செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ,காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள். முடிந்தால் சிவப்பு நிற உடைகளை மட்டுமே அணியலாம். சுவாரஸ்யமான இந்த தகவலை படியுங்களேன். இன்றைக்கு இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவு பிரச்சினைதான். இணையதளங்களில் அதிகம் தேடப்படும் செய்தியும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் மு…
-
- 9 replies
- 2k views
-
-
லண்டன்: மகாத்மா காந்தியடிகளின் ஒரு ஜோடி மூக்குக் கண்ணாடி, செருப்புகள், இடுப்பில் தொங்க விட்டிருக்கும் கடிகாரம், தட்டு, கிண்ணம் ஆகியவை லண்டனில் ஏலத்திற்கு வருகின்றன. மார்ச் 4 - 5 ஆகிய தேதிகளில் இந்த பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன. அனைத்தும் சேர்ந்து 30 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் சேகரித்து ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார். தனது கண்ணாடிகளை 1930ம் ஆண்டு ராணுவ கர்னல் திவான் நவாப் என்பவரிடம் கொடுத்துள்ளார் காந்தி. அப்போது, இவைதான் எனது இந்தியாவை சுதந்திர நாடாக்க வேண்டும் என்ற பார்வையை எனக்குக் கொடுத்தவை என்று அப்போது கூறினாராம் காந்தி. அதேபோல தனது செருப்புகளை இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒரு…
-
- 12 replies
- 2k views
-
-
உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல் இது. 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி நீளம், 175 அடி உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன.…
-
- 5 replies
- 2k views
-
-
அன்புக்குரிய இந்து இளைஞர்களுக்கு, தாழமுடியாத வேதனையோடு இந்த மடலை எழுதுகின்றோம். எழுதுவதால் ஏதேனும் பிரயோசனம் உண்டா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகக் கூட இருக்க முடியும். இருந்தும் எழுதுவதையும் நிறுத்தி விட்டால் அது படுமோசமாகிவிடும் என்பதின் அடிப்படையில் இவ்வறிக்கையை வெளியிட நேர்ந்தது. ... அன்புக்குரிய இந்து இளைஞர்களே! இந்த உலகம் முழுவதிலும் உள்ள சமயங்களை எடுத்துக் கொண்டு எந்த சமயத்தில் இளைஞர்கள் நாட்டம் குறைந்தவர்களாக - சமயப்பற்று இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றொரு ஆய்வு நடத்தினால், அதன் முடிபு இந்துசமயம் என்பதாகவே இருக்கும். அது எந்த நாட்டில் அதிகம் என்ற அடுத்த ஆய்வு வினாவுக்கான பதில் இலங்கை என்பது முடிபாகவரும். எமது அருமை இ…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது. முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject…
-
- 1 reply
- 2k views
-
-
`செம்பு'மூலம் திருடர்களை கண்டுபிடிக்கும் கிராம மக்கள் ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் இருந்து 45கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது நாகுலபள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த பல ஆண் டுகளாக செம்பு மூலம் திரு டர்களை கண்டு பிடித்து வருகிறார்கள். இந்த செம்பில் தண்ணீர் ஊற்றி அங்குள்ள அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் அதற்கு குங்குமம், சந்தனம்தடவி, மாலை அணிவித்து ஊரின் மையப்பகுதியில் வைத்து விடுகிறார்கள். அந்த ஊரில் திருட்டு, கொள்ளை ஏதாவது நடந் திருந்தால், நாட்டாமை கிராம மக்களிடம் விசா ரணை நடத்துவார். பின்னர் சந்தேகப்படும் நபர்களை குறித்து வைத்துக் கொள்வார். பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் செம்பை வைத்து சந்தேகப்படும் நபர்களின் பெயரை ஒவ் வொன்றாக …
-
- 5 replies
- 2k views
-
-
முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…
-
- 7 replies
- 2k views
-
-
[size=4][/size] [size=4]அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.[/size] [size=4]இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்த சர்ச்சில் சார்லஸ் உறுப்பினராக இல்லை. ஆனால், ஆன்ட்ரியாவின் தந்தை …
-
- 0 replies
- 2k views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் அது டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது. அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகளின் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வர வேண்டியே இந்த முடிவை எடுத்ததாக ரொசோலி தெரிவித்தார். மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த நிகழ…
-
- 4 replies
- 2k views
-
-
நிலத்தடி நீரில் கலந்திருப்பது.... இயற்கை எண்ணை. அமெரிக்க நிபுணர் அறிவிப்பு. யாழ். குடாநாட்டில்.... அண்மையில் நிலத்தடி நீர் மாசு பட்டு விட்டதாகவும், அதில்... சுன்னாகம் மின் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேற்றப் பட்ட கழிவு எண்ணை, கிணற்று நீருடன் கலந்து விட்டதாகவும் வந்த செய்திகளை... நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இதனை பரிசோதிப்பதற்காக... அமெரிக்க, நோர்வே... நிபுணர்கள் சென்ற மாதம் யாழ். குடாநாட்டிற்கு வந்து.... யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கிணற்று நீரின் மாதிரிகளை.... சேகரித்து, அமேரிக்கா கொண்டு சென்று ஆராய்ச்சி செய்ததில், அதில் கழிவு எண்ணை இல்லை என்றும்.... நிலத்தடி நீரில் கலந்திருப்பது, இயற்கையாக நிலத்தில் இருந்து அமுக்கத்தால் வெளியெ வரும் எண்ணை என்றும் அமெரிக்க, …
-
- 27 replies
- 2k views
-
-
ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு. தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால்உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா. தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம்இ பிரச்சினைஇ தோல்விஇ நம்பிக்கையின்மைஇ ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து …
-
- 3 replies
- 2k views
-
-
தெல்லிப்பளை குளமங்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் வாழைக்குலைப் பொத்தி நிலத்தின் கீழ் இருந்து மேல் எழுந்து வளரும் அபூர்வமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்படும் வாழை குட்டி போட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாழையின் அடிமட்டத்தில் இருந்து சுமார் ஓர் அடி தூரத்தில் மற்றுமொரு குட்டி வருவதைப் போன்று வாழைப் பொத்தி வெளி வந்துள்ளது. இந்தச் சம்பவம் குளமங்கால் முருகன் தேவதாஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு வாழை நிலத்தின அடியில் இருந்து பொத்தி வெளிவந்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12361
-
- 8 replies
- 1.9k views
-
-
2880ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி சுனாமி வரும் உலகம் அழியும்.... இப்படிச் சொல்வது விஞ்ஞானிகள்! நியூயார்க்: 2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா... எல்லாரும் உள்ள போகப் போறோம்' ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. கடந்தாண்டு கூட மாயன் காலெண்டரைக் காட்டி பயமுறுத்தினார்கள். இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெர…
-
- 18 replies
- 1.9k views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்சுக்கு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவில் ஜான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய 2 வயது மகன் பாட்ரிக் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்த கொடிய நோய் தாக்குதலால் சிறுவனுடைய தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டது. இவனுக்கு தனது ஆறுதலை தெரிவிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது தலை முடியை தியாகம் செய்து, மொட்டை போட்டுக்கொண்டார். அவரை போலவே பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மொட்டையடித்துக் கொண்டார்கள். இந்த ரத்த புற்றுநோயானது 4 விதமான புற்று நோய்களில் ஒன்றாகும். புஷ்-லாரா தம்பதியரின் 2வது மகன் 4 வயது இருக்கும் போது இதே புற்றுநோய் தாக்…
-
- 4 replies
- 1.9k views
-
-
யேர்மன் நாட்டு காவல்த் துறை https://www.facebook.com/photo.php?v=701361343232627
-
- 31 replies
- 1.9k views
-
-
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு 'கிச்சுகிச்சுமூட்டி' அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது. மீன்பிடிப்பதற்காக சென்ற 65 வயதான மீனவர் ஒருவரே முதலையின் வாயில் சிக்கிக்கொண்டுள்ளார். அவருடைய கால்களை முதலை கௌவிக்கொண்டது. உடனடியாக கைகளை முதலையின் வயிற்றுக்கு கீழே கொண்டுபோன அவர் முதலையின் வயிற்றில் கிச்சுகிச்சுமூட்டியுள்ளார். கூச்சமடைந்த முதலை வாயை திறந்தவுடன் அதன்பிடியிலிருந்து தான் தப்பித்து கொண்டதாகவும் இந்த முறைமை தொடர்பில் தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாகவும் அந்த மீனவர் தெரிவித்துள்ளார். முதலையிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மந்திரம் செய்யப்பட்ட கற்களை அந்த களப்பிற்குள் போட்டுள்ளதாகவும் அந்த கற்கள…
-
- 13 replies
- 1.9k views
-
-
எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேண…
-
- 20 replies
- 1.9k views
-
-
-
- 11 replies
- 1.9k views
- 1 follower
-
-
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மண்ணின் மைந்தர்களை வாழவைப்பது எப்போது? தொல் தமிழர்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற கொடுமையின் தொடர்ச்சியாக ... ... இன்று தொல் தமிழர்கள் நகரத்திற்குள் வாழ்ந்தாலே தீட்டு என்ற புதிய தீண்டாமையை புகுத்துவதா? என்று கொதிக்கும் நெஞ்சோடு தமிழர் எழுச்சி இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தொல் தமிழர்கள் மீதான புதிய தீண்டாமையை உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் பரப்பி, ஒன்றுபட்ட தமிழர் போராட்டத்தை முன்னெடுக்க உருவானதுதான் எங்கள் மண் என்ற இந்த நாடக ஆவணப்படம். இப்படம் தமிழக வரலாற்றில் மக்கள் முதலீட்டில் மக்களே நடித்து வெளியிடும் முதல் படம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. இப்படம் 15-04-…
-
- 0 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம் கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர், அதனை பிடுங்கி உண்டபோது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன. நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்றது. காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன. ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக நெ…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஜெர்மனி நாட்டில் வெளிநாட்டு மந்திரியாக இருப்பவர் கைடோ வெஸ்டர்வெல். 48 வயதான இவர் தன் நீண்டகால நண்பரும் வர்த்தகருமான மைக்கேல் மொரான்சை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். மைக்கேல் விளையாட்டு நிகழ்ச்சிளை நடத்தும் அமைப்பாளராக இருக்கிறார். அவர் வயது 43 ஆகும். பான் நகர மேயர் ஜுயெர்ஜன் நிம்ட்ஸ் பதிவாளராக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில் நாட்டின் பெண் அதிபர் ஏஞ்சலா மார்க்கலோ, மற்ற மந்திரிகளோ கலந்து கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் பதிவானதும், விருந்தினர்களுக்கு ஒரு ஓட்டலில் விருந்து கொடுத்து கொண்டாடினார்கள். இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒர…
-
- 21 replies
- 1.9k views
-
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்…
-
- 9 replies
- 1.9k views
- 1 follower
-
-
வீட்டின் முன்வாசல் விழுப்புரம்.. பின்வாசல் கள்ளக்குறிச்சி..! மாவட்ட பிரிவினையால் பரிதவிக்கும் குக்கிராமம்..! விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கருவேப்பிள்ளைபாளையம் கிராமம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் குக்கிராமமாக வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் புதிய மாவட்டத்திற்கான நிர்வாக பணிகளை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது கருவேப்பிள்ளைபாளையம…
-
- 5 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் பிரபல மாடலும், டீவி நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி சமீபத்தில் நியூயார்க் சிட்டியில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு தனது புதிய ஷோவை விளம்பரப்படுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது தனது 12 வயது மகன் ஈவன் பற்றிய சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். ‘ஒருமுறை நான் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் போது, கார் ஓட்டிக் கொண்டே போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எனது மகன், அவனது போனில் இருந்து போலீஸுக்கு ஃபோன் செய்து, ‘என் அம்மா கார் ஓட்டிக் கொண்டே ஃபோன் யூஸ் பண்றாங்க’ என்று கூறிவிட்டான். நான் உடனே அவன் ஃபோனை காரின் ஜன்னல் வழி வெளியே தூக்கி எறிந்து விட்டேன்.’ என்று கூறினார். இது போல் ஏற்கனவே, ஒரு முறை செய்துள்ளான் அவன் என்று கூறினார். மே…
-
- 5 replies
- 1.9k views
-
-
தனது வாழ்நாளில் பெண்களையே காணாத மனிதர்! [Friday 2016-05-06 08:00] கிரீஸ் நாட்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தனது வாழ்நாளில், பெண்களையே காணாமல் வாழ்ந்து, இறந்துள்ளார். கிரீசின் மவுண்ட் ஏதோஸ் மலையில் உள்ள துறவிகள் மடத்தில் வாழ்ந்து மறைந்த மைக்கேல் டோலாட்ஸ் என்ற துறவி தான் அவர். கடந்த 1856 -ஆம் ஆண்டில் மைக்கேல் பிறந்து சில மணிநேரத்திலேயே அவரது தயார் இறந்துவிட்டார். அனாதையாகக் கைவிடப்பட்ட மைக்கேலை மவுண்ட் ஏதோஸில் உள்ள துறவிகள் மடத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதுமுதல், தனது இறப்பு வரை கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் துறவி மடத்தினுள்ளேயே வாழ்ந்து மறைந்த மைக்கேல், அந்த மடத்தின் கேட்டுகளைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அவர், தனது 82 ஆவது வயதில் கடந…
-
- 13 replies
- 1.9k views
-