Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடு…

  2. தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…

  3. தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…

    • 0 replies
    • 620 views
  4. சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்தியாவில் 500 ரூபாயில் கிடைக்கிறதாம்!! Feb 03 2013 09:49:48 சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்திய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் வெறும் 500 இந்திய ரூபாய்களுக்கு விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது. நாம் அனைவருமே டினோசர் என்ற பிரமாண்ட மிருகத்தினை படங்களில் மட்டுமே பார்த்துள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இந்த விலங்கினம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இருப்பினும் அவற்றின் எலும்புகளும், முட்டைகளும் பூமியில் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவின் மத்திய பிரதேச ம…

    • 0 replies
    • 620 views
  5. கோபன்ஹேகன்: டென்மார்க்கில் தனியே வசித்து வந்த தாத்தா ஒருவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்ததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார். இந்நிலையி…

  6. Started by nochchi,

    ஜனவரி 26 ஜனவரி 26 ஆம் திகதி ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாள்கள் உள்ளன. இன்றைய நாளில் இலங்கை மற்றும் உலக நாடுகளில் இடம்பெற்ற முக்கிய சில நிகழ்வுகள். 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர். 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுத…

    • 0 replies
    • 620 views
  7. போட்டி நிகழ்வுகளில் காலை மாடுகளை வளர்த்து அந்த காளைகளை அடக்கும் விளையாட்டு போட்டிகள் நடை பெற்று வருகின்றன . அவ்வாறு நடை பெறும் நிகழ்வு ஒன்றில் மாடுகள் போட்டியாளர்களை .மக்களை விரட்டி விரட்டி கொம்பால குத்தி காயமாக்குவதனையும் . இந்த சம்பவத்தில் பலர் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது . http://www.youtube.com/watch?v=Nrds8Rh7C1I&feature=player_detailpage

  8. பிரித்தானியாவில் நடந்த முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் முதலாவது முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஜாஹெத் சௌதிரி என்ற 24 வயதுடையவர், சீன் ரோகன் என்ற 19 வயதுடையவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஜாஹெத் சௌதிரி தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிந்தமையால் அதை பாலியல் சார்பினை மாற்றிக்கொள்ள யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் சீன் ரோகனை முதல் தடவையாக சந்தித்த ஜாஹெத் சௌதிரி சந்தித்துள்ளார்.அவர்கள் இருவரும் விரைவில் காதலர்களாகிய தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/21757

    • 5 replies
    • 619 views
  9. யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் நபரொருவர் ஒரு தலைக் காதல் விவகாரத்தால் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழில் உள்ள அரச திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊழியரொருவர், அங்கு கடமையாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் ஊழியர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகார…

  10. சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது. அந்…

  11. உங்களின் CV யை தூக்கி பின்வரும் வலைத்தளத்தில் போடவும் உங்களின் தட்போதைய சம்பளம் எவ்வளவு என்பதுடன் அப்படியே போற போக்கில் உங்கள் பாஸின் ஈமெயில்க்கு ஒரு தட்டும் தட்டலாம் . https://www.adzuna.co.uk/jobs/value-my-cv/upload?

    • 5 replies
    • 619 views
  12. ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி: பெண்கள் உட்பட 08 பேர் கைது கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் 27 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் மற்றும் இரத்மலனை, அம்பலாந்தோட்டை, மாத்தறை, கரந்தெனிய, கும்புறுப்பிட்டிய,…

    • 5 replies
    • 619 views
  13. [img = http:///intl/en_ALL/images/logo.gif] இந்த உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் நிற்கும் பிம்பமே லெலி எனப்படும் பொறியியலாளர் ஆவார் .இப்போ நான் வசிக்கும் நகரம் முன்னர் கடல் ,நீரினால் சூழப்பட்ட ஒரு பகுதி .இதை இவரின் சிந்தனைக்கு ஏற்ப ஓர் நகரமாக மாற்றப்பட்டது ................ஆகவே நான் கடலினுள் வாழ்கிறேன் . https://www.facebook.com/pages/Lelystad/106032642762176

    • 2 replies
    • 619 views
  14. என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ "என் வயசு 18.. நான் பத்திரமா இருக்கேன்.. என்னை யாரும் கடத்தவில்லை" நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று யாராலுமே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை கர்நாடக போலீசார் ஒரு பக்கம் வலைவீசி தேடிவருகிறார்கள். ஆனாலும் யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா. எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அ…

  15. விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்மபொருள் சைபீரியாவில் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில், விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் விழுந்தது. அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தனர். முதலில் அது இறந்த பறவையாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால், பறவை எதுவும் இல்லை என்று தெரிந்ததும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், யு வடிவத்தில் இருந்த அந்த பொருள் ஏதோ ஒரு சாதனத்தின் உடைந்த பொருள் என்பதை அறிந்தனர். இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளித்தனர். வெள்ளியை போல் பளபளப்பாக உள்ள அந்த மர்ம பொரு…

  16. அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார். தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட…

  17. சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ? - ஒரு சவுக்குகடி ரிப்போர்ட் ! சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும், மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும், இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள்..... பிறகு ஏன் மோதல் ? இதற்கு ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 195 சீட்டுகளை வெல்கிறது. ஆனால், வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள் கூட்டடணி, வெறும் 140 சீட்டுகள் மட்டுமே பெற்றது. ஆனால், ராஜீவ் ஏனோ, ஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார். இடது சாரிகள் மற்றும் பிஜேபியின் 52 எம்.பிக்களின் ஆதரவோடு, வ…

  18. மணமேடையிலிருந்த காதலனை துப்பாக்கி முனையில் கடத்திய காதலி..! தன்னை காதலித்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை, அவரது காதலி துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஹமிப்பூர் குன்டேல்கண்ட் எனும் பகுதியில், அசோக் யாதவ் என்பவர் தான் வேலை செய்த வைத்தியசாலையிலுள்ள சக பணியாள பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அசோக் யாதவுக்கு, அவரது பெற்றோர் வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதுபற்றி அசோக் யாதவ் அவரது காதலிக்கு அறிவிக்காமல் இருந்துள்ளார். அத்தோடு காதலியை சந்திப்பதையு…

  19. புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடை…

    • 2 replies
    • 618 views
  20. பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர்:... ஃபெவிகுவிக்கின் உலகக் கோப்பை ஸ்பெஷல் விளம்பரம்! டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்து வருகிறது. இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு …

  21. ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான். காவல் துறையினரிடம் தா…

  22. சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார். மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு மீனவர் தான் வழக்கமாக மீன் பிடிக்கும் உத்தா ஆற்றில் கார் ஒன்று பாதி மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூழ்கியிருந்த காரை மீட்புப் படையினரைக…

  23. திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் 2 ஆம் எதிரியான நண்பனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 3 ஆம் எதிரிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈட்டை பாதிக்கப்பட பெண்ணுக்கு வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு 4 மாதம் 14 ஆம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது…

    • 2 replies
    • 617 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.