தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
நவராத்திரி பூசையின் போது, சகலகலாவல்லி மாலை பாடப்படும் என்பதை அறியாத சிலருக்கும், அது கிடைக்காமல் இருப்பவர்களுக்குமான தேடலில் கிடைத்தது. இதுகளைக் கொஞ்சம் பாடி புண்ணியத்தைச் சேருங்கள் பாடல் 1 வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! பாடல் 2 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே பாடல் 3 அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்…
-
- 32 replies
- 12.7k views
-
-
ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா!!! முகநூலிலிருந்து
-
- 6 replies
- 12.7k views
-
-
அதிசய அற்புத பாடல்கள் ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடியவைகளைக் காண்போம். MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது. palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது. ஆங்கிலத்தில் பாலிண்டிரோம்கள் அதிகம். I PREFER PI MADAM I'M ADAM NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம்கள். இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. …
-
- 6 replies
- 12.6k views
-
-
https://scontent-b-lhr.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10438251_583098455170259_8427344783465854430_n.jpg?oh=aa7316d3c7dece79718f8050414d2a6a&oe=550A56A1 ஙப் போல வருமா ? ”ஙப் போல் வளை” என்றால் ஙே என்று முழிப்பது ஏன்? தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு ”ங்கா..”. தமிழின் சிறப்பெழுத்து "ழ” வைப்போல இன்னொரு எழுத்து “ங” இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம். சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு. ”ங போல் வளை “ 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழ…
-
- 5 replies
- 12.6k views
-
-
அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு? பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது
-
- 45 replies
- 12.4k views
-
-
தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன எனினும் தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை. பேதை (07 வயதுக்குக் கீழ்) பெதும்பை(07 - 11 வயது) மங்கை(11 - 13 வயது) மடந்தை(13 - 19 வயது) அரிவை(19 - 25 வயது) தெரிவை(25 - 31 வயது) பேரிளம்பெண்(31 - 40வயது) இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை
-
- 23 replies
- 12.1k views
- 1 follower
-
-
பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன். பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும். பொதுவாக குறிஞ்சித் திணையாவது - தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும…
-
- 11 replies
- 11.8k views
- 1 follower
-
-
மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: "(கடந்த 130 ண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" . மலேசியாவில் தமிழர் வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் அவர்களின் மொழி, கலை, இலக்கிய, சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக இருந்து அவற்றை வழி நடத்தவும் இந்தக் கட்டுரைகள் பெரும் பங்கு ற்றியிருக்கின்றன என்பது சரியான ஊகமே. இக்கட்டுரைகள் சில வேளைகளில் நூல் உருவம் பெறும்போதுதான் அவை வரலாற்றில் நிலைக்கின்றன. அவற்றைப் பற்றியே இக்கட்டுரையில் பார்க்கவிருக்கிற…
-
- 2 replies
- 11.7k views
-
-
குறுந்தொகையில் உவமை நலம் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடி முதல் எட்டடி வரையிலான பாடல் வரிகளைக் கொண்டது. இந்நூலின் சிறப்புக் கருதி இதனை நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு சிறப்பித்துள்ளனர். குறுந்தொகைப் பாடல்களைப் பலரும் பெருமளவு மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ளமை இதன் சிறப்பிற்கு மற்றொரு சான்றாகும். குறுந்தொகை ஓர் உவமைக் களஞ்சியம் என்று கூறுமளவுக்குப் பெருமளவு உவமைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மக்களின் எண்ண நினைவுகளையும், புலவர்களின் மனநிலைகளையும் புலப்படுத்துகின்றன. இவ்வுவமைகளின் பொருள் மரபுகளை இக்கட்டுரை ஆய்கின்றது. உவமை - வரையறை:- புலவர்கள் தாம் கூறு விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த, அவர்கள் அறிந்த ஒன்றை ஒப்புமைப்பட…
-
- 2 replies
- 11.6k views
-
-
கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் உருவாகிய பாடல்கள் சிறந்ததா, காலத்தினால் அழிக்கமுடியாதவையா அல்லது... கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் சிறந்தனவையா.... என்னைப்பொருத்து கவிப்பேரரசு என்ற பெயர் கவிஞர் கண்ணதாசன் ஒருவருக்கு மட்டுமே சேரவேண்டும். காரணம் அவரின் பாடல்கள் இன்றும் எம் நினைவுகளில் நிற்கின்றன. ஆனால் கவிஞர் வைரமுத்துவினதோ நினைவில் இல்லவே இல்லை.... உதாரணத்துக்கு ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...? வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? (வீடு) தொட்டிலுக்க…
-
- 3 replies
- 11.6k views
-
-
கருத்தும் காட்சியும். அதாகப்பட்டது இங்கு நமக்குத் தெரிந்த பழமொழிகளைக் காட்சிப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையால் உள்ளத்திற்குள் கருத்தும் காட்சியும் எட்டிப்பார்த்தது. இது நமக்கு மட்டும் இல்லீங்க உங்களுக்குந்தான் அதனால என்ன செய்யிறீங்க நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பழமொழிகளை காட்சிப்படுத்தினால் நம்ம களக்குழந்தைங்களுக்கு தெரியாத பாம்பு பல்லி என்று கனவிடயத்தை அறிமுகப்படுத்தலாம் வாங்க.இப்போது ஆரம்த்து வைக்கிறேன் வெற்றிகரமாக நகர்த்தி நடக்க இல்லையில்லை ஓடவைக்கிறது வாசிக்க, எழுத வருகிற உங்க பொறுப்பு..... 1. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 2. விளையும் பயிரை முளையிலேயே தெரியும். 3. எறும்பூரக் கற்குழியும். 4. நுணலும் தன் வாயால் கெ…
-
- 48 replies
- 11.5k views
-
-
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல் பாடல்: ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. - தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5 ‘மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’ தவறுகள்: இப்பாடலின் முதல் வரியில் ‘காடுறை’ என்ற சொல்லில் ‘டு’ …
-
- 1 reply
- 11.5k views
-
-
இலக்கணம் - யாப்பெருங்கலக் காரிகை யாப்பருங்கலக்காரிகை - ஒரு அறிமுகம் நெறிபடுத்தப்பட்ட மொழியாகிய தமிழில் இலக்கிய வளர்ச்சியுடன் இலக்கண வளர்ச்சியும் இணைந்தே நடந்து வந்திருக்கிறது. உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று. இதின் இலக்கண விதிகள் இன்றைக்கும் பொருந்திவருவது உலகில் வேறேந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகும். இந்த நெடிய இலக்கண மரபில் முக்கிய இடம் வகிக்கும் ஆக்கம் யாப்பருங்கலக்காரிகை; இது செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. இது தொடர்ந்து செய்யுளியலில் பாவிற்குரிய…
-
- 0 replies
- 11.4k views
-
-
கம்பராமாயணம்: இலக்கிய வழக்கும் உலக வழக்கும் பெருமாள் முருகன் தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை முழுமையாகக் கையாண்டது சீவக சிந்தாமணி. பின் தோன்றிய காப்பியங்கள் அனைத்தும் விருத்தப்பா முதலிய பாவினங்களிலேயே இயன்றன. கலிவிருத்தம், கலித்துறை, அறுசீர் ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களே காப்பியங்களில் அதிகம் பயின்றவை. கரைக்குள் அடங்கியிருந்த ஆற்றுநீர் வெள்ளப் பெருக்கில் கரையுடைத்து எல்லையற்றுப் பரவ…
-
- 1 reply
- 11.1k views
-
-
கண்ணதாசனின் செப்பு மொழிகள் 1. வசந்த காலத்தில் உன்னைச் சிறையில் வைப்பான். கோடைக் காலத்தில் பாலைவனத்தில் கொண்டு போய் விடுவான். அவனை நீ கோபித்துப் பயனில்லை. கூடவே வைத்துக்கொள். நீ படும் துயரத்தை அவனும் படட்டும். 2. கொய்யாப் பழத்தைஅறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரிய வேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விட வேண்டும். 3. சிங்கத்தின் நகத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டுப் பெதடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன்மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல். 4. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவுதான் . 5. தம்புரா மீட்டு…
-
- 16 replies
- 11k views
-
-
-
உளமார, உளமாற – எது சரி ? உள்ளம் என்பதுதான் உளம் என்றும் பயிலும். அச்சொல்லோடு சேர்கின்ற ஆர, ஆற ஆகிய இரு சொற்களின் பொருள்களையும் பார்க்கலாம். ஆர்தல் என்பதற்கு நிறைதல், பொருந்துதல், ஒத்துப்போதல் போன்ற பொருள்கள் உண்டு. ஆறுதல் என்றால் தணிதல். “மனம் நிறைந்து ஒன்றைச் சொல்கிறேன், மனத்தில் எவ்வேறுபாடுமின்றி முழுமையாய்ப் பொருந்திப்போய் இதைச் சொல்கிறேன்” என்ற பொருளில் அமைவது ‘மனமாரச் சொல்கிறேன்”. மாற்று எண்ணமோ வேறுபாடோ இல்லாமல் மனம் நிறைந்த நிலையில் ஒன்றைச் சொல்வது - மனமாரச் சொல்வது. கண்கள் நிறைந்துவிடுமளவுக்கு ஒன்றைக் காண்பது ‘கண்ணாரக் காண்பது’. விடுபாடில்லாமல் முழுமையாய்க் கேட்டால் அது ‘காதாரக் கேட்பது’. …
-
- 18 replies
- 11k views
- 1 follower
-
-
வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்! -மேகலா இராமமூர்த்தி தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் க…
-
- 10 replies
- 11k views
-
-
யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது பூனை புலியினத்தைச் சேர்ந்ததே என்றாலும் பூனைக்கும் புலிக்கும் எத்துணை வேறுபாடுள்ளது! நெல் என்பது ஒரு வகையான புல் என்று கூறினால் அற்பமான புல்லுக்கும், உயிர்காக்கும் நெல்லுக்கும் எத்துணை வேறுபாடு! ''உருவுகண்டு எள்ளாமை வேண்டும்'' என்றார் வள்ளுவர். ஒரு மொழியின் வளர்ச்சியில் பண்டு வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்த சொற்கள் காலப்போக்கில் ஒரே வடிவத்தை ஏற்றுக்கொள்ளுதல் உண்டு. எடுத்துக்காட்டாக ''அத்தம்'' என்ற சொல் சங்க காலத்தில் ''வழி'' என்ற பொருளைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வடசொற்கள் வடவெழுத்து ஒரீஇத் தமிழில் அளவின்றிப் புகுந்தபோது ஹஸ்தம் (கை), அர்த்த (பாதி), அருத்தம் (பொருள்) என்ற மூன்று வடசொற்கள் தமிழில் ''அத்தம்'' என்…
-
- 27 replies
- 10.8k views
-
-
வணக்கம் வாசகர்களே கள!!!!! உறவுகளே !!!!!!! சிறிது இடைவெளியின் பின்பு தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டின் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . பலர் கருத்திடத் தவறினாலும் , பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது எனது முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் . அது தந்த உந்துதலினால் இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் உங்கள் கருத்துக்களுக்கு என்று நான் தனியாகத் திரி திறக்கவில்லை . இதிலேயே உங்கள் கருத்துக்களை தேவயற்ற அரட்டைகளைத் தவிர்த்துப் பதிந்தால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் பாகம் ஒன்றிற்கு இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/forum3/index.php?sh…
-
- 146 replies
- 10.7k views
-
-
தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கான்சப்ட்! இப்பொழுது நாம் எழுதி படித்துக் கொண்டிருக்கும் தமிழ் வடிவ மானது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது. மொழியின் ஒலி மாறுவதில்லை. ஆனால் காலத்திற்கேற்ப எழுத்தின் வடிவம் மாறி வந்துகொண்டிருக்கிறது. கல்வெட்டில் இருந்த தமிழும், ஓலைச் சுவடிகளில் இருந்த தமி ழும், அச்சகங்கள் வந்தபோது அதற்காக மாறிய தமிழ் எழுத்துக் களையும் நாம் அறிவோம். கடைசியாக எழுத்துக்களை சீரமைத்து கொடுத்தவர் பெரியார். சில காலமாகவே வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் எழுத்துச் சீரமைப்பை பற்றி பேசி வந்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவங்களை மேலும் எளிமையாக்க 'கார்க்கி ஆராய்ச்சி மையம்' மேற்கொண்டுள்ள முய…
-
- 8 replies
- 10.4k views
-
-
40 வருடங்களில் நலிந்த தமிழ் [30 - May - 2007] * `ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே' என்ற மனப்பான்மையால் ஏற்பட்ட பின்னடைவு தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு விழாவில் பேசும்போது, தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் செய்தி படிப்பவர்கள் எப்படித் தமிழை உச்சரிக்கிறார்கள் என்பதைத் தனக்கே உரிய தனி முத்திரையோடு, `வல்லுவர், சொள்ளுவர்" என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கினார். தமிழகத்தில், "நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், இளங்கோ, இளம்பரிதி, தொல்காப்பியன், தமிழரசி, வளர்மதி, மங்கையற்கரசி, அருள்மொழி, மான்விழி, தேன்மொழி, கனிமொழி போன்ற பெயர் கொண்டவர்களை இன்று நீங்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் 99 விழுக்காடு, குறைந்தது 40 வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள். "…
-
- 17 replies
- 10.4k views
-
-
நீங்கள் படித்த பாடசாலையின் கீதங்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும். நன்றி. எனது கல்லூரிக் கீதம் கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே. கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்! எங்கள் கலைக்கோயில் கார்மேல் பாத்திமா உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்... கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்! தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே... கார்மேல் பாத்திமாக் கல்லூ…
-
- 40 replies
- 10.3k views
- 1 follower
-
-
மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது. பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது. காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும். குறுந்தொகைப் பாடல் எண் - 27 ஆசிரியர் - வெள்ளிவீதியார் திணை - பாலைத்திணை தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்…
-
- 5 replies
- 10.1k views
- 1 follower
-
-
மாமா - மாமி மச்சான் - மச்சாள் சித்தப்பா - சின்னம்மா அத்தை - ? அத்தான் - ? எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை. இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது. ******* யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன். அவர் சொன்னவை …
-
- 21 replies
- 10k views
-