தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர் அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘ …
-
- 0 replies
- 1.2k views
-
-
<p>வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் : 50 வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் …
-
- 1 reply
- 1.2k views
-
-
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று உபதேசம் கேட்டான். உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் . இராவணன் உபதேசித்தான் ... 1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர். 2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே . 3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு . 4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே . 5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள். 6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தா…
-
- 1 reply
- 1.2k views
-
-
செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி =============================== "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள். எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது. சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
MultiTier cropping reference in சீவக சிந்தாமணி தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள். Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும். சூரிய ஒளி மட்டுமில்லாமல், மண் வளம் காக்கவும், களை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. நவீன அறிவியலில் வேரில் வளரும் மைக்கோரைசா பூஞ்சானம் போன்றவை மாறுபட்ட பயிர்களிடையே உணவுப்பொருள் பரிமாற்றத்திற்கும் உதவுவதாக நிருபிக்க பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழின் சொல்வளமையும் செறிவான சொற்சிக்கனமும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி எந்த ஒரு மொழியின் செறிவான வளமை என்பது அம்மொழியின் "தனிச்சொற்கள் தொகுதி" எண்ணிக்கை அன்று. அம்மொழியின் செறிவான கருத்துக் குறியீட்டு வளமே உண்மையான வளம் ஆகும். தமிழ்மொழியின் சொல்வளமை! உயர்தனிச் செம்மொழியான தமிழ் செறிவான கருத்துக் குறியீட்டு வளத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கி வருகின்றது. உதாரணமாக, தந்தையின் உடன்பிறந்தவர்கள் பெரியப்பா, சித்தப்பா என்றும், அன்னையின் உடன்பிறந்தவர் அம்மான்(தாய்மாமன்) என்றும் அவரவரின் தனிச்சிறப்புகளுடன் வழங்குகிறது தமிழ் மொழி; இச்சொல்லாற்றல்கள் தமிழ்மொழியின் இனச்செறிவைப் பறைசாற்றுகின்றன. ஆங்கிலமொழியின் சொல்வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சே, என்னமா சொல்லித்தராரு? “ஏண்டா தினேஷ், இன்னிக்கு ஒரு சில்லறை மேட்டரோட ஆரம்பிக்கலாமா?” “அது என்னடா சில்லறை மேட்டர்?” “போன முறை நாம இந்த ர/ற பத்திப் பேசினோமே. அப்போ சில்லறையா சில்லரையான்னு பேசாம விட்டுட்டோமேன்னு சொல்லி இருக்காரு எழுத்தாளர் இரா முருகன். நியாயப்படி சேர்த்து இருக்க வேண்டிய விஷயம்தான். அதை இப்போ சொல்லிடலாம். சில்லரைன்னா சில அரைகள் அப்படின்னு சொல்லறது மாதிரி ஆகிடும். சில என்றால் இரண்டுக்கும் மேல். உதாரணமா ஒரு நூறு ரூபாயை மாத்தினோமுன்னா, நூறு ரூபாய் மதிப்புதானே திரும்பக் கிடைக்கும். ஆனா சில அரைன்னு சொன்னோமுன்னா நூறு ரூபாய்க்கு மேல கிடைக்கணும்தானே. அதனால அது தப்பு. அதே சமயம் சில்லறைன்னா சில பகுதிகளாக நறுக்குவதால் அறுப்பது என்பது போல அறை என்பது வரும். எனவே…
-
- 4 replies
- 1.2k views
-
-
தொல்காப்பியரும் சம்ஸ்கிருதமும் தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியதென்பது ஒரு முடிவு. அது எத்தனை யாயிர வருடங்களுக்கு முந்திய தாயினுமாகுக; அதற்கு முந்தியே தமிழகத்திற் சம்ஸ்கிருதமுண்டு. அது தமிழகத்திற்கு வந்த மொழியென அந்நூல் சொல்லவில்லை. அம்மொழிச் சொற்களைத் தமிழ் நூல்களில் வழங்குவதற்கு அதுவே விதியும் வகுத்தது. அச்சொற்களை திசைச்சொற் கூட்டத்திலும் அது சேர்த்திலது. அம்மொழி வேதமும் அந்நூலில் இடம் பெற்றது. அங்ஙனமாகப் பின்வந்த சங்க நூல்களும் அம்மொழியின் சம்பந்தத்தையும், சகாயத்தையும் பெற்றனவே யென்பதிற் சந்தேகமில்லை. தொல்காப்பியம் என்ற சொல்லுக்கு இலக்கணங் கூற வந்த ஆசிரியர் அதனைக் கூறியதோ டமையாது ஐந்திர முதலிய வடசொற் போல வந்த தென்றுங் கூறி விளக்கினார் சங்கப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மொழி நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும் தமிழ் வாழும் இடங்கள் தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசியா பர்மா மொரீசியஸ் தென்னாபிரிக்கா கயானா பிஜி சுரீனாம் ட்ரிடாட் டொப…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல். கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது. தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது. நல்ல என்ற சொல்லின் பொருள் நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறப்பான ஆய்வு. வாழ்த்துக்கள் ஏழாம் அறிவில் சொன்ன மாதிரி தமிழனுக்கு இதை விளங்கப்படுத்துவது கடினம். வேற்று மொழி ஆட்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வார்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழில் இத்தனை அடிகளா ?இதச் சொன்னா அடிக்க வருவீங்க
-
- 2 replies
- 1.2k views
-
-
வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூமுடிந்து தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
குறுந்தொகை பாடியவர் : செம்புலப் பெய்நீரார் பாடல் : ” யாயும் ஞாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் ? செம்புலப் பெய்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல். காட்சி இப்படி விரிகிறது , தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
*தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து, நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூறியதை நினைத் *தேன்* ! கொல்லிமலைக்கு நடந் *தேன்*! பல இடங்களில் அலைந் *தேன்*! ஓரிடத்தில் பார்த் *தேன்*! உயரத்தில் பாறைத் *தேன்*! எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*! கொம் பொன்று ஒடித் *தேன்*! ஒரு கொடியைப் பிடித் *தேன்* ! ஏறிச்சென்று கலைத் *தேன்*! பாத்திரத்தில் பிழிந் *தேன்*! வீட்டுக்கு வந் *தேன்*! கொண்டு வந்ததை வடித் *தேன்*! கண்டு நான் மகிழ்ந் *தேன்*! ஆசையால் சிறிது குடித் *தேன்* ! மீண்டும் சுவைத் *தேன்* ! உள்ளம் களித் *தேன்*! உடல் களைத் *தேன்* ! உடனே படுத் *தே…
-
- 0 replies
- 1.2k views
-
-
வட கலிங்கத்தின் மீது முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் படையெடுத்துச் சென்று பெறுவெற்றி கொள்கிறான். அவன் போரில் ஆயிரம் யானைகளை கொன்று, வென்ற செய்தியை செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப் பரணியில் பாடுகிறார். பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய நூலாகும். இந்நூலில் பல பகுதிகளில் ஒன்றான "கடை திறப்பு" பகுதியில், கலிங்கத்தின் மேல் போர்தொடுத்துச் சென்ற வீரர்கள் வீடு திரும்ப தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் புலவி நீங்கிக் கதவைத் திறக்கச் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றி பாடுவதாக அமைந்தது. இந்தப் போர் பற்றி அறிய இங்கே செல்லவும் www.tamilvu.org/c…
-
- 2 replies
- 1.2k views
-
-
இயல் வழி நாடகம் - சுப. சோமசுந்தரம் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என அடுக்கி முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என்று ஓசைநயம் பகரும் முறையே சொல்கிறது இயல் வழி இசையுண்டு என்று. காணாததற்கு மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பண்வகைகள் வேறு. குறிப்பாக மரபுப் பாடலெதுவும் இசையின்றி இயங்குவதில்லை. இக்கட்டுரை இங்கே பேச வந்தது இயல் வழி நாடகம் பற்றி. மேலும் இங்கு நாம் இயல் எனக் குறித்தது மரபுப் பாடலேயாம். உள்ளார்ந்த நாடகம் (Implicit Drama) அனைத்து மரபுப் பாடலிலும் அமையலாம். உள்ளார்ந்த நாடகமாக ஒரே பாடல் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காட்சி…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "என்னப்பா! ஆளையே காணோம்! ஆங்கில - ஐரோப்பிய மொழிகளில் ஒலி எழுத்துக்கள் உருவான கதைய எப்பத்தான் முழுசாச் சொல்லப் போற? தெளிவாச் சொல்லு!", என்று படபடத்தவாறே உள்ளே நுழைந்தார் நண்பர். "கண்டிப்பா சொல்லிர்றேன்பா! நூற்றாண்டுகளாகவே இலக்கியம் மற்றும் உரைநடைகளில் vowels தனியாகவும் Consonants தனியாகவும் எழுதியே பழகிய ஆங்கிலேய, ஐரோப்பிய முறையை அடியோடு மாத்தி, புதிய உயிர்மெய் ஒலிஎழுத்துக்களை உருவாக்குவது…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழில் கணிதச் சொற்கள் அடிப்படை அலகு 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொருட்குற்றம் தவிர்ப்போம் கா.மு.சிதம்பரம்First Published : 12 Jul 2009 01:27:00 AM IST Last Updated : அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என…
-
- 1 reply
- 1.2k views
-
-
அருமையான தமிழ்இலக்கிய நூல்களையும் கவிதைகளையும் வாசித்து இன்புற்று உங்கள் தமிழ் ஆர்வம் மிக்க நண்பர்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் கருத்துகளை இணைக்கவும். http://noolaham.net/wiki/index.php/??????? மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை மேவும் என்றந்த பேதை உரைத்தான் ஆ அந்த வசை எனக்கெய்திடலாமோ? என்கடன் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்
-
- 2 replies
- 1.2k views
-
-
நாலடியாரில் பனையும் கரும்பும்… ! 1. பனைமரம் 1.1.பனைமரத்தின் சிறப்பு ‘கடையாயர் நட்பிற் கமுகனையர் ஏனை இடையாயார் தெங்கின் அனையர்- தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்(று) இட்டஞான்றிட்டதே தொன்மை யுடையார் தொடர்பு.’ (216) இதற்குரிய உரையில் கமுகு, தென்னை, பெண்ணை இவற்றைப் பற்றி பதுமனார் கூறுவதைக் காண்போம். கமுகுக்கு நாள்தோறும் இறைக்கவும் மேற்றலையில் குற்றமாய புழுக்கடியும் பார்த்துப் பேணினாற்போல் இவனுக்கு நாள் தோறும் செய்யும் ……..அருஷதஞ் செய்ய வேண்டும். அது ஒழிந்தால் கமுகு தலைகெட்டு விழுந்தாற்போல இவனும் விழுமளவும் தீனகு விசாரிப்பான் என்றவாறு. இடையாயார் தெங்கின் அனையர்- தெங்கிற்குத் தலையாலே தண்ணீர் சுமந்து அடியிலே வார்க்கப் பின் தலையாலே நீ…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
பைபிள் மொழியில் சங்க இலக்கியம்! சமஸ் படம் : என்.விவேக் டேவிட் ஷ§ல்மன்... இவருக்கு அறிமுகக் குறிப்பு எழுதுவது கடினம். உலகின் மிக முக்கியமான இந்தியவியலாளர்களில் ஒருவர். அமெரிக்காவில் பிறந்த யூதரான டேவிட், ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறார். ஹீப்ரு, சம்ஸ்கிருதம், தமிழ், அரபி, பாரசீகம், கிரேக்கம் என உலகின் புராதன மொழிகள் பலவற்றில் புலமை மிக்கவர். இந்தியக் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒருபுறம் இப்படிப் பல்வேறு மொழிகள், கலாசாரம் தொடர்பான ஆய்வுகளில் தன் வாழ்வைக் கழிக்கும் ஷ§ல்மன் மறுபுறம், இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், அமைதியை உருவாக்கும் பணியில் 'தாயுஷ்’ அமைப்பின் மூலமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்…
-
- 1 reply
- 1.2k views
-