மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இந்திய தேசியக் கொடியின் நடுவில் இருப்பது அசோகச் சக்கரமல்ல.. ஈழத்தில் தமிழர்களை நசுக்கியே கொன்ற அகோரச் சக்கரம். Thanks - facebook
-
- 12 replies
- 1.6k views
-
-
ஆன்மீகமும், அறிவியலும்... சூரிய பகவான் தேரில் சுற்றிவருவதாக ஐதீகம். அவருக்கான தேரில் 7 நிறத்தில் குதிரைகள் முறையே ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு இருபதாக முன்னோர் வாக்கு. அதாவது சூரிய கதிரில்லுள்ள 7 வண்ணம் (VIBGYOR). வானவில்லில்கூட வெறும் கண்களால் இத்தனை நிறங்களை காண முடியாது. அப்படியிருக்க, அறிவியல் சொல்லும் முன்னரே பலாயிரம் ஆண்டுக்கு முன் நம் சனாதன தர்மம் சொன்னது எப்படி? எந்த மாதிரி கருவிகளை பயன்படுத்தி இதை கண்டுபிடித்தனர்? விடை தேடுவோம்... நல்ல செய்திகளை பகிர்வோம் share, பயனடைவோம்... https://www.facebook.com/photo.php?fbid=513843865375504&set=a.513843852042172.1073741846.481230528636838&type=1&theater
-
- 0 replies
- 1.6k views
-
-
விடைகள் இல்லாதவரை…..! நீதிபதி:- உமது பெயர் என்ன? கடவுள்:- கடவுள் நீதிபதி:-உம்மை கல்லிலும் ,மண்ணிலும் ,உலோகத்திலும் மனிதர் செய்யலாமா? கடவுள்: எனது சக்தியை ஒருவராலும் ஒன்றுக்குள் அடக்க இயலாது.சிந்திக்காமல் மனிதன் செய்கிறான். நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே? கடவுள்:- ஆமாம்! நீதிபதி:-சாதிப் பிரிவினை உருவாக்கியவர் நீதானே? கடவுள்:ஆம். செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்துகளுக்கு மட்டும் சாதிப்பிரிவினை உண்டாக்கினேன். இந்துத் தத்துவங்களில் ஒன்று வர்ணாச்சிரமக்க கொள்கை இதைக் கடைப்பிடிக்காமல் போனால் நீ மறுபிறப்பில் வெளவால் இனத்தை சேர்ந்த வாயாலை உண்டு வாயாலை மலம் கழிக்கிற இனமாக பிறப்பாய். நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்ற…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்துமத விவாதங்கள் ஜெயமோகன் அன்புள்ள ஜெ நான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம் ஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சமீபத்தைய விவாதங்களைச் சொல்கிறேன். இந்துமதம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் என…
-
- 7 replies
- 1.6k views
-
-
வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண…
-
- 1 reply
- 1.6k views
-
-
இருள்சேர் இருவினை வினை செய்யப்படும் போது ஆகாமியம், பயன் தரும் வரை மறைந்த வடிவினதா யிருக்கும்போது சஞ்சிதம், சன்மானம், தண்டனை அதாவது இன்பத்துன்பமாய் அனுபவத்துக்குவரும்போது பிராரத்தம் எனப்படும். இவ்வாகாமிய சஞ்சித பிராரத்தங்கள் மூலகன்மம் என்பதை உபாதானமாய்க் கொண்ட காரியமாய்ப் பலவகையாம். சத்தியம் பேசினால் சன்மான முண்டு என்பது சட்டம். அரிச்சந்திரன் சத்தியம் பேசிச் சன்மானிக்கப்பட்டான் என்பது நிகழ்ச்சி. இவ்விரண்டனுள் காலத்தால் முந்தியது இந்நிகழ்ச்சியா? அச்சட்டமா? கொலை செய்தால் தண்டனை யுண்டு என்பது சட்டம். கொற்றன் கொலை செய்து தண்டிக்கப்பட்டான் என்பது நிகழ்ச்சி. இவ்விரண்டினுள் முந்தியது இந்நிகழ்ச்சியா? அச்சட்டமா? சட்டங்களே நிகழ்ச்சிகளுக்கு முந்தியனவாதல் வேண…
-
- 2 replies
- 1.6k views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென். இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பண்டிகைக் காலத்தைத்தான் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறைக் காலமாகக் கருதுகிறார்கள். பூமியில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் பண்டிகை இது. உலக நாள்காட்டியில் அதிக விடுமுறை அளிக்கப்படும் காலமும் இதுதான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கத…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
நாங்கள் எல்லோருமே மனிதவாழ்வின் தத்துவங்ளை சல்லடை போட்டுத் தேடுகின்றோம் . இந்த தேடல்களின் விடைகள் பல கோணங்களிலும் , பல வடிவங்களில் இருந்தாலும் , ஏனோ உள்ளுடன்கள் ஒன்றாகவே இருக்கின்றன . எனது முப்பாட்டன் வாழ்ந்த வாழ்கைமுறையை , எனது பாட்டானாரும் , அவர் அடியொற்றி எனது தந்தையாரும் , அவரின்பின் நானும் வாழ்ந்ததில்லை . ஆனால் , எல்லோரும் சந்திக்கின்ற அடிப்படைப்படைப் பிரச்சனை என்கின்ற உள்ளுடனில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றோம் . இளையவர்கள் எப்படி இந்த நேர்கோட்டில் பயணிக்கத் தம்மை தயார் செய்கின்றார்கள் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். இளையவர்களின் வீச்சுக்கள் நிறைந்த இருப்புகள் பலமுறை நிரூபணம் ஆனபோதிலும் , இந்தப் பெரிசுகள் மட்டும் தங்களது வளக்கமான < இவர்கள் கவ்வைக்கு உதாவா…
-
- 6 replies
- 1.6k views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் வணக்கம்! 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான்,கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், நலமோடும் இருப்பார்கள். பொருளாதாரம் பெருகும். நம் நாட்டின் உயர்ந்த வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கும். பல துறைகள் முன்னேற்றம் அடையும். கலை உலகில் உள்ளவர்களுக்கு சற்று சிரமமான நேரம் இது. காரணம் சுக்கிரன், குரு இணைந்து இருப்பது நன்மை இல்லை. சிம்ம சுக்கிரன் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அறி…
-
- 4 replies
- 1.6k views
-
-
அறிவும் திருவும் (சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை) உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும். மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம். உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
ராமன் தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன். சீதை வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள். தசரதன் பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன? கொளத்தூர் மணி (‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ (அக்-நவ.) இதழுக்கு - கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அளித்துள்ள நேர்காணல் இது. பெரியார் வலியுறுத்திய – தனித் தமிழ்நாடு லட்சியம், தமிழ்ப் பெயர் சூட்டல், பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்காதிருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு இதில் விளக்கப்பட்டுள்ளது) கேள்வி : தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத்திலிருந்து என்ன அளவில் - கோட்பாட்டளவில் வேறுபட்டிருக்கிறது? வேறுபாடு கொண்ட அளவில் த.பெ.தி.க. அந்த இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா? பதில் : பெரியார் சாதிய, பாலின, பொருளிய பேதமற்ற, சுரண்டலற்ற பொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பலரும் செல்லுவதற்கு தவம் கிடக்கும் ஒரு அற்புதமான திருவிழாவிற்கு போவதற்கு ஒரு மனிதனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அது நாலு நாள் மட்டும் நடைபெறும் திருவிழா. அவனும் திருவிழா நடைபெறும் தீவிற்கு சென்று ஒரு ஹொட்டேலில் தங்கினான். முதல் நாள் திருவிழா தொடங்கிவிட்டது. அவனோ ஹொட்டேலை துப்பரவு செய்வதிலும், சுவருக்கு பெயின்ற் அடிப்பதிலும், நித்திரை கொள்வதிலும் செலவழித்தான். மறு நாள் போகலாம் என எண்ணினான். மறு நாள் முழுவதும் ஹொட்டேலில் உள்ள பொருட்களை சேர்த்து மூட்டைகளாக கட்டி, தனது என்று கூறி ஒரு மூலையில் சேர்த்து வைத்தான். மூன்றாம் நாள் ஹொட்டேல் முழுவதும் தனது பெயரைப் பதித்து தனது புகழை நிலைநாட்ட முயன்றான். நாலாவது நாள் அவனது கடைசி நாள். பணிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
நாம் நாளாந்தம் என்ன செய்தாலும் பரவாயில்லை, நமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, உயிர் உடலை விட்டு விட்டு சென்றுவிட்டால் ஒன்றுமே இல்லாமல் வெறும் பிணம்தான் இருக்கும். உடலை கவனியாது வேலை, வேலை என்று ஓடியவர்கள் கடைசியில் வேலைக்குப் போகாமல், உலகத்தையே விட்டு விட்டு போய்விட்டார்கள். பல சோலிகளின் மத்தியிலும் எது முக்கியமானது என்பதை நாம் மறக்ககூடாது. நான் இரசித்த வள்ளலார் பாடல் ஒன்றை இத்துடன் இணைக்கிறேன். இதில் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. நன்றி
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஒரு அன்பர் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது. பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர் எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார். யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார். "மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார் சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
வெற்றிக்கு வழி வெற்றிக்கு வழி என்பது மலர் தூவிய பாதை அன்று அது முட்களாலும், புதர்களாலும் நிரம்பியது. எந்த வெற்றியாளனும் பிறக்கும் போதே வெற்றியைக் கையில் பிடித்துக் கொண்டு பிறப்பது இல்லை. பின்னர் எது அவனை பிற்கால வாழ்க்கையில் வெற்றியாளனாக மாற்றுகிறது என்று கேட்டால், தன்னம்பிக்கையும் இடைவிடாத முயற்சியுமேயாகும். தன்னுள் இருக்கும் திறமைகளை அடையாளம் காணுதல் இதற்கு அவசியம். இந்தத் தேடலும் புரிதலும் ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. தன்னுடைய முன்னவர்களை, அவர்களுடைய எண்ணங்களை, அவர்கள் கடந்து வந்த பாதைகளைப் பற்றிய புரிதல்தான் அவனுள்ளே நம்பிக்கை விதையை விதைக்கிறது. அந்த நம்பிக்கை காலம் செல்லச் செல்ல சிறிய செடியாகி மரமாகி நிலைக்கிறது. அதன் பயனாக வாழ்க்கையின் கனியை அவன் சுவைத…
-
- 0 replies
- 1.5k views
-
-
aக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார். "நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்டமுடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் 'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உ…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்…
-
- 3 replies
- 1.5k views
-
-
உனக்கு வரலாறு தெரியுமா? வா. மணிகண்டன் பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது. வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்? சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் க…
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி பிரபஞ்சம் முழுக்க பரவி நிறைந்து கிடக்கும் தூய்மையான சக்தியை, ஆற்றலை (Positive Energy) எவ்வாறு நமது உடல் உள்வாங்க முடியும் என்பதையும், அதற்கு முத்திரை பயிற்சிகள் எவ்வாறு பயன்தரும் என்பதையும் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக குறைந்தது 500 முதல் 600 வரையிலான சேனல்களைப் பார்க்க முடிகிறது. டி.வி.யில் படம் தெரிவதற்கு ஒரு டிஷ் ஆன்டெனா (உணர் கொம்பு) தேவைப்படுகிறது. இந்த உணர் கொம்பானது செயற்கைக்கோள் வழியாக ஒலி, ஒளி அலைகளை உள்வாங்கி டி.வி.யில் சேனல்களாக வெளிப்படுத்துகிறது.அதைப்போன்று மனிதனின் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது. ஒரு டிஷ் ஆன்டெனா செயல்படுவதுபோல, நமது விரல்கள் செயல்பட்டு பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
திருவடி தீட்சை (உபதேசம்) முதல் இரு நிமிடங்கள் மட்டும் ஒலிப்பதிவு தெளிவில்லாமல் உள்ளது!!!
-
- 0 replies
- 1.5k views
-
-
குருவும் சீடர்களும் குருவும் சீடர்களும் நீர்நிலை அருகாக போகும்போது ஒரு தேள் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை குரு பார்த்தார், உடனே குரு தனது கையினால் தேளை தண்ணீரிலிருந்து வெளியே போடமுயன்றார். தேள் குருவின் கையில் கொட்டிவிட்டது, இதனால் குரு கையை உதற தேள் திரும்ப தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே திரும்பவும் கையினால் தேளை எடுக்க அது திரும்ப கொட்ட இப்படி சில தடவைகளின் பின்னர் தேளை மீட்டு கரையில் விட்டுச்சென்றார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடனொருவன் குருவிடம் குருவே தேள் கொட்ட கொட்ட ஏன் அதை மீட்க முனைந்தீர்கள் என்று கேட்டான், குரு கூறினார் தேளின் சுபாவம் கொட்டுவது அதை கொட்ட கொட்ட மீட்டுவிடுவது எனது சுபாவம் என்றாராம். இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான…
-
- 10 replies
- 1.5k views
-
-
பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள் நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில்நாதசுரம் இசைக்கும் பண்கள். காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும்பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்டபண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூரதீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும்இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி,நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்துபள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டுஇசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும்பாடலாம்) * காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி,நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை. * காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து,…
-
- 5 replies
- 1.5k views
-
-
பிறவாமை 'சிங்கடி யாரைப் பிறப்பித்தெடுத்த பிதா' என்றார்கள் ஸ்ரீமத் சேக்கிழார் சுவாமிகள். பிதா பிள்ளையைத் தாய் வயிற்றிற் பிறப்பித்தான். பிள்ளையைத் தாய் பத்தாமாசம் வெளிப்படுத்தினாள். பிள்ளை பிறந்தான். பிறகு அவனைத் தந்தையெடுத்துத் தன் பிள்ளையென உரிமை கொண்டு கொஞ்சினான். அவ்வுண்மை அம்மேற்கோளால் தெரிகிறது. பிள்ளையைப் பிறப்பித்தாள் எனத் தாயையுஞ்சொல்லலாம். பிறப்பித்தாள் - வயிற்றிலிருந்து வெளிப்படுத்தினாள். ஆனால் தந்தை அவள் வயிற்றிற் பிறப்பித்த பிள்ளையைத் தான் அவள் பத்து மாதம் வைத்திருந்து வெளிப் படுத்தினாள். அதனால் பிறப்பித்த தந்தை தாயருள் ஆதிவினை முதல் தந்தையே. தாய்வயிறு பிள்ளை பத்து மாசம் தங்குவதற்கோரிடைப்பட்ட நிலமாகும். ஆகலின் பிள்ளையின் பிறப்புவிஷயத்தில் …
-
- 3 replies
- 1.5k views
-