Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வா…

  2. போரோய்ந்த பூமியிலே வேறொன்றும் ஓயவில்லை நாளாந்த வாழ்வினையும் நீங்களும் வாழவில்லை வேரோடிப் போன மண்ணில் வீரர்கள் சாகவில்லை மண்விட்டுப் போனபின்னும் மானத்தைக் காத்திடவே விழுதுகள் தாங்கி உங்கள் வேதனை போக்கிடவே ஊரோய்ந்து போனபின்னும் உங்களைத் தாங்கிடவே உங்களின் பிள்ளைகளாய் நாங்கள் இருக்கிறோம் - உமக்காய் நாங்கள் இருக்கிறோம் சொந்த மண் தானிழந்து சுற்றங்களும் இழந்து சோர்ந்து நீர் தோள் சாய சொந்தச் சுவர் இழந்து ஊரூராய்த் திரியும் எங்கள் உதிரத்து உறவுகளே உங்களின் இருப்புக்காய் உணர்வுகள் தனைத்தாங்கி ஓய்ந்த உம் தலைசாய்த்து ஆறுதல் கொண்டிடவே உங்களின் உறவுகளாய் நாங்கள் இருக்…

  3. Started by நிலாமதி,

    தாமரை தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் -அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' தரையாக வார்க்கும்! நன்றி பொன்னியின் செல்வன்

  4. உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-

    • 1 reply
    • 1.3k views
  5. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீவந்து பாயுது காதினிலே – அங்கு எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி அடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம் மக்கள் மருமக்கள் வாழ்வு பெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய் ஆங்கில மோகம் தனி…

    • 2 replies
    • 1.3k views
  6. இதயத்தில்... குடிகொண்டிருக்கும்.. இதய தேவதையே.... !!! உன் தூக்கம்.... கலையக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக நடக்கிறேன்....!!! திடுக்கிட்டு... எழுந்துவிடக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக பேசுகிறேன்...!!! இரத்தச் சுற்றோட்டத்தில் ஓடி விளையாடும்... இதய தேவதையே.... விழுந்து விடாதே....!!! மூச்சுக்காற்று... உன்னை சுட்டு விடக்கூடாது.... என்பதற்காக.. கும்பக மூச்சு விடுகிறேன்......!!! @ எல்லாம் உனக்காகவே அன்புடன் கவிப்புயல் இனியவன்

  7. தேங்காய்ச் சொட்டு!🌴 ******************🌴 பட்டினி கிடந்து நாங்கள் சாகிறோம் பார்க்க இங்கு யாருமில்லை. பாராளுமண்ற உணவுக்காக-பலகோடி ஒதுக்குதல் நியாயமில்லை. அடுப்பு எரித்து எத்தனை நாட்கள் அம்மா,அப்பா வேலையில்லை-நாங்கள் உடுப்பு வாங்கி எத்தனை நாட்கள் ஊருக்கு வெளியில் போனதில்லை. அப்புவும்,ஆச்சியும் நட்டு வைத்த அழகான தென்னைமரங்களிவை இப்புவிதன்னில் எம்மைக்காக்கும் இதயம் நிரம்பிய வரங்களிவை. அரசை நம்பி உணவுக்கு அலைந்தால் ஆயுள் எம்மிடம் மிஞ்சாது அனைவரும் 🌴🥦மரங்கள் நட்டு வளர்த்தால் அகிலத்தில் பஞ்சம் எமக்கேது. அன்புடன் -பசுவூர்க்கோபி.

  8. ”மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்நல்ல கவிதையாய்” வாழ்வின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிளை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . டைட்டானிக் கனவு மனிதா உன் விஞ்ஞான வரைபடத்தில் ஏது மிதக்கும் பனிப்பாறை. எனினும் உன்னால் இயலுமே முழ்கையிலும் வயலின் மீட்டி சாவையும் வாழ்தல். ஞான் அறியும் நஞ்சு பருக விதித்த பின்னும் வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் …

    • 2 replies
    • 1.2k views
  9. நேற்று மழை பெய்தது நான் பெய்யச் சொல்லும் போது வந்த மழை அல்ல அது யாருக்காகவோ எவருக்காகவோ பெய்த மழை அது நான் துயர் ஊறிய கண்களும் வெப்பம் மிகுந்த மூச்சும் வெறுப்பேறிய பொழுதும் கொண்ட நேரத்தில் மழையை பெய்யக் கேட்டிருந்தேன் அது பெய்யவில்லை பொய்மையின் வீச்சில் மனம் பொசுங்கிய போது வெறுமையின் அடர் இருள் மனம் சூழ்ந்த போது எல்லாவற்றிலும் வெப்பம் படர்ந்த போது இந்த மழையை வா எனக் கேட்டேன் வரவில்லை நேற்று எவருக்காகவோ பெய்தது எவர் நிலத்தையோ நனைத்தது வீதி ஒன்றில் எவருமற்ற பூங்காவில் தனித்திருந்த ஒரு நிழற் குடையை சரித்துச் சென்றது யாருமற்ற இரவொன்றை நனைத்துச் சென்றது. பறவையின் கூடு புகுந்து சிறகுகளை…

    • 9 replies
    • 1.2k views
  10. Started by Kaviarasu,

    பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )

    • 0 replies
    • 1.2k views
  11. மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்

    • 3 replies
    • 1.2k views
  12. நீ மௌனமாய் இருப்பதில்.... புரிகிறது என் காதலுக்கு.... மலரஞ்சலி வைத்தது.... நீ..........!!! காதலுக்கு உரமே...... கனிவான பேச்சு...... காயப்படுத்திய உனக்கு..... அதெல்லாம் எப்படி...... புரியும்........? நீ பார்த்தநாள்...! மரணம் தாண்டி வாழ்ந்த நாள்..... இனி............... இறந்தாலும்....... உயிர்ப்பேன் .......... உன் கண்ணை விட கொடிய விஷம் எதுவும் இல்லை ....! @ இப்படிக்கு உன்..... கவிப்புயல் இனியவன்

  13. காணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்

    • 8 replies
    • 1.2k views
  14. பார்த்தவுடன் முடிவுக்கு வராதே.! ************************* கடலின் நடுவே மிதக்கின்ற ஊரை-ஒரு கதையாசிரியன் காணப்போனான் கோடை வெய்யிலில் எரிந்து கிடந்ததாம். உணவின்றி கால்நடை இறந்துகிடந்ததாம் வயலெல்லாம் வெடித்து பிளந்து கிடந்ததாம் வளரும் மரம்செடி விறகாய் தெரிந்ததாம் காய்ந்த பூமியென கதையே எழுதினான் கானாதோரை நம்பவே வைத்தான் -அது பாலைவனமென பரிந்துரை செய்தான்-தான் பட்டதுன்பமென பலதும் சொன்னான் புத்தகம் விற்று புகழுமடைந்தான். ஆறுமாதம் கழித்தொருவன் அந்த ஊருக்கே அவனும் போனான் பச்சைப்பசேலென மூலிகை இருந்ததாம்-மரங்க…

  15. கருப்பு வர்ணங்கள் பலவுண்டு அதிலே எனக்கும் ஓர் இடமுண்டு என் பெயரோ கருப்பு என்பர் அதனால் என்னை விரும்புவோா் சிலருண்டு அபசகுனமாய் எண்ணி என்னை வெறுப்போரும் பலருண்டு இருந்தும் நான் கவலை கொண்டதில்லை ஏனென்றால் வர்ணங்களில் என்னை மட்டும் ஓர் கவிஞ்ஞன் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என என்னை வர்ணித்து பாடியுள்ளான் ஓபாமா என்னும் கருப்பு மனிதன் வெள்ளை மாளிகையை அலங்கரித்த போது வெள்ளைமாளிகையில் கருப்பு நிலவாய் அண்றொரு நாள் நான் மிளிர்ந்தேனே அதனால் பேருவகை கொள்கின்றேன் என் பெயராய் இப்படிக்கு கருப்பாக ஈழநிலா

    • 3 replies
    • 1.2k views
  16. தணியாத தாகம் தன்னந் தனிமையிலே தள்ளாடும் வயதினிலே ஜன்னல் ஒர வான் வெளியை வெறித்துப்பபார்க்கிறேன். வாகன ஒடடம் ஜன நடமாட்டம் விரைந்து செல்கிறது எதையோ தேடி ஓடுகிறார்கள்.அன்றாடம் இது ஆடி ஓடி ஓய்ந்து போன கிராமத்துக்கட்டை காலனின் காகித வரவுக்காய் காத்திருக்கிறேன் ஆனாலும் ஒரு தாகம் என் தாயகம் நோக்கி இருப்பினும் முன்பு ஒரு தடவை சென்று தான் பார்த்தேன். என் வீடு தரைமடடமாகி புல் பூண்டு முட் செடிகள் மூத்தவன் ஒரு தடவை ஆள் வைத்து துப்புரவாக்கியவன் இருப்பினும் பஞ்ச பூதங்கள் தீ நிலம் நீர் ஆகாயம் காற்று பொய்த்துப்போகவில்லை மீண்டும் அவை முளைத்திருந்தன நான் நண்பனுடன் குளித்த கிணறு ஓடிவிளையாடிய மைதானம் சாமி கும்பிடும் கோவில் எல்லாம் தூர…

  17. இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!

  18. ஏன் இந்த வெறுப்பு..! *************** தெளிந்தோடும் நீரோடை கூட கழிவு நீர் சேறாகிப் போச்சு அழகான.. மலர்த் தோட்டம் கூட கருவேலம் முள்ளாகிப் போச்சு மானுட இதயங்கள் கூட மரத்துப் போய் கல்லாகிப் போச்சு இயற்கையின் ரசனைகள் கூட இருள் சூழ்ந்த புகையாகிப் போச்சு இந்த.. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரியாத போக்கினை எவன் தான் புகுத்தியது. நாக்கினில் நஞ்சையும் பொய்யையும் கலந்து இளையோர் மூளைக்குள் யாரவன் செலுத்தியது. வானிலே பறக்கின்ற மகிழ்ச்சியின் எல்லையை குறோதக் கூட்டினில் எவனோ குறுக்கியது. உலகத்தில் அழி…

  19. Started by nedukkalapoovan,

    கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.

  20. Started by karu,

    கொரணா விளைவு மரணாவஸ்தையில் தவிக்கும் உலக மனித குலத்தை மீட்டிடக் கொடிய கொரணா வைரஸை இல்லாதொழித்துக் கொண்டாடும் நாள் எந்த நாளோ. சுற்றம் கூடி அன்போடிருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் பயமே இல்லாதிருந்து சந்தோஷிக்கும் நாள் எந்நாளோ செல்லும் விருந்தை வாழ்த்தியனுப்பி சேரும் விருந்தை அன்போடழைத்து பொல்லாக் கொரணா இல்லா மகிழ்வில் பொழுதைக் கழிக்கும் நாள் எந்நாளோ? அந்த நாளிவ் அவனிக்(கு) உதிக்குமா? அனைவருமொன்றாய்ச் சேர்ந்திட வருமா? சிந்தையிலெந்தச் சந்தேகங்களும் சேராதுறவுகள் சிரித்திட முடியுமா? உற்றவர் கூடி உகுத்துக் கண்ணீர் ஊரின் புறத்தே தூக்கிச்செ…

    • 4 replies
    • 1.2k views
  21. "மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையா…

  22. இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது. .................................. இவ்வாறே அவர்கள் அரசனின் மாளிகையை சுற்றி வளைத்தனர் அன்று தேவ சபையில் அரசன் பல்லாயிரம் ஆடுகளை கொன்று தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி விருந்து கொடுத்து இருந்தான். வண்ணாத்திப் பூச்சிகளின் இறைக்கைகளை வெட்டி படையல் போட்டு இருந்தான் அதை புசித்தவர்கள் இன்று அவன் மாளிகையை சுற்றி வளைத்தனர் தங்களின் நாவு வரண்டு எச்சில் வற்றி விட்டதாக கிளர்ந்து எழுந்தனர் தாளா பசியால் …

    • 9 replies
    • 1.2k views
  23. ”காற்றரனாய்தீபத்தில் கூப்பிய கரம்போல்,அலைப்புறும் என்மீதுநம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.” . இருமை.- வ.ஐ.ச.ஜெயபாலன்..நான் சிறுசாய் இருக்கையில்உலகம் தட்டையாய் இருந்தது.எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டிஒளித்து விட்டானாம்.அப்போதெல்லாம்பகல்தொறும் பகல்தொறும்ஏழு வண்ணக் குதிரைத் தேரில்சூரியன் வருகிற வழி பார்த்திருந்துபாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்..ஒரு நாள் வகுப்பறையில்என் அழகான ஆசிரியைஉலகை உருண்டையாய் வனைந்துபிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.சூரியனை தேரினால் இறக்கிபிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.பின்னர் கல்லூரியிலோஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்கோடிகோடி சூரியன் வைத்தார்..இப்படியாக என்பாட்டியின் மானச உலகில்வாழ்வு மனசிலாகியது.கற்ற உலகி…

    • 2 replies
    • 1.2k views
  24. நான் எனும் நான் ------------ நான் இன்னும் எனக்கும் நானே சொல்லாத வார்த்தைகள் என்னிடம் உள்ளன அந்த வார்த்தைகளின் அடியில் தேங்கி கிடக்கின்றது பெருங் காடென விரியும் துரோகம் நான் எனக்கு எழுதாத சொற்கள் நிறைய உள்ளன அதன் உச்சரிப்புகளில் மறைந்து கிடக்கின்றன நான் பலரை தூற்ற நினைத்த வசவுகள் நான் பார்க்க விரும்பாத பல பக்கங்கள் உள்ளன அதன் வரிகளில் நிறைந்து கிடக்கின்றன இரக்கமற்ற நினைவுகளும் ஈரம் காய்ந்த என் உணர்வுகளும் நான் கேட்க மறுக்கும் பாடல்கள் உள்ளன தன் வரிகளில் கண்ணீரையும் துரோகங்களையும் காட்டாறு எனப் பாயும் தோல்விகளின் வரிகளையும் சுமந்த படி நான் பார்க்க விரும்பாத ஒரு முகம் எனக்குள்ளது அதன் அத்தன…

  25. இது குளிர் காலம்..! ***************** பார்க்கின்ற மரமெல்லாம் பட்டதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் உயிர் இருந்து உறக்கமின்றி முளித்திருக்கும். அடுத்த சமர் வரவையெண்னி அரும்புவிட காத்திருக்கும் இழந்த இலையனைத்தும் இருமடங்காய் வளருமென்ற உறுதியுடன் நம்பித்தான் உள்ளுக்குள் உயிர் இருக்கும். இதைப்போலே… சோகங்கள் துக்கங்கள் சுற்றியெமைத் தாக்கினாலும் மனவுறிதி எமக்கிருந்தால் மரம்போலே துளிர் விடலாம் குளிரென்ன கோடையென்ன கொரோனாவே விலகியோடும். -பசுவூர்க்கோபி-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.