அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பூமியை விட 3.6 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு. [saturday, 2011-09-17 00:23:15] ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது. அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது. …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
ஏன் பல்லி கொன்றீரய்யா அருண் நரசிம்மன் மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்…
-
- 1 reply
- 922 views
-
-
-
- 1 reply
- 424 views
-
-
மிகப் பிரகாசமான வால் நட்சத்திரங்களில் ஒன்றான ஐஸோன் ISON என அழைக்கப்படும் வால் நட்சத்திரத்தினை இலங்கையர்கள் தெளிவாக அவதானிக்கலாம் என இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. “இந்த நூற்றாண்டின் வால் நட்டத்திரம்” எனக் கூறப்படும் ஐஸோனானது, இந்த தசாப்தத்தில் அல்லது நூற்றாண்டில் பூமியைக் கடக்கும் மீ உயர் பிரகாசமான வால் நட்சத்திரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு வான் பரப்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலைவேளையில் ஐஸோன் வால் நட்சத்திரத்தினை அவதானிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. பகல்வேளையானாலும் சூரிய வெளிச்சத்தை மிஞ்சும் வகையில் ஐஸோனின் வெளிச்சம் அமையும். வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடியதாக இருக்கும். சிலவேளையில் வெளிச்சம் கண்ணில் வலியை ஏற்படுத்தலாம் என நாஸ…
-
- 1 reply
- 486 views
-
-
ஒரு இணையத்தளத்துக்கு விளப்பரம் கொடுக்கும் போது அந்த இணையத்தளத்தின் மதிப்பை கணிப்பிட்டா விளப்பரம் கொடுக்கிறீர்கள் ? அந்த இணையத்தளத்துக்கு நாள்தோறும் அதிகமானவர்கள் வந்துபோகிறார்களா ? நான் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப எனக்கு பலன் இருக்கின்றதா ? என்று சிந்திக்கிறீர்களா ? ஆங்கில இணையத்தளங்களில் விளப்பரம் அப்படிதான் செய்கின்றனர், ஆனால் தமிழ் வர்த்தகர்கள் இவற்றை கவனிப்பதில்லை, http://www.alexa.com என்ற இணையதில் ஒவ்வொரு இணையத்தின் உலக தரவரிசையை கனிப்பிடமுடியும், இதன் மூலம் அவ் இணையத்தின் மதிப்பை அறியமுடியும் உதாரணம் யாழ் இணையத்தை இங்கு பாருங்கள் http://www.alexa.com/siteinfo/yarl.com தற்போதைய நிலையில் யாழ் 56,745 உலக தரவரிசையில் உள்ளது , இலங்கையில் 325 தரவரிச…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐன்ஸ்டைனின் மனைவி -- நன்றி : இயற்பியல் 2005 ஆல்பர் ஐன்ஸ்டைனின் 'அற்புத ஆண்டு' என்று 1905 அறியப்படுகிறது. அந்த வருடத்தில், அவர் ஒளிமின் விளைவு அதையட்டி எழுந்த ஒளியின் குவாண்டம் கோட்பாடு, ப்ரொனியன் இயக்கதின் அணுக்கோட்பாடு, விசேடச் சார்நிலைக் கோட்பாடு என்று மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். இவை ஒவ்வொன்றும் நூறு வருடங்களுக்குப் பிறகு இன்றும் அசைக்க முடியாத கோட்பாடுகளாக நிலைபெற்றிருக்கின்றன. (அதைக் கொண்டாடும் முகமாக இந்த வருடம் இயற்பியல் வருடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது). ஐன்ஸ்டைனுடயவை என்று அறியப்படும் இந்தக் கண்டுபிடிப்புகளில் அவரது முதல் மனைவி மிலேவா மாரிச்க்குப் (Mileva Maric) பெரும்பங்கு உண்டு என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புகளில் …
-
- 1 reply
- 2.1k views
-
-
குறுகத் தரி இளையா என் பள்ளி நண்பன் ஒருவன் திடீரென்று ஒருநாள் தன் நோட்டில் குறுணை குறுணையாக எழுத ஆரம்பித்தான். அடுத்து, தபால் அட்டையில் திருக்குறள் முழுவதையும் எழுத முயன்றான். பிறகு தாஜ்மஹாலை அரிசியில் கீறினான். சமீபத்தில் சிற்பி ஒருவர் தமிழ்த்தாயின் உருவத்தை வரைய இரண்டு அரிசிகள் எடுத்துக்கொண்டார். அமெரிக்க அதிபர் ஓபாமாவுக்கும் இரண்டு அரிசிகள். மிச்செல்லும், வெள்ளை மாளிகையும் சேர்த்து வேண்டும் என்றால் இன்னும் நான்கைந்து அரிசிகள் தேவைப்படும். குள்ளமான மனிதன், ஒல்லியான இடுப்பு, சின்னஞ்சிறிய நாய்க்குட்டி, மிகச்சிறிய மீன் , 2 வயது குழந்தையைப் போல சாலையில் ஓடும் நானோ கார் என மனிதன் அடையும் மைக்ரோ ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. அரிசியில் சோற்றுக்குப் பதிலாக கலையை வடிப்பத…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் அண்டார்டிகா தென் துருவக் கண்டத்தின் விளிம்புப் பகுதிகளில் அந்த இடத்துக்குச் சொந்தமில்லாத வேற்றுக் கண்டத் தாவரங்கள் வளரத் துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறாக அந்த இடத்தில் முளைக்க ஆரம்பித்துள்ள தாவரங்களில் பல அண்டார்டிகா செல்லும் விஞ்ஞானிகள் சுற்றுலாப் பயணிகளின் ஆடையில் ஒட்டியிருந்த மகரந்தம் மற்றும் விதைகளால் தோன்றியவை என்றும், அறியாமல் இவர்கள் இத்தாவரங்களை இங்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அண்டார்டிகா கண்டத்தின் மிகப் பெரும்பான்மையான இடங்கள் உறைபனியால் மூடப்பட்டுள்ளது. ஆனால் உறைபனி இல்லாத ஒரு சில இடங்களில், குறிப்பாக தென்னமெரிக்க கண்டத்தை அருகாமை வரை செல்லும் வால் போன்ற …
-
- 1 reply
- 786 views
-
-
அப்பிளின் சரிவு ஆரம்பம்? By Kavinthan Shanmugarajah 2012-10-30 14:12:57 தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள். ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி. இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும். அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை. அது தற்போது சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கியுள்ளது. ஆம், அப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போமானால், ஐபோன் 5 இன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனமை,இதனால்…
-
- 1 reply
- 740 views
-
-
அமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து நேற்று நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. வர்த்தகரீதியான விண்வெளி பயணத்துக்கு புதிய விடியலாக இந்த பயணம் அமைந்து புதிய வராலாற்றையும் படைத்துள்ளது. அமெரிக்க மண்ணில், அமெரிக்க ராக்கெட்டில் , அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் நாசாவுக்கு பாய்ந்துள்ளது. விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எ…
-
- 1 reply
- 684 views
-
-
அணு துகள் அறிவியல்: பிரபஞ்ச கட்டமைப்பு பற்றி நமக்கு தெரிந்த (மற்றும் தெரியாத) 10 விடயங்கள் அணுவை விட மிகவும் சிறிய துகள்கள் முதல் மிக பெரிய கேலக்ஸி வரை பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய நம்முடைய புரிதல்கள் சமீபத்திய தசாப்தங்களில் மிக விரைவாக மேம்பட்டுள்ளன. நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்குகின்ற அணுவை விட சிறிய துகள்கள் பற்றி நாம் அறிந்திருப்பதை பிபிசியின் "த இன்ஃபினிட் மங்கி கேவ்" நிகழ்ச்சி ஆய்வு செய்து வருகையில். நம்முடைய பேரண்டத்தின் அடிப்படை ஆதாரம் பற்றிய சில வினோதமான உண்மைகள் மற்றும் தீர்க்கப்படாத இரகசியங்களை பற்றி நாம் பார்க்கலாம். 01.அணு என்பதற்கான ஆங்கில "atom" (ஆட்டம்) என்ற சொல் "பகுக்க முடியாத"…
-
- 1 reply
- 419 views
-
-
-
- 1 reply
- 803 views
-
-
சிறிது கூட ஓய்வெடுக்க நேரமின்றி உழைப்பது ஒரு சிலருக்கு பணிச்சுமையினால் அமைகிறது. வேறு சிலர் அவ்வாறு உழைப்பதன் மூலம் அதிக திறனை வெளிப்படுத்த முடியும் என நினைத்து தாங்களாகவே உழைக்கின்றனர். பணிச்சுமைகள் இருந்தாலும், நாம் செய்யும் வேலைகளுக்கிடையில், 5 நிமிட இடைவேளை எடுப்பது அடுத்தடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளில் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கும் என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய இந்த பரிசோதனையில், 72 மாணவர்கள் சுயமாக பாடம் கற்பித்தல் மற்றும் இரண்டு கடினமான மனக்கணிதம் ஆகிய பிரிவுகளில் தேர்வு எழுதினர். ஆய்வின் ஒரு பகுதியாக, சில மாணவர்களுக்கு 5 நிமிட இடைவேளை அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் எந்த இடை…
-
- 1 reply
- 363 views
- 1 follower
-
-
ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும்போது சிரிச்சோம், இப்போது மிரண்டு போயுள்ளோம்.! பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வக (FAIR) ஆராய்ச்சியாளர்கள், ஸ்கிரிப்ட்டில் இருந்து வெளியேறிய சாட்பாக்ஸ்கள், எந்த விதமான மனித உள்ளீடும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழியில் தொடர்பு கொண்டதை கண்டறிந்து அதிர்ந்து போயுள்ளனர். பேஸ்புக் நிறுவனத்தின் ஏஐ (AI) அதாவது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) ஆனது, மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத, அதன் சொந்த தனித்துவமான மொழியை உருவாக்கியுள்ளது என்பதை ஆய்வகத்தின் டெவலப்பர்கள் கண்டறிந்த உடனேயே பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூடப்பட்டுள்ளது. இது எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சரியமளிக்கும் ஒரு விடயமாக இருக்…
-
- 1 reply
- 526 views
-
-
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர். கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீ…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
<span style="font-family: tahoma, geneva, sans-serif"><span style="font-size: 18px">அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் சீனா அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ள உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி, தனது முதல் கவனிப்பாய்வு பணியினை செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து இந்த தொலைநோக்கி தகவல்கள் பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதல் மற்றும் பார்வைக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான வானியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் செயல்படுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
துகளுக்குரிய கடவுள் பெயரால்..! இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது. சுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எ…
-
- 1 reply
- 802 views
-
-
பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANA BERRY Image captionஅந்த பூமிக்கு விஞ்ஞானிகள் வைத்து பெயர் ஜி ஜே 1132பி நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படு…
-
- 1 reply
- 385 views
-
-
''அறிவியலில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,'' என நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ் கேட்டுக்கொண்டார். சென்னையை சேர்ந்த ராமமூர்த்தி ரமேஷ், பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.,சில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) படித்தவர். 1987ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பிஎச்.டி., படிப்பை மேற்கொண்டார். 1995 முதல் 2003 வரை வாஷிங்டன் மேரிலேண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 2004 முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது பெயர் இந்த ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. "காம்ப்ளக்ஸ் ஆக…
-
- 1 reply
- 484 views
-
-
செயற்கை ஒளி செடிகளுக்கு நல்லதா? வீட்டில் வைக்கப்படும் செடிகளை வெளிச்சம் அதிகம் உள்ள அறையில் வைக்குமாறு அடிக்கடி பரிந்துரைக்கிறோம்; அதாவது, சூரிய ஒளி எளிதாக உள்ளே நுழையும் ஜன்னல்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதற்கு ஒளி தேவை, எனவே, அவற்றின் உணவை உற்பத்தி செய்து வளர முடியும். ஆனால், செயற்கை ஒளியுடன் ஆரோக்கியமான தாவரங்கள் இருக்க முடியுமா? குறுகிய பதில் ஆம், உங்களால் முடியும்.. இப்போது, செடிகளுக்கு செயற்கை ஒளியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனென்றால் அவை அனைத்தும் வேலை செய்யாது. உண்மையில், நாம் வழக்கமாக வீட்டில் வைத்திருக்கும் பல்புகளின் வெளிச்சம் நல்ல வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க போதுமானதாக இல்லை. இதைச் செய்ய, நாம் குறிப்பிட்ட விளக்குகள் அ…
-
- 1 reply
- 698 views
-
-
வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும் எழுதியது: சிறி சரவணா நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம் என்ற ஒன்றை வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். சரி உயிரினம் என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப் படுத்தியுள்ளது என்று பார்க்கலாம். எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது. ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம். தன் நிலையைப் பேன சக்தி…
-
- 1 reply
- 704 views
-
-
பாகிஸ்தானில் தலீபான்களின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் மலாலா. இதற்காக அவர் கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் தேதி, பள்ளிக்கு சென்று வரும்போது தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று குணம் பெற்றார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து வழங்கப்பட்டது. இப்போது விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘316201’ எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டி உள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “எரிகல்லுக…
-
- 1 reply
- 567 views
-
-
* சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். * நிலவின் விட்டம் 3,475 கி.மீ. * நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது. * நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ. * நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி. * நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். * நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ. * தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826. * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910. * நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776. …
-
- 1 reply
- 1.4k views
-