நகர்த்துவோம் என்று தேடலை முடுக்கி விட்டேன்... நீங்கள் நன்றாக இரசிக்கக்கூடிய ஒரு பதிவு கண்ணில் பட்டது நாமதான் தூது பற்றி ஒரு திரியை திரிச்சுக் கொண்டிருக்கிறோமே... இந்த "குரங்கு விடு தூது" என்ற கதையையும் இங்கு இணைக்கலாம் தானே என்று தூக்கி வந்து விட்டேன் வாசியுங்கள்.

குரங்கு விடு தூது!

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

"குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?" என்று கேட்டான், மட்டி

"மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!" என்றான் மடையன்.

"அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான், முட்டாள்.

"ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?" என்று கேட்டார், பரமார்த்தர்.

"பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?" எனக் கேட்டான், மண்டு.

"நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்" என்று விளக்கம் சொன்னான், மூடன்.

"இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்" என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.

அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. "சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, "லபக்" என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.

சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது.

அதைக் கண்ட பரமார்த்தர், "சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!" என்று கத்தினார்.

மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர்.

அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!" என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.

சீடர்களும், "ரங்கா, ரங்கா!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

மடத்துக்கு வந்து சேர்ந்ததும், "நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி.

"குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.

அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான்.

"ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான், முட்டாள்

பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் பூராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.

பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், "நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு" என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.

ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.

அடுத்த கணம், "டமால், டுமீல்" என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக் கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்.

"குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.

அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு....

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

"குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

"இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

"வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

"குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.

Edited by வல்வை சகாறா

என்ன இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவே பயப்பிடுறீங்களா?

சும்மா ஒதுங்கி இருக்காமல் வாங்கோ...இங்கு படித்த பீதாம்பரங்கள் என்று எவருமில்லை. முடிந்தவரைக்கும் நாங்களே கூழ் முட்டைகளாகவும் குஞ்சு முட்டைகளாகவும் இருப்போம்.

இனிய பொழுதில் ஓடியோடி பாடல்களை இணைக்கிற நீங்கள் இங்கு தூதுப் பாடல் இணைக்கச் சொல்லிக் கேட்டும் இணைக்கவில்லையே.... :unsure:

நாம நம்ம பாட்டில ஒரு ஓரமா வந்து போறம், இதுக்குள்ள வந்தால் எங்க நீங்க எங்களைப் பொரிச்சுப் போடுவீங்களோ என்ற பயம் தான் அக்கா... ^_^

நீங்கள் கேட்டதிற்காக தேடி எடுத்து ஒரு திரைப்படப் பாடல் இணைகிறேன்...

படம்: காதல் ஒரு கவிதை

பாடல்: என் தூது நீ செல்

பாடியவர்கள்: SPB & சித்திரா

இந்த இணைப்பில் En Thoothu Sel Sel என்ற பாடலைத் தெரிவு செய்து கேட்கவும்

http://www.inbaminge...Oru%20Kavithai/

பெண்:

செல் செல்... செல் செல்...

என் தூது நீ செல் செல்

என் தோழி நீ செல் செல்

என்ன மோகங்கள் ஏன் ஏன்

என் சோகங்கள் ஏன் ஏன்

மனதின் மையலை மடலில் எழுதி

நான் தர உன்கையில்

துணைச் சேர இப்படி எங்கும்

மனம் ஓர் ஓலை எழுதாதோ

இங்கோர் பூவை சொப்பனம் காண

ஏதோ ஆசை எழுந்தாச்சோ

தூது செல்லையோ புறவே நீ தான்

சீதை பாவமடி

என் தூது நீ செல் செல்

என்ன மோகங்கள் ஏன் ஏன்

என் சோகங்கள் ஏன் ஏன்

ஏங்கினேன்....

மங்கை வாழ்வில் உயிர் போல்

அவன் தான் அன்புக்கு வாழ்த்து

சொல்லாதோ பெண்

ஓ அன்பே மோகம் கொண்டால்

எப்பவும் தான் தூங்காதோ பெண்

பூப்போல் நான் தான் ஏங்குகிறேன்

தென்றலைச் சேர்ந்திடத்தான்

ஆண்

என்னாசை மோகம் மறைந்திடாது

பெண்மான் மீது உண்டானது

உடல் தான் இங்கே உயிரில்லாமல்

நாளும் உருகிப் பாடுது

துடிக்குது நெஞ்சு தூது செல்லாயோ

ஓ.....

பெண்மானை தேடி

என் தூது செல் செல்

இப்போது நீ செல் செல்

என் மோகங்கள் ஏன் ஏன்

என் சோகங்கள் ஏன் ஏன்

பெண்:நில்லாமல் நாளும் ஊறும் ஊற்றோ

ஓயாது கண்ணா உயிர் காதல்

ஆண்:இயற்கை நியதி இதுதானம்மா

ஏன் நமக்கு ஒரு காவல்

பெண்:கண்களின் பாடல் நம்மை இணைக்க

ஆண் & பெண்:கண்களின் பாடல்நம்மை இணைக்க

கலந்தது இரு உயிர் தான்

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுத்தேடலில், நாளை எமது மூன்றாம் தலைமுறை இன்றிருக்கும் எம்மைப்பற்றி அறிய முற்படும்போது எங்களுடைய படைப்பிலக்கியங்கள்தான் அவர்களுக்கான பல தகவல்களை வழங்கப்போகிறது. விடுதலை வேண்டிப் போராடும் காலத்தில் காலநதிகளில் அள்ளுண்ட எச்சங்களாக பூமிப்பந்தின் நிலப்பரப்பெங்கும் ஈழத்தமிழினம் வியாபித்திருந்ததையும், புலம் பெயர்க்கப்பட்ட எங்களுக்கும், தாயக வேர்களுக்குமான உறவின் தேடலையும் ஏக்கத்தினையும் இன்றைய பதிவுகளே மூன்றாம் தலைமுறைக்கோ அல்லது அதற்குப் பின்னால் தேடல்களை மேற்கொள்ளும் எவருக்காயினும் உதவப் போகின்றன. ஒரு வேளை இன்னும் நான்கு சந்ததிக்குப்பின் எம்மைப் போல யாரோ சிலர் தூது இலங்கியங்களில் தேடல் நடாத்தவும் கூடும். அப்போது இந்த யாழின் பதிவுகூட அவர்களின் தேடலில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இனிவரும் சந்ததியின் தேடலுக்காக இந்தப்பதிவில் கீழ்வரும் பகுதியையும் இணைக்கிறேன்.

எங்கேயோ எல்லாம் தூது இலக்கியத்தை தேடுகின்றேனே 2004 இல் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு, என்னால் எழுதப்பட்ட இந்த வரிகள்கூட ஈழத்தின் தூது இலக்கியத்தில் நீங்கா இடத்திற்குரியது. முதன்மைப்படுத்துவதற்கல்ல இப்பதிவு . இது கால நதிகளில் நீள நடக்கின்ற ஈழத்தமிழினத்தின் புலம் பெயர்க்கப்பட்ட வாழ்க்கை வரிகளாகவும்.......

இந்தப்பதிவு ஏற்கனவே 2009 சனவரி மாதம் இந்தக்களத்தில் பதவிடப்பட்டது அப்பதிவை மறுபடியும் இவ்விடத்தில் இணைக்கின்றேன்

நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது.

ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’

என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள்.

மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன்.

இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன.

இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன.

தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல்.

கட்புலன் அறியாக் காற்றே!

உட்புலன் அசைக்கும் உந்து பொருளே!

உயிர்ப்பில், இயற்கை அணைப்பில்

நின்னை உணர்த்தும் உயிர் மூலமே!

தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன்.

தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம்

உரியபடி சேர்த்து விடு! - இல்லாவிடின் அவன்

உக்கிரத் தமிழ் செப்பி உன்னையும் எரித்திடுவான்

உயிர்க்கொடையால் ஒளி துலங்கும்

சூரியத்திரு நாட்டிடையே

மயிர் கூச்செறி கவிகள் மொழிகின்ற வீரியரே!

வடமேற்குத் திக்குதனில் வாரணம் பல கடந்து

கண்மறைந்து கிடக்கின்ற ஈழத்து மங்கையிவள்

இங்கு இடர் சூழ்ந்த வாழ்வுதனை,

எம்மினத்தின் இலக்கற்ற போக்குதனை

சுடரும் எம் தேசியச் சுமைதாங்கி உமைநோக்கி

இவள் சிந்தை கண்டதினை

இம்மடலால் செப்ப வந்தேன்.

அரங்கேறும் போதிருக்கும் ஆயிரம் நண்பர்களும்

பொழிப்புரை முடித்திறங்க இருநூறாய் மாறும் நிலை

உங்களுக்கு மட்டுமா?

இன்னவளுக்கும் அதேதான்

சின்ன மாற்றம் சபையேறும் பேச்சிலல்ல.

புனிதர்கள் போர் அறியாப் புல்லர்கள் இங்கு சிலர்

தனிநபராய் , குழுநிலையாய் ஊராயும் கூர்முனையால்

ஆர்.சி.எம்.பியும் அந்நிய நாடிதுவும்

கனியாத உறவாகி காழ்ப்புணர்ச்சி கொள்வதுவும்

இலக்கியப் பூக்களெல்லாம் இலக்குகள் ஏதுமின்றி

கிடைக்கின்ற மேடைகளில் இடைக்கிடை என்றாலும்

தலைகாட்டிப் பெயரெடுத்தால் தமக்கிது காணுமென்று

தாயக உணர்வகற்றி திசைக்கொன்றாய் திகழுவதும்,

பூவுக்குள் புறம் தைத்துப் பூலோகம் வியத்திருக்கும் - ஈழ

மாதிற்கு இழுக்குத் தரும்

புலம்பெயர் பெண்ணினமும், தற்கொலைச் செறி நிலையும்,

அப்பா கள்ள நம்பர்,அம்மா சிங்கிள் மதர்,

பிள்ளைகள் தனித்தனியே பிரத்தியேகப் பிச்சைப்பணமும்

எம்மவர் நிலைமாற்ற எள்ளிநகை வாழ்வியலும்,

தாயகப் பேச்செடுத்தால் தேவையில்லாச் சங்கதியாய்

தூயதொண்டர்களைத் தூசிக்கும் வாசகத்தால்

மாயமான் வலை வீழ்ந்த மதிகெட்ட மாக்களுமாய்

தூரதேசத்திலிங்கே தமிழர் மாசடைந்து கிடக்கின்றார்

நாளாந்தம் இலவச நாளிதழ்கள்

நேரிய இலக்கற்ற நிலைமாறும் எழுதுகோல்கள்,

பேருக்குப் பதவிகள், பிரத்தியேக விருதுகள்

வெள்ளித்திரை மின்மினிகள் வீதியுலா வருவதற்கும்

அள்ளி வழங்க ஆயிரமாய் இளையவர்கள்!

எங்கே போகிறது? என்னினமோ தெரியவில்லை

ஒண்ட வந்த இடம் ஒய்யாரப்புலமென்று

பண்டை மறந்த சிலர் பரிவட்டம் கட்டுகிறார்

வெள்ளைக் கொக்கின் புலத்தில்

காக்கைக்கு என்ன வேலை?

காலம் மாறும் போது கண்ணீர்தான் மிச்சமாகும்.

இங்கு

தமிழினத்து நிலை கண்டு மூச்சு முட்டித் துடிக்கின்றேன்.

தறிக்கெட்ட நிலையிருந்து மீட்க மனம் வெடிக்கின்றேன்.

வாட்டம் எனை வடிக்க வழிதேடி நொடிக்கின்றேன்.

கேட்டு நகைக்காதீர் கேவலமாய் நினைக்காதீர்!

நலிந்து நகை மறந்த நாடோடிப் பாடலிது

இன்னொருவர் நாட்டினிலே எத்தனை நாள் உவந்திருப்பேன்?

சூரியக்கதிர் மறுக்கும் வீரியப் பனித்திரையில்

வேகும் நெஞ்சோடு விறைப்பெய்திக் கிடக்கின்றேன்.

தீ மூட்ட முடியாமல் திகைத்துப் புகைக்கின்றேன்.

நேற்றை விட நாளைகள் நிலைமாறிப் போகலாம்

வேற்றுவர் சூழ்ச்சியினால் வெந்தணலில் வீழலாம்

இருப்பினும் தாயகப் புலவனே!

நான் துருப்பிடிக்கப் போவதில்லை.

நெஞ்சக் குழிக்குள்ளே விடுதலை

நெருப்புத் தழல் சொரிய,

தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.

வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை

ஏளனப்படுத்துவோர் எண்ணிக்கை பல – ஆயினும்

இறுமாந்து நிமிர்கின்றேன்.

ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.

கண்டதைக் கேட்டதைக் கொட்டித்

தீர்த்ததாய் எண்ணவேண்டாம்

துருப்பிடிக்கா எந்தன் தேடலிலே இன்னும் வரும்.

இப்போது விடை பெற்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் இலவச நாளிதழ்கள்

நேரிய இலக்கற்ற நிலைமாறும் எழுதுகோல்கள்,

பேருக்குப் பதவிகள், பிரத்தியேக விருதுகள்

வெள்ளித்திரை மின்மினிகள் வீதியுலா வருவதற்கும்

அள்ளி வழங்க ஆயிரமாய் இளையவர்கள்!

எங்கே போகிறது? என்னினமோ தெரியவில்லை

கோவில்கள், குடமுழுக்குகள்,

கொஞ்சி விளையாடும் காஞ்சீபுரங்கள்,

கழுத்து நிறைந்த கனமான தாலிகள்,

மதியச் சாப்பாடு, மரக்கறி அன்னதானம்,

கொழுப்பேறிய உடலுக்கும் கொஞ்சம் ஓய்வு!

மாற்றங்கள்???

.

மேலும் ஒரு தூது..

பூஜைகேத்த பூவிது நேத்துத்தான பூத்தது

அட பூத்தது யாரத பாத்தது

ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல

தோதாக யாரும் இல்ல தூது சொல்ல :mellow:

வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள

கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல

சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற

கொட்டி போன குடுமிக்கு சீப்பு தேடுற

என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற

கால நேரம் கூடிபோச்சு மாலை வந்து மாத்துற

பூஜைகேத்த பூவிது…… நேத்துத்தான பூத்தது……

அட பூத்தத யாரது பாத்தது

.

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தூது பற்றிய தேடலில் இன்று அகப்பட்டது இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனின் எழுத்தில் அண்ணனும் தங்கையுமாக காற்றிடம் தூதையும், துன்பத்தையும் சொல்கின்ற அருமையான பாடல் திரி திசை மாறுகிறதோ என்று நினைக்கவேண்டாம் சங்க இலக்கியங்களையும் பேசுவோம். வெள்ளித்திரைகளின் இன்னிசைத் தமிழையும் சுவைப்போம். இன்றைய யதார்த்தங்களுக்குள்ளும் மூழ்கி முத்தெடுப்போம்

தங்கை

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - நீ

சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ?

வண்ணமலர்களில் அரும்பாவாள் - உன்

மனதிற்குக் கரும்பாவாள் - இன்று

அலை கடல் துரும்பானாள் என்று

ஒரு முறை கூறாயோ?

(இந்த மன்றத்தில்)

நடு இரவினில் விழிக்கின்றாள் - உன்

உறவினை நினைக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள் - அவள்

விடிந்தபின் துயில்கின்றாள் எனும்

வேதனை கூறாயோ?

அண்ணன்

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - என்

கண்ணுக்குக் கண்ணான இவள் சொன்னது சரிதானா?

தன் கண்ணனைத் தேடுகிறாள் - மனக்

காதலைக் கூறுகிறாள் - இந்த

அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ..ஓஓஒ

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - என்

கண்ணுக்குக் கண்ணான இவள் சொன்னது சரிதானா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவியைத் திருமணம் செய்து கொள்ளப் பொருள் வேண்டும். அதனால் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்தான். இதனை ஆற்றமாட்டாத தலைவி வருந்தினாள். தனது மனக்குமுறலை,

‘‘தும்பியே! இப்பிரிவு நோய்த் துன்பம் குறைவதற்காக நான் உனக்கு ஒன்று உரைக்கின்றேன் கேட்பாயாக. உன் உடம்பு கரியது. உன் அறியும் அறிவும் கரியது. ஆதலால் நீ அறமில்லததாய் ஆயினாய்.

மனையைக் காப்பதற்காகப் போடப்பட்டுள்ள வேலியில் படர்ந்திருக்கும் பீர்க்கம் பூவினை நீ ஊதிவிட்டுச் செல்வாய். ஆனால் அதுபோன்று இருக்கக் கூடிய பசலையை ஊதமாட்டாய். மேலும் உனது பெட்டையை விரும்பி விரைவாகப் பறந்து சென்று அதன் மனம் மகிழ அன்பு செய்வாய். அதனாலேயே நீ என்னை மறந்தாய்.

என் மீது அன்பில்லாது பொருள் காரணமாகப் பிரிந்த என்னுடைய காதலரிடம் சென்று என்நிலையை அவருக்கு எடுத்துரைத்து அவரைத் திரும்பி வருமாறு செய்யாத உனது செயல் விரும்பத்தகுந்ததாக இல்லை. இருப்பினும் நீ வாழ்வாயாக’ என்று கூறுகிறாள்.

‘‘கொடியை வாழி! தும்பி! இந்நோய்

படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென

மெய்யே கருமை அன்றியும் செவ்வன்

அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே

மனை உறக்காக்கும் மாண் பெருங்கிடக்கை

நுண்முள்வேலித் தாதொடு பொதுளிய

தாறுபடு பீர;க்கம் ஊதி வேறுபட

நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்ச்

சிறுகுறு பறவைக்கு ஓடி விரைவுடன்

நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பிலர;

வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர;க்கு

என்நிலை உரையாய் சென்று அவண் வரவே’’

என்ற இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

தும்பி தன் துணையாகிய சிறுகுறும் பறவைக்கு விரைந்தோடி அன்பு செய்யக் கூடிய இயல்புடையதாக இருந்தும் தன்னுடைய துன்பத்தைச் சிறிதும் அறியவில்லையே என்ற வருத்தத்தில் தலைவி தும்பியைப் பார்த்து, ‘‘உன் உடம்புதான் கருப்பு அறிவும் கரிதோ நீ கொடியை’ எனக் கூறுவது இன்புறத் தக்கதாக உள்ளது.

தும்பிசேர்கீரனாரின் குறுந்தொகைத் தலைவியோ,

‘‘அம்ம வாழியோ-மணிசிறைத் தும்பி!

நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர;நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடவை மிடைந்த துடவையம் சிறுதினைத்

துளர்எறி நுண்துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோர்கே!’’

எனத் தும்பியைத் தன் தலைவனிடம் தூதுவிடுகிறாள்.

தலைவி தும்பியிடம் நீலமணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே! நீ தலைவனுடைய நாட்டில் உள்ள மலையிடத்தே சென்றால் என் தலைவனிடம், ‘‘உன்னுடைய தலைவியானவள் அவளது தமையன்மார்களால் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றாள். நீ அவளைக் குறிப்பிட்ட இடத்திலே பார்க்க இயலாது என்பதனைக் கூறுவாயாக’ என்று தூது அனுப்புகிறாள்.

http://puthu.thinnai.com/?p=9363

  • கருத்துக்கள உறவுகள்

தும்பி தன் துணையாகிய சிறுகுறும் பறவைக்கு விரைந்தோடி அன்பு செய்யக் கூடிய இயல்புடையதாக இருந்தும் தன்னுடைய துன்பத்தைச் சிறிதும் அறியவில்லையே என்ற வருத்தத்தில் தலைவி தும்பியைப் பார்த்து, ‘‘உன் உடம்புதான் கருப்பு அறிவும் கரிதோ நீ கொடியை’ எனக் கூறுவது இன்புறத் தக்கதாக உள்ளது.

தும்பிசேர்கீரனாரின் குறுந்தொகைத் தலைவியோ,

‘‘அம்ம வாழியோ-மணிசிறைத் தும்பி!

நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர;நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடவை மிடைந்த துடவையம் சிறுதினைத்

துளர்எறி நுண்துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோர்கே!’’

எனத் தும்பியைத் தன் தலைவனிடம் தூதுவிடுகிறாள்.

தலைவி தும்பியிடம் நீலமணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே! நீ தலைவனுடைய நாட்டில் உள்ள மலையிடத்தே சென்றால் என் தலைவனிடம், ‘‘உன்னுடைய தலைவியானவள் அவளது தமையன்மார்களால் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றாள். நீ அவளைக் குறிப்பிட்ட இடத்திலே பார்க்க இயலாது என்பதனைக் கூறுவாயாக’ என்று தூது அனுப்புகிறாள்.

http://puthu.thinnai.com/?p=9363

மின்னஞ்சல் வசதி இல்லாமல், சங்ககாலத்துக் காதலர்கள், தும்பி,பறவை, நிலா, முகில் என்று தேடி நல்லாவே துன்பப் பட்டுட்டாங்க உடையார்! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரிக்காய் பொரிக்கும் சட்டியில் பொரிய விருப்பமா? :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

NaLadhamayanthi%252313.jpg

சரி.. :rolleyes:

எல்லோருக்கும் ஒரு போட்டி :icon_mrgreen:

சங்க இலங்கியத்தில் ஒரு சோடி,..... அன்னத்தைத் தூது விட்டனர் அந்த சோடியின் பெயர்கள் என்ன?

இந்த இலக்கியத்தை படைத்த புலவரின் பெயர் என்ன?

எத்தகைய தருணத்தின் அன்னம் தூது சென்றது?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

புகழேந்திப் புலவர் இயற்றிய 'நளவெண்பாவில்' நிடத நாட்டின் மன்னன், நளன், தனது காதலுக்காகத் தமையந்திக்கு, அன்னத்தைத் தூதனுப்புகின்றான்!

இளவேனிற் காலத்தில், தமையந்தி, பூங்காவில் உலாவியபோது, அன்னம் அவள் முன் தோன்றியது!

  • கருத்துக்கள உறவுகள்

புகழேந்திப் புலவர் இயற்றிய 'நளவெண்பாவில்' நிடத நாட்டின் மன்னன், நளன், தனது காதலுக்காகத் தமையந்திக்கு, அன்னத்தைத் தூதனுப்புகின்றான்!

இளவேனிற் காலத்தில், தமையந்தி, பூங்காவில் உலாவியபோது, அன்னம் அவள் முன் தோன்றியது!

விரல் நுனியில் தகவலை வைத்திருக்கிறீங்க, வாழ்த்துகள் புங்கையூரன்;

காலம் தான் உடனே வரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம்

கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்,

தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும்,

நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான்.

மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த

காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,

தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்

பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான்.

இது ஒரு அழகிய தமிழ்ப் பாடல்!

கூகிளாண்டவரிடம் போகாமல்,எமக்குத் தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

  • கருத்துக்கள உறவுகள்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

அகன்ற பெரிய மார்பும், சதைப்பிடிப்பான... தோளும்

நாரத முனிவரின் பேச்சாற்றலும்,

பத்து மாலைகளை அணிந்த கழுத்தும், சிவபெருமான் கொடுத்த வாளும் இருக்க...

வீரத்தை போர்முனையில் காட்டாது, வெறுங்கையுடன் திரும்பிப் போனான்.

சத்தியமாக, கூகிளாண்டவரிடம் போகவில்லை. அவ்வளவும்... சொந்தச் சரக்கு. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன், on 12 April 2012 - 06:44 AM, said:

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

வாரணம்-யானை யானைகளுடன் பொருதிய மார்பும். வரை-மலை.தன்தாய் ஒவ்வொரு நாளும் வெள்ளியங்கிரி மலைக்குப் போய் வழிபடுவதா அந்த மலையை பெயர்தெடுத்து என் அன்னையின் காலடியில் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று மலையை பெயர்த்து தோள்களில் ஏற்றினான்.நாரத முனிவருடன் தன் தலையை வெட்டி யாழாகவும் தன்நரம்புகளையே யாழின் நரம்புகளாகப் பாவித்து அவருக்கு ஈடாக தமிழிசையை இசைத்த நாவும். தார் அணி மௌலி பத்தும்-பத்து தலைகளில் ஏறிய மகுடங்களும்,சிவன் கொடுத்த வாளும் (விபிடணணின் துரோகத்தால் )வீரத்தையும் களத்திலே விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கை மாநகருக்குள் சென்றான்.

எங்கள் தலைவன் இராவணணின் பெருமைகளை மறைக்க முடியாமல் கம்பர் அவனை இந்த இடத்தில் உயர்த்தி பாடி இகழ்கின்றார்.

இசைபாடி ஈழத்தை ஆண்டவனாம் இராவணனை வசைபாடிச் சென்று விட்டான் வம்பனவன் கம்பனடி!

இது என் சொந்தச் சரக்குத்தான் பிழையுண்டேல் பொறுத்தருள்க.

விடங்கொண்ட மினைப்போலும்

வெந்தணல் மெழுகைப் போலும்

படங்கொண்ட பாம்பின் வாயில்

பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட இராம பாணம்

செருக்களத்துற்ற போது

கடன்பட்டார் நெஞ்சம் போலே

கலங்கினான் இலங்கை வேந்தன்.

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை

மனச் சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி-உடல்புகுந்து தடவியதோ

ஒருவன் வாளி.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய தமிழ் சிறிக்கும், புலவருக்கும் நன்றிகள்!

எங்கள் தலைவன் இராவணணின் பெருமைகளை மறைக்க முடியாமல் கம்பர் அவனை இந்த இடத்தில் உயர்த்தி பாடி இகழ்கின்றார்.

உண்மை தான் புலவரே!

சம்பந்தர் கூடத் தனது திருநீற்றுப் பதிகத்தில், திருநீற்றை ஒப்பிடுவதற்குச் சரியான உவமை தேடித் தவிக்கின்றார்!

வேறு வழியில்லாது, இராவணன் மேலது நீறு என்றே பாடுகின்றார்! ஆரியன் வேறு வழி காணாது, திராவிடனைத் தூக்கிப் பிடிக்கும், இடங்களில் இதுவும் ஒன்று!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவியங்களில் தூது விடுபவையாக கிளி, புறா, அன்னம், காற்று, அலை, முகில் இப்படி பல்வகையான தூதுகள் உள்ளன இன்று அலையைத் தூதுவிடும் ஒரு காதலர்களின் பாட்டை கேட்டு அதில் வருகின்ற வார்த்தைகளில் தென்படும் பொருளை இரசிப்போம்.

Edited by வல்வை சகாறா

நல்லாய் இருக்கு ....பாட்டு! :mellow: :mellow: :rolleyes::)

Edited by கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர் சிதற திரண்டேறிப் பொழிவீர்காள்

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான்

தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே."

இந்தத் தூது யாரால் யாருக்கு விடப்பட்டது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர் சிதற திரண்டேறிப் பொழிவீர்காள்

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான்

தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே."

இந்தத் தூது யாரால் யாருக்கு விடப்பட்டது? :rolleyes:

ஆண்டாள் மேகத்தை பார்த்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.