நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
அதீத நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துக்கு மன அழுத்தத்தை போக்கும் சக்தி மனித உடலில், அதீதமாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துகளுக்கு, மன அழுத்தத்தைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; அதில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அதீத நோய் எதிர்ப்பு செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்மூளையின் செயல்பாடுஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியிருப்பது அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புரட்சியின் தொடக்கம் எனக் கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கார்மன் பாரிய…
-
- 0 replies
- 266 views
-
-
பெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் பெண்களை எளிதில் ஜெயிக்க முடிகிறது. பண்டைய காலம் முதலே ஆண்களிடம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய அம்சங்கள் உள்ள ஆண்களை மட்டுமே உறவிற்காக பெண்கள் தேர்தெடுக்கின்றனர். ஆணிடம் உள்ள எந்த அம்சங்கள் பெண்களுக்கு பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படித்து பார்த்து உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்களேன். ஒளிபடைத்த கண்கள் பாரதியார் பாடியது போல ஒளிபடைத்த கண்கள் இருக்க வேண்டுமாம். அத்தகைய காந்தக் கண்கள்தான் பெண்களை கவர்ந்து இழுக்கின்றன. “கண்ணாலே காதல் கவிதை சொன்னானே எனக்காக” என்று அந்த கண்களைப் பார்த்து பெண்கள் பாடுவார்கள். எதையும் த…
-
- 19 replies
- 1.8k views
-
-
அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர். ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எ…
-
- 1 reply
- 180 views
- 2 followers
-
-
அனைவரும் செய்யவேண்டிய மூச்சு பயிற்சி
-
- 0 replies
- 395 views
-
-
உலகம் முழுவதும் பெப்ரவரி 27ஆம் திகதியன்று உலக மோப்ப உணர்வின்மைக்கான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. உலகில் மிகவும் அரிதாக இருக்கும் பாதிப்புகளில் மோப்ப உணர்வின்மை என்ற பாதிப்பும் ஒன்று. இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டுமென்றால், அண்மையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான அருவம் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசாவிற்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாக இயக்குநர் சித்தரித்திருப்பார். தலையில் எதிர்பார விதமாக அடிபடுதல் அல்லது தீவிர வைரஸ் கிருமியின் தொற்று ஆகியவற்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது அனோஸ்மியா எனப…
-
- 11 replies
- 1.2k views
-
-
எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசி என்றவுடன் என் ஞாபகத்திற்கு முதலில் வருவது சிறுவயதில் கோல்வேஸ் ( Galle Face ) கடற்கரையில் வாங்கி உண்ட அந்த மிளாகாய்தூள் உப்பு போட்ட அன்னாசித்துண்டுகள் தான். இங்கு என்னதான் சுவையான அன்னாசி கிடைத்தாலும் அந்த ருசிக்கு கிட்ட வராது :lol: அன்னாசி சுவையாக உள்ளதென்றுதான் சாப்பிட்டேன் ஆனால் இன்று தான் அன்னாசி சாப்பிடுவதால் நாம் அடையும் நன்மைகளை வாசித்தேன். நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள் அன்னாசியின் அருமை பெருமைகளை அன்னாசி நாம் அனைவரும் ருசித்து உண்ணும், இந்நாட்டில் எப்போதும் கிடைக்கும் அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம். மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள …
-
- 20 replies
- 8.4k views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிறருக்கு உதவி செய்தல் அல்லது அறச்செயல்களுக்கு சிறிது நேரத்தை செலவிடுதலில் நம் எல்லோருக்கும் மன திருப்தி கிடைக்கும் என்பதுடன், உடல் ரீதியாகவும் சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பெட்டி லோவேக்கு 96 வயதாக இருந்தபோது அவரைப் பற்றி பத்திரிகைகள் எழுதின. ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டரில் சால்போர்டு ராயல் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சேவை செய்து வந்தார். காபி நிலையத்தில் இருந்த அவர், காபி பரிமாறுதல், பாத்திரங்கள் கழுவுதல், நோயாளிகளுடன் உரையாடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார். பிறகு லோவே 100 வயதை எட்டினார். …
-
- 1 reply
- 558 views
-
-
அன்புக்கும் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் எமது நிலாமதியக்காவுக்கு சிறு சத்திரசிகிச்சை. அவர் நலமடைய பிரார்த்திப்போம் உறவுகளே..... நிலாமதிப்பாட்டி நலமாகி நீடூழி வாழ எனது குடும்பம் சார்பில் எல்லோருக்கும் பொதுவான ஆண்டவரை வேண்டுகின்றேன்...
-
- 45 replies
- 2.6k views
-
-
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லத…
-
- 0 replies
- 548 views
-
-
அப்பிளின் மகிமை! ஆயுட்காலத்தைக் கூட்டுமாம் வெள்ளி, 04 மார்ச் 2011 08:57 அப்பிள்பழம் உடலுக்கு ஆராக்கியமானது என்பது காலாகாலமாக அறியப்பட்ட ஒரு விடயம். தினசரி ஒரு அப்பிளைச் சாப்பிடுவதன் மூலம் வைத்தியர்கள் அணுக விடாமல் தடுக்கலாம் என்ற ஒரு கூற்றும் உள்ளது. இப்போது விஞ்ஞானிகளும் இதை நிரூபித்துள்ளனர். பழங்கள் அளவில் சிறியவைகளாக இருந்தாலும் மனித மரபணுவோடு அவை பல தொடர்புகளைக் கொண்டுள்ளன. உணவை சாதாரணமாகச் சாப்பிடலாம் அல்லது அப்பிள் ஒன்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சாதாரணமாகச் சாப்பிடுகின்றவர்கள் சராசரியாக 50 நாட்கள் வாழுகின்றார்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆப்பிள் ஒன்றுடன் சேர்த்துச் சாப்பிடுகின்றவர்கள் 55 நாள் வாழுகின்றார்கள் என்று விவசாயம், உணவு, மற்றும் …
-
- 15 replies
- 6.3k views
-
-
தற்போது கொய்யாபழம் சீசன் தொடங்கிவிட்டது, சென்னைக்கு அறுத்தால் செக்க செவேல் என்கிற கலரில் பளிச்சென்று நம்மை ஈர்க்கும், பெங்களூர் கொய்யாவின் வரத்தும் தொடங்கி விட்டது. விலை மலிவாக கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட மிக அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். இது மருத்துவர்கள் கூறும் தகவல்! நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். கொய்யாவுடன் சப்போட்டா பழம், தேன் கலந்து சாப்பிட்டால், நன்றாக ஜீரணம் ஆவதோடு மலசிக்களும் தீரும், வயிற்றுப் புண்ணும் குணமாகுமாம். அதோடு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், தொண்டைப்புண் போன்ற நோய்களும் குணமாகுமாம். …
-
- 0 replies
- 655 views
-
-
அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்? கு.கணேசன் கொரோனா பெருந்தொற்று எப்போது பரவத் தொடங்கியதோ, அப்போதிருந்தே நம் அன்றாட வாழ்வியலில் பல மாற்றங்களைக் கண்கூடாகக் காண்கிறோம். ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ‘இணையவழி வணிக’த்தில் இறங்கினோம். அதை இப்போதும் கைவிட முடியாமல் கஷ்டப்படுகிறோம். இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசி பொத்தானைத் தட்டி, வீட்டுக்குத் தேவையான ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்துவிடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக்கொண்டோம். மற்ற வேலைகளுக்கும் தெருவில் இறங்க வேண்டிய தேவை குறைந்துபோனது. கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைகளில் கைபேசியைக் கொடுத்து, ‘இணைய…
-
- 0 replies
- 405 views
-
-
அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள் ( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம். ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் …
-
- 0 replies
- 937 views
-
-
அமெரிக்காவில் பருமனான மாகாணம் எது தெரியுமா? – வித்தியாசமான ஆய்வின் முடிவை பாருங்கள்! அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் பருமனானவர்கள் அதிகம் வாழ்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. பருமன் பிரச்சினை சார்ந்த ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வொலட் ஹப் என்ற இணையத்தளம் அமெரிக்காவில் பருமனானவர்கள் அதிகம் உள்ள மாகாணங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது. குறித்த ஆய்வில், “அமெரிக்காவின் வொஷிங்டன் உட்பட 30இற்கும் அதிகமான மாகாணங்களில் உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் எடை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 308 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைப்பர் டென்ஷன், இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. மருத்துவ உலகில் ஹைப்பர் டென்ஷனை, 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கிறார்கள். ஏனென்றால் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்படாமல், திடீரென மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துவதால் இதை 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கின்றனர். இந்தியாவில் வாழும் இளம் மற்றும் மத்திய வயத…
-
- 3 replies
- 917 views
- 1 follower
-
-
அம்மாவின் அன்பு:'ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட என் மகனுக்கு குரல் கொடுக்க விரும்புகிறேன்' திவ்யா ஆர்யா பிபிசி நியூஸ், மும்பை 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முக்தா கால்ராவின் மகன் மாதவுக்கு மூன்று வயதானபோது அவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "ஆட்டிசம் கிராமம்" என்று தான் அழைக்கும் ஒரு இடத்தில் தன்னால் இனி வாழ முடியாது என்பதை முக்தா கால்ரா உணர்ந்தபோது இது தொடங்கியது. அங்கு அவர் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருந்தார். அவரது மகன் மாதவ், ஆட்டிசம் நோயால் பாத…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
தேவைக்கேற்ற அளவு அயோடின் சத்து அவசியம் என்கிறது ஆய்வு கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல அயோடின் சத்து அதிக அளவிலுள்ள கடற்பாசியி…
-
- 0 replies
- 451 views
-
-
அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி அரிசி. கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு. நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமா…
-
- 156 replies
- 14.5k views
- 2 followers
-
-
எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும். இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மைய…
-
- 2 replies
- 688 views
-
-
அரிப்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்! அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை இது. இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது அலர்ஜியின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’. அடிப்படைக் காரணம் அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ர…
-
- 1 reply
- 505 views
-
-
அருந் தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில், குறிப்பிடப் பட்டுள்ள சித்த மருத்துவம். #மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை #பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி #கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு #நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி #முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் #உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே #கர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மருத்துவ ரகசியம்!. அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்...... ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக…
-
- 13 replies
- 10.9k views
-
-
அறிகுறி இல்லாமல் கூட மாரடைப்பு வருமா? தமிழகத்தில் மாரடைப்பு வந்து இறப்பவர்களில் அதிகம் பேர் ஆண்களா? பெண்களா?
-
- 0 replies
- 376 views
-
-
அறிகுறிகளே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகங்கள் - ஆபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்புக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து சமீபத்தில் தமிழ்நாடு பொ…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஏப்ரல் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன. அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது. இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த …
-
- 0 replies
- 372 views
- 1 follower
-