சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
கற்கண்டு அம்மம்மா மறிச்சுக் கேட்டதுக்கு “ இப்பிடியே நேர போய் இடது பக்கம் திரும்பினா வரும், 20 ம் வாட்டு எண்டு கேட்டாக் காட்டுவினம்“ எண்டு ஒரு வெள்ளை உடுப்புக்காரர் சொல்ல , நான் இவரும் டொக்டரோ எண்டு கேட்டன். “பறையாம வா அது ஓடலி” எண்ட படி அம்மம்மா இழுத்துக்கொண்டு போனா. ஆஸ்பத்திரியில வெள்ளை உடுப்போட திரியிற பொம்பிளை எண்டால் நேர்ஸ் , ஆம்பிளை எண்டால் டொக்டர் எண்டு தான் நான் நெச்சிருந்தனான். முந்தி மூண்டு தலைமுறைக்கு Dr.கங்கம்மா தான் இணுவிலில பிள்ளைப் பெறு பாத்தவ எண்டு சொல்லிறவை. எழுவதுகளில தான் பெரியாசுபத்திரிக்கு பிள்ளைப்பெறுக்கு கூட ஆக்கள் வாறது. ஊரில அப்ப பொலீஸ் ஸ்டேசன் போனாலும் பெரியாசுப்பத்திரிக்குப் போனாலும் ஏதோ கதை முடிஞ்சிது எண்டு மாதிரித்தான் சனம் பய…
-
- 2 replies
- 801 views
-
-
1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை. 3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை. 4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்…
-
-
- 2 replies
- 416 views
-
-
தாம் செய்த திருட்டு வேலையால்... நாடே, இன்று நாசமாகி விட்டது ௭ன்று தெரிந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள்... பொது மக்கள் தாக்குவாா்கள் என்ற பயத்தில் 😂 வெளியே போக பயந்து பாராளுமன்றத்திலே தூங்கிய காட்சிகள்.
-
- 2 replies
- 462 views
-
-
இரும்பு மனிதர்கள் - சுப.சோமசுந்தரம் எங்கள் ஆசிரியர் சங்கமான MUTA வின் புலனக் குழுவில் (WhatsApp group) பேரா. நீலகிருஷ்ண பாபு அவர்கள் வழக்கம் போல பேரா. சுப.வீரபாண்டியன் அவர்களின் ஒரு நிமிடச் செய்தி ஒலி நாடாவைப் பதிவு செய்திருந்தார். அப்பதிவு கீழேயுள்ள இணைப்பில் உள்ளது. தயவு கூர்ந்து அதனைக் கேட்ட பின் அச்செய்தி என்னுள் எழுப்பிய நினைவலைகளை வாசிப்பது (வாசிப்பதாக இருந்தால்) வாசிப்போரின் உடலுக்கும் (!) உள்ளத்திற்கும் நலம் பயப்பது : நீங்கள் (மக்கள்) விரும்பும் மனிதர் ஹிட்லராக இருந்தால், அவருக்கும் 'இரும்பு மனிதர்' என்று பெயரிட்டுக் கொண்டாடலாம். சர்தார் வல்லபாய் படேல் கதையைக் கையிலெடுத்து இக்கருத்தை நுட்பமாக (with su…
-
-
- 2 replies
- 536 views
- 1 follower
-
-
காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒ…
-
-
- 2 replies
- 869 views
- 1 follower
-
-
மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள், அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேற கதை).. 🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பல சதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன், தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்.. 🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்…
-
-
- 2 replies
- 528 views
-
-
தலை கால் தெரியாம….. “ என்ன மாதிரி ? நாளைக்கு காலமை போவம் , நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும் “ எண்ட முன்மொழிவு வழி மொழியாமலே ஏற்றுக்கொள்ளப்பட எல்லாரும் வெளிக்கிட்டம். நாலரை நல்லூர் மணி அடிக்க முதலே என்னை எழுப்ப வந்த குரலுக்கு வந்திட்டேன் எண்டு சொன்னபடி வெளிக்கிட்டன் . யாழப்பாணத்தில மட்டும் பாவிக்கிற சொல் இது, வந்திட்டேன் எண்டிறது என்ன tense எண்டு அறிய தனிப் பட்டிமன்றம் வைக்கோணும் சுகி சிவம் எங்கயோ சொன்னதாக ஞாபகம் . ஆடி அமாவாசை முடிய வீட்டை மச்சச்சட்டி கவிக்க நாங்களும் நல்லூர்த்திருவிழா பிரதட்டைக்கெண்டு ஆய்த்தப்படுத்துவம். வெழுத்த ரெண்டு பழைய வேட்டி,சால்வை, சணல்க்கயிறு, இதுக்கெண்டு கொஞ்சம் பழைய underwear, இதுகள் தான் தேவை. அவனவன் எ…
-
- 2 replies
- 983 views
-
-
அலாரம். “ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு சொன்னியெல்லோ , கொண்ணன் பிந்தித்தான் படுத்தவன் நீ எழும்பு” எண்டு திருப்பித் திருப்பி சொல்லவும் அந்தச் சண்டையில பெரியவன் எழும்பினான். அரைநித்திரையில கட்டில்ல இருந்து எழும்பின சின்னவன் பெட்சீட்டால போத்த படி வந்து மேசையில திருப்பியும் படுத்தான் . பத்து நிமிசத்துக்கு ஒருக்கா “சின்னவா பெரியவா” எண்டு மாறி மாறிக் கூப்பிட்டு கடைசீல என்ன சத்தமில்லை எண்டு வந்து பாத்திட்டு “பார் ஐஞ்சு மணி பெருமாள் கோயில் மணி கேக்குது” எண்டு மனிசி நித்திரை கொண்டவனுக்கு மேல செம்பில இருந்து தண்ணியைத் தெளிச்சு எழுப்பி படிக்க விட்டுது. வீட்…
-
- 2 replies
- 766 views
- 1 follower
-
-
சமீப காலமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து பலர் புது வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. பலமில்லாத அரசுகள், பண வீக்கத்தின் உயரங்கள், வரண்டு போன நிலங்கள், வாழ்வில்லாத அவலங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என அவர்கள் நிலமை மிகவும் மோசமானது. பல அபாயகரமான கடல் பயணங்கள் மூலம்தான் அவர்களது ஐரோப்பிய வருகை இப்பொழுது தொடர்கிறது. நைஜீரியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு பயணிக்க விரும்பிய நால்வரைப் பற்றிய கதைதான் இது. நைஜீரியா நாட்டுத் துறைமுகத்தில் இருந்து யூன் 27 இல் புறப்பட இருந்த ஒரு சரக்குக் கப்பலின் சுங்கான்( rudder ) இல் நான்கு இளைஞர்கள் களவாக ஏறி அமர்ந்து கொண்டார்கள். அவர்களிடம் கடவுச் சீட்டு இல்லை. பணம் இல்லை. பத்து நாட்களுக்குப் போதுமான உணவும், ஐ…
-
- 2 replies
- 692 views
-
-
விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள் (Amber Egan) அம்பர் ஏகனுக்கு (33) மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவரின் டிக்டாக் வீடியோ பதிவொன்று இப்பொழுது வைரலாக இருக்கிறது. குடும்பப் பெண்ணாக வீட்டினில் இருக்கும் பெண்கள் செய்யும் வேலைகள் கூடுதலாகப் பேசப்படுவதில்லை. அவர்கள் செய்யும் வேலைக்கான சம்பளம் தரப்படாவிட்டாலும், அவர்களுக்கு அவர்களது வேலைகள் மதிப்புமிக்கது என்பதை உணர்த்துவதும், அது சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் தனது நோக்கம் என அம்பர் தெரிவிக்கின்றார். ஒரு தாயாக, மனைவியாக தான் செய்யும் வேலையின் மதிப்பைக் கணக்கிட்டு அவர் தந்திருக்கும் ‘பில்’ கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்றாவது குழந்தைக்குத் தாயான அம்பர், வீட்டில்…
-
-
- 2 replies
- 356 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! -------- தோலுரிக்கும் நக்கீரன்..! ----------- ஜக்கி வாசுதேவ் தனது மனைவியை 1997 இல் கொலை செய்துவிட்டு 'அவள் ஜீவா சமாதி அடைந்துவிட்டாள்' என்று புளுகியதை அம்பலப்படுத்தியது முதல், இன்றுவரையிலான ஜக்கியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திவரும் நக்கீரன் கோபால் அண்ணன், நேற்று வெளியிட்ட முக்கியமான வீடியோவை எல்லோரும் பாருங்கள், பரப்புங்கள்..! தமிழ்நாட்டின் பொது சமூகம் விழிப்புணர்வு பெற்று, ஒன்றுதிரண்டு தட்டிக்கேட்க முன்வராவிட்டால், ஜக்கிகள், நித்திகள், மகாவிஷ்ணுக்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். அயோக்கியன் ஜக்கி அமெரிக்காவுக்கு…
-
-
- 2 replies
- 527 views
-
-
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப…
-
- 2 replies
- 1.2k views
-
-
தூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன . அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒள…
-
- 2 replies
- 923 views
-
-
தூங்கா நகரின் ராப்பாடிகள்..... நான் தமிழகம் முழுவதிலும் சுற்றியலைய தொடங்கிய காலத்தில் மதுரை என்றாலே பலரும் உடன் விசாரிப்பது “உங்க ஊரில் நள்ளிரவிலும் சூடாக இட்லி கிடைக்குமாமே என்பது தான்”. மதுரை ஒரு தூங்கா நகரம் என்பதே வெளியூர்க்காரர்கள் எப்பொழுதுமே வியப்பாகவே இருக்கும். 2500 ஆண்டுகளாகவே மதுரை ஒரு தூங்கா நகரமாக வரலாற்றை விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. மாலை நேரத்தில் விதவிதமான இடைத்தீனிகள் (Snacks) மதுரை தெருக்களை அலங்கரிக்கும், எந்த வீதியில் நடந்தாலும் இந்த நறுமணங்கள் வந்து மூக்கை துளைக்கும், நம்மை கடை நோக்கி அழைக்கும். உளுந்த வடை, பருப்பு வடை, கார வடை, கீரைவடை, பைரி (முள்ளுமுருங்கை வடை), தேங்காய் போலி, பருப்பு போலி, ரவா அப்பம், காரப் பணியாரம், இனிப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆணையாளரின் முன்னோடி அறிக்கை வெளியானது *** **** *** **** *2015 ஆம் ஆண்டு போன்று 2025 இலும் அதே நகர்வு...! *அநுர அரசாங்கம் மீது நம்பிக்கை.... *உள்ளக விசாரணைக்கே முன்னுரிமை.....! *தமிழர் விவகாரம் பத்தோடு பதினொன்றாக மாறியது. *ICC யில் இலங்கை இணைந்தால் பழைய குற்றங்கள் கைவிடப்படும்..... - --- ------ --- ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி ஒன்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பிரதி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரதியாகும். இதற்கேற்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள திட்டம் எதிர்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் தெர…
-
-
- 2 replies
- 260 views
- 2 followers
-
-
எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை…
-
-
- 2 replies
- 338 views
- 1 follower
-
-
கொஞ்சம் வித்தியாசமா ஒரு காணொளி செய்து பாப்பம் எண்டு செய்தது, பாத்து சொல்லுங்கோ எப்படி வந்து இருக்கு எண்டு... அதோட போன பதிவில கலந்துரையாடின விடயங்களை பாத்தன், திரும்ப போய் பாக்கும் போது எனக்கும் அப்பிடி தான் தோணுது, என்னை அறியாமலே வருது போல, நீங்க சொன்ன மாதிரி கூட தமிழ் நாடு காணொளிகளை பாக்கிறதால ஏற்படுற மாற்றமோ தெரியல, இனி வார காணொளிகளில குறைச்சுக்க முயற்சி பண்ணுறன்.
-
- 2 replies
- 941 views
-
-
ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும்,…
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
“ அரிசிப்பொதியோடும் வந்தீரோ ” தம்பியவை பாடிறது தான் பாடிறியள் பக்திப்பாடாப் பாடுங்கோவன் என்று ஒரு பழசு நேயர் விருப்பம் வேற கேட்டிச்சுது. வாழ்க்கையில் குண்டு போட்ட பிளேன் மட்டும் பார்தத எங்களிற்கு நிவாரணம் போட்ட பிளேன் ஒரு அதிசயம் தான். முன் வீட்ட நிண்ட வேப்பமரம் அம்மாளாச்சி தான் கோட்டையில இருந்து அடிக்கிற செல்லும் குண்டும் படாம காப்பாத்திறா எண்டு எங்களை அம்மா நம்ப வைச்சிருந்தா. ஆனாலும் அதையும் தாண்டி இந்த பொதிக்குண்டு ஒண்டு வீட்டு ஓட்டையும் உடைச்சிக்கொண்டு விழுந்தது. அக்கம் பக்கம் எல்லாம் குண்டு எண்டு பார்க்க bomb squad கிருபாவும் அன்பழகனும் முன்னுக்கு போய் அது வெடிக்கிற குண்டு இல்லை எண்டு உறுதிப்படுத்தினதும் விடுப்பு ladies படை வெடிக்காத குண்டுப் (நிவாரணப்) பொதி…
-
- 2 replies
- 584 views
- 1 follower
-
-
கன்னிக்கால் சொந்தத்தில ஒரு கலியாண வீடு , சோடிச்சிட்டு படுக்கேக்க விடியப்பிறம் ரெண்டு மணி ஆகீட்டுது . அப்பிடியே பந்தலுக்க போட்ட நாலு இரும்புக் கதிரையை ஒண்ட விட்டு ஒண்டு வளம் மாறி அடுக்கீட்டு ( உருண்டு விழாம இருக்க) படுத்தது தான் தெரியும் . திடீரெண்டு குளிர்ற மாதிரி இருக்க காலை உள்ளுக்க இழுத்து முழங்காலை மடக்கிக்கொண்டு, கழுத்து வரை சோட்ஸ்க்கு மேல கட்டின சாரத்தால போத்துப் படுக்க , “ விநாயகனே வினை தீர்ப்பவனே “ எண்டு சந்திரன் சவுண்ட் எண்டு எழுதின குழாய்க்கால சீர்காழி பாடத் தொடங்கீட்டார். ஊரில எல்லா நல்லது கெட்டதில சந்திரன் இருப்பார். நல்ல காரியங்களுக்கு குடுக்கிற பந்தலை செத்த வீட்டுக்கு சந்திரன் குடுக்கிறேல்லை . பந்தல், சோடனை , கதிரை, amplifier ஓட ரெண்டு speaker எண்…
-
- 2 replies
- 526 views
-
-
2021 வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெறுமா ?
-
- 2 replies
- 965 views
-
-
"சீமான் Vs எல்.முருகன்" தைபூசம் முதல் வேல்வழிபாடு வரை.!? இனி தமிழ்நாடு அரசியல்.!?
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயத்தில் அசைவ மடை உற்சவம்... நமது முன்னோர்களின் குல தெய்வவழிபாடு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அரோகரா🙏 https://www.facebook.com/inuvaiursothys/posts/pfbid0iMcJWrGk5xTTt9sEVzsCyphQhATmZknmcc423mR1YxdECvQqQK7Ug4T2xHbNu9ADl?mibextid=YxdKMJ
-
- 2 replies
- 773 views
-
-
Vanie J Kalapan is with Param Latha and தென்மராட்சியின் சிற்பிகள் 1. சிரஞ்சீவி.பூலோகசிங்கம் வெற்றிவேலு (முன்னாள் அதிபர் ,யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி) தோன்றில் புகழொடு தோன்றுக அஃதின்றேல் தோன்றில் தோன்றாமை நன்று என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க,முப்பத்து மூன்று ஆண்டுகள் ஒரே கல்லூரியாம் சாவ இந்துவில் அதிபராய் ஆசானாய் கண் துஞ்சாது பசி நோக்காது ,மெய்வருத்தம் பாராது கடமை வீரனாய் ,பௌதீக வளங்களால் பின் தள்ளப்பட்டிருந்த எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈலோன் மஸ்க்கிற்கு எதிராக ‘விஷ மாத்திரை’ முறையை பயன்படுத்தும் ட்விட்டர் - காரணம் என்ன? 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க விருப்பம் தெரிவித்து, தொழிலதிபர் ஈலோன் மஸ்க் அறிவித்த அடுத்த நாளே, அதற்கான எதிர்வினையை ஆற்றியுள்ளது ட்விட்டர் நிறுவனம். அதாவது, விஷ மாத்திரை (Poison Pill) என்று அழைக்கப்படும் ஒரு மேலாண்மைக் கொள்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. இதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒருவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியாது. இந்த நகர்வின் மூலம், ஒரு பங்குதாரர் அதிகபட்சம் 15% பங்குகளை மட்டுமே வாங்க முடியும். இதன் மூல…
-
- 2 replies
- 535 views
- 1 follower
-