Jump to content

இலங்கை இராணுவத்திற்கு சீனாவில் பயிற்சி; பீஜின் போஸ்ட் செய்திச் சேவை தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சீனாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த போது இதற்கான ஒப்பந்தம்,  சீன அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக பீஜின் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்க சீனா முன்வந்துள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.இதற்கான கைச்சாத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

எனினும் இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கான விவகாரம் மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=574332095710585880

Posted

இப்படியே இந்தியப் பயிற்சியை ஓரங்கட்டிவிட வேணும்.. :D பிடிமானம் குறைந்துவர ஏதாவது செய்ய நிர்ப்பந்திக்கப்படுவாள் இந்தியத்தாய்..! :icon_idea:

Posted

இப்படியே இந்தியப் பயிற்சியை ஓரங்கட்டிவிட வேணும்.. :D பிடிமானம் குறைந்துவர ஏதாவது செய்ய நிர்ப்பந்திக்கப்படுவாள் இந்தியத்தாய்..! :icon_idea:

 

இந்தியாவுடன் யாராவது முரண்டு பிடித்தால் இந்தியா செய்வது சரணாகதி அரசியலே. எனவே இந்தியா இன்னும் இலங்கைப் பக்கம் சாயும்.

Posted

இந்தியாவுடன் யாராவது முரண்டு பிடித்தால் இந்தியா செய்வது சரணாகதி அரசியலே. எனவே இந்தியா இன்னும் இலங்கைப் பக்கம் சாயும்.

சரணாகதி அரசியலுக்கும் ஒரு திசைமாற்றம் உண்டுதானே.. உதாரணமாக தோட்டத் தொழிலாளரை மீளப்பெற்றமை, கச்சைதீவை தாரைவார்த்தமை என்று சரணாகதி அரசியல்செய்து வந்த இந்தியா பிற்பாடு போராளிகளுக்குப் பயிற்சியளித்து தனது கொள்கையில் திசைமாற்றம் செய்ததுதானே..

அதேபோல இப்போதுள்ள சூழலிலும் கொள்கையில் திசைமாற்றம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம்.. ஆனால் அதற்கான புறச்சூழல் அமையவேண்டும்.. அன்று தென்பகுதித் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் (1983) தகுந்த புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தன..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் சும்மா

பயிற்சி  எடுக்க சீனாவுக்கு ஏன் போகவேண்டும்

சிறிலங்காவே குட்டி சீனாதானே இன்று.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படின்னா இந்திய இறையாண்மை இந்து சமுத்திரத்தின் அடியில தான் போய் வாழனுமா..??! அது முடியாது..! ஆகவே இந்தியா முழுவதும் சிங்களவர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிப்போம்..! :lol::D

Posted

சீனா பயிற்சி கொடுத்தால் சிங்கள இராணுவத்திடம்  ஒழுக்கம் கொஞ்சமாவது வரலாம்.

இந்தியா பயிற்சி கொடுத்த சிங்கள இராணுவம், கடத்தலிலும், கொலைகளிலும், திருட்டுக்களிலும், பாலியல் இம்சைகளிலும், மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றசாட்டுக்களிலும் கொடிகட்டிப் பறக்கிறது

Posted

அத்துடன், இலங்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.இதற்கான கைச்சாத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

 

http://onlineuthayan.com/News_More.php?id=574332095710585880

இது இந்தியாவை, UNP சீண்ட வெளிவிட்ட அறிக்கை. சரவதேச நாணய நிதியம் ஏற்றுமதி, இறக்குமதிக்கு கடன் மறுத்த போது சீனா தானும் தொழில்த்துறை கட்டுமானங்களுக்குத்தான் கடன் கொடுபேன் என்று கூறியது. இதில் எங்கே அடிப்படைத் தேவைகள் வருகிறது. சும்மா சுத்துகிறார்கள்.

 

மேலும், இந்தியாவின் கொள்கை, அமெரிங்காவின் கொள்கை என்று நிரந்த கொள்கைகள் ஜனநாயக நாடுகளில் கிடைக்காது. இந்திரா காந்தி மாதிரி தூர நோக்கான தலவர்களுடன் நாடுகள் வித்தியாசமாகத்தான் நடந்த்துகொள்ளும். கூப்பிட்டு போட்டு துவக்காலை அடிக்க மாட்டா. இதையும் விட மோசமாக பிளேக்கு நடந்தும்  அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இதில் அமெரிக்கா பயந்து போனதாகாது. பிளேக் தான் அதை பெரித்துபடுத்தினால் தான் புலிகளை ஆதரிப்பதாக முடிந்துவிடும் என்று நடந்து கொண்டார். ஆனால் அதை இலங்கை அமெரிக்கா தனக்கு பயப்படுவதாகவே வைத்து மிகுதியை நடத்தி முடித்தது. அதனால்தான் இன்று அமெரிக்காவும் இலங்கைக்குமிடையில் சிறு இறுக்கம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேசத்துக்கு இப்ப ஆசியாவின்ரை செல்லப்பிள்ளை சிறிலங்காதான்...அவன் அடிப்பன்...நுள்ளுவன்...விறாண்டுவன்....கடிப்பன்...பக்கத்துவீடுவளியை போய் கிடப்பன்.....ஒருத்தரும் ஒண்டும் கேட்க மாட்டாங்கள்.......

Posted

சர்வதேசத்துக்கு இப்ப ஆசியாவின்ரை செல்லப்பிள்ளை சிறிலங்காதான்...அவன் அடிப்பன்...நுள்ளுவன்...விறாண்டுவன்....கடிப்பன்...பக்கத்துவீடுவளியை போய் கிடப்பன்.....ஒருத்தரும் ஒண்டும் கேட்க மாட்டாங்கள்.......

 

ஆட்டத்திற்கும் ஒரு முடிவு உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.