செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
ஆகஸ்ட் 18 இற்குப் பின்னர் புதிதாக அமைய இருக்கும் அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைத்துக் கொள்ளப்படாது என ஐக்கிய தேசியக் கடசியின் முக்கியஸ்தரும் போக்குவரத்து அமைச்சருமான றஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சீங்களத் தொலைக்காட்சியான அத தெரனவின் அரசியல் நிகழ்ச்சியான 360 இல் தோன்றிக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். சாதாரண நாட்களில் வேறொன்றையும் தேர்தல் காலங்களில் வேறொன்றையும் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான கொள்கையை திடமாக அறிவிக்காத வரையில் இவ்வாறான கூட்டிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத தெரன
-
- 4 replies
- 829 views
-
-
அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு 30.03,2008 ::01:11 மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை காமாட்சி அம்மன் கோவில்தெருவில் பழமை வாய்ந்த சொர்ண சாது காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கீதா அம்மனை தரிசக்க கோவிலுக்கு சென்றவர் காமாட்சி அம்மன் கண்களில் ஒலிக்கீற்று தெரிவதாகவும், அம்மன் கண்களை திறந்து மூடியதாகவும் சத்தம் போட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த கிராமத்தினரும், கோவிலின் குருக்கள் பட்டு, அம்மன் கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியுள்ளனர். இச்செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பரவ கூட்டம்,கூட்டமாக மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாய்க்கு பிரியாணி கொடுத்தது தப்பா? ஆட்டோ டிரைவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை. நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை பெரம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரைப் போலவே பெரம்பூரில் பிளாட்பார்மில் வசித்து வரும் வெள்ளை பிரபு என்பவரும் நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இவர்கள் இருவரும் உணவளிக்கும் நாய் ஒன்று குட்டி போட்டுள்ளது. அந்த குட்டிகளில் அழகாக இருந்த ஒரு …
-
- 4 replies
- 407 views
-
-
குழம்ப வைத்த கடிதங்கள் . . லண்டன், ஜூலை 16: நிறுவனங்கள் சார்பில் அடுத் தடுத்து கடிதங்கள் அனுப்பப் படுவது வழக்கமானதுதான். ஆனால் பிரிட்டனிலோ நிறுவனம் ஒன்று தனக்கு 287 கடிதங்களை அனுப்பி வைத்ததால் வாலிபர் ஒருவர் குழம்பி போயிருக்கிறாராம். . இதிலென்ன வேடிக்கை என்றால், அந்த 287 கடிதங்களும் ஒரே கடித ம் என்பதுதானாம். வங்கியிடமிருந்து அவருடைய கிரெடிட் கார்டு ரத்து செய்யப்படுவதாக அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாம். அதனோடு மேலும் நூற்றுக்கணக் கான கடிதங்கள் இருக்க அவர் திகைத்து போனாராம். அதன் பிறகு பொறுமையாக பார்த்தபோது அவை எல்லாமே ஒரே கடிதம் என்ற விஷயம் தெரிய வந்ததாம். இதனால் குழம்பி போன அவர், சம்பந்தப்பட்ட வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கம்ப்யூட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்களை புண்படுத்தும் படி கேலி செய்துள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய ஏழ்மை பிரதேசங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வசதிகள், ஆடை வகைகள், உணவு முறைகள் என பலவற்றை கேலி செய்யும் வகையில் ஜெரெமி கிளார்க்சன் அறிவிப்பு செய்துள்ளார். இந்தியாவுக்கு செல்ல வேண்டுமாயின் ஜாகுவர் காரிலேயே இணைக்கப்பட்ட டாய்லெட் வசதியுடன் செல்வது நல்லது என உதாரணமும் காண்பித்துள்ளார். கடந்த புதன் கிழமை மாலை ஒளிபரப்பட்ட இந்த Top Gear நிகழ்ச்சி தொடர்பில் 23 முறைப்பாடுகள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது பிபிசியின் பேச்சாளர் தெரிவிக…
-
- 4 replies
- 1.1k views
-
-
என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள். இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ?? என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah . sirippu.com
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழில் பணம் கொடுத்த பெண்ணை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கொடூரம் ShanaApril 8, 2022 யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணத்தை வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலி…
-
- 4 replies
- 493 views
-
-
ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது காதல் வயப்பட்டிருக்கின்ற பெண்கள் குழுவினர் பாப்பரசர் பிரான்சிஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையின் மதபோதகர்களுக்கான பிரம்மச்சரிய சட்டக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று அவர்கள் பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தாலி மற்றும் வேறுசில நாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள் தாம் பாதிரியார்களுடன் காதல் வயப்பட்டவர்கள் என்றும் இன்னும் காதலில் இருப்பவர்கள் என்றும் பாதிரியார்களுடன் உறவினைத் தொடங்க விரும்புபவர்கள் என்றும் கூறியுள்ளனர். இதேமாதிரியான நிலையில் இருக்கின்ற ஏனைய பல பெண்களின் சார்பாக தாம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது வாழ்க்கையை முழுமையாக வாழ முடிய…
-
- 4 replies
- 639 views
-
-
இஸ்லாமிய நாடான.. ஜோடானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாத அரங்கில் இருந்த இரு தரப்பு அரசியல்வாதிகள்.. விவாதம் முற்றி நடுவரையும் மேசை கதிரைகளையும்.. இடித்துத் தள்ளிக் கொண்டு.. "சூ" தாக்குதல் நடத்திக் கொண்டதோடு.. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும் அளவிற்கு.. போனதை இங்கு காணலாம். Gun brandished during live Jordanian TV debate http://www.bbc.co.uk...e-east-18756726 அண்மையில் மேற்குலக (ஐரோப்பா) தமிழர் புலம்பெயர் நாடுகளில் ஒளிபரப்பாகும்.. ஈழத்தமிழர்கள் நடத்தும்.. தீபம் தொலைக்காட்சியிலும் ஒரு ஒட்டுக்குழு சார்ப்பு.. சிறீலங்கா சிங்கள அரசு சார்ப்பு.. லண்டன் வாழ் ரமிழ் பெண்மணி (சோத்து ஆன்ரி ) ஒருவர் விவாத அரங்கில்.. இவ்வாறு மிக மோசமாக நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்க…
-
- 4 replies
- 649 views
-
-
இலங்கை முழுவதும் தற்போது அறியப்பட்ட பெயரான ஞானாக்காவின் புகைப்பட தொகுப்பு இது. அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சோதிடருமாவார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளார். முறைகேடாக சொத்துக்கள் சேகரித்தல், அரச நிலத்தை அபகரித்து ஹொட்டல் கட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளாக சிங்கள ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்கள் அவரை பெரிதாக நம்பாத போதும், அரசியல்வாதிகள் அவரை தீவிரமாக நம்புகிறார்கள். பிரமுகர் ஒருவர் பிரதமர் பதவியை பெற ஞானாக்காவின் உதவியை நாடிச் சென்றதாக…
-
- 4 replies
- 616 views
-
-
நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி பிபிசி செய்தி தொகுப்பாளர் புதன்கிழமை நேரலையில் நடுவிரலை தூக்கி காண்பித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி, நேரடி ஒளிபரப்பப்பட்டபோது, அவர் தனது நடுவிரலை நீட்டியபோது "அணியுடன் கொஞ்சம் நகைச்சுவையாக" இருந்ததாகக் கூறினார். மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது, ஒரு வீடியோ 700,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அவர் விரைவாக சைகை செய்கிறார், பின்னர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் பற்றிய முதல் தலைப்புச் செய்தியை வழங்குகிறார். வியாழன் அன்று X இல் ஒரு இடுகையில், மோஷிரி 10 விரல்களை உயர்த்தி, அவற்றைக் கீழே எண்ணியபோது, இயக்குனர்…
-
- 4 replies
- 785 views
-
-
கிருஷ்ணகிரி: பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க பரிகாரபூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புவதும், பீதியை கிளப்புவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. வட கிழக்கு இந்தியர்களுக்கு எதிரான எஸ்.எம்.எஸ் பீதி அடங்கும் முன்போ மெகந்தி பீதி கிளம்பியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய மருத்துவமனைகளில் குவிந்தனர் பொதுமக்கள். பின்னர் அது வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நாட்டின் பாதுகாப்பிற்கு சவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஆனால், பறந்த பொருள் விமானமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும், இந்தச் சம்பவத்தை அடுத்து, சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள…
-
- 4 replies
- 536 views
-
-
22 FEB, 2024 | 10:00 AM மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள்…
-
-
- 4 replies
- 619 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்க…
-
- 4 replies
- 709 views
-
-
-
நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.
-
- 4 replies
- 885 views
-
-
தமிழ் நாடு , சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரத்தில் ,கண்ணாமூச்சி பகுதியில் 8.12.2011 ந்தேதி பொது மக்களல் சுற்றி வளைத்து அந்த திருடனை விசாரித்தபொதுதான் தெரிந்தது தமிழக காவல் துறையில் நேர்மையும்,உண்மையும் தெரிந்தது, இந்த வீடியோ காட்சி உண்மை சம்பவம் http://youtu.be/zQ5Yqf9rN0o http://www.tamilthai...ewsite/?p=2294#
-
- 4 replies
- 1k views
-
-
மம்மி, நா வந்துட்டேன்.... கதவைத் திறந்து பார்த்த அம்மா அதிர்ச்சி. லண்டன்: இங்கிலாந்தில் 2 வயது குட்டிப் பாப்பா ஒன்று தனது நர்சரிப் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அங்கிருந்து நைஸாக வெளியேறி வீட்டுக்குத் தனியாகவே போய் வி்ட்டது. பாவம் பிஞ்சுக் கால்கள் வலிக்க வலிக்க ரொம்ப தூரம் தைரியமாக நடந்தே போய் விட்டதாம் இந்த குட்டிப் பாப்பா. பள்ளிக்கூட வாட்ச்மேன் வாசலில் காவல் காக்காமல், எங்கேயோ போய் விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பாலம், ரவுண்டானா என ரொம்ப தூரம் இந்த குட்டி வாண்டு நடந்து போயிருக்கிறது. சிறுமி வீடு போய்ச் சேரும் வரை பள்ளிக்கூடத்தில் யாருக்குமே அவள் காணாமல் போனது தெரியவில்லையாம். நர்சரியில் சேர்க்கப் பட்ட பாப்பா.... அந்தக் குட்டியின் பெயர் ல…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் உள்ள கொட்டுன் அமெரிக்கா என்ற அமைப்பு அமெரிக்க தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது என்ன மாதிரியான உடை அணிந்து தூங்குகின்றார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவு நேற்று வெளியானது. இந்த முடிவின்படி இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக 57 சதவிகித தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள…
-
- 4 replies
- 871 views
-
-
பெண்களின் தொடைகளில் விளம்பரம்: ஜப்பானில் தலையெடுக்கும் புதிய கலாசாரம்! By Kavinthan Shanmugarajah 2013-02-21 10:24:35 வித்தியாசமான விளம்பர உத்திகளுக்கு பெயர்போன ஜப்பானில் பெண்களின் தொடைகளில் விளம்பரம் செய்யும் புதிய கலாசாரம் பரவிவருகின்றது. விளம்பரங்களை பொதுவாக அதிகமானோரின் பார்வைபடும் இடங்களில் வைக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சில வர்த்தக நிறுவனங்களின் ஆலோசனையே இது. இதற்கு பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1300 பெண்கள் இதற்கென தங்களை பதிவுசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனங்கள் இதற்காக பெண்களுக்கு நல்லதொரு தொகையையும் வழங்குகின்றன. நிறுவனங்களது விளம்பரங்…
-
- 4 replies
- 474 views
-
-
நான் பெற்ற துன்பம் நீங்களும் பெறுங்கள் ....
-
- 4 replies
- 696 views
-
-
மனாமா: தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு, டிவிட்டர், பேஸ்புக்கில் ஏகப்பட்ட தோழியர் இருந்ததால் கடுப்பாகிப் போன சவூதி அரேபியப் பெண் அந்த திருமணத்தையே ரத்து செய்து விட்டார். இந்தப் பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் ஆகியவற்றை கடந்த 2 வாரமாக ஆய்வு செய்தாராம். அப்போது அதில், தனது வருங்கால கணவருக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருப்பதையும், அவர்கள் ஏகப்பட்ட மெசேஜ்களை அவருக்கு அனுப்பி வருவதையும் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம். மேலும், அந்தப் பெண்கள் தனது வருங்கால கணவர் குறித்து தெரிவித்திருந்த கமென்ட்டுகள் உள்ளிட்டவையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம். பார்த்தார், இந்தத் திருமணமே வேண்டாம், மாப்பிள்ளையும் வேண்டாம் என்று முடிவு செய்த…
-
- 4 replies
- 660 views
-
-
அன்பார்ந்த புலம்பெயர் மக்களே தமிழகத்தில் உயிர் விட்டு எமக்காக மாணவர்கள் போராடும் இவ்வேளை புலம்பெயர் தமிழர் நாடுகளில் அந்த உறவுகளுக்கான பலம் சேர்க்கும் போராட்டங்களை செய்யுங்கள் எழுச்சி மிக்க இனம் சார்ந்த மொழி சார்ந்த நிகழ்வுகளை செய்யுங்கள் வெறுமனே மக்களை முட்டாள் ஆக்கும் சினிமா கேளிக்கை நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் இப்படிக்கு உண்மையான தமிழர்கள்
-
- 4 replies
- 568 views
-
-
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியி…
-
- 4 replies
- 6.6k views
-