நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? எடை குறைய என்ன வழி? 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்! ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடைய…
-
- 3 replies
- 3.8k views
-
-
போல்ட் ஸ்கை[size="3"] » [/size]தமிழ்[size="3"] » [/size]Beauty[size="3"] » [/size]Hair-care இளநரையை தடுக்க ஈஸியான வழிகள்!!! வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் …
-
- 3 replies
- 753 views
-
-
1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரியவந்துள்ளது. ஒலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி உணவுகளில் கலந்து சாப்பிடுவது நல்லது. 2. தயிர்: ஒரு உயிருள்ள உணவு. இதிலுள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல கிருமிகள் நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவி வழி வகுக்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.முடி உதிர்வது மற்றும் நரை போக்க: 1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல…
-
- 3 replies
- 3.6k views
-
-
இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உங்களுக்கு இஞ்சியின் துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட பிடிக்காது என்றால், அதனை ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இஞ்சி ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப…
-
- 3 replies
- 904 views
-
-
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? [Tuesday, 2011-07-12 13:53:33] உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும் பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பு இளம் வயதினரை (30 � 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒ…
-
- 3 replies
- 2.6k views
-
-
தேகாப்பியாசம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இருதய, சுவாச அப்பியாசங்கள் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. ஜனவரி 1, 1991 முதல் டிசம்பர் 31, 2014 வரை 122,007 கிளீவ்லாண்ட் கிளினிக் தனது நோயாளிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து இது நிறுவப்பட்டிருக்கிறதென அமெரிக்க மருத்துவச் சங்க திறந்த வலையமைப்பின் கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமது நோயாளிகளை அதியுச்ச, உச்ச, சராசரி, சராசரியிலும் குறைவான, குறைந்த என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து பல தரங்களில் அப்பியாசங்களை அளித்ததாகவும் அவர்களில் அதியுச்ச அளவில் அப்பியாசங்களைச் செய்தவர்கள் நீண்டகால ஆரோக்கியமான வாழ்வை எட்டக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமென ஆராய்ச…
-
- 3 replies
- 957 views
-
-
கோடைகாலம் என்றாலே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லித் தர வேண்டியதில்லை. அந்த எச்சரிக்கை உணர்விற்கு சில யோசனைகள் இங்கே: இளநீர் 1. இளநீரில் இருப்பவை : சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. 2. மருத்துவக் குணம் எப்படி? தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடைகாலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்னபிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால், உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான். இளநீரி…
-
- 3 replies
- 4.9k views
-
-
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்! டாக்டர் வேதமாலிகா Webdunia இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும்,…
-
- 3 replies
- 1.7k views
-
-
கொள்ளும்,பப்பாளியும் கொழுத்தவனுக்கு கொள்ளு....................! கொள்ளு என்றும், காணம் என்றும் அழைக்கப்படும் பயறு . ஒரு காலத்தில் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களில் கூட ஒதுக்கப்பட்ட பயறாகும். குதிரை தின்பதை மனிதன் தின்பதா என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஊட்டச்சத்து நுண்ணுயிர்ச்சத்து ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நகர்களில் உள்ள பெரும் அங்காடிகளில் (மால்கள்) கூட இவை கட்டம் கட்டி விற்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் இதற்கு ஈடிணையான பயிறு எதுவும் இல்லை. இளைத்தவன் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவன் உடல் பெருக்கும் என்றும், ஊளை…
-
- 3 replies
- 1.2k views
-
-
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற் பயிற்சி செய்து வந்தால் போதும் என்று நினைப்பது தவறு. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக ஆண்களின் உடல்நலம் தான் வேகமாக பாதிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என பார்ப்போம். அன்றாடம் கண்களை மூடிக் கொண்டு 10–-20 நிமிடம் தியானம் செய்து வந்தால், மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, தேவையில்லாத கவலைகள் அகலும். மேலும் தியானம் மன அழுத்தம் குறைய, நல்ல தூக்கம் கிடைக்க, இரத்த அழுத்தம் குறைய, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, இதய செயற்பாடு மேம்பட உதவும். ஆண்கள் க்ரீன் டீயை தொடர்ச்சியாக குடித்து வந்தால், ஞாபக சக்…
-
- 3 replies
- 565 views
-
-
[size=5]தேகப்பயிற்சி செய்யாத காரணத்தால் 5 மில்லியன் மரணம்[/size] [size=4]உலகம் முழுவதும் தேகப்பயிற்சி செய்யாமல் வாழ்வோர் தொகை தற்போது 1.5 பில்லியன் என்று புதிய கணிப்புக்கள் கூறுகின்றன.[/size] [size=5]உலக ஜனத்தொகையில் சுமார் 10 க்கு 3 பேர் தேகப்பயிற்சி செய்யாமலே சோபாக்களில் நெடு நேரம் இருந்து வாழ்வைக் கழிக்கிறார்கள்.[/size] [size=4]தேகப்பயிற்சியற்ற வாழ்வானது வருடந்தோறும் ஐந்து இலட்சம் மக்களின் உயிரைப் பறித்து வருகிறது.[/size] [size=4]த லான்சற் என்ற சஞ்சிகை உலகளாவிய ரீதியில் நடாத்திய ஆய்வுகளின் பின்னர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.[/size] [size=4]பத்துப் பேருக்கு மூன்று பேர் தேகப்பயிற்சி செய்யாமலே சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை வண்டியை ஓட்ட…
-
- 3 replies
- 930 views
-
-
பேலியோ டயட்! ஏன்? எதற்கு? யாருக்கு? ‘நம் உணவும் மனமும்தான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில், வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்டவற்றைத்தான் சாப்பிட்டான். சிறிது காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொண்டாலும், விவசாய சமூகமாக மாறியபிறகே நெல், கோதுமை உள்ளிட்டவற்றுக்குப் பழகினான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை கற்காலம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதற்கு முன்பு வரை பல லட்சம் ஆண்டுகள் வேட்டைச் சமூகமாக, கற்கால மனிதனாகத்தான் வாழ்ந்துவந்தான். அந்த மரபணுக்கள்தான் இன்றும் நம் உடலில் தொடர்கின்றன.கற்கால மனிதனின் உணவுப் பழக்கம் அவனை ஆரோக்கியமாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் வைத்திருந்த…
-
- 3 replies
- 5k views
- 1 follower
-
-
பித்தப்பை கற்கள்! பித்தப்பையில் கற்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பிரச்னைகள் இன்று நிறைய பேருக்கு ஏற்படுகிறது. இது பற்றிய விவரங்களை அப்போலோ மருத்துவமனையில் வயிறு, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இராதா கிருஷ்ணா விளக்குகிறார். 1. பித்தப்பை என்பது என்ன? அதனுடைய வேலை என்ன? நம்முடைய கல்லீரலுக்குக் கீழே இருக்கிற ஒரு சிறிய பை போன்ற உறுப்பு. இது கல்லீரல் உற்பத்தி செய்கிற பச்சை, மஞ்சள் நிறமான பித்தநீரை சேமித்து வைக்கிறது. நாம் சாப்பிட்ட பிறகு அந்த நேரத்தில் இந்த பித்தப்பை சிறுகுடலுக்குள் செலுத்துகிறது. இது உணவிலிருக்கும் கொழுப்புகளை செரிமானம் செய்ய உதவுகிறது. 2. பித்தக் கற்கள் என்பது என்ன? பித்தப்பையில் ஏற்படுகிற கற்கள். இந்தக் கற்கள் கொலஸ்டிரா…
-
- 3 replies
- 6.7k views
-
-
போடுங்கள் தோப்புக்கரணம், இது மூளைக்கான சிறந்த யோகா மூளைக்கான யோகா எமது முன்னோர்கள் ஏவ்வளவு அறிவாளிகள், நாம்தான் அதை சரியான வழியில் பயன்படுத்தவில்லை இது தமிழில்
-
- 3 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே. பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொ…
-
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=ve-WiQKi_W8&feature=related
-
- 3 replies
- 846 views
-
-
Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..! குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்…
-
- 3 replies
- 2.1k views
-
-
வெங்காயம் உங்கள் காதலி! பசுமையான காய்கறிகள், பழங்கள், பருப்புகள் ஆகியவை புற்றுநோயை தடுப்பது மட்டுமல்ல, குணப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வெங்காயத்தை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். அவ்வப்போது வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புற்றுநோய் வருவதற்கு காரணமான Carcinogen என்கிற மூலப் பொருளை எதிர்த்துப் போராடும் சக்தி வெங்காயத்திற்கு அபரிமிதமாக உண்டு. அதே போல பூண்டுக்கு கேன்சரை விரட்டும் சக்தி உண்டு. சோயா பீன்ஸ், சோயா மில்க், சோயா மாவு இவை எல்லாவற்றிலுமே கார்ஸினோஜினை நுழையாமல் தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளது. மார்பகப் புற்று நோயுள்ளவர்களுக்கு முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் ஆகிய காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் கவன…
-
- 3 replies
- 1.9k views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர்’ (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட…
-
- 3 replies
- 549 views
-
-
மக்களின் உடலை சந்தைக்கு விற்றுப் பிழைக்கும் அரசுகள் - அன்றும் இன்றும் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி இது பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் நமது உடலை இன்சுலினை சரிவர பயன்படுத்த இயலாததாக மாற்றிவிட்டது என எப்பிஜெனடிக்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியர்களை விட தெற்காசியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் ஆகிறார்கள். 100 வயது வாழ வேண்டியவர்கள் இன்று 60-70 வயதிற்குள் மிக மோசமான வியாதிகள் வந்து துன்புற்று சாகிறார்கள். 20 வயது குழந்தைகள் 40 வயதினரைப் போல இருக்கிறார்கள். இதைச் சொன்னால் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் வந்து 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயுளை விட இன்று அதிகரித்திருக்க…
-
- 3 replies
- 740 views
- 1 follower
-
-
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் 05 May 10 05:48 am (BST) மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறைவாக உறங்குவோரும், அதிகமாக உறங்குவோரும் உயிராபத்தை எதிர்நோக்கிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆறு மணித்தியாலங்களுக்கு குறைவாக உறங்குவோர் நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்க நேரிடலாம் எனவும் பிரித்தானிய மற்றும் இத்தாலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நபர் ஒருவர் சராசரியாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரையில் உறங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்பது மணித்தியாலங்…
-
- 3 replies
- 978 views
-
-
கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.! 26-03-2020 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! இன்றைய நிலையில் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் நம் உடலில் எப்படி நுழைகிறது, பாதிப்பை உண்டு செய்கிறது என தெளிவாய் அறிவோம். கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர்தான் கோவிட் -19. …
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து : சீனாவினது ஆய்வில் வெற்றி! நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி இன்சுலின் ஊசிக்கு பதிலாக, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த புதிய முறை வெற்றியடைந்துள்ளதுடன், அந்த நோயாளிகளின் நீரிழிவு நிலை நீங்கியதாக சீன விஞ…
-
-
- 3 replies
- 515 views
-
-
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இப்போது நீரிழிவு என்னும் மெல்ல கொல்லும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதனை கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவர்கள் அல்லாடுவது தெரியும். எமது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கங்கள், போதிய உடற்பயிற்சி இல்லாமை , மனஅழுத்தம் எனப்பல காரணங்கள் இந்த நோய் உருவாகுவதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன. எனினும் எமது உணவில் ஏற்பட்ட பெருமாற்றமே இந்த நோய்க்கான மிக பிரதான காரணமாக சொல்லப்படுகின்றது. இந்த ஆவணபடத்தில் எமது உணவு முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் எப்படி இந்த நோய் பூரண கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்படுகிறது என்பதை பார்க்கலாம். நீரிழிவு நோய்க்கு தீர்வு -ஒரு ஆவணப்படம் thanks: myspace.com
-
- 3 replies
- 1.1k views
-