கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
783 topics in this forum
-
கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரையை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 808 views
-
-
மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…
-
- 6 replies
- 1.9k views
-
-
மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!"…
-
- 1 reply
- 492 views
-
-
முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே!! உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்...! கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!??
-
- 4 replies
- 1.8k views
-
-
யாரென்றால்! --------------- நேற்றும் வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கிறார்கள் நாளையும் வாழ்வார்கள் யாரென்றால் இனத்துக்காக ஈகம் புரிந்த மாவீரர்கள்!
-
- 8 replies
- 1.7k views
-
-
யாரைத்தான் நம்புவதோ? **************************** எழுபது ஆண்டுகளாக எம்மேல் ஏறி உழக்கியவர்களும் எம்மில் சவாரி செய்தவர்களும் எம்மினத்தை கொத்துக் கொத்தாக கொண்றழித்தவர்களும் எம்மை பயங்கர வாதிகளாக காட்டி வாக்கு பறித்தவர்களும் எம் தேசமெங்கும்-புத்தர் சிலை விதைத்தவர்களும் ஊழல் லஞ்சமென பெருக்கி உயிர் வாழ்ந்த அந்த அரசியல் தலைமைகளை.. சிங்களமக்களே! ஓடவெருட்டி ஒன்றுசேரும் இந்நேரம் இங்கோ. அனைத்துத் தரப்பும் மேடையில் ஏறி தமிழ் உரிமை தமிழ் விடிவு தமிழ் சுதந்திரம் தமிழ் ஈழத்துக்கான சம உரிமை. தமிழ்! தமிழ்! தமிழ்! எனக் கத்திவிட்டு-பின் தமிழை அழித்த இன…
-
-
- 7 replies
- 659 views
-
-
யார் இவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள் இவர்கள் முகம் ஞாபகத்தில் கூட இல்லையே எம் ஒவ்வொரு சறுக்கல்களிலும் கைகொடுத்ததாக நினைவில்லையே ஒருநேர உணவுக்கே நாம் திண்டாடியோது ஓடி வந்து உதவிய முகங்களில் இவர்கள் முகம் இருந்ததில்லையே போகவழி தெரியாமல் பரிதவித்தபோது எம் கைபிடித்து வழிகாட்டிய - அந்த நல்ல மனிதர்களில் இவர்கள் ஒருவரேனும் இல்லையே அடுக்கடுக்காய் வந்த சவால்களை சமாளிக்க நாம் திணறியபோது நம்பிக்கை கொடுத்த நாலுமனிதர்களுள் இவர்கள் நிழல்கூட வந்ததில்லையே இப்போது மட்டும் எப்படி ஓ..! இப்போது புதிதாய் பார்வை பெற்ற முன்னாள் குருடர்களோ இவர்கள் உறவு முறை சொல்கிறார்கள் உறவென்றும் சொல்கிறார்கள் மறுபக்கம் விமர்சனமும் செய்கிறார்கள் அவர்கள் அகராதியில…
-
- 0 replies
- 989 views
-
-
யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…
-
- 13 replies
- 2k views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10161088302041950&set=a.10151018148611950
-
- 2 replies
- 1.2k views
-
-
. . ரூமிக்கு -வ.ஐ.ச.ஜெயபாலன் , நலமா ரூமி, கவிஞர்களின் கவிஞரே உலரும் நமது உடலும் உயிரும் செளிக்க மது வார்க்கிறவர்கள் எங்கே? சுவர்கத்து நூலேணிகளில் இறங்கி வருகிறதே வசந்தம். பாரசீக ரோஜாவோ, மதுரை மல்லியோ தேன் சிந்துமுன்னம் நம் இதயங்கள் திறக்க வேண்டுமே?. . ”இதயம் திறக்கும்வரை உடைத்துக்கொண்டிரு” என்கிறாயே. ரூமி. ஆம், மூடிய இதயம் சிறையிலும் கொடிதே. ஆனாலும் உடைந்த இதயம் நினைவின் ஆறாப் புண்ணல்லவா? என்போல் நீயு…
-
- 8 replies
- 1.7k views
-
-
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகிறது காலம் கொடிய கொரோனா எனும் உயிர் பறிக்கும் அவலத்தால் முன்னேற் பாடாய் பரவாது , தனித்திருக்க வைக்க படட மனிதரை ஏக்கம் வாட்டுகிறது துள்ளித்திட்ட திரிந்த பள்ளிப்பிள்ளை அடக்கி வைக்க படுகிறது சற்று விளையாட விடடால் கணினியும் கை பேசியுமாய் அலைகின்றனர் தூக்க நேரம் குழம்புகிறது சோம்பலும் சோர்வும் கூடவே கொறிக்கும் தீனிகளும் உடலைக் கெடுக்கிறது கண்டதையும் வாயில் போட்டு மெல்ல வைக்கிறது அம்மாவுக்கு வீட்டிலிருந்து வேலை, அப்பாவுக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை பொறுமையீனம் எட்டிப் பார்க்க எப்போதடா வெளியில்போவோம் என மனம் ஏங்குகிறது கொண்டாட்டங்களி…
-
- 3 replies
- 1.4k views
-
-
வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது. வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன. எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது எதுவரைக்கும் தான் முடியும்? எழும்போது உலகம் தெளியும். வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன. வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது. உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள் கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன. முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன. மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன. செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள் நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது. எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன. சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது. ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட …
-
- 15 replies
- 2.7k views
-
-
வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…! ******************** 2019..! ஆண்டொன்றை முடித்து அனைவருக்கும் அகவையெனும். விருதை வழங்கி வெளிக்கிடும் ஆண்டே வேதனையும் சோதனையும் வெற்றிகளும் தந்தவனே உன் வாழ்வில் போன உயிர் உன் மடியில் பிறந்த உயிர் என்றும் மறவோம் நாம்-எனி எமையாள யார் வருவார். 2020..! உன்னுக்குள் எமை வைத்து ஓராண்டு உன்வாழ்வின் எண்ணற்ற நிமிடமெல்லாம் எமைக்காக்க வருவாயே! புதிய உன் வரவால் பூமித்தாய் மலரட்டும் புதுமைகள் பிறக்கட்டும் இயற்கை செழிக்கட்டும் இன்னல்கள் அழியட்டும் பொய்,களவு பொறாமை போலியான வாழ்க்கை போதைக்கு அடிமை சாதி,மத சண்டை சரும நிற வெறித்தனம் அரசியல் சாக்கடை ஆதிக்…
-
- 8 replies
- 1.9k views
-
-
வன்னி மக்களும் முள்ளிவாய்க்காலும் அது தந்த வலிகளும்
-
- 2 replies
- 940 views
-
-
எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும். . நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னிக்கு போய் வாழப் போறேன். படடனத்து வாழ்கை பகடடான வாழ்க்கையென பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு இரண்டு டுஷன் விட்டு படிக்க வைத்தார் அப்பா ஓ எல்பரீடசையில பாசான சேதி கேட்டு மூன்று பெணகள் கொண்ட முறைமாமன் தந்திரமாய் அழைக்கையிலே நானும் கொழும்புக்கு மேற்படிப்புக்கு போனேனடி கிரிபாத்தும் பொல் சாம்பலும் தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன் வங்கி வேலை கிடைத்தும் வளைத்துப்போடக் கதை விடடார். மூத்த மச்சாளும் மூலைக்குள் நின்று முழு நிலவாய் தெரிகையிலே பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 2022 பிறந்தது . சமைக்க காஸ் இல்லை மோடடார் சைக்கிள் ஓட பெட்ரோல் இல்லை பிரபாகன் …
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
She always reminds me my mum. Thanks you my marumakal Thevaki..மருமகள் தேவகியும் கணவன் றெஜீஸ்சும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். தேவகிக்கு என் அம்மாவின் கண்கள். இருவரும் என் அம்மா/ அவள் அம்மம்மா பற்றி நிறைய பேசினோம். அகதியின் வாழ்வு நினைவும் மொழியும்தானே. .2006ல் போர்க்காலத்தில் நோய்வாய்பட்ட அம்மா தனது இறுதியை உணர்ந்த தருணத்தில் என்னை தம்பி பாரதியின் செல்பேசியில் தொடர்புகொண்டாள். அம்மாவுக்கு நான் எப்போதும் எதற்கும் அஞ்சாத சாகசக்காரன் என்கிற நினைப்பு. அவளது பெருமகிழ்ச்சியும் தீராத கவலையும் அதுவாகத்தான் இருந்தது. அன்று அம்மா பேசிய முதல் வார்த்தையே அவளது இறுதி தீர்க்கதரிசனமாகவும் அமைந்துவிட்டது. அது என்னிடம் மன்றாடுவதாக அமைந்தது. “தம்பி எனக்கு என்ன நடந்தாலும் நீ இலங்கைக்கு வரக…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
History Repeats Itself வரலாறுகள் சுழண்டு கொண்டு தான் இருகின்றன அன்று ஒரு நாள் ஈழத்து கிழவன் ஒருவன் சமஸ்டி கேட்டான் இதே காவி உடை கண்டியில் இருந்து வந்த ஊர்வலத்தால் கடைசி வரை துன்பம் தொடர்ந்தது இன்று ஒரு நாள் இன்னும் ஒரு கண்டி ஊர்வலம் இது முஸ்லிமுக்கு மட்டுமல்ல ஈழ தமிழனுக்கும் இது ஒரு எச்சரிக்கை இந்துவும் முஸ்லிமும் இனி இணைந்தால் ஒழிய இலங்கை பெரும் தேசியம் எப்பவும் அடங்காது இரண்டு மாநிலமும் இணைந்த தீர்வு ஒன்று தான் இந்துவுக்கு முஸ்லிமுக்கும் பாதுகாப்பாகும் .
-
- 0 replies
- 1.1k views
-
-
வருக வசந்தமே-பா.உதயன் 🌺 வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியுதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது அழகிய கதிரவன் கண்ணைத் திறக்கிறான் ஆயிரம் பூக்களின் அழகு சிரிக்குது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு மணி ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது கனவுகள் உயிர்த்தொரு காலம் பிறக்குது காலைப் பொழுதொன்று மெல…
-
- 0 replies
- 797 views
-
-
வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக…
-
-
- 11 replies
- 660 views
-
-
வரும் “காலத்தை” வரவேற்போம்! **************************** எழுபது ஆண்டுகளாக இருள் மூடிக்கிடந்த எம் தேசத்தில்-ஒரு சிவப்புச் சூரியனின் வெண்மைக் கதிர்களின் வருகையின் வேகம். இது.. பழமைகள் பொசுக்கி புதுமைகளின் பொற்கால விடிவின் ஆரம்பக்காலம். விலை மதிப்பில்லாத உயிகளை விழுங்கிய இராட்சத முதளைகளின் முடிவுக்காலம். மக்களின் உதிரத்தை உறிஞ்சி அவர்களின் வரி பணத்தில் கோட்டை கட்டி கொடி உயர்த்திய கோமான்கள் குடிசை வாழ்வுக்கு திரும்பப் போகும் எதிர் காலம். பழய.. ஆட்சியாளர்களின் வயல்கள் எல்லாம் மறைத்து விதைக்கப்பட்ட தங்க மூட்டைகளு…
-
-
- 4 replies
- 1.1k views
-
-
வருவதை தள்ளி வாழுவோம் நண்பா..! ******************************* ஓலைக் குடிசையில் வாழ்ந்தனான் நண்பா ஒளிவு மறைவின்றி சொல்லுறேன் நண்பா காலை உணவுகூட கஞ்சிதான் நண்பா காலத்தால் நானொரு ஏழைதான் நண்பா வாழப்பிடிக்காமல் வாழ்ந்தநான் நண்பா -இந்த வையகம் ஏனென்று ஏசினேன் நண்பா பிறந்ததன் பயன் பற்றி யோசித்தேன் நண்பா பிடித்தது வாழ்க்கையில் பற்றொன்று நண்பா மனிதர்கள் எல்லோரும் வேறு வேறு நண்பா மடையராய் எங்களைப் பார்ப்பார்கள் நண்பா உலகத்தில் எல்லோரும் ஒன்றுதான் நண்பா உணர்ந்தாலே போதுமே வெல்லலாம் நண்பா. படித்ததன் வேலையோ கிடைக்கேல்ல நண்பா பாசங்கள் காட்டவோ யாருமில்லை நண்பா எடுத்ததன் பிறவியின் புரி…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஒரு முறை பிறந்து பல முறை இறந்து பட்டப் பகலில் பார்வை இழந்து பசியோடு அலைகிறோம் பார்பவன் யாரும் இல்லை போர் ஒன்று வந்து புயல் போல் வீச அங்கும் இங்குமாக அலைகிறோம் ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல மனிதப் பிறவியை மதிக்காத இந் நாட்டில் மனிதப் பிறவியே வேண்டாமையா என்று மனது உறுத்துகிறது மறுயென்மம் இருந்தால் பிறப்போம் நல்ல மனிதர்களாக …
-
- 32 replies
- 5.2k views
-
-