யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
58 topics in this forum
-
காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்த…
-
-
- 21 replies
- 3k views
-
-
உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது .. அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது எனது பார்வையில்... ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை. வலது நாடுகளின்(வநா) கூட்டு தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி அல்லது குத்தகைக்கு எடுத்து தங்களது வலது/ஜனநாயக/பல்கலாச்சார கொள்கைகளை வகு…
-
-
- 20 replies
- 3k views
- 1 follower
-
-
கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.…
-
-
- 10 replies
- 2.7k views
- 1 follower
-
-
பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் ச…
-
-
- 24 replies
- 2.7k views
-
-
அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவா…
-
-
- 17 replies
- 2.6k views
- 1 follower
-
-
ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும்…
-
-
- 18 replies
- 2.5k views
- 1 follower
-
-
தூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து, தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக் கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு, அந்தக் கைகளிலில் பச்சை குத்தியிருந்த ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது. அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் …
-
-
- 8 replies
- 2.5k views
- 1 follower
-
-
சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள் பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை மானிட வாழ்வில் பெருமையும் இல்லை உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள் உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே உயிர் காத்திடும் மருந்தும் அவளே உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே உணர்வுகள் தந்து உறவுகள் காக்க தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து சொந்தம் காக்க சொற்கள் குறைத்து பந்தம் போற்றப் பல…
-
-
- 21 replies
- 2.5k views
-
-
உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம் கருத்தியல் அடிப்படையில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் பாகுபாட்டிற்கு நாம் எதிரிகள் என்றாலும், சாதியில் ஊறிய சமூகம் தந்த இச்சொல்லாடல் இங்கு பயன்பாட்டிற்கு எளிதாகவும் இயல்பாகவும் தோன்றுவதால் இக்கட்டுரையில் 'உயர்சாதி'யைப் பொறுத்தருள வேண்டும். கட்சி அரசியலில் ஆரம்பித்து சாதி அரசியலிலும் சமூக நீதியிலும் இக்கட்டுரையை முடிப்பது தடம் புரள்வதல்ல. காலத்தின் கட்டாயம். இன்றைய நிதர்சனங்களின் பட்டவர்த்தனம் (தமிழ் ? சரி, விடுங்கள் தோழர் !) …
-
-
- 5 replies
- 2.5k views
- 1 follower
-
-
சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக! ******************************* நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க …
-
-
- 8 replies
- 2.4k views
-
-
அன்பான யாழ் உறவுகளுக்கு.. எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருந்தார் அவர்களுக்கு நன்றிகள். பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.
-
-
- 4 replies
- 2.3k views
-
-
அப்புவிட அப்புவும்,பேரனும்..! ********************* கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது .. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை …
-
-
- 13 replies
- 2.3k views
-
-
அசரீரி..! ******* மனிதா... உலகம் உனக்கென யாரவர் சொன்னார் உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன் இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான். பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன் இறப்புக்கு பின்னாலும் எத்தனை கோடி வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன் வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு. உன்னையே நீயே வெறுக்கின்ற காலம் உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று அன்னையின் கண்ணையே அபகரித்தாயே. ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான் ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத…
-
-
- 11 replies
- 2.2k views
-
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்…
-
-
- 19 replies
- 2.2k views
-
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும்…
-
-
- 10 replies
- 2.1k views
-
-
பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது முன்னாலிருக்கும் ரோடு மங்கலாக தெரிவது போல ஒரு பிரமை . போன கிழமை நிலைமை மேலு…
-
-
- 2 replies
- 2.1k views
-
-
18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன். நன்றிகள். அன்புடன் பசுவூர்க்கோபி-
-
-
- 14 replies
- 2k views
-
-
சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பன…
-
-
- 11 replies
- 1.9k views
-
-
பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகள…
-
-
- 12 replies
- 1.8k views
-
-
31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில்…
-
-
- 15 replies
- 1.8k views
-
-
-
-
- 8 replies
- 1.6k views
-
-
வளர்ந்து வா மகனே ! - சுப.சோமசுந்தரம் தமிழக தேர்தல் 2021 முடிவு வருமுன் அவசரம் அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் எனும் பெயரில் கூடி, ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் எனப் பம்மாத்து வேலையாக ஸ்டெர்லைட்டைத் திறக்க வழி செய்த அனைத்துக் கட்சித் துரோகத்தை எழுதிய சிறிய பதிவு. சில காலம் முன்பு நிகழ்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் பின்னணியில். வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும் மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட திராவிடக் கட்சி, நொண்டி ந…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு!…
-
- 11 replies
- 1.5k views
-
-
இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே …
-
-
- 10 replies
- 1.5k views
-