Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இருந்து லண்டனுக்கு ஒரு ரிங் ரிங்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A-Tamil-boy-in-the-Menikf-001.jpg

வாங்கோ அண்ணா.. அழைக்கும் குரலைக் கேட்டு ஓர் அதிர்ச்சி..

என்ன அழகா தமிழ் கதைக்கிறான்.. தமிழ் ஸ்கூல் போறவரோ.. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தந்தையை பார்த்து எனது வினவல் எழுந்தது..

தமிழ் பள்ளிக்கூடம் போறனான்... ஞாயிற்றுக்கிழமைகளில. கேம்பிரிஷ் ஜீ சி ஈ தமிழ் சோதனை எடுத்து "ஏ" சித்தி வைச்சிருக்கிறன்..... தந்தையை பார்த்துக் கேட்ட கேள்விக்கு மகன் பதில் தந்தான்.

அப்ப.. வீட்டில தமிழ் தான் மகனோட கதைக்கிறனீங்களோ..

அப்பவும் அவனே குறுக்கிட்டு.. அப்பா அம்மாவோட தமிழ் தான். தங்கச்சிகளோட தான் ஆங்கிலம் கதைக்கிறனான். நான் லண்டனில பிறந்திருந்தாலும் வாழ்ந்தாலும்.. சின்னனில இருந்தே தமிழ் படிக்கிறன்.

அவனின் பதில்களை செவிகளூடே வாங்கிக் கொண்டு.. தந்தையை நோக்கியே எனது அடுத்த வினவலையும் தொடுத்தேன்.. என்ன மாதிரி.. சனல் 4 வீடியோ பார்க்க விட்டனீங்களோ பிள்ளையள..

மீண்டும் அவனே தந்தைக்காக குரல் கொடுத்தான். ஓம்.. நான் தங்கச்சிகள் எல்லோரும் முழிப்பிருந்து பாத்தனாங்கள். அந்த 12 வயசு தம்பியை கொன்றதை என்னால பார்க்க முடியல்ல. இப்படியும் சிங்கள ஆக்கள் செய்வினமோ.. என்று எனக்கு அன்றைக்குத் தான் தெரிஞ்சுது. முந்தி அப்பாவோட சிறீலங்கா போகேக்க.. சிங்கள ஆக்கள் பிரச்சனை இல்லாதது போலத் தானே இருக்கிறவை. இவ்வளவு கெட்ட ஆக்களா இருப்பினம் என்று நான் அப்ப நினைக்கவே இல்லை.

இதுக்கும் மேல தந்தையை பார்த்து விளித்து தமிழில கேள்வி கேட்கிறதிலும் நேரடியா.. பொடியனட்டையே கேட்டிடுவம் என்றிட்டி.. உங்கட வகுப்பு நண்பர்களுக்கும் சொன்னனீங்களோ.. சனல் 4 பார்க்கச் சொல்லி.. பார்த்ததை.. பகிர்ந்து கொண்டனீங்களோ தம்பி..??! அவனுக்கான கேள்விகளைத் தொடுத்தேன்.

அதற்கு அவன்.. நான் என்ர பேஸ்புக்கில இருக்கிற 400 க்கும் மேல நண்பர்களையும் பார்க்கச் சொல்லி போட்டிருந்தனான். பெரும்பாலானவை பார்த்திருக்கினம். நான் சனல் 4 வீடியோ.. ரிவில போகேக்க ரெக்கோட் பண்ணியும் வைச்சிருக்கிறன். அதை பிறகு பேஸ்புக்கில அப்லோட் பண்ணி விடப் போறன். ஆனால் பைல் தான் பெரிசா இருக்குது.

எதுக்கும் கொப்பி ரைட்ஸ் கேட்டு சனல் 4 க்கு ஒரு ஈமெயில் போட்டு பதிலைப் பார்த்திட்டு செய்யுங்கோ தம்பி. உங்க பல பேர் அவசரக் கோளாறில.. உதுகளைச் செய்யாமல் விடுகினம். அது மறைமுகமா அந்த ஊடகத்தை அவமதிக்கிறது போல விசயம். அதோட அவைட சேவையையும் பாராட்டி விடுங்க. அப்பதான் அவை எங்களுக்காக உதவ இன்னும் முன் வருவினம்.

ஓம் அண்ணா நீங்கள் சொல்லுறது சரி தான். எங்களுக்கு ஸ்கூலிலும் சொல்லித் தந்திருக்கினம். எதை இணையத்தில இருந்து எடுத்தாலும் மூலம் குறிப்பிட வேண்டும் அதேபோல.. படங்கள்.. வீடியோக்கள்.. ஆக்கங்கள்.. பாவிக்கிறது என்றால் கொப்பி ரட்ஸ் எடுத்து சொந்த ஆக்களின்ர அனுமதியோட பாவிக்கிறது தான் நல்லமென்று.

நல்ல விசயம் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்கள் தம்பி. இதை மற்ற ஆக்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கோ..!

***********************

நாங்கள் இருவரும்.. பேசிக்கொண்டிருக்க.. பொடியன்ர தாய்.. போனோட வரவேற்பறைக்கு வந்தா..

விது.. ஊரில இருந்து போன் கோல் வந்திருக்குது..

ஆர் அம்மா.

வன்னில இருந்து கதைப்பினமே.. துசித் தம்பி.. ஆக்கள் அவை..!

ஓ.. துசி தம்பியா.

கொஞ்சம் தாங்கோ.. அவருக்கு ஒரு ஒன்லைன் கேம் பற்றி சொல்லனும். பாவம் அம்மா.. அவரட்ட பி எஸ் 3 எல்லாம் இல்லையாம். இன்ரநெட்டும் இல்லையாம். அவற்ற அங்கிள் வீட்ட தானாம் இருக்குது. ஒரு கேமும் விளையாடினதில்லையாம். அதுதான்.. அங்கிள் வீட்ட போனா.. இந்த ஒன்லைன் கேம் விளையாடச் சொல்லப் போறன். அது நல்ல கேம். மூளையை பாவிச்சு விளையாடிற கேம்.. பாஸ்ற் இன்ரநெட் இணைப்பும் தேவையில்ல அம்மா.

சரி அப்படி எண்டா.. சொல்லிக்குடன்... இந்தா போன்...

தாயிடம் இருந்து போனை வாங்கி.. அழகு தமிழில் அவன் வன்னியில் இருந்தான மறுமுனையோடு பேசிக் கொண்டே தனது அறை இருந்த.. மேல்மாடி நோக்கிச் சென்றுவிட்டான்.

இதை அவதானித்துக் கொண்டிருந்த நான்.. தாயிடம் கேட்டேன்..

என்ன வன்னில இருந்து இவருக்கும் கோல் வாறதோ..

அவன் வன்னில ஒரு 2 குடும்பத்தை எடுத்துப் பராமரிக்கிறான். ஒவ்வொரு கிழமையும்.. அவையும் எடுத்து இவனோட கதைப்பினம். நாங்கள் இவனுக்கு செலவுக்கு என்று.. கொடுக்கிற காசை மிச்சம் பிடிச்சு.. ஸ்கூல் இலவச சாப்பாட்டோட இருந்து.. அதிலும் மிச்சமா வாற காசையும் தகப்பனட்ட கொடுத்து வைச்சு.. எல்லாத்தையும் ஒன்றாச் சேர்த்து குடும்பங்களை பராமரிக்கிற செலவை கவனிக்கிறான். ஒவ்வொரு மாதமும் 50 பவுன் அனுப்பிறவன்.

இதைக் கேட்ட நான்.. கண்களில் ஆச்சரியம் தெறிக்க.. தாயைப் பார்த்தேன். அதில் இருந்து.. தொடர்ந்தும் அவரிடம் இருந்து இன்னும் விடயங்களை எதிர்பார்ப்பதைப் புரிந்து கொண்ட அவர்.. மேலும் சொன்னார்..

போன கிழமையும் ரெஸ்கோவில போன் மலிவா போகுதெண்டு சொல்லி இரண்டு போன் வாங்கி அனுப்பி விட்டவன். முந்தி எல்லாம் பேர்த்டேக்கு அன்பளிப்பா வாற காசை எல்லாம்.. கேம் வாங்க என்று செலவழிக்கிறவன்.... இப்ப சனல் 4 வீடியோக்களைப் பார்த்தாப் பிறகு.. அந்தக் காசை எல்லாம் தகப்பனட்ட கொடுத்து வைச்சு வன்னிக்கு அனுப்புவான். அவரும் உதுகளை தடுக்கிறதில்ல. ஊக்கம் தான் கொடுக்கிறவர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த.. தந்தை.. இடையில் குறுக்கிட்டு..

நான்.. அவனுக்கு ஒன்றும் சொல்லிக் கொடுக்கல்ல. அவனாத் தான்.. சனல் 4 வீடியோக்களைப் பார்த்திட்டு.. இந்த முடிவுக்கு வந்தவன். ஒரு நாள் வந்து கேட்டான் அப்பா நானும் உங்களைப் போல வன்னில உள்ள ஆக்களுக்கு உதவப் போறன். எப்படியப்பா செய்யுறது என்று. நான் சொன்னன்.. நீ காசை சேர்த்துத் தா.. நான் அனுப்பிவிடுறன். அதோட நீ பராமரிக்கிற குடும்பங்களோட நேரடி அறிமுகம் செய்துவிடுறன். நீயே மிச்சத்தக் கதைச்சுக் கொள் என்று. அப்ப இருந்து இது தொடருது. முதல் சனல் 4 காணொளி பார்த்ததில் இருந்து..இப்ப.. ஒரு 7 மாதமா இது நடந்துகிட்டு இருக்குது.

நல்லது அங்கிள். இப்படியே ஊர் வாசத்தோட.. தொடர்போட பிள்ளைகளை வளர்க்கிறதும்... ஊர் விசயங்களை அவைக்கும் சொல்லிக் கொடுக்கிறதும் அவசியம். அப்ப தான் அங்கத்த நிலைமையை இவைக்கு விளங்க வைச்சு.. அவைக்கு இயல்பாக உதவிற மனப்பான்மையை இவையட்ட உருவாக்க முடியும். அதைவிட்டிட்டு.. ஆக்கள் ஊருக்கு உதவி செய்யினம் இல்ல.. என்று திட்டிக் கொண்டு.. தங்கட பிள்ளைகளுக்கு உந்தக் கஸ்டங்களை காட்டாமல் வளர்க்கிற பெற்றோரோட ஒப்பிடேக்க.. உங்கட அணுகுமுறை நல்லது அங்கிள்.

நான் சொல்லிட்டன்.. நீ.. விரும்பிற வரை உதவி செய். நான் தொடர்பு எடுத்துத் தாறன் எண்டு. அவனுக்கும் அது முழுச் சந்தோசம். இப்ப போனோட மேல போட்டான். எனி எல்லா விசயங்களும் கதைச்சிட்டு தான் கீழ வருவான். இதனால.. அங்க உள்ள பிள்ளைகளுக்கும் அது ஒரு ஆறுதல் தானே.

ஓம் அங்கிள். இது நல்ல விசயம். இப்படி எல்லா பெற்றோரும் வாரம் ஒரு தடவை வன்னில யாழ்ப்பாணத்தில மட்டக்களப்பில திருகோணமலைல.. அம்பாறையில... என்று.... ஆதரவில்லாம இருக்கிற பிள்ளைகளோட.. பெற்றோரோட.. தங்கட பிள்ளைகளைக் கதைச் செய்தால்... பழக்கினால்.. நல்ல சமூக உறவாடல் இருக்கும். அதுமட்டுமன்றி.. ஒரு பொதுக் கருத்துக்கும் இரண்டு பக்கமும் வரும். அதுபோக உலக விசயங்களைப் பரிமாறி.. பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளுவினம். ஒருவற்ற கஸ்டம் மற்றவைக்கு தெரிய வரும். உதவிகளும் கிரமமாகப் போய் சேரும்.

நீங்கள் சொல்லுறதும் சரிதான் தம்பி... எனக்கும் அப்படிச் செய்யுறது நல்லமென்று தான் தெரியுது. ஆனால் எல்லோரும் அப்படி செய்ய ஒத்து வருவினமோ...??!

முதலில நாங்கள் செய்து காட்டனும்.... பிறகு.. இப்படியான நல்ல விசயங்களை நாலு பேரேட பகிந்து கொண்டால்.. அவையும் செய்ய முயற்சிப்பனம் தானே அங்கிள். சும்மா ஊர் வம்பு அளக்கிற நேரத்துக்கு.. உது பிரயோசனம் தானே. என்ன சொல்லுறீங்க...??!

இதில.. நான் என்னத்தைச் சொல்லுறது... இப்போதைக்கு நாங்கள் செய்யுறதை தான் எங்களால உறுதிப்படுத்த முடியும். மற்றாக்கள் தாங்களா விரும்பிச் செய்தால் ஒழிய கட்டாயப்படுத்தி செய்விக்க முடியாது.. கூடாது. ஆனால் செய்யச் சொல்லி ஊக்கப்படுத்த முடியும். சரி.. உதுகளைப் பற்றி பிறகு ஒரு நாளைக்கு விரிவாக கதைப்பம். இப்ப சாப்பாடு ரெடியாகிட்டாம். வாங்கோவன் சாப்பிடுவம்.

சரி அங்கிள் வாங்கோ. அவன் தம்பி..

அவன் இப்ப தான் சூப் குடிச்சவன்..! போன் கதைச்சிட்டு ஆறுதலா சாப்பிடுவான். நீங்கள் வாங்கோ..

அப்படின்னா சரி அங்கிள்.

(இது கற்பனையோ.. இட்டுக்கட்டுகையோ அல்ல. நிஜத்தின் பிரதிபலிப்பு)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நெடுக்ஸ் அண்ணா,

இன்றைய நிலையில் எது எமக்கு தேவையோ அதை இலகுவான நடையில் சொல்லியுள்ளீர்கள்.

நன்றி, நெஞ்சை தொடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் அண்ணா,

இன்றைய நிலையில் எது எமக்கு தேவையோ அதை இலகுவான நடையில் சொல்லியுள்ளீர்கள்.

நன்றி ஜீவா. தங்கள் மேலான கருத்தை வரவேற்கிறோம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நெஞ்சை தொடுகிறது.

நன்றி கரிகாலன். படித்து.. உணர்வை பகிர்ந்து கொண்டதற்கு. :)

நிச்சயமாக பாராட்டக்கூடிய ஒன்று. இன்றைய இளம் சமுதாயம் இதுபோல் செய்து வந்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரை முன்னேற்றி விடலாம். பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா.

வாழ்த்தக்கள் நெடுக்கருக்கு ,

அருமையான சேதியை உரிய நேரத்தில் அவரவருக்கு விளங்கும் விதத்தில எழுதியிருகிறின்கள். வெளி நாட்டில இருக்கிற ஆக்கள் ஒவ்வொரு குடும்பத்தை தத்எடுத்தாலே பாதி பிரச்சனையை ஒளிக்கலாம். 2 கிழமைக்கு முதல் ஒரு பிள்ளையும், தாயும் பட்டினியால தற்கொலை செய்ததை நினைக்க சரியான கவலையாதான் இருந்தது. மற்றது வறுமையால நடக்கிற சீர்கேடுகளையும் குறைக்கலாம் . யாழ்ப்பாணம் இப்படி இருக்கு , வன்னி இப்படி இருக்கு என்று குதர்க்கம் கதைக்கிற எங்கட தமிழ் தேசியவாதிகள் , இந்த முறை கோடை கால விடுமுறைக்கு செலவளிக்கிற காசையோ, பிள்ளைக்கு பிறந்தநாள் செய்யிற காசையோ கணவனும் இல்லாமல் வறுமையின் உச்சத்தில இருக்கிற எங்களுடைய உறவுகளுக்கு கொடுத்தால் அதை விட பெரிய புண்ணியம் இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக பாராட்டக்கூடிய ஒன்று. இன்றைய இளம் சமுதாயம் இதுபோல் செய்து வந்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரை முன்னேற்றி விடலாம். பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா.

வாழ்த்தக்கள் நெடுக்கருக்கு ,

அருமையான சேதியை உரிய நேரத்தில் அவரவருக்கு விளங்கும் விதத்தில எழுதியிருகிறின்கள். வெளி நாட்டில இருக்கிற ஆக்கள் ஒவ்வொரு குடும்பத்தை தத்எடுத்தாலே பாதி பிரச்சனையை ஒளிக்கலாம். 2 கிழமைக்கு முதல் ஒரு பிள்ளையும், தாயும் பட்டினியால தற்கொலை செய்ததை நினைக்க சரியான கவலையாதான் இருந்தது. மற்றது வறுமையால நடக்கிற சீர்கேடுகளையும் குறைக்கலாம் . யாழ்ப்பாணம் இப்படி இருக்கு , வன்னி இப்படி இருக்கு என்று குதர்க்கம் கதைக்கிற எங்கட தமிழ் தேசியவாதிகள் , இந்த முறை கோடை கால விடுமுறைக்கு செலவளிக்கிற காசையோ, பிள்ளைக்கு பிறந்தநாள் செய்யிற காசையோ கணவனும் இல்லாமல் வறுமையின் உச்சத்தில இருக்கிற எங்களுடைய உறவுகளுக்கு கொடுத்தால் அதை விட பெரிய புண்ணியம் இல்லை.

காதல்.. சுடலை இரண்டு பேரினதும் பதிவு பற்றிய கருத்துப் பகிர்விற்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நெடுக்ஸ்.

நான் இங்கு பல இளைஞர்களை பார்த்திருக்கின்றேன் வினோத உடை உடுத்தி வித்தியாசமான தோற்றத்தில் ஊரை சுத்தி திரிபவர்கள்மத்தியில் இவரைப்போன்றோர் இருப்பதை பார்த்து பெருமை கொள்கின்றேன்.

இந்தமாதிரியான ஆரோக்கியமான சமூகமே எமது மண்ணில் பல சிறப்புகளை நிகழ்த்த போகின்றார்கள். முடிந்தவரைக்கும் இப்படியான பிள்ளைகளுக்கு பெற்றோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நல்ல உரைநடை அனைவரும் வாசிக்க தக்க விதத்தில் உள்ளது.

நடைமுறையில் உள்ளதை தான் நெடுக்ஸ் அண்ணை எழுதி இருக்கார் இருந்தாலும் கொஞ்சம் நக்கல்தன்மையாக கதை இருக்கு. இருந்தாலும் நல்லா இருக்கு.

தமிழரசு, ரமணன், சசி உங்கள் எல்லோரினதும் கருத்துப் பகிர்வை வரவேற்கிறோம். நன்றி. :)

தமிழரசு.. பலர் நீங்கள் சொல்வது போலத்தான்.. உணர்ந்தும் உணராதவர்களாய்..! சிலர் கதையில் வரும் பையன் போல உணர்ந்ததை செய்பவர்களாய்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒரு பதிப்பு....ஆனால் இலக்கிய முதிர்ச்சிக்குள் இந்த எழுத்து வருமோ தெரியவில்லை?...கி..கி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒரு பதிப்பு....ஆனால் இலக்கிய முதிர்ச்சிக்குள் இந்த எழுத்து வருமோ தெரியவில்லை?...கி..கி...

நன்றி புத்து. :)

இலக்கியம்.. அப்படின்னா என்ன புத்து..???! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு, இப்படி பலர் இன்னும் இருப்பதால் தான் அங்கு மக்கள் வாழக் கூடியதாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்து. :)

இலக்கியம்.. அப்படின்னா என்ன புத்து..???! :lol:

நவீன ஈழத்து இலக்கியம் என்றால் புலிகளை நேரடியாக வசைபாடுதல் என நான் நினைக்கிறேன்...அதற்கு இலக்கிய வாசகர்களிடமிருந்து அதிக வரவேற்புண்டு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு, இப்படி பலர் இன்னும் இருப்பதால் தான் அங்கு மக்கள் வாழக் கூடியதாக இருக்கு

பலர் என்று சொல்ல முடியாது.. சிலர் செய்வது பலர் செய்வது போல ஒரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் தாயக மக்கள் குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் மன்னார் மாவட்டத்தில் பாலியல் தொழில் செய்ய தூண்டப்படுகின்ற நிகழ்வுகளும்.. பலர் தற்கொலைக்கு போகின்ற நிகழ்வுகளும்.. போருக்கு பின்னான பெரும் சீரழிவாக எம் மத்தியில் வளர்க்கப்படும் நிலையையும் பார்க்கிறோமே.

இந்திய வீட்டுத்திட்டம் அதுஇதென்றார்கள் அங்கு மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதை இந்திய நாடாளுமன்றில்.. அதிமுக எம் பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தப் பணத்தை எல்லாம்.. டக்கிளஸ் கும்பலும்.. இன்னும் கும்பல்களும் எங்க முதலீடு செய்யுறாங்களோ.. யார் அறிவார்.

இந்த நிலையில் மக்கள் தான் மக்களுக்கு நேரடியாக உதவ முடியும். அந்த வகையில்.. புலம்பெயர் மக்கள் ஒவ்வொருவரும்.. தாயக மக்களுக்கு உதவ முனையின்.. பொருண்மிய கஸ்டங்களில் இருந்து அந்த மக்களை ஓரளவுக்கு விடுவிக்க முடியும். அது சமூகச் சீரழிவுகளை தடுப்பது மட்டுமன்றி அந்த மக்கள் தமது அரசியல் உரிமை குறித்து சிந்திக்கவும் வழி செய்யும்..! :icon_idea:

நன்றி உடையார் உங்கள் கருத்துப் பகிர்விற்கு. :)

நவீன ஈழத்து இலக்கியம் என்றால் புலிகளை நேரடியாக வசைபாடுதல் என நான் நினைக்கிறேன்...அதற்கு இலக்கிய வாசகர்களிடமிருந்து அதிக வரவேற்புண்டு....

அது சீரழிவு இலக்கியம் புத்து. அதுவும் புலிகளோடு சேர்ந்து கடந்த 35 வருசமா வளர்ந்துகிட்டுத்தான் வந்திச்சுது. ஆனால் புலிகள் இல்லை என்று சொல்லப்பட்ட பின்.. அதுவும் பெரு விரூட்சமாக விழுதுகள் பரப்பி.. விஸ்வரூபம் எடுக்கிறது. அதிலும் வேடிக்கை என்னவென்றால் மக்களை.. புலிகளை.. விட்டிட்டு ஓடிவந்த முன்னாள் புலிகளே.... அந்த விரூட்சத்தின் உச்சாரக் கொப்பில் தொங்க ஆசைப்படுவது தான்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

மேலைத்தேச நாகரீகத்தில் மூழ்காமல் தமிழ் கலாச்சரத்தினூடு சந்ததிகளை வளப்பவர்கள் இன்றைய காலத்தில் அருமை. ஆனால் இவர்கள் பிள்ளைகளை வளர்த்த விதம் நம் இனத்தின்பால் கொண்ட பாசம் என்று பிரமிக்க வைக்கிறார்கள். நன்றி உங்கள் படைப்பிற்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலைத்தேச நாகரீகத்தில் மூழ்காமல் தமிழ் கலாச்சரத்தினூடு சந்ததிகளை வளப்பவர்கள் இன்றைய காலத்தில் அருமை. ஆனால் இவர்கள் பிள்ளைகளை வளர்த்த விதம் நம் இனத்தின்பால் கொண்ட பாசம் என்று பிரமிக்க வைக்கிறார்கள். நன்றி உங்கள் படைப்பிற்கு...

அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ.. அப்படி வளர்த்திருக்கிறார்கள். இதே யாழ்ப்பாண வசதி படைத்த மேட்டுக் குடிகளாக இருந்தால்..????! அவை எங்கையோ.. வேற்றுக்கிரகத்தில இருந்து வந்தவை போலத்தான் நடப்பினம்..! மனிதப் பண்பு.. சாதாரண மக்களிடம் உள்ள அளவு மேட்டுக் குடியினரிடம் இல்லை..! அவர்களும் ஓர் நாள் மாறுவார்களா..???! இவ்வளவு காலம் மாறாதவர்கள்... எனி..???! :icon_idea:

நன்றி கல்கி கருத்துப் பகிர்விற்கு..! :)

Edited by nedukkalapoovan

உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்.

வழக்கமான பாணியில் இல்லாது, +ve ஆன ஒரு பதிவு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்.

வழக்கமான பாணியில் இல்லாது, +ve ஆன ஒரு பதிவு. :lol:

நான் கதையில எல்லாம் +ve, -ve என்று கணக்குப் பாக்கிறதில்ல.. உண்மையை இயலுமான வரை பிரதிபலிக்க முயல்வன்..!

நன்றி அண்ணா.. தங்கள் கருத்துப் பகிர்விற்கு. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் அவனே தந்தைக்காக குரல் கொடுத்தான். ஓம்.. நான் தங்கச்சிகள் எல்லோரும் முழிப்பிருந்து பாத்தனாங்கள். அந்த 12 வயசு தம்பியை கொன்றதை என்னால பார்க்க முடியல்ல. இப்படியும் சிங்கள ஆக்கள் செய்வினமோ.. என்று எனக்கு அன்றைக்குத் தான் தெரிஞ்சுது. முந்தி அப்பாவோட சிறீலங்கா போகேக்க.. சிங்கள ஆக்கள் பிரச்சனை இல்லாதது போலத் தானே இருக்கிறவை. இவ்வளவு கெட்ட ஆக்களா இருப்பினம் என்று நான் அப்ப நினைக்கவே இல்லை.

அவருக்கு ஒரு ஒன்லைன் கேம் பற்றி சொல்லனும். பாவம் அம்மா.. அவரட்ட பி எஸ் 3 எல்லாம் இல்லையாம். இன்ரநெட்டும் இல்லையாம். அவற்ற அங்கிள் வீட்ட தானாம் இருக்குது. ஒரு கேமும் விளையாடினதில்லையாம். அதுதான்.. அங்கிள் வீட்ட போனா.. இந்த ஒன்லைன் கேம் விளையாடச் சொல்லப் போறன். அது நல்ல கேம். மூளையை பாவிச்சு விளையாடிற கேம்.. பாஸ்ற் இன்ரநெட் இணைப்பும் தேவையில்ல அம்மா.

நான்.. அவனுக்கு ஒன்றும் சொல்லிக் கொடுக்கல்ல. அவனாத் தான்.. சனல் 4 வீடியோக்களைப் பார்த்திட்டு.. இந்த முடிவுக்கு வந்தவன். ஒரு நாள் வந்து கேட்டான் அப்பா நானும் உங்களைப் போல வன்னில உள்ள ஆக்களுக்கு உதவப் போறன். எப்படியப்பா செய்யுறது என்று. நான் சொன்னன்.. நீ காசை சேர்த்துத் தா.. நான் அனுப்பிவிடுறன். அதோட நீ பராமரிக்கிற குடும்பங்களோட நேரடி அறிமுகம் செய்துவிடுறன். நீயே மிச்சத்தக் கதைச்சுக் கொள் என்று. அப்ப இருந்து இது தொடருது. முதல் சனல் 4 காணொளி பார்த்ததில் இருந்து..இப்ப.. ஒரு 7 மாதமா இது நடந்துகிட்டு இருக்குது.

(இது கற்பனையோ.. இட்டுக்கட்டுகையோ அல்ல. நிஜத்தின் பிரதிபலிப்பு)

நெ;

உங்கள் ஒரு பக்க கதைகள் சொல்லும் செய்திகள் பெறுமதியானவை. வாழ்த்துக்கள்.

புத்தன்,

இலக்கிய ரீதியில் பார்க்கிறது என்றால்- புதுமை படைப்பாளியோ என்று பார்கிறதுக்கு, விருதுகளுக்கு சிபார்சு செய்வதற்கு,

பாத்திரப் படைப்பு;

தமிழ் நன்றாக தெரிந்த பையன், முந்தியும் ஸ்ரீ லங்கா போய்வந்த பொடியனுக்கு, சனல் 4 பார்த்துதான் சிங்களவனை பற்றி தெரிய வேண்டியிருக்கிறது என்பது, அவற்றை பாத்திரத்துக்கு பொருந்தவில்லை. இதையே ஒரு Tom , Steve செய்திருந்தால் உந்த பிரச்சனை வராதது.

இந்த குடும்பம்;

வன்னிக்கு உதவுகிற குடும்பம், தமிழ் படிப்பிற குடுப்பம் அந்த பிள்ளையையும் அதே போல வளர்ந்திருக்கலாம். கொஞ்சமாவது இலங்கை பிரச்சனைகளை அப்பப்ப எடுத்து சொல்லியிருந்தால் ஒருகாலமும் "சிங்களவர்கள் நல்லவர்களாக" தெரிந்திருக்க மாட்டார்கள்.

மற்றது பொறுப்பெடுத்த குடும்பம்;

அங்கிள் வீட்டை போய் கம்ப்யூட்டர் கேம் விளையாட வசதியுள்ளவர்களைத்தான் எடுத்திருக்கிறார் போல. அதையும் கொஞ்சம் "பாத்திரம் அறிந்து உணவு இட்டிருக்கலாம்"

யாவும் கற்பனையாக இருக்கத்தேவையில்லை முற்போக்கு இலக்கிய வித்தகராக வருவதர்ற்கு;

அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ.. அப்படி வளர்த்திருக்கிறார்கள். இதே யாழ்ப்பாண வசதி படைத்த மேட்டுக் குடிகளாக இருந்தால்..????! அவை எங்கையோ.. வேற்றுக்கிரகத்தில இருந்து வந்தவை போலத்தான் நடப்பினம்..! மனிதப் பண்பு.. சாதாரண மக்களிடம் உள்ள அளவு மேட்டுக் குடியினரிடம் இல்லை..! அவர்களும் ஓர் நாள் மாறுவார்களா..???! இவ்வளவு காலம் மாறாதவர்கள்... எனி..???! :icon_idea:

நன்றி கல்கி கருத்துப் பகிர்விற்கு..! :)

நானும் நீங்கள் சொல்வது போல் பெண் தான், ஆனால் ஒரு மாற்றம் நான் வேற்றுக்கிரக வாசிகள் போல் வளரவில்லை சாதாரண மனிதப்பண்பை தான் கொண்டிருக்கிறேன். எனவே இது எல்லோருக்கும் பொருத்தமில்லை.

நீங்கள் யாழ்ப்பாணத்தவரை அதிலும் மேட்டுக்குடிகளை மட்டும் தான் கவனித்திருக்கிறீர்கள். நான் பார்த்த வரை மற்றவர்களும் அப்படி தான் உள்ளனர். சீட்டு கட்டினம், சொந்த வீடு, நகை வாங்கினம், ஒவ்வொரு நாளும் சிக்கன், மீன், முட்டை என்று நல்ல வெட்டு வெட்டினம், இன்னொருத்தரின் கல்யாணத்திற்கு போக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உடுப்பு, அதுவும் விலை கூடினது வாங்கினம். ஆனால் இன்னொருத்தருக்கு உதவ சொன்னால் ஐயையோ எங்களுக்கு தண்ணி பில்லுக்கும், current பில்லுக்குமே உழைக்கிற காசு முழுக்க போகுது என்று சொல்லினம். இவர்களை எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெ;

உங்கள் ஒரு பக்க கதைகள் சொல்லும் செய்திகள் பெறுமதியானவை. வாழ்த்துக்கள்.

புத்தன்,

இலக்கிய ரீதியில் பார்க்கிறது என்றால்- புதுமை படைப்பாளியோ என்று பார்கிறதுக்கு, விருதுகளுக்கு சிபார்சு செய்வதற்கு,

பாத்திரப் படைப்பு;

தமிழ் நன்றாக தெரிந்த பையன், முந்தியும் ஸ்ரீ லங்கா போய்வந்த பொடியனுக்கு, சனல் 4 பார்த்துதான் சிங்களவனை பற்றி தெரிய வேண்டியிருக்கிறது என்பது, அவற்றை பாத்திரத்துக்கு பொருந்தவில்லை. இதையே ஒரு Tom , Steve செய்திருந்தால் உந்த பிரச்சனை வராதது.

இந்த குடும்பம்;

வன்னிக்கு உதவுகிற குடும்பம், தமிழ் படிப்பிற குடுப்பம் அந்த பிள்ளையையும் அதே போல வளர்ந்திருக்கலாம். கொஞ்சமாவது இலங்கை பிரச்சனைகளை அப்பப்ப எடுத்து சொல்லியிருந்தால் ஒருகாலமும் "சிங்களவர்கள் நல்லவர்களாக" தெரிந்திருக்க மாட்டார்கள்.

மற்றது பொறுப்பெடுத்த குடும்பம்;

அங்கிள் வீட்டை போய் கம்ப்யூட்டர் கேம் விளையாட வசதியுள்ளவர்களைத்தான் எடுத்திருக்கிறார் போல. அதையும் கொஞ்சம் "பாத்திரம் அறிந்து உணவு இட்டிருக்கலாம்"

யாவும் கற்பனையாக இருக்கத்தேவையில்லை முற்போக்கு இலக்கிய வித்தகராக வருவதர்ற்கு;

உங்கள் கருத்துக்கு நன்றி வல்கனோ அண்ணா.

இந்த பாத்திரம் வெறும் 16 வயசுப் பையன்..! இதுவரை இரண்டு தடவைகள் ஊர் போய் வந்திருக்கிறான். அவன் போன போது அதிகம் நின்றது தென்னிலங்கையில். தென்னிலங்கையில் அண்மைய சில பத்தாண்டுகளாக வாழும் நம்மவர்களே.. அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லக் கூடியவர்களாக உள்ள நிலையில்.. இரண்டு முறை அங்கு விசிட் அடிச்ச பையனுக்கு.. சிங்களவர்களின் கொடுமைகள் பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை. ஏதோ யுத்தம் நடக்கிறது... என்பது மட்டும் தான் அநேக பிள்ளைகளுக்குத் தெரியும். அந்த யுத்தம் எப்படி பொதுமக்களை பாதிக்கிறது என்பது.. சனல் 4 மூலமே எம்மவர் பலருக்கே தெரிய வரும் நிலையில்.. அந்தப் பையனுக்கு அது அவ்வாறு அமைவதில் வியப்பிருக்க வாய்ப்பில்லையே..!

சிங்களவர்கள் இந்த அளவுக்கு கெட்டவர்கள் என்று அவனுக்கு காட்ட முடியாத நிலை முன்னர் பெற்றோருக்கு இருந்திருக்கலாம். இன்று அதனை காட்ட முடிவதே சனல் 4 ஆல் தான்..! சொல்லித் தெளிய வைப்பதிலும் உண்மையைக் காட்டி தெளிய வைப்பது இலகு..!

அங்கிள் வீட்ட கொம்பியூட்டர் இருக்கென்பதற்காக.. அவன் வீட்டில் இருக்கும் என்பதோ.. அல்லது அங்கு அடிக்கடி விளையாட போக முடியும் என்பதோ அர்த்தமில்லையே. அங்கிளுக்கு ஒருவேளை தொழில் நிமித்தமாகக் கூட அது கிடைத்திருக்கலாம். எப்பவும் இருந்திட்டு போகும் போது.. அந்த வாய்ப்பை உருவாக்க அந்தப் பையன் நினைத்திருக்கக் கூடும். என்னோடு பேசும் போது அவன் சொன்ன விடயம்.. அவங்க ஸ்கூலில கூட கணணி இல்லையாம் என்று சொன்னான்...! வடக்கில் பெரும் பள்ளிகளில் கணணிக் கூடங்கள் உள்ள நிலையில்.. வன்னியில் நிலை..????!

ஆனால் இதே.. 2009 க்கு முன் கிளிநொச்சியில் கணணிப் பயிற்சி மையங்கள் உட்பட பல வசதிகள் இருந்தன தானே மக்களிடம்..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீங்கள் சொல்வது போல் பெண் தான், ஆனால் ஒரு மாற்றம் நான் வேற்றுக்கிரக வாசிகள் போல் வளரவில்லை சாதாரண மனிதப்பண்பை தான் கொண்டிருக்கிறேன். எனவே இது எல்லோருக்கும் பொருத்தமில்லை.

நீங்கள் யாழ்ப்பாணத்தவரை அதிலும் மேட்டுக்குடிகளை மட்டும் தான் கவனித்திருக்கிறீர்கள். நான் பார்த்த வரை மற்றவர்களும் அப்படி தான் உள்ளனர். சீட்டு கட்டினம், சொந்த வீடு, நகை வாங்கினம், ஒவ்வொரு நாளும் சிக்கன், மீன், முட்டை என்று நல்ல வெட்டு வெட்டினம், இன்னொருத்தரின் கல்யாணத்திற்கு போக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உடுப்பு, அதுவும் விலை கூடினது வாங்கினம். ஆனால் இன்னொருத்தருக்கு உதவ சொன்னால் ஐயையோ எங்களுக்கு தண்ணி பில்லுக்கும், current பில்லுக்குமே உழைக்கிற காசு முழுக்க போகுது என்று சொல்லினம். இவர்களை எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது?

நீங்கள் மற்றவர்களைப் பற்றி சொல்வது அத்தனையும் உண்மை. ஆனால் அவர்களில் அநேகர் ஊர் கஸ்டங்களை கொஞ்சம் என்றாலும் உணர்கிறார்கள். ஆனால் மேட்டுக்குடியினர் அநேகர்.. அந்த நிலையில் இல்லை. தங்களின் வசதி பொருந்திய வாழ்க்கை என்ற ஒன்றே அவர்களின் குறிக்கோள்..!

எனக்கு யாழ்ப்பாண மேட்டிக்குடிகள் பற்றி ஓரளவுக்குத் தெரியும்..! அவர்களை கொழும்பில் தான் நான் அநேகம் கண்டிருக்கிறேன்..! கிட்டத்தட்ட எல்லோரும்.. கொல்பிட்டி.. மவுட்லவேனியா என்று தான் போய் குடியேறுவார்கள். சாதாரண மக்கள் தான் வெள்ளவத்தை.. கொட்டகேன.. வத்தளை.. பம்பலப்பிட்டி என்று குடி அமர்ந்திருக்கிறார்கள். அதிலும் சிலர் முக்கிய சிங்கள அரசில் தலைவர்களின் வீடுகளோடு வீட்டை வாங்கிட்டு.. அவர்களுக்கே.. புதினம் காட்டுவதையும் கண்டிருக்கிறேன்.

எனக்கு சாதாரண மக்களோடும் நெருக்கம் இருந்தது. கொழும்பில் கல்வி கற்ற போது.. பல மேட்டுக்குடிகளோடும் பழக்கம் இருந்தது..! அந்த வகையில் என்னால் உணரப்பட்ட வேறுபாட்டையே அதிகம் சொல்ல முடிந்தது. அது புலம்பெயர் தேசங்கள் வரை நீள்வதையும் காண்கிறேன்..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.