Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நானும் ஒன்று எடுக்கவேணும் என்று பலநாளா முயற்சிக்கிறன். ஒருத்தரும் ஐடியாவை தருகிறார்கள் இல்லை. டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா மாதிரி இல்லாமல் என்னுடைய பெயரில் குறைஞ்சது 4 peer reviewed papers உடன் ஒரு thesis உம் வேணும். டீல் இருந்தால் சொல்லுங்கள். 😀

இலங்கையில் அமெரிக்கன் யூனி எண்டு ஒன்று அண்மையில் பெரிய நட்சத்திர ஓட்டலில் விழா எல்லாம் செய்தார்கள். எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தருக்கு அவர் எழுதிய 10 பக்க கட்டுரையின் அடிப்படையில் அங்கே நிற்கும் போதே பட்டத்தை கொடுத்து விட்டார்கள். 

ஆராய்சி கட்டுரையில் எனக்கு அடியும் நுனியும் விளங்கவில்லை. சரி நம்ம அறிவுக்கு பி எச் டி ஆராய்சி  எல்லாம் விளங்காதுதானே. யூனியை தேடி பாப்பம் எண்டு கூகிள் ஸ்டிரீட் வியூ போனால் - அது ஒரு கார் கராஜில போய் நிக்குது!

இவனை அவங்கள் ஏமாற்றுறாங்களா? இவன் எல்லாரையும் ஏமாற்றுறானா? நமக்கு ஏன் வம்பு எண்டு “வாழ்துக்கள்” சொல்லி ஒதுங்கி விட்டேன்.

உங்களுக்கு தேவை எண்டால் விபரம் எடுத்து தரலாம். டாக்டர் கிருபன் பி எச் டி என்று போட்டு கொள்ளலாம்🤣.

இங்கே ஒன்றும் உதவாத யூனியில போய் கேட்டாலே, வருடம் 8 ஆயிரம் கட்ட வேண்டும், முழு நேரம் 3 வருடம், பகுதி என்றால் 6 வருடம். முதன்மை ஆராய்சி செய்ய வேண்டும் ஆகவே முழு நேர வேலை ஆராய்சி துறை தவிர்ந்து செய்ய முடியாது. ஒரு வருடமாவது பீல்டில் நிக்க வேணும். முதல் வருடத்தில் எம் பில் தான் தருவோம் ஆராய்சி திறமெண்டால்தான் மிச்சம். எப்படியும் ஆறு வருடத்துக்குள் பேப்பர் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டில் எல்லாம் அவுட் என்று ஏகபட்ட கண்டிசன் போடுவார்கள். 

இந்த டென்சன் ஏதும் இல்லாமல் மிக இலகுவாக பி எச் டி எடுக்கலாம் நான் மேலே சொன்ன வழியில்.

பிகு

என்னை இப்போதே பலர் பி எச் டி என்றே அழைப்பார்கள்.

(P)பனியன் of the highest degree 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

உங்களுக்கு தேவை எண்டால் விபரம் எடுத்து தரலாம். டாக்டர் கிருபன் பி எச் டி என்று போட்டு கொள்ளலாம்

அப்படி எல்லாம் சுத்துமாத்தாக எடுக்காமல் நாலு வருஷம் மினக்கெட்டே எப்போதே எடுத்திருக்கலாம்😀. புரபஸருக்கு ஒரு வருஷம் வேலை அனுபவம் எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்று சொல்லியதுதான் அதற்குப் பிறகு அவரை நான் காணப்போகவேயில்லை. ஆனால் இப்பவும் லிங்ட்இன்னில் அன்பாகத்தான் இருக்கின்றார்😊  வேலைக்குப் போனால் பிறகு டாக்டர்களுடன் வேலை செய்த அனுபவமே போதும் என்று இருந்துவிட்டேன்.

என்றாலும் யாழில்  அறிவு, மதிநுட்பம், புத்திக்கூர்மை, புத்திசாலித்தனம் உள்ளவர்களுடனும், உள்ளதாக நினைப்பவர்களுடனும் மெனக்கட்டதே இரண்டு பிஹெச்டிக்கு சமன்😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் அறிவுஜீவித்தனம் என்பது அடுத்தவருக்கு தம் திறமைகளால் சேவகம் செய்து வாலாட்டிக் கொண்டு தம் சொந்த இனத்தை பார்த்து தாமே குரைத்துக் கொள்ளும் நாய் குணம். 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

🤣. சீரியசாக - மூன்று நாலு வருடம் மினக்கெடாமல் தரமான யூனியில் இருந்து எடுக்கும் professional doctorate உங்கள் துறையில் உண்டல்லவா? EngD போல? பி எச் டி இல்லாவிட்டால் என்ன? வாயாற டாக்டர் கிருபன் என்று கூப்பிடலாம்தானே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் அறிவுஜீவித்தனம் என்பது அடுத்தவருக்கு தம் திறமைகளால் சேவகம் செய்து வாலாட்டிக் கொண்டு தம் சொந்த இனத்தை பார்த்து தாமே குரைத்துக் கொள்ளும் நாய் குணம். 

இண்டைக்கு எப்படியும் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.. வவ், வவ், வூ…😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல்.
இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும்.
அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை.
அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை.
அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

கல்வி அறிவு என்பது உயிருள்ளவரை தொடரும்.
மற்றவையெல்லாம் இடையிடையே காணாமல் போய்விடும்
நமது ஈழப்போராட்டம் மாதிரி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

கல்வி அறிவு என்பது உயிருள்ளவரை தொடரும்.
மற்றவையெல்லாம் இடையிடையே காணாமல் போய்விடும்
நமது ஈழப்போராட்டம் மாதிரி

அப்போ எந்த அறிவு ஈழப் போராட்டம் போன்று இடையிடையே காணாமல் போகாமல் தோல்வியே தழுவாமல் வெற்றியை மட்டுமே அடையும்???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திரட்சைப்பழம் எட்டாவிட்டால் நரி சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று பழத்தை திட்டிக்கொண்டு ஓடிவிடும். அது போல் காலத்தே பயிர் செய் என்ற கூற்றுக்கமைய போல் தகுந்த காலத்தில் கல்வியை கற்று அறிவை வளர்தது கொள்ளாவிட்டால் அந்த ஆற்றாமையில்  இப்படி அறிவு ஜீவிகளை மொட்டையாக திட்டிக்கொண்டு மிகுதி காலத்தை கழிப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது. 😂😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

🤣. சீரியசாக - மூன்று நாலு வருடம் மினக்கெடாமல் தரமான யூனியில் இருந்து எடுக்கும் professional doctorate உங்கள் துறையில் உண்டல்லவா? EngD போல? பி எச் டி இல்லாவிட்டால் என்ன? வாயாற டாக்டர் கிருபன் என்று கூப்பிடலாம்தானே.

பிறர் “டாக்டர்” என்று அழைப்பதற்காக பிஹெச்டி செய்வது, தாய், தந்தையரின் விருப்பத்திற்காக டாக்டர் (மருத்துவத்தில்) ஆவது எல்லாம் சரியாகப்படுவதில்லை. 
அதனால் பெரிதாக ஆர்வம் இல்லாததால் அதிகம் தேடல் செய்யவில்லை. எனது தற்போதைய துறை (அது இராத்திரி இரகசியம்!) இல்  EngD இருப்பது மாதிரியும் தெரியவில்லை. 

எனினும் வேலையில் முதல் ஐந்து வருடங்களில் நீண்டகால நோக்கம் என்ன என்பதற்கு “டாக்டர்” ஆவது என்றே குறிப்பிட்டு வந்தேன். அதன் பின்னர் cool products இல் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் “டாக்டர்” இல் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது!

இன்னும் சொல்லப்போனால் “பச்சைப் புளுகன்” என்று யாழில் நிறுவிவிடுவார்கள் மதிநுட்பமான புத்திசாலிகள்😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அப்போ எந்த அறிவு ஈழப் போராட்டம் போன்று இடையிடையே காணாமல் போகாமல் தோல்வியே தழுவாமல் வெற்றியை மட்டுமே அடையும்???

7 hours ago, விசுகு said:

ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்பது யதார்த்தம்.

நிறைய 5 வயது குழந்தைகள் அக்கம் பக்கத்தில் இருப்பார்களே? கேட்டுப்பார்த்தால் சொல்ஙிவிட்டு போகிறார்கள் - யாழ் களத்தில் எங்கே 5 வயது குழந்தைகள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

அப்போ எந்த அறிவு ஈழப் போராட்டம் போன்று இடையிடையே காணாமல் போகாமல் தோல்வியே தழுவாமல் வெற்றியை மட்டுமே அடையும்???

அறிவில் இரண்டு வகை உண்டு.

ஒன்று படிப்பறிவு. இன்னொன்று பட்டறிவு.
இரண்டும் சமாந்திரமாகவோ  அல்லது ஒன்றாகவோ மக்கள் மத்தியில் சேர்ந்து கொள்ளும்போது வெற்றியடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பிறர் “டாக்டர்” என்று அழைப்பதற்காக பிஹெச்டி செய்வது, தாய், தந்தையரின் விருப்பத்திற்காக டாக்டர் (மருத்துவத்தில்) ஆவது எல்லாம் சரியாகப்படுவதில்லை. 
அதனால் பெரிதாக ஆர்வம் இல்லாததால் அதிகம் தேடல் செய்யவில்லை. எனது தற்போதைய துறை (அது இராத்திரி இரகசியம்!) இல்  EngD இருப்பது மாதிரியும் தெரியவில்லை. 

எனினும் வேலையில் முதல் ஐந்து வருடங்களில் நீண்டகால நோக்கம் என்ன என்பதற்கு “டாக்டர்” ஆவது என்றே குறிப்பிட்டு வந்தேன். அதன் பின்னர் cool products இல் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் “டாக்டர்” இல் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது!

இன்னும் சொல்லப்போனால் “பச்சைப் புளுகன்” என்று யாழில் நிறுவிவிடுவார்கள் மதிநுட்பமான புத்திசாலிகள்😂

பிறர் அழைப்பதற்காக மட்டும் அல்ல - நம்மை நாமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு போக கூடியவர்கள்தானா என்று மீள எமக்கே நிறுவவும் இது உதவும். 

இப்போ அல்சைமர்ஸ் போன்ற நோய்களை நடுத்தரவயதில் படிப்பது குறைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஆற்றல் இருக்கும் போது அதை ஒரு பட்டம் ஆக்கி கொள்வது நல்லதுதான்.  வேலை பிசியாகும், இதர வாழ்க்கை சுமைகள் ஏறும் போது ஆர்வம் குறைகிறது என்பது உண்மைதான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

அறிவில் இரண்டு வகை உண்டு.

ஒன்று படிப்பறிவு. இன்னொன்று பட்டறிவு.
இரண்டும் சமாந்திரமாகவோ  அல்லது ஒன்றாகவோ மக்கள் மத்தியில் சேர்ந்து கொள்ளும்போது வெற்றியடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது

தமிழரிடம் இல்லாத படிப்பறிவா?? பட்டறிவா??? 

பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் அறிவுஜீவித்தனம் என்பது அடுத்தவருக்கு தம் திறமைகளால் சேவகம் செய்து வாலாட்டிக் கொண்டு தம் சொந்த இனத்தை பார்த்து தாமே குரைத்துக் கொள்ளும் நாய் குணம். 

அதெண்டால்.... உண்மை தான் நெடுக்ஸ். 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை எழுதியவர்

5 hours ago, goshan_che said:

சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. 

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

சரியாகச் சொன்னீர்கள் 👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

பிறர் அழைப்பதற்காக மட்டும் அல்ல - நம்மை நாமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு போக கூடியவர்கள்தானா என்று மீள எமக்கே நிறுவவும் இது உதவும். 

இப்போ அல்சைமர்ஸ் போன்ற நோய்களை நடுத்தரவயதில் படிப்பது குறைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஆற்றல் இருக்கும் போது அதை ஒரு பட்டம் ஆக்கி கொள்வது நல்லதுதான்.  வேலை பிசியாகும், இதர வாழ்க்கை சுமைகள் ஏறும் போது ஆர்வம் குறைகிறது என்பது உண்மைதான். 

உண்மைதான் கோஷான்
பல்கலைக்கழக்கத்தை விட்டு வெளியேறும் பொழுதே கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுகளை முடிக்க வேண்டும் என்பதே நான் எனது பிள்ளைகளுக்கு கூறியது
அது ஒரு அழுத்தமாக இருக்கக் கூடாது என்பதற்காக வற்புறுத்தவில்லை
ஒருவர் வைத்தியத் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுவிட்டார். அடுத்தவர் பல்வைத்தியர்  செய்முறையில் ஆராய்ச்சி செய்வதால் சில சுணக்கம் இருந்தாலும் கட்டாயம் பெற்றுவிடுவார்.
காலத்தே பயிர்  செய்....

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சந்தோசம் அண்ணா. அடுத்த சந்ததிகள் எம்மை போல் அன்றி அவர்கள் கல்வி ஒன்று மட்டுமே கருத்தாக இருக்கும் வாய்புள்ளவர்கள். பெற்றாரின் வழிகாட்டல் மட்டும் இருந்தால் சிகரங்களை அடைவார்கள் என்பதற்கு நீங்களும் யாழில் ஏனைய உறவுகளுமே சாட்சி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அண்மையில் நடந்தது;

எனக்குத் தெரிந்த ஒருவர், எனக்குத் தெரிந்த இன்னொருவருக்கு தனது கடையை விற்றிருந்தார். அதற்குரிய Mortgage ஐயும் விற்றவரே வழங்கியிருந்தார் (VTB-Vender Take Back). வேண்டிய, விற்ற இருவரும் நன்கு அறிமுகமானவர்கள்.

கடையை வேண்டிய குடும்பம் மிகவும் கடுமையாக உழைப்பாளிகள். 

இந்தக் கொறோனா பிரச்சனையில் கடையை நடத்த இயலாமல் பூட்ட வேண்டியதாகிவிட்டது.  இப்போது விற்றவருக்கு கடையுமில்லை, காசுமில்லை. ஆனால் கடையை அவர் திரும்பவும் தனதாக்குவதற்கு முழுமையான வாய்ப்பு இருந்தது. 

நான் விற்றவரிடம் நீங்கள் கடையைத் திரும்ப எடுக்கலாம்தானே எனக் கேட்டேன்.  அதற்கு அவர் "இல்ல இப்ப திரும்ப எடுக்கிறதாய் இல்ல" என்றார்.

நான் திரும்பவும் "நீங்கள் எடுத்தீங்களென்றால் அவர் கொஞ்சம் பிழைச்சுக் கொள்ளுவாரெல்லோ" என்று கூற,

அதற்கு அவர் " கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அழிஞ்சாத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்" என்றார்.

பிறறின் வேதனையில் மகிழ்வுறும் கயமைத்தனம்... ☹️

***

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2021 at 22:45, goshan_che said:

இப்போ அல்சைமர்ஸ் போன்ற நோய்களை நடுத்தரவயதில் படிப்பது குறைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

மூளை, மனம் என்பன உடம்பு போன்றவை தான். உபயோகித்து கொண்டு இருந்தாலே இயங்கும் திறனில் இருக்கும்.

இதில் உணவு, உறக்கம் போன்ற பழக்கவழக்கமும், கட்டுப்பாடுகளும் பொருந்தும். 

யூடுபே இல் உள்ள வீடியோ களில் இதுவரையில் நான் கண்டதில் மிகவும் உபயோகமான வீடியோக்கள்.

இதில் பல வெளிப்டையானவை, அனால், விஞ்ஞான விளக்கத்துடன்.

 • Thanks 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A By Shana   நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.     http://www.battinews.com/2021/09/56-9a.html
  • ஒரு தடவை வந்தவர்  என நினைக்கிறன் மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக அதன் பிறகு ஆளே இல்ல.  இங்கு அரசு தரும் நிதிகளை கூட திட்டமிட்டு செலவு செய்ய மாட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா காலம் உதவி செய்வார்கள் என பார்த்ததால் எல்லா அரசியல் வாதிகளையும் தான் சொல்கிறேன் யாரும் பெரிதாக  உதவி செய்ய வில்லை செய்வது அனைத்தும் புலம்பெயர்ந்த மக்களே இந்த இடத்துல அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இங்கு உள்ளவர்கள் எச்சி கையால்கூட காக்கை விரட்டாத ஆட்கள்.(செல்வந்தர்கள்).  
  • தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்- கோவிந்தன் கருணாகரம் September 25, 2021   “தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்.  அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும், இந்த அரசும், இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள். அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களில் உள்ளது. இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும்”  என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை குறித்தும் தமிழ்த் தேசியத் தரப்பினரின் ஒற்றுமையான செயற்பாட்டின் தேவை குறித்தும்  இன்றைய தினம் (25)  கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் , “தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் இன்று நிற்கின்றனர். வரலாற்றில் தோல்வியடைந்த இனமாக தொடர்ந்தும் எமது வரலாற்றை பதிவு செய்வதா, இல்லை வரலாற்றில் இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் எமது தமிழ்த் தேசிய செல்நெறியினை சரியான வழித்தடத்தில் கொண்டு சென்று எமது இலக்கினை அடைய நாம் செயல்பட்டோம் என்று பதிவு செய்வதா என்பதை தீர்மானிக்கும் சரியான சந்தியில் இன்று நிற்கின்றோம். அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும் ,இந்த அரசும் ,இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள். அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களில் உள்ளது. இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும் . தனிப்பட்ட அமைப்பு நலன், தனிப்பட்ட கட்சி நலன் , தனிப்பட்ட நபர் சார்ந்த நலன் எவையும் இது தொடர்பான தீர்மானம் எடுக்கும்போது கருத்தில் கொள்ளப்படாது தமிழ்த் தேசிய நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஆனால் நிகழ்வுகளும் நடத்தைகளும் இதற்கு முரணாகவே பளிச்சிடுகிறது. தமிழ்த் தேசியத்திற்காக ஒருமித்து போராடிய இயக்கங்கள் தமக்கிடையே பிளவுபட்டு மோதுண்டு பின்னர் ஒருங்கிணைந்து பின்னர் பிளவுண்ட வரலாறு எமக்குரியது. அதன் பின்பும் கூட ஜனநாயக அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியத்தின் அவசியம் உணரப்பட்டு முரண்பட்ட அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு வரவைத்து தமிழ் ஒற்றுமை வலுவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஒற்றுமை, இந்த இணைப்பு சிலரது தனிப்பட்ட கட்சி, சிலரது தனிப்பட்ட செல்வாக்கு, சிலரது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு தாரை வார்க்கப்படக்கூடாது என்பது தமிழ்த் தேசியத்தை நேசித்த, நேசிக்கும் என்போன்றவர்களின் அவாவும் ஆதங்கமும் ஆகும். இது எவர் மீதும் வாசிக்கும் குற்றப்பத்திரிகை அல்ல. இன்றைய வாய்ப்பினை எமக்காக மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது தனிப்பட்ட கட்சி, தனிப்பட்ட கூட்டு, தனிப்பட்ட செல்வாக்கை பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் தேவையேற்படின் காட்டுவோம். அது ஏற்படுத்தும் பாதிப்பினைவிட இன்று நாம் ஒருமித்து பயணிக்காவிடில் ஏற்படும் பாதிப்பு எமக்கும் எம் இனத்திற்கும் கடந்த ஆறு தசாப்த கால எம் அரசியல் முனைப்புக்களையும் கபளிகரம் செய்து மீண்டும் பேரினவாதிகளின் கால்களில் மண்டியிடவைக்கும் என்பது மட்டும் திண்ணம் என்று என் அரசியல் அறிவு சொல்கிறது. என்மன ஆதங்கமும் இதுவே!. புரிவதும் புரிந்தும் தன்னிலையில் மாறாது தமிழ்த் தேசியத்தை அழிப்பதும், தமிழ்த் தேசியப் பரப்பில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும் . இது உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.     https://www.ilakku.org/people-working-in-tamil-political-arena-are-in-the-position-to-make-right-decision/    
  • பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்! AdminSeptember 25, 2021 பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தோடு மிகவும் சுத்தமான முறையில் குறித்த உணவகம் பேணப்படுகிறது. இது தமிழ்த்தேசிய உணர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது எனவும், இவ்வாறான ஓர் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று அதன் உரிமையாளர் உணர்வோடு எரிமலைக்குத் தெரிவித்தார். (எரிமலையின் செய்திப் பிரிவு)   http://www.errimalai.com/?p=67487
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.