நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
உண்ணாநோன்பு மருத்துவம் - பேராசிரியர் யூரி நிக்கோலயேவ் உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும். இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர். உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது. வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல் நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுக…
-
- 0 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு யாழுக்கு-வருவதே குறைந்து போய்விட்டது.. சில நாட்களுக்கு முன்பு ஒரு விரிவுரையாளர்/ பேச்சாளர்- ஒரு வைத்தியர் (முதியோர் வருத்தங்களில் சிறப்பு பட்டம் பெற்றவர்) Hospice care பற்றி ஒரு விரிவுரை எடுத்தார். அப்போது அவர் கேட்ட கேள்வி.."நீங்கள் என்ன மாதிரியான இறப்பை விரும்புகிறீர்கள்", அதையே நான் சற்று மாறுதலாக என்ன வியாதி உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டுள்ளேன். கிட்டதட்ட 100 பேர் இருந்திருப்போம் ஒருவரும் பதில் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லையோ அல்லது அது பற்றி சிந்தித்து இருக்கவில்லையோ தெரியாது...இதனால் அந்த விரிவுரையாளர் திருப்ப கேட்டார், எத்தனை பேருக்கு, ஹார்ட் வருத்தம் (Heart Disease) வந்து சாக விருப்பம் என்று...…
-
- 10 replies
- 1.2k views
-
-
உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ‘ஜாக்கிங்’ செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். த…
-
- 1 reply
- 1.2k views
-
-
முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயலானது மருத்துவ உலகின் மிகப்பெரிய அதிசயமாக வர்ணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தில் இருக்கும் செல்களை எடுத்து அவரது பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடப்பகுதியில் செலுத்தி சிகிச்சையளித்ததன் மூலம் அவரது முதுகுத்தண்டுவடம் மீண்டும் செயற்படத்துவங்கியிருக்கிறது. அதன் காரணமாக அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நாற்பது வயதான டெரிக் பிடிகா என்பவர் மீது மோசமான கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவரது முதுகுத்தண்டுவடத்தில் குறிபிட்ட ஒரு இடத்தில் இருந்த தண்டுவட நரம்புகள் பெருமளவு அறுந்துபோயின. அதன்…
-
- 10 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மே 2024, 04:07 GMT முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசினோம்... பட மூலாதாரம்,GETTY IMAGES மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மாம்பழத்தில் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைய உள்ளன. …
-
-
- 8 replies
- 1.2k views
- 2 followers
-
-
கொடி போல் இடை என்பது சில பெண்களுக்கு எட்டாக்கனிதான். பலர் குனிந்து, கால் விரல்களைத் தொட முடியாத அளவுக்கு தொப்பை விழுந்து நடப்பதற்கே கஷ்டப்படுகின்றனர். முறையற்ற உணவுப்பழக்கமும், சரியான உடற்பயிற்சியின்மையும்தான் இதற்குக் காரணம். ''நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்'' என்கிறார் 'ஃபிட்னெஸ் ஹப்’ உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாரதி. அப்படி சில எளிய பயிற்சிகள் இவை... க்ரஞ்சஸ் (CRUNCHES) தரையில் நேராகப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மெதுவாக கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழவகைகள், பருப்புவகைகள் என அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே கொடுப்பட்டுள்ள 10 உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும். வெள்ளைப்பூண்டு குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. வெங்காயம் வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக…
-
- 2 replies
- 1.2k views
-
-
இங்கே வந்த பல மிளகாய்த்தூள் நிரம்பிய கொள்கலன்கள் சோதனைகளின் பின்னர் தடுக்கப் பட்டுள்ளன. அந்த கணங்களில் எல்லாம், உடனடியாக சம்பந்தப்பட நிறுவனங்கள் பணம் செலவழித்து, விளம்பரம் செய்து, செய்திகளை வெளியிடக்கூடிய ஊடங்களின் வாயை அடைத்து உள்ளன என்பதும் தெரியுமா, இல்லையா?
-
- 4 replies
- 1.2k views
-
-
பன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண்டு சாப்பிடலாம் - ரஷ்ய டாக்டர்கள் சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 12:12 மாஸ்கோ: இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ரஷ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுறுசுறுவெனும் காரத் தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள். 1. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும். 2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும். 3. சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலேயே நல்ல குணம் காணலாம். 4. பசியில்லா…
-
- 0 replies
- 1.2k views
-
-
கைக்குத்தல் அரிசியின் பலன்கள்.... அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால…
-
- 5 replies
- 1.2k views
-
-
பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை…
-
- 10 replies
- 1.2k views
-
-
போச்சுடா போச்சு இங்கேயும் கையை வைச்சிட்டாங்களா!!!!!! உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ர…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
உயிர்க்கொல்லி நோயான பன்றி காய்ச்சல் “சுவைன் fப்ளூ” (Swine Flu) என்பது, H1N1 என்ற ஒரு வகை வைரஸால் பரவுகிறது. இது (Orthomyxoviridae) “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. இதில் H1N1; H1N2; H3 N2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சில பிரதேசங்களில் இன்புளுவென்ஸா நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதகவும் மக்களை விளிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோய் இன்புளுவென்சா- A, இன்புளுவென்சா- B, மற்றும் இன்புளுவென்சா- C என்னும் மூன்று வகையான வைரஸஸினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது கஜு கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை. மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர். பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள் இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும். இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி அனுப்பிவிடும். நாம் அறியாமலே சில சமயங்களினித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு …
-
- 3 replies
- 1.2k views
-
-
நாம் உண்ணும் உணவுகள் கலோரியால் மதிப்பிடப்படுகிறது.பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது எவ்வளவு கலோரி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.கடும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக கலோரிகளும்,வளரிளம் பருவத்தினர் குழந்தைகள் என்று கலோரிகளின் தேவை வேறுபடும்.கீழே அளவுகள் தரப்பட்டுள்ளன. குழந்தைகள் (2-6 வயது)------------------1200-1800 கலோரி (7-12 வயது)------------------1800-2000 இளம்பருவத்தினர் –ஆண்கள்---------------2500 பெண்கள்---------------2200 வயது வந்தோர்- ஆண்கள்-(உடல் உழைப்பு –2400 இல்லாதவர்கள்) உடல் உழைப்பு உள்ளவர்கள்-------2800 -பெண்கள்---2400 இப்போது உங்கள…
-
- 5 replies
- 1.2k views
-
-
குறட்டைக்கு ‘குட்பை’ சொல்லலாம் ஈஸியா..! #SolutiontoSnoring ‘கொர் கொர்...’ என்று காதைப் பிளக்கும் குறட்டைச் சத்தத்தில் தூக்கம் தொலைத்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும். மேலை நாடுகளில் குறட்டைவிடும் கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரும் அளவுக்கு விபரீதப் பிரச்னையாகக் குறட்டை உள்ளது. தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் பொதுவாக, ஏழு சதவிகித ஆண்களையும், நான்கு சதவிகிதப் பெண்களையும் பாதிக்கின்றன. இந்தப் பிரச்னைகளில் குறட்டை பிரதானமானது. குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம். ஆனால், `அது ஒரு மயக்க நிலை; ஆரோக்கியமான தூக்கம் கிடையாது’ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதனால், காலையில் தலைவலி, உடல்சோர்வு, வேலையில் நா…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
வேப்பில்லை இலையை பறித்து அதனுடன் சிறுது (கொஞ்சம் தாளரமாகவே) தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தலையில் தடவி ஊற வைத்து 30 நிமிடம் கழித்து குளித்தால் . பொடுகு shampoo எனக்கு எதுக்கு ??என கேள்வி கேட்பீர்கள்.. அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து, சீயக்காய் போட்டு தலையை அலசுங்கள். இப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று தலைக்கு குளித்துவந்தால், இரண்டு வாரங்களிலேயே தலை அரிப்பு சுத்தமாகப் போய்விடும். சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும். இதற்கும் ஒரு எளிய சிகிச்சை இரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார். மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த ஆய்வறிக்கையின் படி ” மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 000 க்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே. பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொ…
-
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய... சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போகும். ஏனெனில் பிறந்த குழந்தையானது புது உலகத்தைப் பார்ப்பதால், அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது, பிறந்த பின்னர் கிடைக்காததால் அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைக்கு போதிய தூக்கம் கிடைக்காமல், அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும். சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்…
-
- 7 replies
- 1.2k views
-
-
'ஆண்குறியை பெரிதாக்க ஒரே ஒரு வழி தான்' - Dr Karthik Gunasekaran
-
- 6 replies
- 1.2k views
-
-
எண்ணெய் வகைகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருந்தாலும், ரசாயன ரீதியில் நமது ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் தாக்கம் மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம். சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து நிறைய மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. தேங்காய் எண்ணெய் முதல் ஆலிவ் ஆயில் வரை, காய்கறிகள் எண்ணெய் முதல் கனோலா வரை, அவகேடோ முதல் ரேப்சீட் ஆயில் வரை என பல வகையான எண்ணெய்கள் உள்ளன. இவற்றில் எதை நாம் பயன்படுத்தலாம் அல்லது ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமா? பருப்புகள், விதைகள், பழங்கள், தாவரங்கள் தானியங்கள் என எவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறதோ அதன் அட…
-
- 7 replies
- 1.2k views
-