Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின் மின்னம்பலம்2022-03-31 நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இ…

    • 1 reply
    • 325 views
  2. ஜெ., மரண விசாரணை: மீண்டும் தாமதம் ஏன்? ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு, அலுவலகம் தயாராகாததால், விசாரணை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருந்த, ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்; டிச.,5 இரவு இறந்தார்.அவரது இறப்பில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, 'ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு உத்தரவிட வேண்டும்' என, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள்,பொதுமக்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, ஜெ., மறை…

  3. கொட்டித் தீர்த்த மழை... கொண்டாட வேண்டியவர்கள்... திண்டாடிய சோகக் கதை! 'பேய்ஞ்சு கெடுக்கும்... இல்லனா, காய்ஞ்சு கெடுக்கும்' என்று மழையைப் பார்த்து திட்டித் தீர்ப்பது நம்மவர்களின் வழக்கம். ஆனால், 'கொடுக்காட்டியும் திட்டுவானுங்க... கொடுத்தாலும் திட்டுவானுங்க' என்று நம்மைப் பார்த்து மழை சொல்லும் நிலைதான் நீடிக்கிறது தமிழகத்தில்! ஆம், கடந்த இரு வாரங்களில் பரவலாக பேய்மழைக் கொட்டித் தீர்த்துள்ளது தமிழகத்தில்! அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 90 சதவிகித நீரும் கடலுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறதே தவிர... அதை சேமித்து வைத்து பிற்காலத்துக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை பயன்…

  4. 20 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மே17-ம் தேதி கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு கர்ப்பிணி யானை தனது குட்டியுடன் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானையை மீட்க கும்கி யானையை வனத்துறை அழைத்து வந்துள்ளனர். கும்கியை பார்த்ததும் குட்டி யானை நகர்ந்தது. ஆனால், கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உடற்கூராய்வில் உயிரிழந்த பெண் யானையின், வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது என தெரியவந்துள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். மேலும் யானையின் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்லீரல் கடுமையாக வீங்கி பாதிக்…

  5. தனி சின்னத்தில் போட்டி: வைகோ பேட்டியின் பின்னணி! மின்னம்பலம் சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறி…

  6. தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம். [படங்கள் /வீடியோ ] ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வட சென்னை , தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர். 1. தனித் தமிழீழம…

  7. மீண்டும் காலில் விழும் கலாசாரமா முதல்வர் மீது அமைச்சர்கள் கோபம் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கியது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காணும் போதெல்லாம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள், அவரது காலில் விழுந்து வணங்குவர். எதிர்க்கட்சியினர் கிண்டலடித் தாலும், காலில் விழும் பழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் கைவிடவில்லை. ஜெ., மறைவை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார்.பொதுசெயலர் பதவிக்கு அவர் போட்டியிடுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்; ஆனால், அவர் சசிகலாவை முன்னிறுத்தினார். மற்ற அமைச்சர்களும்,…

  8. சீமான் Vs விடுதலைச் சிறுத்தைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் குழந்தையா சீமான்? வி.சி.க. முன்வைக்கும் 3 குற்றச்சாட்டுகளின் பின்னணி NAAM TAMILAR விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவின், அண்மைக்கால ட்விட்டர் பதிவுகளில் நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனம் வெளிப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆம் தேதி வன்னி அரசு வெளியிட்ட பதிவில், ` தேசிய இனங்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே மதவழிப்படுத்த பா.ஜ.க முனைகிறது. அதற்கு போலித் தமிழ்த்தேசியம் பேசுவோர் உதவுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ` ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க…

  9. "தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் எதிர்த்தனர். தேர்ந்தெடுத்த அரசு இல்லை மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா "இதை நான் எதிர்க்கிறேன். இந்த சட்டத் தீர்மானமும், மசோதாவும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேவையற்றது. நீங்கள் இந்த மாற்றங்களை உருவாக்க நினைத்தாலு…

  10. தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா? சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, 'தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இன்று காலை அவரை சந்தித்து பேசி வருகின்றனர். அ.தி.மு.க.,வில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பல பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின. மதுரை செல்வதற்கு முன் நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'இரு அணிகளும் இணைய நிபந்தனை ஏதும் இல்லை 'என்றார். ஆனால், அவரது அணியை சேர்ந்த மதுசூதனன், 'ஒரே …

  11. விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அழகிரி இந்திய ஊடகங்களிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் “விடுதலைப் புலிகளால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம். காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் நலனோடு இணைக்கக்கூடாது. தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது, “வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்” என்…

  12. தமிழ் இனத் துரோகிகளைத் தோற்கடியுங்கள்! தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு... ஓவியர் வீர சந்தானம் வேண்டுகோள்! அன்புமிக்க தமிழக மக்களே! எதிர்வரும் 24.04.2014ஆம் நாள் இந்தியநாடு தனது 16-ஆம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அந்தத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து அதன் அடிப்படையில் வாக்குவேட்டைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இந்தத் தேர்தலில், நமது தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக இருக்கும் புதுச்சேரியிலும் யார் யாருக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு, அனுப்பப் போகிறோம் என்பதில் நாம் மிக மிக கவனமாக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. யார் யார் வெற்றிபெற வேண்டும் எ…

  13. `இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ "கமலும் ரஜினியும் ஏதோ புரட்சிசெய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று சிரித்தபடி, கிண்டலாகக் கூறினார் வைகோ. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இன்று நடக்கும் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். ஆலங்குடிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்லூரிக் கழிவறையில் கிடந்ததைக் கூறி…

  14. ஸ்டெர்லைட் போராட்டம்: மக்கள் அதிகார மையத்துக்கு எதிராக மனுக்கள் ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களே காரணம் என மீனவ அமைப்புகள் சிலவும் மடத்தூர் கிராமத்தினரும் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை…

  15. சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசார…

  16. திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருப்பது ஒரு கபட நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போ…

  17. நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்திப்பிரிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 84 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …

  18. தஞ்சையில் மிக பெரிய ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பேரணி நடந்து கொண்டு இருக்கிறது...இது எந்த பத்திரிகையும் செய்தியாக வெளியிடாது..

  19. 24 FEB, 2025 | 10:46 AM சென்னை- ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர…

  20. போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய் August 28, 2025 1:42 pm தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை செ…

  21. கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பதிவு: ஜூலை 20, 2020 10:46 AM சென்னை கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்…

  22. கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம். சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்…

  23. ஜெயலலிதா இல்லாத மாளிகைகள்! ஜெயலலிதா தங்கி வாசம் செய்த வீடுகள் மூன்று. ஆட்சி செய்ய போயஸ் தோட்டம், கொஞ்சம் ஆட்சி - கொஞ்சம் ஓய்வுக்கு கொடநாடு, எப்போதாவது சிறுதாவூர் என அவருடைய கடந்த இருபதாண்டுகளும் இந்த மூன்று வீடுகளுக்குள்தான் கழிந்தன. இந்த மூன்று வீடுகளும் அப்போது எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன?! நேரடி ரிப்போர்ட். போயஸ் கார்டன்! ஜெயலலிதாவின் சொத்துகளில் அதிக மதிப்புடையது, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வேதா நிலையம் பங்களாதான். 1967-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா போயஸ் கார்டன் வீட்டை விலைக்கு வாங்கினார். அப்போது, அந்த வீட்டின் விலை 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். அதன்பிறகு, ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த கணிசமான தொகையை வைத்து, அந…

  24. சசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கையை வெளிப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி விருது:- பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக முறைப்பாடு தெவித்த டிஐஜி ரூபாவுக்கு கர்நாடக அரசு ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்துள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு யோகா செய்வதற்கு, சமைப்பதற்கு, பார்க்க வருபவர்களை சந்திப்பதற்கு என தனி அறைகள், சிறப்புச் சாப்பாடு, உள்ளிட்ட பல சலுகை அளிக்கபப்ட்டதாக டிஐஜி ரூபா ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, சசிகலாவுக்கு விதிகளை மீறி வழங்கப்பட்ட ச…

  25. நித்யானந்தாவை கைது செய்ய நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை நித்யானந்தா, உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர், ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.