கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
657 topics in this forum
-
"வெள்ளந்தி மனிதர்கள்" கள்ளங்கபடமற்ற அப்பாவியாக, வெள்ளந்தியாக அல்லது காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு கொண்டவர்களாக, பத்தாம்பசலியாக, அதிகமாக கிராம புறங்களில் வாழும் மக்கள் இருப்பதாக பலர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன போக்குவரத்து வாய்ப்புகள் நிறைந்த உலகிலும் உண்மை நிலை இன்றும் இதுதானா? என்னை சிலநாளாக வாட்டும் கேள்வி இது! நான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே இப்ப வேலையும் செய்கிறேன். எனவே ஒரு சில நாளாவது கிராமத்தில் இருந்து உண்மையை அறிய வேண்டும் என்ற அவா உந்த, ஒருவாறு தற்காலிக இடமாற்றம் பெற்று இன்று, அந்த குக்கிராமத்துக்கு, …
-
-
- 3 replies
- 779 views
- 1 follower
-
-
வணக்கம் சேர் ..... இந்த வருட இறுதி பரீடசை நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம் வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம் கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு பாஸ் பண்ணி விடவும். எப்படியும் மற்ற பாடங்களில் தேறி விடுவேன். ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான் பெயிலானால் அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட குடும்பம் அம்மா களை எடுக்க போய் தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு கீழே இரண்டு தங்கைமார். நான் படிச்சு வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்ட…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஒர் அகதியின் கதை என் ஈழத்திரு நாட்டிலே யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் உறவுகளைத் தொலைத்த சோகங்கள் சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும் வரலாறாய் இருக்கும். கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை ஈந்த பெற்றோர் கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின் கதை. 1990இல் ஒரு ஆவணி மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின் ராணுவத்தினர் தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பி…
-
- 2 replies
- 1.8k views
-
-
மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் க…
-
- 2 replies
- 3.6k views
- 1 follower
-
-
சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1 அன்று இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில், கடுமையான குளிர் காற்று, மனிதர்களின் முகங்களை சிவப்பாக்கியிருந்தது. குளிர் வெறும் உடலுக்கு மட்டும் அல்ல; அந்த நாளில் மனங்களுக்குள் கூட ஒரு எதிர்பார்ப்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அது 14.02.2025, காதலர் தினம் [வாலண்டைன் டே]. உலகம் முழுக்க காதல் ஒரு நாளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டாடப்படும் நாள். வேடிக்கையாக இல்லையா? தந்தையர் தினம், தாயார் தினம் எனற வரிசையில், இன்று காதலர் தினம். "நாளைத் தேர்ந்து எடுத்து அன்பு செய்தோரல்ல அவர்கள்; நாம் பிறந்த நொடியிலே அன்பு நம்மோடு பிறந்தது! நன்றி சொல்லாத நாளிலும் தாயின் கரம் குறையாது; நினைவு மறந்த காலத்திலும் தந்தையின் நிழல் விலகாது! நாட்காட்டி…
-
- 2 replies
- 158 views
-
-
சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் இந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
"கலங்காதே மகனே" கவலைப்படாதே / கலங்காதே நாம் அடிக்கடி கேட்கும் ஒரு ஆறுதல் வார்த்தை. எமது மனதை அறியக்கூடிய ஒரு கருவி இருக்குமாயின், எம் வாழ்வில் பலதடவை கட்டாயம் இந்த வார்த்தை எதிர் ஒலித்து இருக்கும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மிக மகிழ்வாக இருந்த என் மகன் இன்று கவலையுடன் கணனியில் இருப்பதைக் கண்டேன். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. எது எப்படியாகினும் அவன் அருகில் சென்று, முதுகில் தட்டி ஆறுதல் படுத்தி 'கலங்காதே மகனே' என அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்தேன். அது நாம் முதல் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று! இரு ஆண்டுக்கு முன்பு, அவன் உயிருக்கு உயிராய் காதலித்த அவனின் சக மாணவி, இறுதி ஆண்டில் மிக திறமையாக சித்தியடைந்தாள். அதுவரை அவளும் என் …
-
-
- 2 replies
- 458 views
-
-
"காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இ…
-
- 2 replies
- 436 views
-
-
"கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை] அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது…
-
- 2 replies
- 397 views
-
-
மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க, பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை..... இடைக்கிடை மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது....... வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.... A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது..... தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காத…
-
- 2 replies
- 2.3k views
-
-
கொமிட்டி.....சங்க காலம் தொட்டு இன்றுவரை சங்கங்கள் அமைப்பது என்பது எங்களது இரத்தத்தில் ஊறிய ஒன்று.இன்று பலர் தமிழ் வளர்க்க,சமயம் வளர்க்க,விளையாட்டு,விடுதலை இன்னும் பல விடயங்களை வளர்ப்பதற்காக இந்த சங்கங்களை அமைத்து அதற்கு ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி அதில் தலைவர்,செயலாளர்,காசாளார் பதவிகளை அடிபட்டு பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.ஆனால் சங்கங்களது நோக்கங்களை நிறை வேற்றுவதிலும் பார்க்க தனி நபர்களின் நோக்கங்களும் ஆசைகளும் இந்த சங்கங்கள் மூலம் நிறைவடைகிறது.இது தாயகத்தில் அரசியல் ,ஆயுதப்போராட்டம் போன்றவற்றில் தொடங்கி இன்று புலம் பெயர்ந்த தேசங்கள்வரை செல்கின்றது. சங்கங்களை உருவாக்குவதில் இருக்கும் ஒற்றுமை அதை உடைப்பதிலும் எம்மவருக்கு உண்டு.ஒரு சங்கம் தொட…
-
- 2 replies
- 2.3k views
-
-
கழுத்தில் மின்னும் தங்க சங்கிலி, கறுத்த கண்ணாடி, வார்த்தைக்கு வார்த்தை வெக்கை, ஊருக்கு போனா செலவு அடுத்தது அங்க இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது குடுத்திட்டு வரவேணும். போகாமலே இருக்கலாம், ஆனா போறம். „அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?“ „தம்பி இப்ப தை மாசம், ஆனா நிறைய சீட் இல்லை. எத்தின பேர் நீங்க?“ „நான் என்ற வைப் அடுத்தது என்ற இரண்டு சின்ன பிள்ளைகள், மகனுக்கு 7 வயசு மகளுக்கு 4 வயசு. அவாவ மடியில வச்சு இருக்க ஏலாதா?“ „இல்ல தம்பி அவாக்கு புள் டிக்கெட், தலா ஒருத்தருக்கு 850.- சுவிஸ் பிராங் வருது.“ „என்ன அண்ண இந்த விலை சொல்லுறீங்க? „நான் ஒண்டும் பண்ண ஏலாது, விடுமுறை நேரம், இது எமிரேட்ஸ் விமானம், கத்தார்…
-
- 2 replies
- 4k views
-
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலு…
-
- 2 replies
- 187 views
-
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது] ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர். இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர். உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப…
-
-
- 2 replies
- 720 views
-
-
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 01 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'] Part 01 – From Ottawa to Jaffna The very first “beachcombers” were none other than early humans in Africa. Wandering along the coasts and living off the sea’s abundance, they slowly spread from Africa into Asia, Australia, and eventually the rest of the world. Thus, history remembers the seashore as humanity’s first great “highway.” Perhaps it was for this very reason that Grandpa chose to begin a grand tour of Sri Lanka with his Canadian-born and -raised grandchildren…
-
-
- 2 replies
- 262 views
-
-
"தன்னம்பிக்கை" யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் என் பழைய பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து இடைக்காடர் என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. உண்மையில் அங்கு முதலில் இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழ் மொழி பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயமும், ஆங்கில மொழி பாடசாலையாக வைத்தீஸ்வர வித்தியாலயமும் ஆகும். பின் 1918 இரண்டும் இணைக்கப்பட்டு வைத்தீஸ்வர வித்தியாலயமாக இராமகிருஷ்ணா மிஷனிடம் அன்று கையளிக்கப் பட்டது. இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் கடமையாற்றனார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இது முதலாம்…
-
-
- 2 replies
- 304 views
-
-
"போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். …
-
- 2 replies
- 467 views
-
-
"குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ எ…
-
-
- 2 replies
- 612 views
-
-
"விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்ற…
-
-
- 2 replies
- 301 views
-
-
கனடாவில் வாழும் கணபதியும் கந்தையாவும் அயல் வீட்டுக் காரர்கள் . க ந்தையர் அந்த வதிவிடத்தில் பத்து வருடங்களுக்கு மேல் வசிக்கிறார் . கணபதியார் இங்கு இடம் மாறி மூன்று வருடங்கள் இருக்கும். க ந்தையரும் மனைவியும் பென்சனியார். இரு மகன்மார் திருமணமாகி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வாழ்கின்றனர் . இடைக்கிடை கந்தையர் வீட்டில் அவர்கள் வந்து தங்குவர். சில சமயங்களில் பாட்டியுடன் சிறார்களை தங்க வைத்து பலசரக்கு கடை உடுப்புடவைக் கடை என சுற்றி விட்டு குழந்தைகளை அழைத்து செல்வர். கணபதி வீடு மாறி வந்த புதிதில் அச்சுற்றடலைப்பற்றி கந்தையர் தாமாகவே முன்வந்து பேசுவார். இருவரும் காணும் பொது ஹை பை சொல்லிக் கொள்வர் . கணபதி புல் வெட்டும் போது க ந்தையர் கார் தரிக்கும் இடத…
-
- 2 replies
- 1.2k views
-
-
தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது. நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பை…
-
- 2 replies
- 1.2k views
-
-
"கார்த்திகை தீபம்" [சிறுகதை ] இன்று கார்த்திகை தீபம், 2022. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள…
-
-
- 2 replies
- 243 views
-
-
தாயகத்தின் மீது பெரிதாக பற்றில்லை சாதாரண தமிழருக்கள்ள விருப்பம் மட்டுமே. ஊருக்கு போகணும் வன்னியில் தங்கணும் என்றதமே எச்சரித்தேன். ஏன் இந்த விபரீத விளையாட்டு அங்கு நடப்பவைகளை கேள்விப்படவில்லையா? என்னவும் நடக்கலாம் எதையும் செய்யக்கூடிய நிலை. அப்படியெல்லாம் கிடையாது இது உங்களைப்போன்றவர்கள் பரப்பும் கதை. நான் போய் ஒரு மாதம் நின்று வந்து சொல்கின்றேனே..... நேற்று வந்து சேர்ந்தார் எப்படி இருக்கு வன்னி? இது நான். நீங்கள் சொன்னதைவிட பயங்கரம் மாலை 5 மணிக்கே கதவைப்பூட்டிவிட்டு படுத்து விடுகிறார்கள் நன்றாக விடிந்து குரல்கள் கேட்கும்வரை வெளியில் வருவதில்லை....... அவசர தேவைகளுக்குமா??? ஒரு சட்டியை வீட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள் அவசரமா…
-
- 2 replies
- 954 views
-
-
பெரிய தொழில் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்ததுதான் புரொசேகுயர் என்ற நிறுவனம் . யேர்மனியில் ஸ்ருட்கார்ட் நகரில் அமைந்திருந்த அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் நிலையங்களுக்கு சென்று அவர்களின் பணங்களைத் திரட்டி பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் தேவைக்கு ஏற்ப மீண்டும் வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில்தான் மியர்னேசா வேலை செய்து கொண்டிருந்தாள். 42 வயதான மியர்னேசா தன்னை எப்பொழுதும் அழகாகக் காட்டிக் கொண்டாள்.. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனாலும் துணையின்றித் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். 28 வயதான ரோபேர்ட் அவளைத் தேடி வந்த போது, அமைதியான நதியாக இருந்த அவளது வாழ்க்கையில் ஆனந்த அலைகள் எழ ஆரம்பித்தன. ஒரு மாலை நேரம…
-
- 2 replies
- 761 views
-
-
"புத்தாண்டுப் பரிசு" ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் கே' [Chin…
-
-
- 2 replies
- 474 views
- 1 follower
-