நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில்…
-
- 0 replies
- 296 views
-
-
மருத்துவக் கட்டுரை - தற்கொலை முயற்சி டாக்டர் ஜி.ஜான்சன் மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே. தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது . இது வயது அதிகரிக்கும்போது மேலும் அதிகமாகிறது. உதாரணமாக 60 வயதைத் தாண்டிய பெண்களிடையேயும், 70 வயதைத் தாண்டிய ஆண்களிடையேயும் தற்கொலை முயற்சகள் …
-
- 0 replies
- 620 views
-
-
-
தண்ணீரும் சாப்பாடும் பலர் பலவிதமாக சொல்லும் ஒரு பிரச்சினைக்கு அன்று தொலைக்காட்சியில் நீயா நானா கரந்துடையாடலில் பதில் கிடைத்தது அதை இங்கு பகிர்கின்றேன் சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் அருந்துவது நல்லது என்றும் சாப்பாட்டுக்கு பின் தண்ணீர் அருந்துவது நல்லது என்றும் சில சந்தேகங்கள் இருந்தாலும் சாப்பிடும்போது தண்ணீர் அருந்தக்கூடாது என்று சின்ன வயதிலிருந்தே சொல்லப்பட்டு ஊறிய விடயம் ஆனால் அன்றைய கருத்தரங்கில் பதில் கூறிய வைத்தியர் இவற்றை மறுத்து சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் அது சிறிது நேரத்தில் கீழிறங்கிவிடுவதால் மேலும் பசி எடுக்கும் அதனால் கண்டதையும் கடிக்கவேண்டிவரும் எனவே அதை நிறுத்துங்கள் என்று கண்டிப்பாக கூறியதோடு மட்டுமல்ல... சாப்பிட்ட…
-
- 11 replies
- 1.2k views
-
-
கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா? -------------------------------------------------------------------------------- பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது. கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்த…
-
- 30 replies
- 6.2k views
-
-
எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனியிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பேர்லின் நகரைச் சேர்ந்த இம்மருத்துவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி. மற்றும் இரத்தப் புற்றுநோய்குள்ளான நோயாளியுடன் பணியாற்றிவந்தனர். இந்நிலையில் இவ்விரு நோய்களையும் குணப்படுத்தும் மருந்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நோயாளியொருவர் குணப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். எனினும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானோருக்கான பொதுவான சிகிச்சையாக இதை பயன்படுத்துவதற்கு முன்னர் பல வருடகால வேலைகள் எஞ்சியிருக்கின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குணப்படுத்தல் என்பது பலமான ஒரு வார்த…
-
- 3 replies
- 609 views
-
-
`கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து... உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று சொல்லும் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சில உணவுகளைச் செய்து நமக்காக வழங்கியிருக்கிறார். ‘‘உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். கல்லீரலில் இருந்து கொலஸ்ட்ராலை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்வது எல்.டி.எல் (Low Density Lipo protein). செல்களுக்குத் தேவைப்படாத அதிகப்படியான கொலஸ்ட்ராலைத் திரும்பவும் கல்லீரலுக்கே எடுத்துச் செல்வது எச்.டி.எல் (High Density Lipo protein). எச்.டி.எல்-ஐ…
-
- 4 replies
- 4.9k views
-
-
தினமும் உடற்பயிற்சி, சாப்பாட்டிலும் கட்டுப்பாடு...ஆனாலும் உடல் பெருக்கிறதே ? டியர் டாக்டர் "தினமும் உடற்பயிற்சி, சாப்பாட்டிலும் கட்டுப்பாடு...ஆனாலும் உடல் பெருக்கிறதே?" ''தற்போது ப்ளஸ் டூ முடித்திருக்கும் மாணவி நான். சமீப காலமாக எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர, தினமும் ஒரு மணி நேரம் வியர்த்து விறுவிறுக்க விளையாடுகிறேன். மேலும், சாப்பாட்டின் அளவையும் குறைத்துவிட்டேன். இருந்தும் என் உடல் எடை குறையவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் கல்லூரி வாசலை மிதிக்க இருக்கும் எனக்கு இந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை…
-
- 10 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கர்ப்ப கால நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவ உலகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் இதய நோய்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் முன்பு கூறிவந்தனர். இந்நிலையில், இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இறப்பதைத் தடுக்கும் வகையில், இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தது. சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் 23 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் போது இதய செயலிழப்பால் உயிரிழந்தார். முன் கூட்டியே அவர் இதய குறைபாட்டை கண்டறிந்திருந்தால் இற…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர்வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீடிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள 'சிர்ட்6' (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர். எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது. இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உய…
-
- 0 replies
- 502 views
-
-
பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது. பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவ…
-
- 0 replies
- 505 views
-
-
[size=4]இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக எளிது என்கிறார் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயச்சந்திரன். சிறு நீரகம் பற…
-
- 0 replies
- 7.3k views
-
-
அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்! “சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்... செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ - இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும்கூட, இதில் சிறிதளவு உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை... என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது. செல்போன் தரும் பாதிப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். …
-
- 4 replies
- 1k views
-
-
மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே. இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம். முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் …
-
- 2 replies
- 5.8k views
-
-
நான் பேலியோவுக்குள் வந்த கதை - ஆர். அபிலாஷ் நான் கடந்த சில மாதங்களாக பேலியோவை பின்பற்றி வருகிறேன். என் நோக்கம் எடை குறைப்பு அல்ல. (ஆனாலும் சில கிலோக்களை இந்த காலகட்டத்தில் குறைத்து விட்டேன் தான், அதுவும் உடற்பயிற்சி இல்லாமல்.) பத்து வருடங்களாக நீரிழிவுடன் போராடி வருகிறேன். இந்த வருடங்களில் மருந்துகளும் உடற்பயிற்சியும் காப்பாற்றாத நிலையில், பேலியோ உணவு எனக்கு அபாரமாய் உதவியது. என் ரத்த சர்க்கரையை வேறென்றுமே சாத்தியப்படாத ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மருந்துகளை வெகுவாக குறைத்து விட்டேன். இதை ஒரு அற்புதம் என்று தான் என்னளவில் சொல்வேன். என்னுடைய நீரிழிவை brittle diabetes என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரை அளவு ஒன்று மிக குறைவாக ஆகி 40க்கு கீழ் செல்…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என பிரித்தானிய மற்றும் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த வழிமுறைகள் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து முழுயைமாக விடுபட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 9000 பேரிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருந்துகளை உட்கொள்வதனால் எதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படுவதனை தடுக்க முடியும் என்ற கருத்திலும் உண்மையில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் அ…
-
- 0 replies
- 651 views
-
-
சாப்பிடுவதற்கு முன்பும், பாத்ரூம் சென்று வந்த பின்னும் கைகளை நன்றாக கழுவினால் மட்டும் போதாது. கழுவிய பின், கைகளை ஈரமில்லாமல் நன்றாக துடைக்கவும் செய்ய வேண்டும். இல்லையெனில், நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்போர்ட் பல்கலைக் கழகம் சார்பில், நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வேகமாக பரவுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது: கைகளை நன்றாக சுத்தம் செய்யாமல் உணவு சாப்பிடுவது, கழிவறைக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை சரியாக கழுவாமல் வருவது போன்ற சுகாதார குறைபாடுகள் காரணமாக, தொற்றுக் கிருமிகள் வேகமாக பரவி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து முழுவீச்சில் விழிப்புணர்வு பி…
-
- 2 replies
- 517 views
-
-
தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் நீக்கமுடியும். தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது. 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். 3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். 4. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும். 5. தேனையும், மாதுளம் பழரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.…
-
- 4 replies
- 2k views
-
-
ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன. ஹெல்தி ஹார்ட் வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறையும் கொழுப்பின் அளவு பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அ…
-
- 0 replies
- 661 views
-
-
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அந்த நோயாளிகளில் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ சிரமப்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271560
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. "கொசுவர்த்தி சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளானமானோர் உணராமலேயே உள்ளனர். ஆனால் இந்த கொசுவர்த்தி சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதாவது ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை, 100 சிகரெட்டை புகைப்பதினால் ஏற்படும் பாதிப…
-
- 0 replies
- 891 views
-
-
முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது. ஒமேகா கொழுப்பு அமிலம் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாள…
-
- 0 replies
- 546 views
-
-
ஒராண்டுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என்னுடைய தந்தையைப் பார்த்தபோது, வலியாலும் வேதனையாலும் படுக்கையில் புலம்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் இருந்தார். அவருடைய அரற்றல் என் காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடிவிட வேண்டும் என்றே விரும்பினேன். 84 வயதான அவர் எனக்கு உற்ற நண்பர். கையிலும் உடலின் வேறு பகுதியிலும் ஊசியாலும் ரப்பர் குழாய்களாலும் செருகப்பட்டு, தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் டாக்டர்களையோ செவிலியர்களையோ எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ரப்பர் குழாய்களைப் பிய்த்துப் போடுகிறார் என்பதற்காக ஒரு கையைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனை என்பது நோயாளிக்கு எந்தச் சுகமும் கண்ணியமும் கூடாது என்று நினைக்கிறத…
-
- 0 replies
- 496 views
-