மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சிவ கீதை ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார். இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரு…
-
- 3 replies
- 2.8k views
-
-
கீதை காட்டும் பாதை - இளங்கோ நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத…
-
- 0 replies
- 6.5k views
-
-
கீதையில் இருந்து சில முத்துக்கள் கீதை 4:32 இப்படி பலவகைப்பட்ட செயல்பாடுகளில் கைக்கொள்ளப்படும் மனநிலை யோகங்களால் உண்டாகிற யாகங்கள் மட்டுமே வேதங்களால் அங்கீகரிக்கபட்டவை ! இதன் நுட்பத்தை சரியாக புரிந்துகொள்வதால் மட்டுமே மாயைகளிளிருந்து விடுதலை பெற்ற ஆத்துமாவாய் மாற முடியும் !! கீதை 4:33 எதிரிகளை நிர்மூலமாக்குகிற பார்த்தா ! யோகங்களின் வழியான யாகங்களே ; உலகத்தினர் பொருட்களால் செய்யும் யாகங்களை விட சரியானது ! செயல்பாடுகளின் வழியான யோகங்களே ஞானத்தையும் விளைவிக்க கூடியது !! ... கீதை 4:34 ஆன்மாவை உணர்ந்த குரு ஒருவரை அணுகி அவருக்கு பணிவிடைகள் செய்தும் தாழ்மையுடன் விசாரித்தும் அவரிடமிருந்து உண்மையை உள்வாங்குவாயாக !தன்னை உணர்ந்த ஆத்துமாக்கள் மட்டுமே தாங்கள் அறிந்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
நான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும் ? அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை . நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும் , எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப் பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக 'விஷ்ணுபுரம் ' 'பின்தொடரும் நிழலின் குரல் ' என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மற…
-
- 4 replies
- 1.7k views
-
-
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் எது சிறப்பானது ? எப்படி அவற்றைப் படிப்பது ? வழிமுறைகள் என்னென்ன ? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
கீரிமலை சிவன் கோவில் மகாசிவராத்திரி விழா
-
- 0 replies
- 342 views
-
-
குங்குமத்தால் உண்டாகும் பயன்கள் குண்டலினி ஆற்றல் புருவங்களின் மத்தியில் உள்ளது. உடலில் உள்ள ஆற்றலைத் தக்கவைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. குங்குமப் பொட்டு நெற்றியைக் குளிர்வித்து நம்மை பாதுகாக்க வேண்டியும் மற்றும் ஆற்றல் இழப்பையும் தடுக்கிறது. சில நேரங்களில் முழு நெற்றியும் சந்தனம் அல்லது (விபூதி)பஸ்மத்தால் மூடப்பட்டிருக்கும். அக்குப்ரஷர் பாயிண்ட்-டான நெற்றி வகிடு மற்றும் புருவ மத்தியை மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஆட்காட்டி விரலால் அழுத்தித் தொடும் போது மனச்சோர்வு குறைகிறது. குங்குமம் பொதுவாக மஞ்சள், படிகாரம், கறையம் (அயோடின்), கற்பூரம், முதலியன கலந்து செய்யப்படுகிறது. இதில் கஸ்தூரி திரவியமும் சந்தனமும் கலந்தும் செய்து கொள்ளல…
-
- 0 replies
- 3.9k views
-
-
குங்குமம் வைப்பதன் நன்மைகள்! மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும். குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்…
-
- 14 replies
- 3.4k views
-
-
சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந் திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர் ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப் பாலமுத முண்டாரு மரசு மெய்திப் பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே. சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வ…
-
- 0 replies
- 400 views
-
-
குணத்தின் மீது செயலின் விளைவு - சுவாமி விவேகானந்தர் செய்தல் எல்லா செயல்களுமே கர்மம்தான். செயல்களின் விளைவுகளையும் இந்தச் சொல் குறிக்கும். தத்துவம் சம்மந்தமாக வரும்போது இந்தச் சொல் சிலவேளைகளில் நமது முன்வினைகளின் விளைவுகளையும் குறிக்கும். ஆனால் கர்மயோகத்தில், கர்மம் என்ற சொல்லை ‘செயல்’ என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறோம். அறிவு மனித சமூதாயத்தின் குறிக்கோள் அறிவு. கீழை நாட்டுத் தத்துவம் நம் முன் வைத்துள்ள ஒரே இலட்சிமும் இதுவே. மனிதனின் இலட்சியம் இன்பம் அல்ல, அறிவே. இன்பமும் போகமும் ஒரு முடிவுக்கு வதே தீரும். இந்த இன்பத்தை இலட்சியமாக எண்ணுவது தவறு. தான் அடைய வேண்டிய இலட்சியம் இன்பமே என்று மனிதன் முட்டாள்தனமாக நினைப்பதுதான் இன்று உலகில் காணப்படும…
-
- 1 reply
- 1.3k views
-
-
குண்டலினி சக்தி குண்டலினி சக்தி குண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள். குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது . அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாத…
-
- 9 replies
- 18.6k views
-
-
குண்டலினி,உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. குண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன். ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது. அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது. இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பலானவர்கள் அந்த மின் நிலையத்தை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத்திற்கு சிவபூமி என்று பெயர். இப் பெயரை ஈழத்தவர்கள் தங்கள் தேசத்துக்கு சூட்டிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக, திருமந்திரத்தைத் தந்தருளிய திருமூலர் ஈழ மண்ணை சிவபூமி என்று நாமம் சூட்டி அழைத்தார். சிவபூமி என்று புகழப்பட்ட எங்கள் ஈழத்திரு நாட்டில், சைவசமயத்தின் நிலைமை கவலைக் குரியதாகி வருகிறது. மதமாற்றத்தின் கொடுஞ் செயலில் ஈடுபடு வோரால் மட்டுமன்றி, சைவாலயங்களை நோக் கிய இருட்டுத்தாக்குதல் நடத்தும் ஒரு பெரும் தீய சக்திகளின் காடைத்தனங்களும் எங்கள் சைவாலயங்களில் இருக்கக் கூடிய வரலாற் றுப் பெருமை மிக்க விக்கிரகங்களை - சிற்பங் களை நிர்மூலமாக்கி வருகின்றன. இது தவிர பித்தளையை, செப்பை கிலோ வுக்கு நிறுத்து விற்கும் கயவர் கூட்டம் ஒன்று சைவாலயங்களில் இருக்கக் கூடிய, விலை உயர்ந்த ஐம்பொன…
-
- 4 replies
- 876 views
-
-
ஈழ மணித் திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள தனிச்சைவ கிராமம் குப்பிழான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,சிங்களவர் ஆகியோரால் ஈழநாடு அடிமை கொள்ளப்பட்ட போது பல ஊர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தது. ஆனாலும் குப்பிழான் கிராமம் தன் தனித்துவத்தை என்றும் இழக்கவில்லை. எமது கிராமம் ஆனது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பங்கு மிக அதிகமாகும். சின்னஞ் சிறிய எமது கிராமத்தில் பல சைவ ஆலயங்கள் உள்ளன. இது தான் எமது மக்களின் தனித்துவமான அடையாளத்திற்கு சாட்சி. இன்றும் புலம்பெயர்ந்தாலும் எமது ஆலயங்களை கை விடவில்லை பலர் நிதி உதவிகளை வாரி வழங்கி ஆலயங்களின் புனர்நிர்மானத்திற்கு செய்யும் பங்களிப்பு அளப்பரியது. எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து விடாமால் எமது புலம்பெயர் உறவுகள் கர்னனிடம் உள…
-
- 0 replies
- 678 views
-
-
குப்பிழான் அன்னை ஈன்று எடுத்த அற்புதம் தான் எங்கள் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார். அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த 04-02-2012 சனிக்கிழமையன்று குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைவராக ஆலய பரிபாலன சபை தலைவர் திரு சீ.குணலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரிய பொது நிகழ்வாக இது கணிக்கப்படுகிறது. குப்பிழான் மக்கள் மட்டுமல்ல இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர், ஆலய குரு ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். வரவேற்புரையை திரு.செ.ரவிசாந் அவர்களும், த…
-
- 0 replies
- 888 views
-
-
எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும். குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுர…
-
- 0 replies
- 9.8k views
-
-
குரு தேக் பகதூர் வரலாறு: ஒளரங்கசீப் முன் தலைவணங்காமல் உயிரை துறந்தவர் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1664 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து ஒரு சீக்கியர்கள் குழு பஞ்சாபில் உள்ள பகாலா கிராமத்தை அடைந்தது. தான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எட்டாவது குரு ஹர்கிஷன், தனது வாரிசு பகாலாவில் கண்டுபிடிக்கப்படுவார் என்று அறிவித்தார். பகாலாவில் சீக்கியர்களின் சிறப்புக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு அதில் தேக் பகதூருக்கு குருவின் சிம்மாசனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாரம்பரிய விழாவில், குருதித்தா ரந்தாவா …
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
வியாழ பகவான் துதி பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கல்யானம் வருநிறை மரபு நீடி வாய்க்குஞ்சந் ததித ழைக்கத் தருநிறை ஆடை ரத்னந் தான்பெற அருளும் தேவ குருநிறை வியாழன் பெற்றாள் குரைகழல் தலைக்கொள்வோமே. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய், பிரமம்மமாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடு. ஜீவராசிகளின் முன்வினைகளுக்கேற்ப சுக, துக்கங்களை அதன் பலாபலன்களை இறைவன் ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் என்பதனை ஜோதிட சாஸ்திரமூலம் நாம் அறிகின்றோம். பூமியில் பிற…
-
- 0 replies
- 5.5k views
-
-
இந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் பிரச்சினைகளையும் பிற நாட்டுப் பிரச்சினைகளையும் முடிபிளந்து எழுதும் இந்த ஏடுகள் மதம் சார்ந்தவை என்று வரும்பொழுது முழுவதுமாக தங்களைத் தொலைத்துவிட, அல்லது மலிவாக மூடநம்பிக்கையை விலைக்கு விற்றுவிடுவதில் சற்றும் தயக்கமோ, வெட்கமோ படுவதில்லை _ கூச்சப்படுவதும் இல்லை. குரு, ராகு_கேது, சனிப்பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் என்று அல்லோகலபடுகின்றன. இந்த நவக்கிரகப் பட்டியலில் சூரியன் இடம் பிடித்தது எப்படி? அது ஒரு நட்சத்திரம். உண்மையான கிரகமான பூமிக்கு இந்த நவக்கிரகப் பட்டியலில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டு விட்டது; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு மு…
-
- 50 replies
- 6k views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் வணக்கம்! 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான்,கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், நலமோடும் இருப்பார்கள். பொருளாதாரம் பெருகும். நம் நாட்டின் உயர்ந்த வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கும். பல துறைகள் முன்னேற்றம் அடையும். கலை உலகில் உள்ளவர்களுக்கு சற்று சிரமமான நேரம் இது. காரணம் சுக்கிரன், குரு இணைந்து இருப்பது நன்மை இல்லை. சிம்ம சுக்கிரன் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அறி…
-
- 4 replies
- 1.6k views
-
-
குருவின் அவசியம் குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே. (10) ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார். குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம். கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுள…
-
- 10 replies
- 4.4k views
-
-
ஒரு அம்மாக் குருவி நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அப்பாக் குருவி துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.நாட்கள் கடந்தன. நெற்பயிர் நன்றாக விளைந்துவிட்டது. அறுவடை செய்வதற்கு விவசாயி எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போகவேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? இதுதான் பெரிய குருவிகளின் கவலை.ஒரு நாள் அம்மாக் குருவி தன் குஞ்சுகளிடம் சொன்னது: “பிள்ளைகளே, விவசாயி வயலுக்கு வந்தால், அவர் என்ன சொல்கிறார் என்று …
-
- 0 replies
- 854 views
-
-
குருவும் சீடர்களும் குருவும் சீடர்களும் நீர்நிலை அருகாக போகும்போது ஒரு தேள் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை குரு பார்த்தார், உடனே குரு தனது கையினால் தேளை தண்ணீரிலிருந்து வெளியே போடமுயன்றார். தேள் குருவின் கையில் கொட்டிவிட்டது, இதனால் குரு கையை உதற தேள் திரும்ப தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே திரும்பவும் கையினால் தேளை எடுக்க அது திரும்ப கொட்ட இப்படி சில தடவைகளின் பின்னர் தேளை மீட்டு கரையில் விட்டுச்சென்றார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடனொருவன் குருவிடம் குருவே தேள் கொட்ட கொட்ட ஏன் அதை மீட்க முனைந்தீர்கள் என்று கேட்டான், குரு கூறினார் தேளின் சுபாவம் கொட்டுவது அதை கொட்ட கொட்ட மீட்டுவிடுவது எனது சுபாவம் என்றாராம். இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான…
-
- 10 replies
- 1.5k views
-
-
நன்றி ராஜவன்னியன் பகிர்வுக்கு, "தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல்... உன் மொழி, தமிழ் மொழியென்று"
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது. வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் ச…
-
- 7 replies
- 2.4k views
-