தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
தமிழ் அறிவுலகில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரக்கூடிய சிந்தனைப்போக்குகள் என சில உண்டு. 1. சங்க இலக்கிய ஆராய்ச்சியும் ரசனையும் 2. கம்பராமாயண ஆராய்ச்சி 3. குறள் ஆய்வு 4. சித்தர் மரபு மீதான ஆய்வு 5. வள்ளலார் ஆய்வுகள் 6. பாரதி ஆய்வுகள். சைவ வைணவ இலக்கியங்களைப்பற்றிய ஆய்வுகள் உண்டென்றாலும் அவை மரபார்ந்த ஒரு பார்வையை மட்டுமே கொண்டவை. சீரான ஒரு வளர்ச்சிப்போக்கு அவற்றில் இல்லை. மேலே சொன்ன ஆறு சரடுகளில் சங்க இலக்கிய ஆய்வுகளின் பொற்காலம் என்பது ஐம்பது அறுபதுகள்தான். மெல்ல மெல்ல சாராம்ச வல்லமை கொண்ட ஆய்வுகள் அருகி விட்டன. அதற்கான காரணங்கள் பல. முக்கியமானது, சங்க இலக்கியத்தில் தகவல்கள் சார்ந்து செய்யப்படவேண்டிய ஆய்வுகள் எல்லாமே செய்யப்பட்டுவிட்டன என்பதுதான். சங்க இலக்கி…
-
- 0 replies
- 940 views
-
-
சங்கத் துறைமுகம் - முசிறி முன்னுரை ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்…
-
- 1 reply
- 9.1k views
-
-
அனிச்சத்தின் மென்மை இவள் அன்னத்தின் தன்மை இவள் செங்காந்தளை மேவிய சிவப்பு இவள் மரபுகளை மீறிய வார்ப்பு இவள் வம்புக்குள் அடங்கா வனப்பு இவள் வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது. இசையா! இன்பத் தமிழா! தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. க…
-
- 6 replies
- 6.1k views
-
-
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி ‘சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’ எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா பாடல்கள் மூலம் நாம் உணரலாம். மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி வாழ்ந்தார்கள். இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு இயற்கையைப் போற்றவும் செய்தனர். தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி, தன் துணை முட்டையிடுவதற்கு மெ…
-
- 0 replies
- 689 views
-
-
சங்கிலித் தொடர் ---- சுப.சோமசுந்தரம் எனது குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் அவ்வப்போது அளவளாவும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். பண்டிதர் முதல் பாமரர் வரை எந்தப் பாகுபாடும் பாராமல் பேசக்கூடியவர்; பழகக்கூடியவர், தொ.ப என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பேரா. தொ.பரமசிவன். அதனாலேயே என்னைப் போன்ற பலரும் அவரிடம் நிறையப் படிப்பது கைகூடியது. "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்" (குறள் 401; அதிகாரம் : கல்லாமை) (பொருள் : நிரம்பிய நூலறிவின்றி ஒருவன் சான்றோர் முன் பேச ஆசைப்படுதல் (கோட்டி கொளல்), சதுரங்கம் ஆடுவதற்கான களமின்றி வட்டினை உருட்டுவதற்குச் சமம்)…
-
- 0 replies
- 868 views
- 1 follower
-
-
சந்தேகத்திற்குரிய மதவாதியான ”சத்குரு” ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா? மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன் ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம். -வினவு …
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்பான உறவுகளே!!!! இங்கு சமயம் பற்றி இயற்றபட்ட,அல்லது பாடப்பட்ட இலக்கியங்களை எழுதலாம் என்று எண்ணினேன்!!!! நம்மில் சிலர் இவ்வாறான இலக்கியங்கள் கிடைக்குமா என்று தேடிதிவார்கள்!!! நானும் பல வருடங்கள் தேடிதிரிந்தவள்தான்!!!! அவ்வாறான உறவுகளுக்கு இது உதவும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன்!!!!! உதவியதா இல்லையா என்று சொல்லுங்களேன்?????? *********************************************************************** இங்கு சமய இலக்கியங்களில் சைவம், வைணவம்,கிறிஸ்த்தவம், மற்றும் இஸ்லாம் ஆகியவை பதிவாகும். ************************************************************************ சமய இலக்கியங்கள் சைவம் பன்னிரு திருமுறைகள் திருவிளையாடற் புர…
-
- 40 replies
- 15.9k views
-
-
சமர்க்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள் : ஏவுகணை காவி - missile carriers உந்துகணை காவி - rocket carriers (weapon) உந்துகணை சேணேவி- rocket artillery சேணேவி - Artillery | ஆக்கியோன்: திரு. திருத்தம் பொன் சரவணன் உந்துருளி - motorbike கவசச் சண்டை ஊர்தி - Armoured fighting vehicle சண்டை - இருவர்/இரண்டு செய்யும் போர்.. குதிரையிழு சுடுகலன் - Tachanka போரூர்தி- war wagon காப்பூர்தி - protected vehicle இள பேரரையர் சரா ஆனையிறவில் செலுத்திய ஊர்தி இவ்வகையே. பொநோவகம் - jeep பொது நோக்க வகம் என்பதன் சுருக்கம் தண்டவாளச் சுடுகலன் - railway…
-
- 0 replies
- 720 views
- 1 follower
-
-
சமஸ்கிருதமாக்கி.. அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்... பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தரமாக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானை குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி …
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள். நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே! நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே! பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே! பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே! திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர். பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது. நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர் நற்றவத…
-
- 35 replies
- 5.7k views
-
-
சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாற…
-
- 3 replies
- 2.2k views
- 2 followers
-
-
சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்? தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும். தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்? நமக்குத் தெரியாது. சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம். கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன். அதே போல், சி…
-
- 6 replies
- 2.4k views
-
-
சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு உலக நாகரிகங்களின் தொல்லெழுத்துகள் அனைத்தும் படிக்கப்பட்டுவிட்டன. படவுருத்தன்மை கொண்ட சுமேரிய ஆப்பெழுத்து (Cuneiform) வடிவங்களும், எகிப்திய புனிதப்பொறிப்பு (Hieroglyphs)வடிவங்களும் அவற்றின் படவுருத் தன்மையின் காரணமாகப் படிக்கப்பெற்றுவிட்டன. உயிர்மெய்யன் (Syllabary) எழுத்து முறையான இலீனியர்-பி மற்றும் சைப்ரட் எழுத்துகளும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்பெற்றுவிட்டன. சிந்து எழுத்து முழுமையான படவுருவன் முறைக்குரிய சொல்லசையன் (logo syllabic) எழுத்து முறையாக இருந்திருப்பின் இதற்குள் படிக்கப்பெற்றிருக்கும். 1. சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண உரோசட்டா (Rosetta) கல்வெட்டுப் போன்றதொரு கல்வெட்டிற்காகத் தவம் கிடக்கி…
-
- 3 replies
- 941 views
-
-
நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும். மேலும் பள்ளிகளில…
-
- 0 replies
- 9.4k views
-
-
வட கலிங்கத்தின் மீது முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் படையெடுத்துச் சென்று பெறுவெற்றி கொள்கிறான். அவன் போரில் ஆயிரம் யானைகளை கொன்று, வென்ற செய்தியை செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப் பரணியில் பாடுகிறார். பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய நூலாகும். இந்நூலில் பல பகுதிகளில் ஒன்றான "கடை திறப்பு" பகுதியில், கலிங்கத்தின் மேல் போர்தொடுத்துச் சென்ற வீரர்கள் வீடு திரும்ப தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் புலவி நீங்கிக் கதவைத் திறக்கச் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றி பாடுவதாக அமைந்தது. இந்தப் போர் பற்றி அறிய இங்கே செல்லவும் www.tamilvu.org/c…
-
- 2 replies
- 1.2k views
-
-
-யானை சண்டை திருச்சிக்கு அருகிலுள்ளது உறையூர். ஒரு காலத்தில் சோழரின் தலைநகராக விளங்கியது . இதற்கு மற்றோரு பெயர் கோழியூர் . புறநாநூற்றில் (பாடல் 212) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் ‘கோழியோன்’ என்று பாடுகிறார். இதன் பின்னாலுள்ள கதையை வைத்து சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ‘வார்த்தா ஜாலம்’ செய்கிறார். சம்ஸ்கிருதத்தில் ‘வாரணம்’ என்ற சொல்லுக்கு யானை, கோழி/சேவல் என்று இரு பொருள் உண்டு. இவைகளை இளங்கோ அடிகள் ‘முறச் சிறை வாரணம்’, ‘புறச் சிறை வாரணம்’ என்று வருணிக்கிறார். அதாவது முறம் போன்ற காதுகளுடைய யானையும் புறத்தே சிறகுகளுடைய கோழியும் போரிட்டதில் இறுதியில் கோழி வென்றது. இதன் காரணமாக உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் அதைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சோழனுக்கு ‘க…
-
- 0 replies
- 696 views
-
-
சிலம்பிலே திருமணக்காட்சி தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும் கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும் மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக் காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது வருமாறு: "யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம் அவ்வழி முரசியம்பின முருடதிர்ந்தன முறையெ…
-
- 2 replies
- 1.9k views
-
-
நண்பர்களே!! தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள். அன்புடன் - ஈழத்திருமகன் -
-
- 69 replies
- 37.2k views
-
-
சிவகுமாரின் மகாபாரதம் குமரி எஸ். நீலகண்டன் நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் கதைகள்… நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள்… மிகச் சிக்கலான முடிச்சுகள் கொண்ட நூற்பந்து போல் உருவம் கொண்ட சிக்கலான மகா காவியம். அது ஒரு…
-
- 1 reply
- 969 views
-
-
புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் மற்றும் கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, பயபக்தியுடன் சிவபெருமானை வழிபட்டனர் மகா சிவராத்திரியை ஒட்டி, சிவன் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.சிவபெருமானை போற்றி வழிபடும் தினங்களில் மகா சிவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும் என இந்துக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதையொட்டி, மகா சிவராத்திரி திருநாளான நேற்று நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவில் நேற்று அதிக…
-
- 5 replies
- 2.5k views
-
-
Krishnan Nallaperumal 1 ஜனவரி அன்று புதுப்பிக்கப்பட்டது இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்! இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன்! இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்! …
-
- 2 replies
- 3.6k views
-
-
சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு தமிழ் இலக்கிய உலகினில் ஜாதி மத காழ்ப்புணர்வு உள்ளது என்று நான் நிச்சயமாக கூறவில்லை. ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது. நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில் டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும் கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது. வெறுமனே காலத்தை கழிக்க இணையத்தில் உலவுவது முட்டாள்தனம். அடுத்த தலைமுறைக்கு தேவையான சில செயல்பாடுகளை நாம் செய்தே ஆகவேண்டும். நான் செய்வேன். விழியமாக முற்றோதல் செய்வத…
-
- 0 replies
- 965 views
-
-
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்? சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன.. பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்? உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்? பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது. தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்… ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..? சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது. (தலைவியை இயல்பாக ஓரிடத்…
-
- 9 replies
- 7k views
-
-
சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பது பெண்கள் தான்!!!!!!
-
- 0 replies
- 933 views
-
-
நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…
-
- 0 replies
- 784 views
-