Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் என் தாத்தாவின்.... அபிமான நடிகரைப் போட்டதும்....

.... ரொம்ப,ரொம்ப பாதிக்குது. :D:lol:

maya9.jpg

" யாரப்பா இங்கே தமிழ் சிறி என்பவர்? smiley1846.gif

எனது பரம ரசிகரை தீண்டினால் விளைவுகள் படு மோசமாக இருக்குமென மெல்லிதாக எச்சரிக்கிறேன்...ம்..! " :)

.

Edited by ராஜவன்னியன்

  • Replies 163
  • Views 12.9k
  • Created
  • Last Reply

யாழ் இன்று ஒருபக்கம் தமிழீழ விடுதலையை நோக்கி பயணித்தாலும் இன்னொரு பக்கம் ஆபாசத்தை நோக்கி பயணிக்கிறது. பல திரிகளில் பலரின் கருத்துகள், கவிதைகள், கதைகள் என ஆபாசம் கலந்த கேவலமான எழுத்துகளாக இருக்கின்றன. இதனை இன்று நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் நாளைக்கு இவற்றை தேடி வரும் வாசகர்கள் எண்ணிக்கை தான் யாழுக்கு அதிகரிக்கும். யாழுக்கு கிடைக்கும் நற்பெயரை இவை தகர்த்துவிடக்கூடாது.

ஆபாசத்தை தூண்டும் படங்களை இணைக்க கூடாது என்று ஏற்கனவே விதி உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இணைக்கிறார்கள்.

6. படங்கள்
  • இணைக்கப்படும் படங்கள் தொடர்பான விதிகள்:

    • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது
    • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே இணைக்கப்படல் வேண்டும். இது வேறு ஒரு தளத்தில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும் பொருந்தும்.
    • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

படத்தினால் மட்டுமல்ல எழுத்துக்களாலும் ஆபாசத்தை தூண்ட முடியும். இது ஆண்களுக்கான தளமா? ஆபாச தளமா? என்று மக்களை கேட்க வைத்து விடாதீர்கள்.

உங்களுக்கு ஆதாரத்திற்கு,

கிருபன் அண்ணா இணைத்த கவிதை.

http://www.yarl.com/...=60#entry778331

இதற்கு ஏற்கனவே திரியில் கேள்வி கேட்டேன். பதிலாக களவிதியில் ஏதாவது இருந்தால் சொல்லும்படி பதில் கிடைத்தது. அப்படியென்றால் கள விதியில் இல்லை என்றால் எவரும் எதையும் இணைக்கலாமா? எதையும் எழுதலாமா? ஆபாச இணைய தளங்களில் எழுதியிருப்பதையே இனி கொண்டு வந்து இணைப்பார்கள் போலிருக்கே....

ஆபாசத்தை தூண்டும் கருத்துகளை எழுதுவதை, கவிதைகளை இணைப்பதை தவிர்க்கும்படி ஒரு விதியை நிர்வாகம் கள விதிகளில் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விடயத்தில் நிழலி அண்ணா கொஞ்சம் வீக் என்றதால் :D இணையவன் அண்ணா அல்லது வலைஞன் அண்ணா பதிலளியுங்கள். (பரவாயில்லை, நிழலி அண்ணாவும் பதில் சொல்லலாம். :) )

நன்றி. :)

பி.கு: நிழலி அண்ணாவும் அந்த கவிதைக்கு ஆதரவளிக்கிறார். :wub:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசிக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...உண்மையாகவே மற்றவர்கள் மேல் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறீங்கள் என்றால் யாயினி சொல்வதில் நியாயம் இருக்க்கிறது என்று எடுத்து கொள்ளுங்கள்..அதை விடுத்து பக்கம்,பக்கமாக எல்லாம் எழுத எனக்கு விருப்பம் இல்லை..சொல்லப் போனால் இந்தப் பகுதிக்குள் எல்லாம் நான் வருதே இல்லை...

என்ன யாயினி அக்காவா இப்படி எழுதுறா என்று நினைகாதீங்கள்...உங்களையும் சில இடத்தில் இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லவேணும் போல் இருந்தால் என்னால் முடிந்த மட்டுக்கு சொல்ல முயற்சிப்பேன்..இந்தக் கவிதைப் பிரச்சனையை நீங்க நிர்வாகம் வரை நகர்த்தியது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு...நான் சற்றும் எதிர்;பார்க்க இல்லை..நானும் கவிதைப் பகுதியில் எனது கருத்தையும் தெரிவித்து இருந்தேன் அத்தோடு விட்டு விட்டு என் பாட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்...காரணம்..எங்களுக்கு தப்பாக,அரிகண்டமாக படுவது மற்றவர்களுக்கு சரியாக இருக்கிறது.ஆகவே எங்களுக்கு விருப்பம் இல்லை என்றதற்காக மற்றவர்களையும் அவற்றைப் பார்க்காதீங்கள்,செய்யாதீங்கள் என்று சொல்ல முடியாது துளசி..சாதரமணாக ஒரு சிலருடைய கதைப்ப புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் படு மோசமாக பெண்களை விமர்சிச்சு இருப்பார்கள் அவற்றைக் கூட மக்கள் வாங்கித் தானே படிக்கிறார்கள்..எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் ஒவ்வொருவருடைய பார்வையும் வேறு பட்டதாக இருக்கும்..இது ஒரு களம்..பலதும் பத்துமாகத் தான் இருக்கும்..எது எங்களுக்கு பிடிக்காமல் இருக்கிறதோ அந்த இடத்தில் கால் வைக்காலம் நகர்ந்து செல்வது நன்று..அதை விடுத்து யாரையும் நாம் குற்றம் சொல்வதில் நின்றால் சின்ன,சின்ன விசயங்களால் மற்றவர்கள் எங்கள் வைத்திருக்க கூடிய மரியாதை,அன்பை இளக்க வேண்டி வந்துடும்..ஆகவே இதை விட விரிவான விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறன்...என் மனசுக்கு பட்டதை சொன்னேன் துளசி..புரிந்து கொள்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது.இதற்கு மேல் எனது கருத்து இது சம்பந்தமாக எழுத மாட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே கண்ணைக் கட்டுதே போகப்போக :blink:

  • கருத்துக்கள உறவுகள்

மயிலே மயிலேன்னா.. மயில் இறகு போடுமா துளசி. அது அதுங்க கூட அது அதுங்க பாசைல பேசினாத்தான் உண்டு..!

நமக்குப் பிடிக்காட்டி.. சுட்டிக்காட்டிட்டு விலகி நின்றிட வேணும். அது தான் எங்கள நாங்களே காப்பாற்றிக்கிறதுக்கு உள்ள வழி..!

அதைவிட்டிட்டு.. சமூகத்தை திருத்தப் போனம்.. உள்ள ஊத்தவாளிங்க எல்லா ஒன்னா சேர்ந்து நம்மத்தான் ஊத்தவாளின்னு கூவுங்க..! இதெல்லாம் யாழில மட்டுமல்ல.. வெளில உலகத்திலையும் நடக்கிற நிஜங்கள் தான்..! யாழ் அதற்கு விதிவிலக்கல்ல..! :icon_idea::)

நன்றி அக்கா,

சாதாரண ஒரு இணையதளத்தில் நான் இந்த கேள்வி கேட்டிருக்க மாட்டன். யாழில் ஆபாச படங்களை இணைப்பதை தவிர்க்கும்படி ஒரு விதி கொண்டுவந்தவர்கள் கருத்துகளை மட்டும் சரி என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனை திரிகளில் பெண்களை கேவலப்படுத்தி எழுதுகிறார்கள்? பெண்கள் குறைந்தளவில் யாழில் இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்குமோ?

இணையத்தில் தமது எழுத்துகளையே கட்டுப்படுத்தி எழுத முடியாதவர்கள் வடக்கு கிழக்கில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளை கண்டு பொங்கி எழ கூடாது. அங்குள்ளவர்களால் பெண்களை பார்த்ததும் தம்மை கட்டுப்படுத்த முடியவில்லை போலும்.

சாத்திரி அண்ணாவின் ஒரு கதை போராளிகளை கேவலப்படுத்தி எழுதியதற்காக நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. (நான் யாழுக்கு வந்த புதிதிலோ அல்லது வர முன்னமோ தெரியவில்லை) அது நீக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் போராளிகளை பற்றி எழுதியவுடன் கோபப்பட்டவர்களில் பலர் பெண்களை பற்றி எழுதியிருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் அல்லது அமைதி காக்கிறார்கள். ஒருவேளை நாமும் போராளியாக இருந்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

இதனை நான் நிர்வாகம் வரை கொண்டுவந்தது தவறாக இருக்கலாம். எனது கருத்து சுதந்திரம் இன்னொருவரை பாதிக்க கூடாது என்பது போல் இன்னொருவரின் கருத்து சுதந்திரம் என்னையும் பாதிக்க கூடாது. பெண் என்ற ரீதியில் என்னை மட்டுமல்ல பலரையும் இக்கவிதையும் பல திரிகளிலுள்ள பல கருத்துகளும் பாதித்திருக்கிறது இனியும் பாதிக்கும்.

நானும் நினைத்தால் ஆண்களை பற்றி கேவலமாக சித்தரிக்கும் கதைகளை கூகுளில் தேடி கொண்டுவந்து இணைக்கலாம். அல்லது மற்றவர்களுக்கு கேவலமாக பதில் கருத்திடலாம். ஆனால் என்னால் முடியாது.

ஒன்று மட்டும் சொல்கிறேன். யாழ் பல தடவை எனக்கு விடுதலைப்புலிகளை ஏதோ ஒரு வகையில் நினைவு படுத்திக்கொண்டிருக்கும். இன்றும் நினைவுபடுத்துகிறது. இதுவே ஒரு விடுதலைப்புலிகளின் இணையதளமாக இருந்திருந்தால் இப்படி கவிதை, கதை, கருத்துகளுக்கு அனுமதி கிடைத்திருக்க மாட்டாது என்ற ரீதியில்.

இப்படி கூறியதற்காக நிர்வாகத்தினர் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

யாயினி அக்கா,

நீங்கள் சொல்வது சரி அடுத்தவரை குற்றம் சொல்வதால் மற்றவர்கள் எம்மீது வைத்திருக்கும் மரியாதை, அன்பு குறையும். யாழில் ஏற்கனவே என்னுடன் நட்புடன் பழகிய ஒருவர் இப்பொழுது பெரிதாக பழகுவதில்லை. அது தெரிந்தும் நான் கருத்து வைக்கிறேன். ஏனென்றால் நான் மற்றவர்கள் என்மீது மரியாதை வைக்க வேண்டும் என்று நினைத்து கருத்து வைப்பதில்லை. இவ்வளவு குறைகள் சொன்ன பின்னும் என்னை பலருக்கு பிடிக்கிறது என்பதை நாற்சந்தியில் ஒரு திரியில் கண்டேன். அந்த விதத்தில் எனக்கு சந்தோசம். அவர்களுக்கு நன்றி.

எனினும் உங்கள் கோரிக்கையை ஏற்று நான் இவ்விடயத்திலிருந்து விலகுகிறேன். :)

(ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்யாமல் இருக்கும் படி பெண்கள் தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று நெடுக்ஸ் அண்ணா ஒரு திரியில் கூறியது நினைவிற்கு வருகிறது. அதாவது ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று. முடிந்தவரை முயற்சி செய்கிறேன். முடியாவிட்டால் யாழை விட்டு நீங்குகிறேன்)

Edited by துளசி

இப்பவே கண்ணைக் கட்டுதே போகப்போக :blink:

அண்ணா உங்களை இன்னும் உள்ளே விடவில்லையா? :unsure:

நிர்வாகத்தினரே இந்த நபர் june 13 யாழினுள் நுழைந்துள்ளார். இன்னும் தன்னை உள்ளே விடவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இவரை தவறுதலாக காண மறந்திருந்தால் இனியாவது உள்ளே செல்ல அனுமதி வழங்குங்கள். :)

அண்ணா பயப்பட வேண்டாம். யாழில் இப்படி கருத்து வேறுபாடுகள் வருவது வழமை. கொஞ்ச நாளில் பழகி விடும். அதிலும் நீங்கள் ஆணாக இருப்பதனால் உங்களுக்கு எங்களை போல் சமாளிப்பு அவசியமில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா உங்களை இன்னும் உள்ளே விடவில்லையா? :unsure:

நிர்வாகத்தினரே இந்த நபர் june 13 யாழினுள் நுழைந்துள்ளார். இன்னும் தன்னை உள்ளே விடவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இவரை தவறுதலாக காண மறந்திருந்தால் இனியாவது உள்ளே செல்ல அனுமதி வழங்குங்கள். :)

அண்ணா பயப்பட வேண்டாம். யாழில் இப்படி கருத்து வேறுபாடுகள் வருவது வழமை. கொஞ்ச நாளில் பழகி விடும். அதிலும் நீங்கள் ஆணாக இருப்பதனால் உங்களுக்கு எங்களை போல் சமாளிப்பு அவசியமில்லை. :)

you cannot reply to this topic இதைப்பார்த்துப் பழகிவிட்டது நன்றி துளசி அனுமதிக்கும் போது வருவோம் .

வளைய முட்கம்பிகள்

வற்றியொடுங்கிய

உடலும் முகமும்

வயதையும் வடிவையும்

வைத்து

விடிய விடிய நடக்கும்

விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்

மகிழமரத்தில்

மெதுவாய்

சாய்ந்துகொண்டேன்

கால்கள்வழியே

கரைந்தோடிய

கட்டிஇரத்தம்

கண்டதும்

கவலையடைந்தான்

காவலிற்கு நின்ற

சிப்பாய்

அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு

அவமானமடைந்திருக்கலாம்

ஆனாலும்

யோனிகள் மீதான

விசாரணைகள்

தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

ஏனெனில் நாங்கள்

தமிழிச்சிகள்

http://www.yarl.com/...85

  • கருத்துக்கள உறவுகள்

லீனா மனிமேகலை என்ற பெண் சில கவிதை எழுதியிருக்கின்றார் அதை விட கிருபன் இணைத்த கவிதை மேல்....

மிகப் பெரிய கலகம் உண்டாக்கிய கவிதைகள் இரண்டு இந்த இணைப்பில் இருக்கிறது.

ஆனால் இக் கவிதையில் கவித்துவத்தை விட , ஆபாசமே இருப்பதாக எனக்குப் படுகிறது.

லீனா ஒரு விளம்பரப் பிரியை , அவருக்கு எந்த கொள்கையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் கூட டாடா நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப் படம் எடுத்து ,அதனைச் சரி எனவும் வாதிட்டவர். விடுதலை அவருக்கு ஒரு வியாபாரம்.கவிதை ,சினிமா எல்லாம் அப்படியே.

லீனாவும், சுகுணா திவாகரும் , சோபா சக்தியின் நண்பர்கள். அ மார்க்சின் குழுவினர். அ மார்க்சு , அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சிறிலாங்கா தேசியம் பற்றிப் பேசி இருக்கிறார். சிறிலங்கா அரசுக்கு பல பாராட்டுக்களை வழங்கும் கட்டுரைகளை தமிழக இதழ்களில் எழுதுபவர்.

http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html

எச்சரிக்கை: கவிதையில் பல ஆபாச சொற்கள் உள்ளன.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எனக்கு மற்றைய பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதியளிக்குமாறு நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கின்றேன் நன்றி :icon_mrgreen:

நிர்வாகத்தினரே இதையும் கொஞ்சம் பாருங்கள். (இரண்டாவது படத்தை)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&st=940#entry780135

[size=5]வாழ்க நிர்வாகம் வளர்க யாழ்களம்.....[/size]

  • தொடங்கியவர்

நிர்வாகத்தினரே இதையும் கொஞ்சம் பாருங்கள். (இரண்டாவது படத்தை)

http://www.yarl.com/...940#entry780135

வாழ்க நிர்வாகம் வளர்க யாழ்களம்.....

ஒரு திரியினை, பதிவை முறைப்பாடு செய்வதற்கு முறைப்பாடு (Report) பட்டன் உள்ளது. அதனை அழுத்தி உடனடியாகத் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கலாம். அல்லது தனி மடலில் தெரிவிக்கலாம். (அப்படி செய்தும் நடவடிக்கை அல்லது அதற்கான பதில் கிடைக்காவிட்டால், நாற்சந்தியில் ஒரு திரி திறந்து நியாயம் கேட்கலாம்.) இவ்வாறு எமக்கு தொடர்ச்சியாக முறைப்படு செய்து உதவும் ஏராளம் உறவுகள் யாழில் இருக்கு என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அடிக்கடி திரிக்கு சம்பந்தமில்லாமல் பதிவுகளை இட்டு வருவதைக் கண்டுள்ளோம். தொடர்ந்து இவ்வாறு ஈடுபடவேண்டாம் என நிர்வாகம் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

நிர்வாகத்தில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் யாழில் குந்தி இருப்பதில்லை. இடப்படும் அனைத்து பதிவுகளையும் பார்ப்பதற்கு உரிய நேரமும் இருப்பதில்லை. எமக்கும் சம்பளம் தரும் தொழில், குடும்பம், கேளிக்கை, ஓய்வு என்பனவும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

இந்த திரி நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறியத் தர ஆரம்பிக்கப்பட்ட திரி. திரி ஆரம்பிக்கப்பட்ட காரணம் பொறுப்பற்ற முறையில் முற்றாக மாற்றப்பட்டதால் திரியினை பூட்டி விடுகின்றோம்.

மீண்டும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.