பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்! இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்! 2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளலாம். பொன்னாலும் நவமணிகளால் ஆக்கப்பட்ட ( வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. அந்த மதிப்புகளை பணமதிப்பு, பொருள் மதிப்பு , மனமதிப்பு என மூன்று வகைப்படுத்தலாம். முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் இனத்தில் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர் . உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்…
-
- 6 replies
- 4.9k views
-
-
அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி! 'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக. இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார் ''காதலை உணர்வு ப…
-
- 6 replies
- 2.4k views
-
-
பையன்கள் பாசை பள்ளிக்கூடக் காலத்துப் பையன்கள் பாசை... உணர்வுகளைக் கையாள உதயமான படைப்பு கோபத்தின் உச்சியில் ஒற்றை வார்த்தை சொன்னால் கோபத்தின் பெரும்பாதி பனியாக்கும் மருந்து நாட்டார் பாடலின் தனித்துவம் போல பையன்கள் பாசைக்கு ஆராய்ச்சி இல்லை செவிவழி வாழ்ந்த அற்புத இலக்கியம் புலம்பெயரும் நிகழ்வால் அழிந்திடும் அவலம் காட்டுமலர்களின் கிறங்கவைக்கும் அழகு பெருந்தெருப் பயணிகள் அறியாத புதையல் மிகைப்பாட்டு இலக்கியங்கள் கோலோச்சும் வரைக்கும் பையன்கள் பாசைக்கும் தீண்டாமை இருக்கும். புலத்திலிருந்து நிலம் பார்க்கச் செல்வோர் படித்த பள்ளிக்கும் சுற்றுலா செல்வர் குறித்த சுவர்களை கண்களாற் துளாவி பொறித்த பாசையைப் பார்த்திடத் துடிப்பர் பையன்கள் பா…
-
- 6 replies
- 2.1k views
-
-
வணக்கம், இண்டைக்கு ஜெயா ரீவியில் திரைப்பட விருதுகள் நடைபெறும் நிகழ்ச்சி ஒண்ட தொலைக்காட்சியில பார்த்தன். ஒவ்வொருத்தரும் விருத வாங்கேக்க விருது குடுத்தவருக்கு தங்கியூ தங்கியூ தங்கியூ எண்டு சொல்லிச்சீனம். ஒருத்தனாவது நன்றி சொன்னதா தெரிய இல்ல. நான் வாய் அசைவ வச்சுத்தான் கண்டுபிடிச்சன். தங்கியூ எண்டு சொல்லிறதுக்கும், நன்றி எண்டு சொல்லிறதுக்கும் வாய் அசைவில சரியான வித்தியாசம் இருக்கிது தானே..? நீங்கள் யாராச்சும் இந்த நிகழ்ச்சி பார்த்தனீங்களோ? விருது வாங்கின யாராவது நன்றி எண்டு சொன்னத நீங்கள் கேட்டனீங்களோ? தெரிஞ்சால் சொல்லுங்கோ. நானும் தங்கியூ தாராளமா பாவிக்கிறது. ஆனால்.. இப்பிடி ஆக்கள் தமிழில செய்த ஏதுக்கும் விருது தரேக்க தங்கியூ எண்டு சொல்லமாட்டன் எண்டு ந…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியம் என்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதே இம்மாவீரர் மாதத்தில் மாவீரர் களுக்கு நாம் வழங்கும் முதலாவது வணக்கம் என நம்பு கின்றேன். மாவீரர்கள் யாபேரும் தமிழ்த்தேசியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் போராளிகளாகி தம்மை ஆகுதியாக வழங்கி மாவீரர்கள் ஆனார்கள் என் பது எனது கருத்து அல்ல. தமிழ்த் தேசியத்தின் புரிதலு டன் போர்க்களத்தில் அவர்கள் புகுந்திருப்பார் எனில் அதன் பரிநாணம் வேறு. ஏனென்றால் தமிழ் தேசியத்தை இலட்சிய நெறியிலிருந்து வμவாது, கொள்கை பிடிப்பிலி ருந்து விலகாது, உறுதியுடனும், ஓர்மத்துடனும் முன் னெடுத்துச் செல்லும் தலைமையின் கீழ் போராளிகள் அணி திரண்டனர். இறுதி மூச்சுவிடும் தருணமும் `அண்ணன் பெயர்’ சொல்லி அவர்கள் மாவீரர் ஆயினர். அதுவே ஒரு விதத்தில் தமிழ…
-
- 6 replies
- 1.9k views
-
-
பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும். ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்…
-
- 6 replies
- 8.7k views
-
-
1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் . உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ). ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்…
-
- 6 replies
- 2.8k views
-
-
காலங்கள் மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதில்லை. அந்த அடிப்படையில் மாறாத மனிதர்களை, கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் என இருவகைப்படுத்தலாம். கொடுப்பவர்களை, புண்ணியத்துக்காகக் கொடுப்பவர்கள் மனிதாபிமானம் கருதிக் கொடுப்பவர்கள். என இருவகைப்படுத்தலாம். வாங்குபவர்களையும், வேறு வழியில்லாமல் வாங்குபவர்கள் வாங்குவதையே வழியாக எண்ணி வாழ்பவர்கள் என இருவகைப்படுத்தலாம். வாங்குவோரில் சிலர் நினைத்துக்கொள்ளலாம்.. இப்படி அள்ளி அள்ளிக்கொடுத்தால் கடைசியாக நம்மைப்போலத்தான் இரவலராக போவார். இவர் ஒரு ஏமாளி, இவர் ஒரு கோமாளி என்று கூட எண்ணிக்கொள்ளலாம். இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும். பேகன் என்றொரு வள்ளல். ஆம் மயிலுக்காகப் போர்வை கொடுத்தானே அதே வள்ளல்தா…
-
- 6 replies
- 2.2k views
-
-
நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா
-
- 6 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்காலுக்குப்பின்னால்......... வீட்டில் மனைவியால் மக்களால் உறவுகளால் வைக்கப்படும் கேள்வி தலைவர் இருக்கிறாரா? இல்லையா? உண்மையைச்சொல்லுங்கள் இன்றும் கோடி பெறும் கேள்வியிது யாருக்கும் விடை தெரியாத போது சாதாரணமான என்னால் எப்படி??? ஆனாலும் அவர்களுடன் இருந்தமையால் என்னை நோக்கி இக்கேள்வி வருவது அவர்களுக்கு வேறு வழிகளில் அதை தெரிந்து கொள்ளமுடியவில்லை எனலாம்... சாதாரண மக்களிலிருந்து புலிகளின் பெரிய தலைகள் கூட இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் மக்களிடத்தில் இருக்கிறார் இல்லை.......... என்று சொல்வோர் உட்பட. இதிலிருந்து அவர்கள் எவருக்கும் உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாம். இருக்கிறார் என்போர் அவர் ஒழிந்திருக…
-
- 6 replies
- 1.8k views
-
-
வாழ்க்கைச் சுருக்கம் இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் தியாக வாழ்க்கை ஒர் உன்னத வரலாறானது. அவரது வாழ்க்கை, இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக தியாகங்கள், போராட்டங்கள், அனுபவித்த துயரங்கள் இவற்றால் நிறைந்தது. வ.உ.சி. யின் அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்த…
-
- 6 replies
- 865 views
-
-
நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் நீராடல் : உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்று…
-
- 6 replies
- 5.9k views
-
-
பின்வரும் இரண்டு வசனங்களுக்கும் கருத்தில் என்ன வித்தியாசம்? இரண்டு வசனத்திலும் ஒரே சொற்கள்தான் உள்ளன ஆனால் ஒழுங்கமைப்பு வேறு. வசனம் 1: இறுதியில் அவன் தான் வெல்வான் வசனம் 2: அவன் இறுதியில் தான் வெல்வான்
-
- 6 replies
- 823 views
-
-
தமிழ்ச் சமூகத்தில் வரி ஓவ்வொரு நாட்டின் குடிமகனும் தன்நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது. குடிமக்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும்கூட ஒரு குறிப்பிட்ட தொகையை தம் நாட்டின் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படுவது ‘வரி’ என்று பெயர் பெற் றுள்ளது. ஓர் அரசின் வருவாயின் தவிர்க்க இயலாத பகுதியாக வரி அமைந்துள்ளது. ஒரு சமுகத்தில் நிகழும் பொருள் உற்பத்தி முறையின் அளவுகோலாகவும்கூட வரியைக் கணிப்பதுண்டு. ஏனெனில் தனிச் சொத்துரிமை வேர்விடாத ஒரு சமுகத்தில் வரி என்பது அறிமுகமாகாது. தனிச்சொத்துரிமையும் அரசு என்ற அமைப்பும் உருவான பின்னரே ஒரு சமுகத்தில் வரி அறிமுகமாகி…
-
- 6 replies
- 1.3k views
-
-
நேற்று ஓசுரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த த.வ.ஆ.ந'வின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகளின் சுருக்கம் ஒரிசா பாலு ஐயா அவர்களால் பகிரப்பட்டது. அவரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்…
-
- 6 replies
- 4.4k views
-
-
http://sivasinnapodi1955.blogspot.com/2007/03/blog-post.html
-
- 6 replies
- 1.8k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
Jun 17, 2011 மலாக்கா நீரிணையின் கேந்திர அமைவிடத்தில் மலேசிய அரசிற்குச் சொந்தமான மலாக்கா துறைமுகம் இருக்கிறது. கிழக்கு மேற்கு வாணிபம் காரணமாகப் 14ம் நூற்றாண்டில் மலாக்காத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ஐரோப்பாவின் முன்னாள் வர்த்தக மையமான வெனிஸ் (Venice) நகருக்கு நிகரான முக்கியத்துவம் மலாக்காவுக்கு இருந்தது. (Malacca) கலிங்க பட்டணத்தில் இருந்தும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் பாய்க் கப்பல்கள் மூலம் மலாக்கா வந்த தமிழ் வாணிபர்கள் மலாக்கா செட்டி என்று அழைக்கப்பட்டார்கள். மலாய் மொழியில் செட்டி என்றால் வியாபாரிகள் என்று பொருள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வேறு இவர்கள் வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். சுமத்திரா தீவின் ப…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலக்கியங்களில் யாழ் தொல்காப்பியத்தில் தொடங்கி, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பைப் பற்றியும், பல்வகை யாழ்களைப் பற்றியும், யாழின் உறுப்பமைதியைப் பற்றியும் குறிப்புகள் பல இருக்கின்றன. இசைக் களஞ்சியமாய் விளங்கும் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், …
-
- 6 replies
- 4.4k views
-
-
நான் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய இட்ட இடுக்கைகள். இன்னும் இந்தக் கேள்விகள் என்னுள்ளே அப்படியே இருக்கின்றன. யாழ் களத்தில் பல அறிஞர் பெருமக்கள் இருப்பதால் என் ஐயம் தீர இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணி இதை இடுகிறேன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க் கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும் பசுமையாய் இருக்கிறது. இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும்…
-
- 6 replies
- 19.9k views
-
-
அக்டோபர் 2005 - மார்ச் 2006 நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள் சூரியதீபன் தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது. காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பி…
-
- 6 replies
- 1.6k views
-
-
-
2043 ஆம் ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
-
- 6 replies
- 5.4k views
-
-
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!! பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும். சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்…
-
- 6 replies
- 4.1k views
-