கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
வானம் கருக்கட்டத் தொடங்கியது! ஒரு பிரசவத்துக்குத் தயாராகும் தாயின் முனகல்களைப் போன்று... மெல்லிய இடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின! வானத்திலிருந்து பூமியை நோக்கிய மின்னல்கள் கடல் நீரின் மேற்பரப்பில் பட்டுச் சைக்கிள் சக்கரங்களைப் போல உருளத் தொடங்கின! 'சூட்டி' தோளில் ஒரு அலவாங்கொன்றைச் சுமந்த படி கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தான் ! கோவிலடிக் கேணியில் நீச்சல் பழகி, மழைக்காகக் கேணிக்கட்டில் ஏறி நின்ற எங்களுக்கு அவன் நடந்து வருவதைக் கண்டதும் எந்த விதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை! ஏனெனில் அவனது பட்டப் பெயரே 'மூளை சூட்டி". அவனுக்கு அப்பா அம்மா வாய்த்த பெயர் 'பிறை சூடி' என்னடா இந்தப் பேரைக் காவிக் கொண்டு சீவியம் முழுக்கத் திரிய என்னால முடியாது! அதால என்ர பேரை மாத்தப் போ…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல் எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று .அல்லது இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட ஓடிப்போனவன் என்று ,சொல்லும் போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டா உனக்கு இப்ப முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு என்று கிழவி கலைக்கும் .. பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது ஊரே ஒரே பரபரப்பு, இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறன் சரி அடிபாடு தொடங்க போகுது என்று, எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓ…
-
- 5 replies
- 1.8k views
-
-
விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன்) (பாலகுரு சுவேந்திரன் - பிறப்பு - 1965ம் ஆண்டு) வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன். கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚'சொல்லுக்கு முன் செயல்' இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி. திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொ…
-
- 3 replies
- 1.8k views
-
-
( இப்பதிவு வாலிபவயதுக் குறும்பு பாகம் 6 ன் தொடர்ச்சியாகும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=138217 ) அவன் அம்மாவும், மஞ்சுவின் அம்மாவும் அடைப்பில்லாத அந்த வேலிநடுவில் இருந்த வேப்பமரத்தடி வேரில் அமர்ந்து ஊர்க்கதை, உறவுக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, அவனும் மஞ்சுவும் மணலில் வரம்புகட்டிக் கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடிய காலத்திலிருந்து, இனிப்புக்கும், பலகாரத்திற்கும் அடிபடுவதும், கோள்சொல்லி அவள் அவனை அடிவாங்க வைத்து ரசிப்பதும், பாசத்தோடு காக்காக் கடி கடித்து அவள் அவனுக்கு மிட்டாய் ஊட்டிவிடுவதும், பூப்பறித்து அவன் அவள் தலையில்சூட்டி அழகுபார்ப்பதும்,, அந்த இரு தாய்மார்களையும், பூரிப்படைய வைக்கத்தான் செய்தது. அவர்கள் உள்ளங்களில் இனிமையான கற்பனைகள் வளர்ந்…
-
- 10 replies
- 1.8k views
-
-
மௌனமான யுகங்கள் இன்பமான அதிர்ச்சியோடு தான் இந்த நாள் ஆரம்பித்தது, இன்னொரு புதிருக்கு விடை தரப்போவதும் தெரியாமலே! எதிர்பாராத விதமாக இன்று காலையில், அவசர அவசரமாக, எண்ணி ஒரு சில ஊழியர்களை மட்டும், அவர்கள் கடின உழைப்பை அங்கீகரித்து, பணி உயர்வு குறித்துப் பேச வேண்டும் என, முகாமைத்துவ அதிகாரி தனது அலுவலகத்துக்கு வருமாறு பணித்திருந்தார். அந்த ஒரு சிலரில் அவனும் ஒருவராக இருந்தான். அழைக்கப்பட்ட அனைவருமே நேர்மையான, கடின உழைப்பை விரும்புகின்ற ஊழியர்களாக இருந்தது அங்கு தொழில் புரிகின்ற அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தாலும் எப்படி இவர்களைத் தெரிவு செய்தார்கள், யார் இவர்களைக் கண்காணித்தார்கள், எப்படி இது சாத்தியமாயிற்று என்பதெல்லாம் தெரியாத, புரியாத புதிராகவே இருந்தது. …
-
- 6 replies
- 1.8k views
-
-
ஒர் அகதியின் கதை என் ஈழத்திரு நாட்டிலே யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் உறவுகளைத் தொலைத்த சோகங்கள் சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும் வரலாறாய் இருக்கும். கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை ஈந்த பெற்றோர் கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின் கதை. 1990இல் ஒரு ஆவணி மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின் ராணுவத்தினர் தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பி…
-
- 2 replies
- 1.8k views
-
-
அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஏனென்றால் எப்போதும் அவன் மற்றவர் முன் முகம் சுளித்ததே இல்லை. எப்போது பார்த்தாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. உதவி என்று கேட்கத் தேவையே இல்லை. அதை எந்தக் கஷ்டம் வந்தாலும் செய்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். யாருமே அவனை வெறுத்ததேல்லை. சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டும் இப்ப கொஞ்சக்காலம்தான் காசு கையில் தங்குகிறது. சொந்தமாகக் கடை வைத்திருக்கிறான் தான். ஆனாலும் கடன் கேட்பவர்களுக்குக் குடுத்து, பிள்ளைகள் ஆசைப்பட்டது எல்லாம் வங்கிக் கொடுத்து, பிள்ளைகளுக்கு டியூசன் காசும் கட்டவே காசு கரைந்துவிடுகிறது. இத்தனை நாளும் இருந்தது வாடகை வீட்டில் தான். இவனுக்கேற்ற மனைவி பிள்ளைகள். சொந்த வீடு வேண்டும் என்று மனைவி என்றும் கேட்டதே இல்லை. ஆச…
-
- 11 replies
- 1.7k views
-
-
அவள் மனம் போலவே எங்கும் இருண்டுபோய் அடை மழை பெய்துகொண்டிருந்தது. பஸ்ஸில் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தபடியால் பூட்டிய கண்ணாடி யன்னல்களின் ஊடே தெறிக்கும்மழை நீர் அவள் முகத்திலும் இடைக்கிடை விழுந்தது. ஆனாலும் அதைத் துடைக்க வேண்டும் என்னும் நினைப்பே அற்று மழை நீரில் இருண்ட வானத்தைப் பார்ப்பதற்கான முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள் சந்தியா. ஏன் தான் இந்த உலகில் பிறந்தேனோ என்னும் சலிப்பு மனதில் எழ, எனக்கு வேறு வழியே இல்லை என்னும் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு மாற்று வழி தெரியாது, பெருமூச்சு ஒன்றே வெளிவந்து அவளை அசுவாசப்படுத்தியது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான் எனில் ஒன்றை மட்டும் இறுகப் பற்றியபடி ஏன் வாழ்வை நாம் எதிர் கொள்ள வேண்டும். அந்த ஒன்றே யாதுமாகி, எதையும் அலட்சியம் செய…
-
- 6 replies
- 1.7k views
-
-
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.நன்றி ;சுஜாதா -------------சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;-------------தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?கதை: முதலிரவில் கேள்வி-------------- என் கதைகள் தொடருது -------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை
-
- 1 reply
- 1.7k views
-
-
அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டு…
-
- 8 replies
- 1.7k views
-
-
சனிக்கிழமை காலை பத்துமணிஇருக்கும் தொலைபேசி அடிக்கின்றது. வேலை இடத்து தொலைபேசி இலக்கம் தொலைபேசியில் மின்னுகின்றது.வேலை சற்று பிசி எனவே வாரவிடுமுறைக்கு ஓவர்டைம் செய்ய வருவதாக மனேஜரிடம் சொல்லிஇருந்தேன் .சனி காலை நித்திரையால் எழும்ப கொஞ்சம் பஞ்சியாக இருந்தது, மனைவி தானும் சனிகாலை சொப்பிங் செல்ல வருவதாக நண்பிக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டதாக சொன்னார் .இனியென்ன மெல்ல கட் அடிப்பம் என்று சின்ன மகனுடன் கட்டிபிடித்துக்கொண்டு தூங்கிவிட்டேன். இப்ப மனேஜர் போன் அடிக்கின்றான் என்ன பொய்யை சொல்வம் என்று நினைத்தபடியே ரிசீவரை எடுக்கின்றேன் “Hi Perry, Darrell here . ஏன் இன்று வேலைக்கு வரவில்லை ,செய்தி கேள்விப்பட்டாயா” என்கின்றான் . “நான் மனேஜர் பிரையன் என்று நினைத்து பயந்துவி…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம் .இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு என பிரிக்கிறது.இக்கிராமத்தில் 27/11/1963 அன்று திரு,திருமதி இராசையா தம்பதியினருக்கு இளைய மகனாக பாத்தீபன் பிறந்தான். அவனது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர்.அவனது தாயார் அவன் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து போனார்.இவனது தந்தை தாயாகவும் தந்தையாகவும் இவனையும் இவனது மூன்று மூத்த சகோதரர்களையும் வளர்த்தார். இவன் சிறுவயதிலிருந்தே இரக்ககுணம் நிறைந்தவனாகவும் எல்லோருடனும் பாசமாய் பழகுபவனுமாய் இருந்தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் யாழ் இந்துக்கல்லூரியில் கற்கும் வரம் பெற்றான்.யாழ் இந்துக்கல்லூரி பல கல்விமான்களையும் விடுதலைப்போராளிகளையும் தந்த …
-
- 9 replies
- 1.7k views
-
-
இருள் வெளியின் விடிவெள்ளி. காலிக்கடற்கரையின் அலைகள் அவனது கால்களை வந்து வந்து நனைத்துச் சென்று கொண்டிருந்தது. அலைகளோடு கரைந்து கனவுகள் நுரையாக கண் முன்னே பரந்து கொண்டிருந்தது. மக்களுக்காக மக்களின் வாழ்வுக்காக கரைந்து போகும் நஎண்ணத்தை அந்தக் கரைகளில் நின்றே பலமுறை உரக்கச் சொல்லியிருக்கிறான். மனிதர்களின் குரல்களைவிட அலைகளின் குரலே அவனது காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது. அந்தக் கரையோர மணலில் வெறும் கால்களைப் புதைத்துக் கொண்டு சற்று நேரம் எதையோ யோசித்தான். தான் பிறந்த கரையோரக் கிராமத்தின் நினைவுகள் வந்திருக்க வேண்டும். முகத்தில் அறைந்த கடற்காற்றின் மென்விரல்கள் அழகாய் வாரியிருந்த தலைமுடியைக் குழப்பியது. விரல்களால் தலைமுடியைக் கோதினான். அங்கங்கு காதல் சோடிகள் காத…
-
- 8 replies
- 1.7k views
-
-
அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன! மாலை நேரத்தில் அவன் அந்தக் கடற்கரைக் கோவிலுக்கு வருவதும், அந்தக் கடற்கரையின் ஓரத்தில் காலடிகள் பதிய நடப்பதும், சற்று நேரத்தில் அந்தச் சிற்றலைகள் அவனது காலடிகளை நனைத்து அழிப்பதும், அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடந்து வரும் சம்பவங்கள்! தகிக்கும் தாம்பாளத் தட்டாக, கதிரவனும் தனது அன்றைய பணியைச் செவ்வனே செய்த ஆத்ம திருப்தியுடன், மெல்ல மெல்ல மேல் திசையில் மறையும் காட்சியும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்! அவனது பெயர், அவனுக்கே மறந்து போய் விட்டு நீண்ட நாட்களாகி விட்டது! இப்போதெல்லாம் அவனுக்கு ஊர்ச்சனம் வைத்த பெயரே, அவனது பெயராக நிலைத்து விட்டது. அந்தப் பெயர் தான் ‘விசரன்' ! கொஞ்சம் வளர்ந்த சனங்கள், கொஞ்சம…
-
- 13 replies
- 1.7k views
-
-
சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். 'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ?' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள். மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்க…
-
- 9 replies
- 1.7k views
-
-
வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது . ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற நாம் படும் பாடு இருக்கிறதே, ஐயகோ, அவற்றை நாம் வெறுமனியே வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது . அது சிறு செயலாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பொறுப்பை ஏற்று அப்பணியை செவ்வனவே செய்து முடிக்க வேண்டியும் இருக்கலாம் . ஒவ்வொரு முயற்சிக்கும் முதல்படி நாம் அப்பணியை நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று எம்முள்ளேயே ஒரு திட்டம் இயல்பாகவே தோன்றிவிடும் . அப்பணியை செய்து முடிக்கும் வரை எமது உள்ளமும் அமைதியின்றி அல்லலுறும் . நிம்மதியின்றி அடிக்கடி செய்து முடிக்க வேண்டிய அப்பணியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியும் இருக்கும் . ஆனால் எத்தனையோ இடர்பாடுகளின் பின் தீவிர முயற்சி தோல்வி பெற்றால் அது தரும் ஏமாற்றம் ம…
-
- 11 replies
- 1.7k views
-
-
எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு …
-
- 14 replies
- 1.7k views
-
-
முத்தப்பா, வயது எழுபது . ஊரின் கால அடையாளம். பெரு மழை இரவுகளிலும் நூலகத்தின் வாசலில் குந்தி இருப்பார். அல்லது கோயிலடி மடத்தில் படுத்திருப்பார். கம்பராமாயணம் முதல் சகுந்தலா காவியம் வரையும், கிளிண்டன் முதல் ஜாக்கிசான் வரையும் அவரிடம் தகவல் இருந்தது. பட்டிமன்றங்களிலும் சரி ஐயர் ஓதும் மந்திரங்களிலும் சரி பிழை பிடித்து ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது முத்தப்பாவினதாகவே இருக்கும். இப்படிதான் ஒரு திருமண நிகழ்வில் ஐயர் வீடு குடிபுகும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை சொல்லிவிட்டார் என்று சண்டையைக் தொடக்க..ஐயர் இங்கேயும் இப்ப நடப்பது புது வீடு குடிபுகுதல் மாதிரித்தான் அதனால் இந்த மந்திரமும் சொல்லலாம் என்று சமாளிச்சு போனதை அம்மா நெடுக சொல்லுவார். எந்தளவு படிச்ச …
-
- 6 replies
- 1.7k views
-
-
அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள்…
-
- 6 replies
- 1.7k views
-
-
2010 ஜனவரியோடு அவனும் அஞ்சலியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிடும். இந்த நிலையில்தான், அஞ்சலி அவனுடன் பேசும்போதெல்லாம்.... அடிக்கடி அவனிடம் ஒரு விடயத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள். "எப்பயடா உன்னை பாக்கிறது?" என அவள் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, அஞ்சலி அவனை ரொம்பவே மிஸ் பண்ணுறாள் என்பதனை இவனால் உணரமுடிந்தது. ஆனால் இவனது அப்போதைய சூழ்நிலை அவளது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை 'அஞ்சலியை பார்க்கவேணும்... அவளோடையே இருக்கவேணும்....ரொம்ப சந்தோசமாக.... மனம் நிறைந்த காதலோடு வாழவேணும்..... !' இதைத்தவிர அவனுக்கு அதிகபட்ச ஆசைகள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனது எண்ணமும் சிந்தனையும் அதுமட்டுந்தான். அவனது மனம் பூராவும் அஞ்சலியும் அவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
Neasden நகரின் பிரதான வீதியில் Black Bird Hill வளைவில் இருக்கும் Texaco பெற்றோல் நிரப்பு நிலையம். நேரம் காலை பத்தரை என்பதால் வேலைக்கு ,பாடசாலைக்கு செல்வோரின் போக்குவரத்து சற்று அடங்கி வீதிகளில் வாகன நெருக்கடி குறைந்திருக்கு .கறுப்பு நிற மோட்டார் பைக் ஒன்று பெற்றோல் நிலைய ஆறாவது Pump இன் முன் நிற்கின்றது .வெவ்வேறு PUMP களில் இரண்டு கார்கள் பெற்றோல் நிரப்பபட்டுகொண்டிருக்கின்றன .மோட்டார் பைக்கில் வந்தவன் Helmet ஐ கழட்டாமல் மோட்டார் பைக்கின் பெற்றோல் நிரப்பும் தாங்கியின் மூடியை திறக்கின்றான் . பெற்றோல் நிலைய Cashier மோட்டார் பைக் முழுக்க தெரியாமல் பெற்றோல் pump இன் பின் சற்று மறைத்து தரித்திருந்ததால் அதன் இலக்கத்தை பார்க்க முடியாமல் முதலில் உள்ளே வந்து காசை செலுத…
-
- 8 replies
- 1.7k views
-
-
வழிப்போக்கன்..! ****************** வறுமையின் காரணமாக உலக சந்தையில் நாட்டை துண்டு துண்டாக்கி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.வந்த வழிப்போக்கன் கேட்டான் உள்ளுரில் ஒரு துண்டைக்கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் உங்களுக்கே உணவு தந்திருப்பார்களே! இந்தநிலை வந்திருக்காதே! என்றான்.மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்த பெரியவர் அவர்களை வைத்துத்தான் ஆட்டமே நடக்குது என்றார். அரசமரத்தடியில் இருந்த புத்தபெருமான் இது எத்தனைநாளுக்கென்று சிரித்தார். உணவின்றி,உடையின்றி,எரிபொருளின்றி,நோய்க்கு மருந்தின்றி குழந்தைகளுக்கு மாப்பாலின்றி எத்தனை எத்தனை கொடுமைகளைப் புரிந்தும் வெண்றவர்கள் அவர்கள். அதுபற்றி உனதுமக்களும் புரிந்துகொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம்.கொடுத்திருக்கிறீர்களென வழி…
-
- 4 replies
- 1.7k views
-
-
காலை நாலரைக்கு அடிக்கும் முதல் விசில் கேட்பதுக்கு சந்தர்ப்பம் இல்லை நித்திரை அமுக்கி வைத்து இருக்கும் அதுக்கு பிறகு இரண்டாவது விசில் இரண்டுதரம் பறக்கும் திடுக்கிட்டு முழிச்சா அவன் அவன் இது என்ட இது உண்ட என்று இழுபாடு நடக்கும் பொழுது வெளிக்கும் வெளிச்சத்தில் இதால நாங்க எப்பவும் கலட்டி மடிச்சு தலைமாட்டுக்கு கீழவே வைத்து படுக்கிறது ..எழும்பின வேகத்தில் நித்திரை வெறியில் மாறி மாறி எடுத்துக்கொண்டு ஓடினா வரிசை கட்டி நின்று நம்பர் சொல்லிட்டு அவர் அவர் தங்கள் குழுக்களுடன் தங்களுக்கு கொடுத்த கிணத்தடிக்கு போனா வாளி சண்டை நடக்கும் சரி ஒருத்தன் குளிக்க பக்கத்தில நின்று குளிப்பம் என்றால் மற்றவன் காலுக இருப்பன் அங்கால போடா என்று வாளிய விட்டா அது கீழ உள்ளவன் தலையில விழும் ஐயோ என்று அவன்…
-
- 5 replies
- 1.7k views
-
-
தலைப்பு : முக பவுடர் முக பூச்சு சாயங்களுடன் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தவள் திடீரெனகத்தினாள்கதை ; கண்ணாடி ^^^ஒரு வார்த்தை கதைகள் எழுத்துருவாக்கம் கே இனியவன் மேலும் தொடரும்
-
- 0 replies
- 1.7k views
-
-
வணக்கம் சேர் ..... இந்த வருட இறுதி பரீடசை நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம் வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம் கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு பாஸ் பண்ணி விடவும். எப்படியும் மற்ற பாடங்களில் தேறி விடுவேன். ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான் பெயிலானால் அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட குடும்பம் அம்மா களை எடுக்க போய் தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு கீழே இரண்டு தங்கைமார். நான் படிச்சு வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்ட…
-
- 3 replies
- 1.7k views
-