Jump to content

தீச்சுவாலைக்களத்தில்


Recommended Posts

பதியப்பட்டது

விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமையை இயலாமைக்குட்படுத்தும் நோக்குடன் சிங்களப்படையால் முன்னெடுக்கப்பட்டது  தீச்சுவாலை படைநடவடிக்கை. இத்தீச்சுவாலைக்கு எதிரான படைநடவடிக்கையை தலைவர் எவ்வாறு கையாண்டார் என்று எழுதிய போது அவரின் கருத்துக்கமைவாக போராளிகள் சண்டையில் எத்தகைய அர்ப்பணிப்புக்களைச் செய்து, செயற்பட்டு அவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்கள் என்பதை எடுத்தியம்பும் சில சம்பவங்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 

Kilaly+map.pngதீச்சுவாலை முறியடிப்புத் திட்டத்திற்கமைவாக முன்னணியில் ஒரு காவலரண் வரிசை  பின்னுக்கு இரண்டாவது காவலரண் வரிசை என இரண்டு தடுப்பு காவலரண் வரிசைகள் அமைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டதுடன் தொடர் காவலரண்களை இணைத்து மண் அணையும் மறைப்பு வேலியும் அமைக்கப்பட்டன. காவலரண்களுக்கு இடையில் மண்ணணையின் உட்புறமாகவும் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு (கண்ணிவெடிகளைத்தாண்டி) இரவு வேளைகளில் மட்டும் எல். பி என்று சொல்லப்படும் மூவர் கொண்ட சிறிய அணி முன்னணி நிலையில்  இருந்து கிட்டத்தட்ட 100  மீற்றர் முன்னால் நிறுத்தப்படுவர் (எதிரியின் நகர்வை அவதானித்ததும் பகுதித்தளபதிக்கு அறிவிப்பார்கள்) முன்னணி காவலரண்   வரிசைக்கு தளபதி தீபன் அவர்களும், இரண்டாவது காவலரண்  வரிசைக்கு தளபதி பால்ராஜ்  அவர்களும் பொறுப்பாக இருந்தனர். தளபதி பானு, ராயு ஆகியோர்கள்  பீரங்கிகளை  ஒருங்கிணைத்தார்கள்.

 

தீச்சுவாலைக்கு  எதிராகக் கிளாலிப்பகுதியில் நடைபெற்ற தாக்குதலை வழிநடாத்திய தளபதியின் அனுபவத்தினூடு இப்பதிவு பயணிக்கப்போகின்றது. கிளாலிப்பகுதியில் நின்றது சோதியா படையணியாகும்.

 

அதிகாலை 4 மணிக்கு தீபண்ணை கட்டளைமையத்திலிருந்து தொடர்பு கொண்டு “இன்றைக்கு உனக்கு கிடைக்கும்” என்ற செய்தியை வோக்கியில் பரிமாறி இராணுவம் நகரப்போகின்றான் என்பதை பகுதித்தளபதிகளிற்கு உறுதிப்படுத்துகின்றார். அத்துடன் எல்லோரும் தொடர்புடன் இருக்கின்றார்களா? என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்கின்றார். பகுதிகளில் உள்ள எல்லா பொறுப்பாளர்களின் வோக்கிகளும் தொடர்புகளை  சரிபார்க்கின்றன.

 

கிளாலிப்பகுதியின் முன்னணி தொடர்காவலரணுக்கு முன்னுக்கு 130 மீற்றர் தூரத்தில் பகுதித்தளபதியின் நேரடித்தொடர்புடன் விடப்பட்ட எல்.பி அணியின் தொடர்பும் சரிபார்க்கப்படுகின்றது. அவர்களும்   'இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை' என 4.15 மணிக்கு உறுதிப்படுத்தினர்.

 

தொடர்ந்து பாரிய சண்டையை எதிர்பார்த்து அணிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாலும் இடையிடையே  இப்படித்தான் இராணுவம் நகருவான் என எதிர்பார்த்து காத்திருந்து நடைபெறாமல் போன சந்தர்ப்பங்களும்   உண்டாகையால்  வழமைபோலவே காத்திருந்தனர்.

 

4.45 மணியளவில்  எல்.பி யில்   நின்ற   பெண்  போராளிகள் வோக்கியில் தொடர்பு கொண்டு, மிகவும் இரகசியமான குரலில் 'தங்களிற்கு முன்னால் உள்ள பற்றைகளில் முறித்துச் சத்தம் கேட்கின்றது அண்ணை' என தெரியப்படுத்தினர். உடனடியாகவே அவர்களை லைனுக்குத் திரும்பிவருமாறு  கூறினார்  பகுதித்தளபதி. ஆனால் அப்பெண் போராளிகளோ  'இல்லை அண்ணை, கொஞ்சம் எட்டத்திலதான் சத்தம் கேட்குது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு வருகின்றோம்' என பதிலளித்தனர். மீண்டும் 5.35 மணிபோல் தொடர்பு கொண்டு 'ஆமி கிட்ட வந்திட்டா........' என்று சொல்லி முடிப்பதற்குள் வோக்கியில் துப்பாக்கிச்சத்தங்கள் கேட்க தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. ‘ஆம்‘ தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை தொடங்கிவிட்டது.

 

கிளாலிப்பகுதியில் சண்டை தொடங்கி  சிறிது   நேரத்திலேயே   முன்னணிக்காவலரண்  வேலியை   உடைத்துக்   கொண்டு உள் நுழைந்த இராணுவத்தின் 53 வது டிவிசனின் ஒரு தொகுதி, இரண்டாவது காவலரண் வேலியைத் தாண்டிச் சென்று நிலையெடுத்தான். இது அவனது பிரதான உடைப்பு, இது தவிர கிளாலிக்கடற்கரை, மற்றும் அதிலிருந்து 150 மீற்றரில் இருந்த ஆற்றுப்பிரதேசத்தால் என இரண்டு சிறிய உடைப்புக்களையும் செய்திருந்தான். கிளாலிப்பக்கத்தில் பிரதான உடைப்பிற்குள்ளால் நகர்ந்த இராணுவம் வெடிபொருள் விநியோக  இடம் மற்றும் தற்காலிக மருத்துவமனை அமைந்திருந்த பங்கர்களிற்கு அருகில் வந்துவிட்டதால், அங்கு நின்ற போராளிகளும்  அருகில் இருந்த பகுதி கட்டளை மையத்தில் இருந்த  அணிகளுடன் ஒன்றாகினர்.

 

பொழுது புலர்ந்தபோது இராணுவம் உள்ளுக்கு வந்து கண்டிவீதிக்கு இடது பக்கம் இருக்கும் கிளாலிப்பக்கமும் றோட்டுக்கு வலதுபக்கமான கண்டல்பக்கமும் இரண்டு தனித்தனி பெரிய 'பொக்ஸ்' அடித்துவிட்டான் என்பது புலனானது.  குறிப்பாக கட்டளைத்தளபதி தீபன் அவர்களின  கட்டளை மையத்தைச்சூழவும் எதிரி முன்னேறியிருந்தான். மொத்தத்தில் முன்னணிக் காவலரண் வரிசைக்கான அனைத்துத் தளபதிகளின் கட்டளை மையங்களையும்தாண்டி இராணுவம் முன்னேறியிருந்தான்.  இதில் கிளாலிப்பகுதிக்கட்டளை மையம் ஒரு மணல் பிட்டியில் இருந்ததால் அதை சரியாக இனம்காணாத இராணுவம் அதை கைப்பற்றும் நோக்குடன் அந்தப்பகுதிக்குள் நகர்ந்தான்.

 

அதேவேளை கிளாலி கடற்கரையாலும் அதிலிருந்து 150 மீற்றர் வலதுபக்கத்தாலும் உடைத்த இராணுவம் கடற்கரைப்பகுதியை கைப்பற்றுவதற்கான தாக்குதலை ஆரம்பிக்கின்றான். உடைபட்ட பகுதிக்காவலரண் போராளிகளும் மற்றக்காவலரண்களில்  நின்ற போராளிகளுடன் இணைந்து, மோட்டரையும் இணைத்து,  பக்கவாட்டால் மேலதிக காவலரண்களை இராணுவம் கைப்பற்ற விடாது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

 

அதேவேளை கண்டிறோட்டிற்கு வலது பக்கமான கண்டல் பக்கமாக உடைத்த இராணுவம் இரண்டாவது காவலரண் வேலியைத்தாண்டி ‘பொக்ஸ்‘ வடிவில் நிலையெடுத்தான். கண்டி வீதிக்கு இடது வலது பக்கமான கிளாலிப்பக்கம் உடைத்த இராணுவமும்  இரண்டாவது காவலரண் வரிசையை ஊடறுத்து ‘பொக்ஸ்‘ வடிவில் நிலையெடுத்திருந்தான். இப்போது களமுனை மூன்று துண்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

 

இராணுவத்தின் நோக்கமானது  இரண்டு பக்கத்தாலும் புலிகளின் இரண்டாவது காவலரண் வேலியைத்தாண்டி ஊடறுத்து விட்டு,  இரண்டாவது காவலரண் வேலியை  அடிப்படையாக  வைத்து   இருபகுதி இராணுவமும் கைகோர்ப்பதாகும் . இதனால்  தளபதி தீபன்  உட்பட அத்தனை தளபதிகளும் படையணிகளும்  தங்களது பொறிக்குள் மாட்டிவிடும் என திட்டமிட்டனர். ஆனால் இரண்டாவது தொடர்காவலரண் பகுதியால் நகர்ந்து இருவரும் கைகோர்ப்பதை தடுத்து பின்னணி நிலையில்  கட்டளைத்தளபதி பால்ராஜ் தலைமையில் இருந்தவர்கள் சண்டையைத் தொடங்கினர்.

 

அதேநேரம்   கிளாலிப்பகுதிக்  கட்டளைமையத்தை  நோக்கி  நகர்ந்த இராணுவத்தின் மீது சினைப்பர், மற்றும் ஏ.கே.எல்.எம்.ஜி  கனரக   ஆயுதத்தாலும்   தாக்குதலை மேற்கொள்ள,  கிட்டத்தட்ட 22 பேருக்கு மேல் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டதுடன், தனது நகர்வை நிறுத்தி காயப்பட்டவர்களையும் இழுத்துக் கொண்டு அருகில் இருந்த பண்ட்(மண்அணை) பாதுகாப்பெடுத்து கட்டளைமையத்தின்  மீது தாக்குதலை தொடுத்துக்கொண்டிருந்தது இராணுவம்.

 

இதேநேரத்தில் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி வீரமணி, துணைத்தளபதி கோபித் ஆகியோரின் தலைமையிலான அணிகளும் உடைந்த பகுதிகளை மூடுவதற்கான தாக்குதலை மோட்டாரின் துணையுடன் முன்னெடுக்கத் தொடங்கினர்.

 

இராணுவம் புலிகளின் முன்னணி காவலரண் நிலையைத்தாண்டி பின்னுக்கு இரண்டு கிலோமீற்றருக்கு மேல் சென்று விட்டது. இராணுவம் தங்களைத் தாண்டியதைப்பற்றி ஒரு பொருட்டாக எடுக்காமல் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதை எதிரி எதிர்பார்க்கவில்லை. தளபதி வீரமணி, கோபித், கிளாலித்தளபதி, தளபதி   துர்க்கா போன்ற பிரதான தளபதிகளின் கட்டளை மையங்களை இலக்கு வைத்து   நகர்ந்த    இராணுவம்,   தாக்குதல்களை நடாத்தியபோதும் அவர்களின் கட்டளையை   செயலிழக்க  வைக்க முடியவில்லை.

 

அங்கிருந்த போராளிகள் கட்டளைமையத்தை இராணுவம் செயலிழக்கவைக்கமுடியாத வண்ணம் தரைவழித் தாக்குதலை நடாத்திக் கொண்டு மோட்டரையும் இணைத்து தங்களின் தளபதிகள் தொடர்ந்து  அணிகளை வழிநடாத்த வழிவகுத்தனர்.   ஆங்காங்கு கள  நடவடிக்கைக்காகப்  பின்னணியில்  நின்ற போராளிகளும் மோட்டாருக்கு இலக்குகளை கொடுத்து எதிரி நின்ற இடங்களில் எல்லாம் தாக்குதலை மேற்கொண்டனர்.

 

தலைவர் சொன்னது மாதிரியே 'ஒருவரும் இடங்களை விட்டு நகராமல்' முன்னணி காவலரண் வேலியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எதிரியை உள்ளே மடக்கியழிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர். சமநேரத்தில் தளபதி   பால்ராஜ்   தலைமையிலான அணியினரும் இராணுவத்தினரின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களின் இலக்கை அடையவிடாமல் கட்டுப்படுத்தினர்.

 

கிளாலிப்பகுதியில்  உள்நுழைந்த இராணுவம் கிளாலிப்பகுதி அணிகளை சுற்றிவளைக்கும் நோக்கில் நகர்ந்தது. அப்படி கிளாலியால் நகர்ந்த ஒரு இராணுவத்தொகுதி  தளபதி துர்க்காவின் கட்டளைமையத்திலும் தாக்குதலைத் தொடங்கியது. எதிரியின் கடுமையான தாக்குதலால் ஒரு கட்டத்தில் தளபதி துர்க்காவின் குறோஸ் (தொலைத்தொடர்பு சாதனத்தின் அன்ரனா) அறுந்து தொடர்பற்றுப் போய்விட்டது. அவர்  வோக்கியில்  பகுதிக்கட்டளைத் தளபதியை தொடர்புகொண்டு, தனது நிலையைச் சொல்லி தனது முகாமைச் சுற்றிச் செல் அடிக்குமாறு கூறினார். ஆட்லறி பீரங்கிகளை இணைத்து செறிவான செல்த்தாக்குதலை மேற்கொண்டு, தரைவழித்தாக்குதலையும் தொடுக்க பலத்த இழப்புக்களுடன் அந்த கட்டளைமையத்தை விட்டு பின்நகர்ந்தது இராணுவம்.

 

அதேநேரம் கிளாலி   கடற்கரைப் பக்கத்தால் முன்னேறிய இராணுவத்தை சோதியா படையணி சினைப்பர் போராளியின் துப்பாக்கி கட்டுப்படுத்தி பலத்தை இழப்பை ஏற்படுத்தியது. கடற்கரைப்பகுதியால் வந்த இராணுவம் வெட்டையைக்கடந்து மறைப்புகள் உள்ள இடத்திற்கு வரவேண்டும். மறைப்புக்குள் வரவிடாமல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். அதில் இராணுவத்துக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கடும்  தாக்குதலை மேற்கொள்ள காலை  9 மணிக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்கிவிட்டது.

 

அதேநேரம் சாள்ஸ் அன்ரனி படையணியினர் கிளாலியை நோக்கி முன்னணி காவலரண் வரிசையால் பிடித்துக் கொண்டு வர, கிளாலிப்பகுதியில் இருந்தும் முன்னணிக்காவலரண் வரிசையால் பிடித்துக் கொண்டு செல்ல,  மாலை 6 மணியளவில் இராணுவம் கிளாலிப்பகுதியை விட்டு ஓடிவிட்டான்.  கிளாலியை நோக்கி வந்த அணிகளுடன்  கிளாலிப்பக்கத்திலிருந்து சென்ற அணிகளும் தொடர்பு கொண்டு முன்னணி  காவலரண் வேலியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

 

மறுநாள், நடுப்பகுதியில் தரித்திருந்த இராணுவத்தை அழிப்பதற்கான சண்டை  மாலை முடிவடைய அப்பகுதியில் இருந்தும் இராணுவம் ஓடிவிட்டான்.  மறுநாள் மீதமிருந்தது கண்டல்ப்பக்கம்.

 

கண்டல்பக்கத்தில்  தாக்குதலுக்குப் பொறுப்பாக  இருந்த  சோதியா  படையணித்தளபதி  லெப்கேணல் சுதந்திரா காவலரண் பகுதியில்  இருந்து பின்வாங்காமல் தாக்குதலை 55 வது டிவிசன் படையணிகளை எதிர்த்து முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் அவரது கட்டளை மையம் சுற்றி வளைக்கப்பட்டு இறுக்கமான சண்டை நடைபெற்றது. இராணுவம் கட்டளைமையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். நிலமை கைமீறச்சென்ற அந்த சந்தர்ப்பத்தில் 'என்னையும் சேர்த்துச் செல்லடியுங்கோ இனி ஒண்டும் சரிவராது' எனக்கூறினார். அந்தப்பகுதிக்கு கடுமையான செல்த்தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது  இராணுவம் பலத்த இழப்பைச் சந்தித்தது. அதில்  அவரும்  வீரச்சாவடைந்தார்.

 

மூன்றாம் நாள் இராணுவம் முழுமையாகப் பின்வாங்கி ஓடிவிட்டது. பின்னர்   கிளாலிப்பக்கம் எல்.பி நின்ற போராளிகளின்  இடத்திற்குச் சென்று  பார்த்தபோது அந்த மூவரின் உடல்களும்   அந்த இடத்திலேயே  இருந்தது. ஒட்டு மொத்தமாக தீச்சுவாலை நடவடிக்கை வெற்றிக்காக நூற்று நாற்பத்தியொரு பேர் வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.

 

முப்படைகளின் துணையுடன் ஆட்லறி மற்றும் மோட்டாரின் ஆதரவுடன் விசேட தாக்குதல் பிரிவுகளை உள்ளடக்கி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் பங்கெடுத்த இந்த நடவடிக்கையை சில நுாற்றுக்கணக்கான போராளிகளைக் கொண்டு முறியடித்ததற்கு தலைவரின் வழிநடத்தலும் போராளிகளின் ஓர்மம் மிக்க செயற்பாடுகளுமே அடிப்படையாக அமைந்தன. தலைவர்  சொன்னது  போலவே நிலைகளில் இருந்து பின்வாங்காமல் இறுக்கமாக நின்று தாக்குதலை முகங்கொடுத்ததன் விளைவே இந்த வெற்றியாகும்.

 

தீச்சுவாலை சண்டைக்கான தலைவரின் உபாயம்

 

நினைவழியாத்தடங்கள் - 07 (லெப்கேணல் சூட்டி நினைவுகளில்)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி வாணன் !

Posted

அண்ணோய் நல்ல வடிவாய் விபரித்துள்ளீர்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றிகள் வாணன் தியாகங்களின் நினைவு மீட்டல்கள் இன்னும் விரியட்டும்.... நான் பெரிது நீ பெரிது என்று அடிபடும் புலம்பெயர் தமிழர்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கட்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பெறுமதியான வரலாற்றுப்பதிவு ,தொடருங்கள்,தொடருங்கள் வாணன் 

Posted

suvy,kkaran,SUNDHAL, லியோ அண்ணை கருத்துக்களிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப் புலிகள் ஏட்டில் போராளிகளின் அனுபவப் பகிர்வுகள்.. படித்த அதே உணர்வை தருகிறது உங்கள் ஆக்கம்.

 

இச்சண்டைகளில் வித்தாகிப் போன மாவீரர்களுக்கு வீரவணக்கம். :icon_idea:

Posted

விடுதலைப் புலிகள் ஏட்டில் போராளிகளின் அனுபவப் பகிர்வுகள்.. படித்த அதே உணர்வை தருகிறது உங்கள் ஆக்கம்.

 

இச்சண்டைகளில் வித்தாகிப் போன மாவீரர்களுக்கு வீரவணக்கம். :icon_idea:

 

nedukkalapoovan எனது எழுத்துக்களில் முன்னேற்றம் இருக்கின்றது என்பதை உங்கள் கருத்து மூலம் உணர வைத்துள்ளீர்கள். குறுகிய காலமாக எழுதும் எனக்கு உங்கள் கருத்து எழுத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உங்களின் கருத்துக்கு நன்றி

Posted

வாத்தியார், திருமலைச்சீலன், putthan  கருத்துக்களிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இப்படி பல வீரதீர செயல்களை நிகழ்த்திய வீரர்களின் வரலாற்று பதிவுகளை எமது எதிர்கால சந்ததிக்காக நூல் வடிவில் அமைக்கப்படவேண்டும்.  
 
பகிர்விற்கு நன்றி வாணன். 
 
 
இச்சண்டைகளில் வித்தாகிப் போன நூற்று நாற்பத்தியொரு மாவீரர்களுக்கு வீரவணக்கம் !
Posted

 

இப்படி பல வீரதீர செயல்களை நிகழ்த்திய வீரர்களின் வரலாற்று பதிவுகளை எமது எதிர்கால சந்ததிக்காக நூல் வடிவில் அமைக்கப்படவேண்டும்.  
 
பகிர்விற்கு நன்றி வாணன். 
 
 
இச்சண்டைகளில் வித்தாகிப் போன நூற்று நாற்பத்தியொரு மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

 

 

அந்த நோக்கத்துடன் அதற்கான  முயற்சியைத்தான் இங்கு தொடங்கியிருக்கின்றேன் தமிழரசு

 

நன்றி  தங்களின் கருத்துக்கு

Posted

வாணன்,
உங்கள் நினைவழியாத்தடங்கள் தொடர்ந்து வாசிக்கிறேன். ஆனால் கருத்து எழுதவில்லை. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை உங்கள் பகிர்வுகள் களங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.உங்கள் போர்க்கள அனுபவங்கள் எங்கள் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். நிறுத்தாமல் எழுதுங்கள். உண்மைகள் இப்போது புனைவுகளாலேயே வரையப்படும் காலமாகிவிட்டது. உண்மைகளை சொல்ல உங்கள் போன்ற போராளிகளாகலேயே முடியும். உண்மையான போராளியின் இதயம் என்றும் தன் இலட்சியத்திலிருந்து தடம்மாறாது இறுதிவரை அதற்காகவே துடித்துக் கொண்டிருக்கும்.  இலட்சியம் மாறாத காலம் தந்த கொடைகள் நீங்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதில் பெருமையே.

Posted

வணக்கம் சாந்தி அக்கா

 

முடிந்தளவிற்கு தொடர்ந்து பதிவதற்கு முயற்சிக்கின்றேன். 

 

தங்களின் கருத்துக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதி adminDecember 16, 2024 சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு , அதன் மீது கற்கள் பரவப்பட்டு , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதி புனரமைப்பின் போது , காவோலைகள் போடப்பட்டு கற்கள் பரவப்படும் முறையை தாம் முதல் முதலாக நேரில் காண்பதாகவும் , இதற்கு காரணம் என்ன என வீதி புனரமைப்பு பணியாளர்களிடம் கேட்ட போது , அதற்கு அவர்கள் விளக்கம் கூறவில்லை எனவும் , அதனால் உரிய தரப்பினர் இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.     https://globaltamilnews.net/2024/209325/
    • அது உண்மை தான்   பிரச்சனையா? அவர்கள் ஸ்ராலினும் உதயநிதியும் மாதிரி இருக்கின்றனர்
    • இங்கிருந்துதான் பல பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.
    • மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! December 16, 2024 சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக ஆரம்பத்தில் -கூறினார். பின்னர், இறப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக மயோட் அதிகாரிகளின் தகவல்களை மேற்கொள்ளிட்டு AFP செய்திச் சேவை கூறியுள்ளது. ஆனால் உள்ளூர் ஊடகங்களுடன் பேசிய தீவின் அரசியற் தலைவர் Francois-Xavier Bieuville, ‍‍சூறாவளி தாக்கத்தினால் மயோட்டி முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று கூறினார். இதனிடையே, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாயோட் மக்களுக்கு பிரான்ஸ் “உடன் இருக்கும்” என்றும் 250 மீட்புப் பணியாளர்களை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மடகாஸ்கரின் வடமேற்கில் அமைந்துள்ள மயோட் ஒரு முக்கிய தீவு, கிராண்ட்-டெர்ரே மற்றும் பல சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். தீவின் 300,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் உலோக தகரங்களைக் கொண்ட கூரைகளையுடைய குடிசைகளில் வாழ்கின்றனர். இந்த நிலையில் சூறாவளி தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மின்சாரம், தண்ணீர் மற்றும் இணைய இணைப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பாரிஸில் உள்ள அரசாங்கம் பொருட்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுடன் ஒரு இராணுவ போக்குவரத்து விமானத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை (14) காலை சூறாவளி முழு பலத்துடன் தாக்குவதற்கு முன்பே, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாகவும், கட்டிடங்களின் கூரைகள் தூக்கி ஏறியப்பட்டதாகவும், மின் கம்பிகள் சாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 1934 ஆம் ஆண்டிலிருந்து தீவு இதுபோன்ற கடுமையான அனர்த்த நிலைமையை சந்தித்ததில்லை என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.   https://www.ilakku.org/மயோட்டியில்-சூறாவளி-நூற/
    • பெரியார் மண்ணாவது/ம...வது. மண்ணின் மைந்தனைத் தடுக்க வந்தேறி அரியர்களுக்கு என்ன கொழுப்பு. இதற்குத்தான் தமிழனைத் தமிழனே ஆளவேண்டும். சீமான் தேவை என்று நாங்கள் சொல்வது இதற்குத்தான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.