கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
656 topics in this forum
-
"சோம்பல் தவிர்" "முயற்சியை தடுக்க கூடியவன் ஒருவனே! அவனே, சோம்பல்!!" ஒரு முறை ஆசிரியர் ஒருவர், சோம்பல் மாணவர்களை கொண்ட வகுப்பறைக்கு அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கமுடன் போனார். எனவே அவர் அங்கு போனதும் மாணவர்களைப் பார்த்து ' நான் இந்த வகுப்பறையில் இருக்கும் அதி கூடிய சோம்பல் மாணவருக்கு ஒரு வெகுமதி கொடுக்கப் போகிறேன், யார் சிறந்த சோம்பல் மாணவர்களோ கை உயர்த்துங…
-
- 0 replies
- 366 views
-
-
மதியரசி குரு.சதாசிவம் நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக மாற்றலாகி வந்து மூன்று நாட்கள்தான்,ஆகியிருந்தது..பாடசாலைக் கட்டடத்தின் கலையம்சம்மிக்க அழகும், அமைப்பும் பார்ப்பதற்குப் பிரமிப்பாயிருந்தது. சக ஆசிரியர்களும் எனது சேவை அனுபவம் கருதி நெருக்கத்திலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு“மதியரசி” என்ற பெயர் ஆசிரியர்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசப்படுவதும் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுவதும் இவள் யாரென்று அறியவேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டது.முதலில் பாடசாலையின் எழுது வினைஞராகவோ அல்லது சிற்றூளியராகவோ இருக்கலாமென்றே நினைத்தேன்.அந்த இரு பதவி நிலைகளிலும்…
-
- 10 replies
- 2.4k views
- 1 follower
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு மைற்கல் மட்டுமல்ல அது ஒரு திருப்புமுனை. 1997 ம் ஆண்டே, கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதிக்கான வேவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிளிநொச்சி ஆனையிறவு வேவு நடவடிக்கை கடினமானதாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு படைப்பிரிவு வேவு நடவடிக்கையை ஆரம்பித்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை அடைய முடியவில்லை. இதனால் செம்பியன் வேவு அணி, சாள்ஸ் அன்ரனி வேவு அணிகள் வேவு நடவடிக்கையைப் பொறுப்பெடுத்தன. பாரிய நிலப்பகுதியை உள்ளடக்கி, பல கட்டமைப்புக்களுடன் கூடிய காப்பரண்களைக் கொண்டு அமைந்த இப்படைத்தளங்களின் தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு உட்பகுதி வேவுத்தகவல்களே மிக அவசியம் ஆனவையாக இருந்தன. உட்பகுதி வேவுத்தகவல்கள் இன்றி திட்டத்தை த…
-
- 9 replies
- 4.7k views
-
-
நான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் . மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது…
-
- 18 replies
- 1.9k views
-
-
தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது. நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பை…
-
- 2 replies
- 1.2k views
-
-
மனம் சாய்ந்து போனால்........ 'டேய் மச்சான் ஏதும் பிரச்சினை வராது தானே?' ஜந்தாவது தடவையாக கண்ணனிடமிருந்து கேட்கப்பட்ட அதே கேள்வியால் சிறிது எரிச்சலடைந்த ரமேஸ், 'டேய் சும்மா இரடா, இதோட எத்தனையாவது தடவையா இதே கேள்வியை கேட்பாய்?' என்றான் சலிப்புடன், 'உனக்கென்னடா? எனக்கு பயமா இருக்கடா ' 'பயமா, இது எப்பவோ இருந்திருக்க வேண்டியது, இப்ப பயந்தா வேலைக்காகாது. மாப்பிளையா இலட்சணமா இரு' 'சொன்ன மாதிரி கவிதா வந்திருவாளாடா?' 'இங்க பாரடா, நீயும் ரென்சனாகி எங்களையும் ரென்சனாக்காத, ஆனந் வரும்போது கவிதாவோடதான் வருவான்' 'எதுக்கும் ஒருக்கா போன் பண்ணிப் பாரடா' கண்ணன் முள்மேல் நிற்பதுபோல் அவஸ்தைப்படுவதை அவதானித்த ரமேஸ் 'சரி சரி நான் போன் பண்ணுறன் நீ ரென்சனாகாத' 'டேய் ஆனந் என்னடா? எங்…
-
- 3 replies
- 1.8k views
-
-
நாவினால் சுட்ட வடு( சிறுகதை) அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார். அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கே…
-
-
- 1 reply
- 550 views
- 1 follower
-
-
வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் …
-
-
- 7 replies
- 639 views
-
-
. விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மதபக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள். வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும் செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா" டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற…
-
- 21 replies
- 6.5k views
-
-
அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும் வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது. நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்…
-
- 20 replies
- 3.7k views
-
-
பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறி…
-
- 19 replies
- 3.6k views
-
-
வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் ! “லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்) வீரனாய் – 07.09.1979 வித்தாய் – 20.04.2009 பிறந்த இடம் – இடைக்காடு கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்” ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தின…
-
- 21 replies
- 5.2k views
-
-
நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்.. படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்…
-
- 11 replies
- 2.6k views
-
-
"லுமாலா" சைக்கிள் ----------------------------------------------------- 1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது. 2.நான் அறிய எங்கட ஊரில 1985,86 களில் (அப்ப நான் பால்குடி..இருந்தாலும் நினைவு இருக்கு)எங்கட ஊரில விரல் விட்டு எண்ணுற ஆக்கள் தான் சைக்கிள் வைச்சிருந்தவை.அதில எங்கட அப்புவும் ஒருத்தர்.( பெருமை பேசுறன் எண்டு குறை நினையாதையுங்கோ..) 3.அந்த மனிசன் அந்த சைக்கிளை விடியக்காலமை எழும்பினவுடன ஒரு சிரட்டையில மண்ணெண்ணையும் தேங்காய் எண்ணையும் கலந்து , அதை ஒரு சீலத்துணியால கம்பிகள் எல்லாம் துடை துடை எ…
-
- 14 replies
- 3.7k views
-
-
தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…
-
- 27 replies
- 2.7k views
-
-
Sunday, April 19, 2020 உலையும் மனசோடு அலையும் இரவு. - சாந்தி நேசக்கரம் - குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன். றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய் மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது. வெயில் ஏறாத கால…
-
- 6 replies
- 2.6k views
-
-
"மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரிய…
-
- 0 replies
- 174 views
-
-
பிரான்சுக்கு முதல் முதலில் வந்தவர் என்பதால் அவரை எல்லோருக்கும் தெரியும் வருபவர்கள் எவரும் அவரது விலாசத்தை மட்டும பிடித்தபடியே தான் பிரான்சுக்குள் புகுவர். அது போதும் என்ற நம்பிக்கை. வந்தவுடன் தங்க இடம் சாப்பாடு உடுப்பு விசா வேலை.......... எல்லாமே அவர் செய்வார். நானும் பார்த்திருக்கின்றேன். அவரது வீட்டில் உலை எப்பொழுதும் கொதித்தபடியே தான் இருக்கும். சோறு போட்டபடியே இருப்பார்கள். கறி என்றால் இறைச்சி அல்லது மீன் சிலவேளை கருவாடு. இது முடிந்தால் சமாளிக்க கத்தரிக்காய் கறியும் இருக்கும். பின்காலங்களில் பருப்பு. ஒரு ரூம்தான். சாய இடமிருந்தால் எவரும் படுத்து நித்திரையாகலாம். நின்று கொண்டே நித்திரை செய்தவரை பார்த்திருக்கின்றேன். இவ்வளவையும் பார்த்த…
-
- 13 replies
- 1.2k views
-
-
சுமாரா அவளுக்கு ஒரு 17 வயது இருக்கும். தமிழ் பண்பாட்டுக்கு உரிய நான்கு குணமும் இருக்கு முதல் நாள் பார்வையில் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்தாள். யார் இவள்? ஒருநாளும் இவ்வழியில் நான் கண்டதா இல்லை என யோசிச்சு நிக்கையில் மறுபடியும் மூலையில் திரும்பும் போது கடைக்கண்ணால் ஓரப்பார்வை வீசிபோனால். பல முறை இடம் பெயர்ந்து பல இடங்களில் இருத்து எழும்பி வந்த எனக்கு பல பெண்களை கடந்து போன எனக்கு இவள் மட்டும் எப்படி என் உள் மன இடைவெளியில் குடி புகுந்தால்? மறுபடியும் இவ்விடத்தால் வருவாளா இல்லையா அல்லது யாரவது ஒரு சிநேகிதியை தேடி வந்தவளா இருக்குமா என பல கேள்வி எழ பல்லை தீட்டியபடி கிணற்றடியில் நின்று யோசிச்சு கொண்டு வாளியை கிணற்றுக்கு விட்டனான் கயிற்றைபிடிக்க மறந்து போனேன் . தண்ண…
-
- 16 replies
- 1.7k views
-
-
நாகரிகத்தின் அனைத்து விழுமியங்களையும் கூவிக்காட்டும் கனவான்களும் சீமாட்டிகளும் நடந்துகொண்டிருந்த ஒரு மதியப்பொழுது. ரொறன்ரோவின் டவுன்ரவுன் தனக்கேயான சுறுசுறுப்புடன் துடித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக கற்பனைகளில் நடந்து சென்ற எனக்குப் பாதையோரம் ஒரு புதினம் காத்திருந்தது. சாக்கு விரித்து அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரன். அழுக்கு உடுப்பு, பாசிபடர்ந்த பல்லு, ஒரு சாதாரண ரொறன்ரோ நகரப் பிச்சைக்காரன். ஆனால் அவனருகில் இரு நூல்கள் இருந்ததே புதினம். ஓன்று ஹேர்மன் ஹெஸ்ஸியின் 'சித்தார்த்தா', மற்றையது றே பிறாட்பறியின் 'பரனைற் 451'. பிச்சைக்காரனோடு நூல்களைச் சமூகம் சம்பந்தப்படுத்திப் பழக்கியிராததால் அக்காட்சி எனக்குப் புதினமாக இருந்தது. புதினத்தைக் கண்டால் நின்று பார்க்கும்…
-
- 13 replies
- 1.4k views
-
-
கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன். அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது. தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்…
-
- 18 replies
- 2.2k views
-
-
அமீபா குளம் -------------------- அமீபா ஒரு ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது. அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின…
-
-
- 25 replies
- 2k views
- 1 follower
-
-
இதயங்களின் மொழி -------------------------------- அண்ணனைப் பார்க்கும் போது அவருக்கு சத்திர சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. அண்ணனின் இதயத்தை திறந்து சிகிச்சை செய்திருந்தார்கள். அண்ணன் எப்போதும் மிகவும் தெளிவானவர். வாழ்வை இலேசாக எடுத்துக் கொண்டவரும் கூட. இப்போது சத்திர சிகிச்சையின் பின் முகத்தில் தெளிவு இன்னமும் கூடியிருந்தது, சந்தோசத்தையும் நன்றாகவே காட்டினார். அண்ணனுக்கு மூன்று அடைப்புகள் இருக்கின்றதென்றே இதயத்தை திறந்தார்கள். திறந்த பின் நான்காவதாக இன்னொன்று இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அதையும் சரிசெய்தார்கள். அது கூட அண்ணனின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமோ தெரியவில்லை. அதற்காக எல்லோரும் இப்படித்தான் இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. எ…
-
-
- 3 replies
- 309 views
- 1 follower
-
-
அன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ஜோக் அடித்தாராம். அதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என்று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர். கையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார். எனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத்…
-
- 11 replies
- 4.4k views
-
-
"கார்த்திகை தீபம்" [சிறுகதை ] இன்று கார்த்திகை தீபம், 2022. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள…
-
-
- 2 replies
- 243 views
-