சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
"ஆ உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..." என்றுதான் எங்கள் ஊடகவியலாளர்கள் பேட்டிகளை ஆரம்பிப்பார்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன். இந்தப் பெண் ஊடகவியலாளர் கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிக்கிறார், "சரி உங்களில் இருந்து ஆரம்பிப்போம்..." என்று. அந்த ஊடகவியலாளரிடம் அகப்பட்ட நம்ம ஆள், Jeyaranjinee Gnanadas "தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி" இல் இருந்து ஆரம்பிக்கிறா. "கலை வளம் நிறைந்த பாடசாலை என்னுடைய பாடசாலை...." என்றபடி.... இந்தப் பேட்டியில் எனக்குப் பிடித்த ஒரே விசயம்: "போர்க்காலச் சூழல்தான் என்னை வளர்த்தது..." என்னும் ஜெயரஞ்சினியின் சாட்சியம். 30 வருட ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது, தோல்வியில் முடிந்தது என்று சிலர் அரை வே…
-
- 0 replies
- 1.1k views
-
-
"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, ஆருக்குத் தெரியப் போகுது" என்னும் மனோபாவத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த பல்லாயிரம் சிறு தவறுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வளவு பாதித்திருக்கும், நமக்காகப் உயிர் கொடுத்துப் போராடியவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆப்பை இறுக்கியிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில், "புலிகளுக்குப் பயந்துதான், வெளிநாடு வந்தனான்" என்று வாக்குமூலம் கொடுத்து வதிவிட உரிமையை எளிதாக வாங்கிக் கொண்ட "தீவிர புலி மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எத்தனை பேர் உள்ளனர். லோயர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு இவ்வாறு கொடுத்த வாக்குமூல…
-
- 3 replies
- 1.3k views
-
-
இணையத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: "உள்ளாடையின்றி போஸ் கொடு. இல்லையெனில் படத்தை பகிர்வேன்" விக்டோரியா ப்ரெசிட்ஸ்கியா பிபிசி உக்ரைன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இணையத்தில் நல்லவர்கள் போல் பேசி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்திலோ, நேரிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை ஆங்கிலத்தில் ஆன்லைன் குரூமிங் என்றழைக்கிறார்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் இணையத்தை பயன்படுத்தி குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான பிரச்னைகள் அதிகரித்திருப்பதாக, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான தொண…
-
- 0 replies
- 541 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தச் சட்டமும் குமார் பொன்னம்பலமும் ------------------------------------------- ---- 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இருந்து என்றோ ஒரு நாள் நீக்கம் செய்யப்படும் சந்தர்ப்பம் வருமென மாமனிதர் குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார். 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்கு வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு சொன்னார். 13, அரசியல் தீர்வு அல்ல என்றும், ஆனாலும் குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைக் கொண்ட 13 ஆவது திருத்தச் சட்டம்கூட சிங்கள ஆட்சியாளர்களினால் ரத்துச் செய்யப்படும் சூழல் உருவாகுமெனவும் அவர் அன்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார். ----கொழும்பில் உள்ள…
-
- 5 replies
- 903 views
-
-
வதிவிடப் பாடசாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட பூர்வகுடிச் சிறுவர்களின் உடல் எச்சங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வியாழன் அன்று சஸ்கெச்சுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பூர்வகுடிச் சிறுவர்களின் மீதிகள் கடந்த கால கனடிய அரசுகளின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகளை மீண்டும் ஆதாரப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஒரு இனக்குழுமம், குறிப்பிட்ட நிலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழுவதன் மூலம் அவர்களது மொழி, பண்பாடு, நிலம், குடித்தொகைப் பெருக்கம் போன்றவை உறுதிப்படுத்தப்படுகின்றன. பல நூறு , ஆயிரம் வருடங்களாக இவ்வாறு வாழ்ந்து வந்த குடியினங்களை ஆக்கிரமிப்பாளர்களும், அடக்குமுறையாளர்களும் தங்கள் ஆயுத பலத்தாலும், சூழ்ச்சிகரத் திட்டங்களாலும் அழ…
-
- 0 replies
- 385 views
-
-
2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன். நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன். பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது. மாலை 4 மணிக்குப் விமான நிலையத்திற்கு வேலைக்கு ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
23 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் இரெண்டு உடான்ஸ் சாமிகள் மோதி கொண்ட காட்சி. இதில் ஒருவர் இப்போ கைதாகியுள்ள சிவசங்கர் பாபா. இந்த பேட்டியை வைத்து மறைந்த விவேக் செய்த காமெடி பேட்டி கீழே.
-
- 0 replies
- 1k views
-
-
பணம் செலுத்திய தந்தைக்காக ? திருமணம் செய்த மனைவிக்காக?? இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்?? https://fb.watch/65IUrHd8w1/
-
- 2 replies
- 860 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது? இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்? மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான். இதெல்லாம் எப்படித் துவங்…
-
- 1 reply
- 712 views
-
-
பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அற்புதனின் அரசியல்? காட்சிப்படுத்தலும் அதன் மீதான பேச்சாடலும் விவாதமும் நிகழப்படும் பொழுதுதான் அக்காட்சிப்படுத்தலில் இருக்கும் கருத்தின் மீது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் கருக்கட்டும் என்பதில் நான், நாங்கள் நம்பிக்கையுள்ளவர்கள். அதற்காகவே, இந்த முக நூலில் வலிந்து அரசியல் பேச முயற்சிக்கிறோம். ஆனால், தமிழ் மக்களைப்போலவே அங்கிருந்து மேலெழுந்த, உருக்கொண்ட மனிதர்கள், அரசியல் அமைப்புகள் இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய குறைந்த பட்சம் மன எண்ணத்திற்குள்கூட வர முடியாத அரசியல் வரலலாற்றுக்குள் கதாபாத்திரங்களாக, காட்சிகளாக கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இது பற்றிய எந்தக் கேள்விகளு…
-
- 12 replies
- 2k views
-
-
கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்? பகுதி - VIII தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப…
-
- 0 replies
- 627 views
-
-
பாலியல் புகார்களும் பாரத தேசமும் +++++++++++++++++++++++++++++ இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள். இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படு…
-
- 19 replies
- 2.1k views
-
-
மதுரை_வடை_ஃபேக்டரிகள்* *மதுரையில்* நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். சர்வ சாதாரணமாக 2000 வடைகள் தினமும் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும்.! அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ்! சூரியன் உதிப்பதற்கு முன்பே அந்த சூரியன் போன்ற வெப்பத்துடன் தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளம் ஆகும் அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தனது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு அசால்ட்டாக.. உளுந்தவடை, மசால்வடை, காரவடை, வெங்காயவடை, சமோசா என வெரைட்டிக்கு மாறுவார்கள்.. ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். அதிகாலை அப்பம் தன் வெப்பம் இழந்து ஆறியிர…
-
- 0 replies
- 829 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
குழாய் நீர் வசதி எங்கள் ஊருக்கு வந்த பிறகும் எங்கள் வீட்டிற்கு மட்டும் இணைப்பைப் பெறாமலிருந்தோம். எந்தக் காலத்திலும் வற்றாத கிணறு வளவில் இருந்தது. நல்ல தண்ணீர். எந்தக் குறையும் இல்லை. எதற்கு குழாய் நீர் என்று நான் சாதாரணமாக கேட்டுவிட்டு இருந்துவிட்டேன். ஊரில் வீட்டில் வசிக்கும் உம்மா, ”இந்த பீ.எச்.சைகளின் தொல்லை தாங்கவில்லை” என்று அடிக்கடி புலம்பிக் கொண்டேயிருந்தார். (Public Health Inspector (PHI) ”ஊரில் உள்ள எல்லா சீமெந்துத் தண்ணீர் தொட்டிகளையும் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆர்பிக்கோ டாங்கி மட்டுந்தான் பயன்படுத்தலாம்” என்றார்கள். சீமெந்து டாங்கிகள், சுத்தமாக கழுவிப் பயன்படுத்தினால் எந்தக் குறைபாடுகளும் இல்லாதது. முதலாளித்துவத்திற்கு இந்த அதிகாரிகள் எ…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை https://fb.watch/5vlzqJaj1W/
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு: அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களை விநியோகித்த நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. 'அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடு களுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் கிடை யாது' என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கின்ற வியட்நாமியப் பத்திரிகையாளரான 79 வயது ட்ரான் தோ என்கா(Tran To Nga)என்ற பெண்ணே நீண்ட காலச் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கை பிரான்ஸின் நீதி…
-
- 0 replies
- 616 views
-
-
https://www.facebook.com/groups/1838618882939539/permalink/2225319530936137/
-
- 3 replies
- 958 views
- 1 follower
-
-
Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கி…
-
- 1 reply
- 863 views
-
-
வாங்க இண்டைக்கு நாம வீட்டுக்கு மீன், இறைச்சி வெட்ட ஒரு கத்திவாங்குவம், அத கடையில வாங்காம ஒரு பட்டறைக்கு போய் நாங்களே நமக்கு பிடிச்ச ஒரு வடிவத்தில, வில்லுதகடுல கத்தியா செய்வம் வாங்க. எப்பிடி வில்லுத்தகடா இருக்க ஒரு துண்டு கத்தியா மாற்றமடையுது எண்டு ஒவ்வொரு படிமுறையா உங்க கூட பகிர்ந்து இருக்கன், பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. ஒரு கத்தியின் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டு நீங்க நினைக்கிறீங்க சொல்லுங்க, யார் சரியா சொல்லுற எண்டு பாப்பம். https://youtu.be/FRJIyjtm4PY
-
- 0 replies
- 989 views
-
-
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை கூட்டணிப் பிச்சைகளும், தனித்துப்போட்டியிடுதலும் தனித்து நின்று மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 16 ஆவது சட்டசபை பொதுத் தேர்தலில் 234 தொகுதியில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 72.78% of 6,28,69,955 = 4,57,56,754 அப்படி என்றால் 6,28,69,955 வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இதில் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை 29,58,458. ஆக ஒட்டு மொத்த தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இந்த முறை 6.85% சதவீதம் வாக்கு பெற்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 27.22% ஒரு க…
-
- 0 replies
- 934 views
-
-
ஓர் அகதியின் மரணம்...! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...! அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..! அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது. அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..! அந்த இளை…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 856 views
-