நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
முடி கொட்டுவதற்கான காரணங்கள் பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது. நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந…
-
- 1 reply
- 1.3k views
-
-
பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும். பித்தப்பைக்கல் அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும். இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்க…
-
- 5 replies
- 1.3k views
- 2 followers
-
-
நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! வே.கிருஷ்ணவேணி ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போகமுடியும்?' என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா? "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்'' என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்... சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர…
-
- 9 replies
- 1.3k views
-
-
அது ஒரு காலம். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர். எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் தலைகீழாக மாறிவிட்டார்கள். போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, போர்வைக்குள் புகுந்துகொண்ட பிறகும் கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் பெருகிவிட்டன. தூங்காத கண்கள் எல்லாவற்றையும் விரல் நுனியில் செய்து முடித்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறபோதும்கூட, நம்மில் பலருக்கும் முந்தைய நாள் தூக்கம் கண்களை அழுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இல்லையா? இதற்கு என்ன காரணம்? தூக்கத்தை …
-
- 0 replies
- 1.3k views
-
-
பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க முடியும்? இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் உங்களின் பிறப்புறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லவை. இவை இரத்த அழ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
மக்கட்பேறு - என் அனுபவம் #மக்கட்பேறு திருமணமாகி மக்கட்பேறு இல்லாததை பற்றிய ட்விட்கள் பார்க்க நேரிட்டது.. ஒவ்வொருவரின் genetics, உடல்வாகு பொறுத்து அடைத்தும் மாறுபடும்.. நான் மருத்துவர் இல்லை மற்றும் இது மருத்துவ ஆலோசனை த்ரெட் இல்லை. எங்களுடைய அனுபவங்களை பகிர்கிறேன் அவ்வளவே.. என்னுடைய pinned tweet-ல் இருக்கும் thread-ற்கு நேரெதிராக உணர்வு கொண்ட பதிவு இது.. பெண் பார்த்தது.. திருமணம் நடந்தது.. எல்லாம் வழக்கம்போல சந்தோசமாக நடந்து முடிந்தது.. இல்லற வாழ்க்கை தொடங்கியது.. திருமணம் முடிந்து மூன்றாவது மாதம்.. நாள் தள்ளிப்போவதாக மனைவி சொல்ல.. ஆனந்தத்தில் திளைத்தேன்.. உடனடியாக pregnancy test kit வாங்கி வந்து மறுநாள் விடியற்காலை சோதனை செய்தோம்.. இரண்…
-
- 8 replies
- 1.3k views
-
-
நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி இல்லாமல் வேறு சில நிறங்களிலும் சிறுநீர் வெளியேறக்கூடும்? அவை என்ன நிறங்கள்? அப்படி வெளியேறுவது எதை குறிக்கிறது? இந்த காணொளியில் பார்க்கலாம்.
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் ! கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்த நிலையில், ஒரு சில நாடுகள் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்ப…
-
-
- 16 replies
- 1.3k views
- 2 followers
-
-
வேம்பு. வேம்பு இலை. வேம்பு. மூலிகையின் பெயர் -: வேம்பு. தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA. தாவரக்குடும்பம் -: MELIACEAE. வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன. வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE. வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஒரே நேரத்தில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறி 3KG எடை 1 நாளில் குறைய இதை குடிங்க.
-
- 7 replies
- 1.3k views
-
-
செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் பழக்கம் வந்துவிட்டால், உறவுகளை, நட்பை, அலுவலகத்தில் வேலை செய்வதை அது கெடுத்துவிடும்! அமெரிக்காவில் உள்ள, சின்சினாட்டி பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில், இது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, செக்ஸ் வெப்சைட் பார்ப்பது பலருக்கும் ஒரு வியாதியாக பரவி விட்டது. இதனால் தான் அங்கு வன்முறை போக்கும் அதிகமாக இருக்கிறது என்பது தான் நிபுணர்கள் கருத்து. 500 பேரிடம் இது பற்றி ஆய்வு செய்த இந்த நிபுணர்கள், செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் "சிடி’க்கள், வெப்சைட்கள் பார்ப்பதால், ஒருவரின் வாழ்க்கை பல வகையில் கெடுகிறது என்று எச்சரித்துள்ளனர். ஆய்வு அறிக்கையில், நிபுணர்கள் கூறியதாவது: "இன்டர்நெட்’ பார்க்கும் பழக்கம், இப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆண்மைக்குறைபாடு நீக்கும், "தொட்டாற்சுருங்கி!" காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை. 'நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம். நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள்,…
-
- 3 replies
- 1.3k views
-
-
நமது உடலுடைய ஒவ்வொரு வெளி உறுப்புக்கும் உள் உறுப்புக்கும் தொடர்பு உண்டு. அந்த உடற்க்கூறியல் உண்மை பலருக்கு தெரிவதில்லை,,,,,,, நமது காதுக்கும் சிறுநீரகத்திற்கும் , கல்லீரலுக்கும் கண்ணிற்கும் , நுரையீரலுக்கும் மூக்கிற்கும் , இதயத்திற்கும் நாக்கிற்கும் , மண்ணீரலுக்கும் உதட்டிற்கும் தொடர்பு உண்டு . இந்த வெளி உறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், அதை நீங்கள் உணர்ந்தால் அது தொடர்புடைய உள்ளுறுப்பு பாதிக்கப் பட்டிருக்கும் , அந்த பாதிப்பை உங்கள் வெளி உறுப்பு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் , உங்கள் உறுப்பு முழுவதும் பழுது ஆவதற்குள் அந்த எச்சரிக்கையை அறிந்து அதற்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது . இந்த படத்தில் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்தாலே உங்களுக்கு புரியும் . …
-
- 2 replies
- 1.3k views
-
-
மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது நன்றாகத் தூங்குங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம். நடங்கள்! ஓடுங்கள்! தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
அடிக்கடி பாப்கான் சாப்பிடுகிறீர்களா? : நுரையீரல் பாதிப்பு வரலாம் உஷார்! "பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது: பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுத்தமாக சுகாதரமாக தயரிக்கப்பட்ட ஆரோக்கிய குளிசைகள் முருங்கை வல்லரை இலைகளை காய வைத்து பொடியக்கி குளிசைகளை நீங்களே தயாரிக்கலாம் வீட்டில், எந்த விற்றமின் குளிசைகளும் எடுக்க தேவையில்லை, பக்கவிளைவுகளுமில்லை. இதேபோல் நீங்கள் விரும்பிய எந்த இயற்கை பட்டைகளையும் (மாதுளை, எலுமிச்சம் பழ கோதுகள்.......) பொடியாக்கி காலை மாலை எடுக்கலாம். குளிசை செய்யும் இயந்திரத்தையும் இக்கருவிக்கான மருந்து கூட்டுக்குளிகைகளையும் (Vegetable கப்சியுள்) ebay, amazon இல் வாங்கலாம். செய்முறை வீட்டில் மகன் செய்த முருங்கை இலை குளிசைகள்
-
- 1 reply
- 1.3k views
-
-
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் பிரகாரம்.. திருமணம் மற்றும் விவாகரத்துச் செய்து கொள்ளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் உடல் நிறை அதிகரிப்பது அல்லது அதிகரிப்பதற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறை அதிகரிப்பு.. உடல் உபாதைகளை நோக்கியும் அவர்களை கொண்டு செல்கிறது. ஆண்களைக் காட்டிலும் இந்தப் பாதிப்பு பெண்களிடத்தில் சற்று அதிகமாகவே அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கொண்ட குடித்தொகை மாதிரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகள் தொடர்ச்சியான கண்காணிப்பையும் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆராய்ச்சியின் நம்பகத்தன்மை ஓரளவுக்கு உறுதி செய்யக் கூடியதாகவும் அமைகிறது. உடல் திணிவுச் சுட்டெண் (BMI) அடி…
-
- 8 replies
- 1.3k views
-
-
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது? இந்த ஆய்வில் மிதமாக பீர் மட்டும் அருந்தி வருபவர்களுக்கு,மிதமான அளவில் ஒயின் அருந்துபவர்களை காட்டிலும்,இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 31 விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பீர் ஏன் உடலுக்கு நல்லது என்பதை பற்றி கூறும் பிரபல இருதயவியல் நிபுணர் ஹஷ்முக் ரவத்,"கொழுப்பு மற்றும் நார் சத்து அற்ற பீரில் சிறிது புரத சத்து உள்ளது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்ரும் வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.இவை ரத்தத்தில் உள்ள 'ஹோமோசைஸ்டீன்' அளவை குறைக்கும் வல்லமை படைத்தவை.ரத்தத்தில் 'ஹோமோசைஸ்டீன்' அளவு அதிகரிப்பதுதான் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இருதய நோய்களுக்கு வித்திடுகிறது"என…
-
- 1 reply
- 1.3k views
-
-
உங்களுக்கு 'பிரஷர்' இருக்கிறதா? மே 17 சர்வதேச உயர்ரத்த அழுத்த விழிப்புணர்வு தினம் டாக்டர்கு. கணேசன், பொதுநலமருத்துவர் ராஜபாளையம். email: gganesan95@gmail.com உங்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டதா? உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாருக்காவது ரத்தக் கொதிப்பு உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகைபிடிப்பவரா? மதுப் பழக்கம் உண்டா? உடல் பருமன் உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? சர்க்கரை நோய் இருக்கிறதா?மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு 'ஆம்' என்று பதில் சொன்னாலும் இன்றைக்கே டாக்டரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான ரத்த அழுத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
மரவள்ளிகிழங்கு சாப்பிடுவதற்கு முன்பு இத பாருங்க - Dr.Asha Lenin
-
- 8 replies
- 1.3k views
-
-
லண்டனில் உள்ள செக்ஸ் பொம்பை என்ற நிறுவனம் தம்பதிகள் செக்ஸ் வைத்து கொள்ள வாரநாட்களில் எந்த நாள் ஏற்ற நாள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் செக்ஸ் வைத்து கொள்ள சனிக்கிழமையே சாதகமானது என 44 சதவீதத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர். 24 சதவீதத்தினர் ஞாயிற்றுக்கிழமையையும், 22 சதவீதத்தினர் வெள்ளிக்கிழமையையும் தேர்வு செய்து உள்ளனர். இந்த ஆய்வு பற்றிய தகவல் டெய்லி எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119508&category=CommonNews&language=tamil
-
- 9 replies
- 1.3k views
-
-
நீரிழிவும் எங்கள் நரம்புகளும் “Magic is organizing chaos” "குழப்பத்தை ஒழுங்கமைப்பது தான் மாயாஜால வித்தை" - The Witcher தொடரில் ஒரு பாத்திரம். என்னுடைய நண்பர் ஒருவருக்கு அடிக்கடி சமிபாட்டுப் பிரச்சினை, வாய்வு என்பன ஏற்படும். இவை ஏற்படும் சமயங்களிலெல்லாம் நீரிழிவு நோயாளியான அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். என்ன காரணத்தினாலோ, தனது சமிபாட்டுப் பிரச்சினையினால் தான் குழுக்கோஸ் அதிகரிக்கிறது, நீரிழிவுக் குணம் காட்டுகிறது என அவர் நம்ப ஆரம்பித்தார் (இதற்கு சமூக வலை ஊடகங்களில் பரவும் போலி மருத்துவத் தகவல்களும் காரணமாக இருக்கக் கூடும்). இதை அவரது மருத்துவரிடமும் கூறி, சமிபாட்டுப் பிரச்சினையை முதலில் தீர்த்தால் தனது நீரிழிவு மருந்தைக் குறைக்கலாம் என்று ஆலோசன…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
வெண்டைக்காய் சாப்பிட்டால் கொழுப்பு குறையும்! வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் …
-
- 0 replies
- 1.3k views
-