சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பிகினி வா. மணிகண்டன் சில வருடங்களுக்கு முன்பாக ஆஸ்டின் நகரத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐடிக்காரன் அமெரிக்கா சென்று வந்தால்தான் மரியாதை என்று நம்பிக் கொண்டிருந்ததால் அதிபயங்கரமான சந்தோஷத்தில் இருந்த காலம் அது. டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. பதினைந்து நாட்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பகல் முழுவதும் உள்ளூர் ஆட்களோடு சுற்ற வேண்டும் என்பதும் இரவில் எங்கே செல்கிறேன், எப்பொழுது அறைக்குத் திரும்புகிறேன் என்பதெல்லாம் யாருக்குமே தெரியக் கூடாது என்பதும் என்னுடைய சதுரங்க வேட்டை விதிகளில் முக்கியமானவை. பக்கத்தில் இருப்பவனுக்குத் தெரியாமல் தகிடுதத்தங்களைச் செய்வதில்தான் அலாதி இன்பம் இருக்கி…
-
- 0 replies
- 876 views
-
-
இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொ…
-
- 0 replies
- 685 views
-
-
'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா? அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்! சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்! அப்பாக்களின் அட்வைஸ்களை சிறுவயது முதல் கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ அப்பா எதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை,…
-
- 8 replies
- 1.8k views
-
-
"தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி. மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பி…
-
- 0 replies
- 363 views
-
-
சிட்னி, டிச.22- பிரபல சமூக வலைதளமான யூ டியூபில் உறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம் ஒன்று 4 கோடி பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது. இன்னும் 2 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கள் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் வலியை உணர்த்தும் இந்த வீடியோ காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. https://www.youtube.com/watch?v=V6-0kYhqoRo
-
- 0 replies
- 1.1k views
-
-
தனது மூன்று வயது மகனுக்கு 26 வயது பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டுவது குறித்த பிரபல ‘டைம்’ பத்திரிகை அட்டைப்படத்துடன் வெளியிட்ட செய்தியால் அமெரிக்காவில் அனல் பறக்கும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பிற்ந்த குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும்,மருத்துவ நிபுணர்களும் ஒருபுறம் வலியுறுத்தி வந்தாலும்,எந்திரமயமாகிப்போன வாழ்க்கைச் சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று அதிகம் போனால்,3 மாதங்களுக்குள்ளாகவே அதற்கு குட்பை சொல்லிவிடுகின்றனர் இன்றைய தலைமுறை பெண்கள். ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள தாய்ப்பாலுக்குப் பதிலாக,புட்டி பாலை அருந்தி வளரும் குழந்தைகளுக்கு இயல்பாகவே கிடைக்க வேண்டிய …
-
- 10 replies
- 3.5k views
-
-
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர். பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய இரண்டு காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியில் இருந்து விலகினார். இதனை …
-
- 4 replies
- 604 views
-
-
சிறப்புக் கட்டுரை: மனிதரிடம் கையேந்துகிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மின்னம்பலம் அ. குமரேசன் மனதைத் தொடும் மனிதநேயச் செயல்பாடுகள் தொடர்பான பல செய்திகள் கொரோனா காலத்தில் வருகின்றன. அத்தகைய ஒரு செய்தி மனதைத் தொட்டதுடன், சம்பந்தப்பட்டவரின் செயல்பாடு குறித்த விரிவான சிந்தனைக்கு இட்டுச் சென்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (66) என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். பலரும் நிதியுதவி செய்கிறார்கள், இதைவிடப் பெரிய தொகை வழங்குகிறார்கள் என்றாலும் இந்தச் செய்தி ஏன் மனதைத் தொடுகிறது என்றால், பாண்டி அந்தத் தொகையைப் பிச்சை எடுத்துத் திரட்டி வழங்கியிரு…
-
- 0 replies
- 627 views
-
-
12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு …
-
- 0 replies
- 1.9k views
-
-
"திருமணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்" - ஒற்றை தாயாக மாறிய பெண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பல பெண்களைப் போலவே, குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த டிம்பி பர்மர், தனது தாய்மையை முழுமையாக அனுபவித்து மகிழும் பெருமைக்குரிய தாய். ஆனால், அவரது தனிச் சிறப்பு, அவர் திருமணம் செய்துகொள்ளாத ஒற்றைத் தாய். 35 வயதான டிம்பி தனது குழந்தையைப் பெற்றெடுக்க சோதனைக் குழாய் குழந்தை முறையை தேர்ந்தெடுத்தார். டிம்பி திருமணம் வேண்டாமென முடிவுக்கு வருவதற்கு குடும்ப பிரச்னையே காரணம். அதேநேரம், தாய்மையை அனுபவிக்க விரும்பிய அவர், ஒற்றைத் தாயாக முடிவெடுத்தார். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் வழிமுறை முழுதும் மருத்துவரின் வழிகாட்டுதல் படிதான் நடக்கும். சமூகத்திடமிருந…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
பெரியாரை உலக மயமாக்குவோம் கி. வீரமணி பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா). திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டா…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிலாபம் திண்ணனூரான் கொழும்பு புறக்கோட்டை வர்த்தக வீதிகளில் 'யோவ், யோவ்.வழி வழி.' என பெரும் சத்ததுடன் தள்ளு வண்டிகளில் மூடைகளை அடக்கி வைத்து வண்டியை தள்ளிக் கொண்டு போவார்கள். மனிதனின் ஒவ்வொரு கண்டு பிடிப்புகளுக்கும் வரலாறு உள்ளது. அவ்வாறு இவ்வண்டிகளுக்கும் வரலாறு உள்ளது. இவ் வண்டி வியாபாரம் வியப்பானது. புதுமையானது. இது குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தள்ளுவண்டி வியாபாரம் நடத்தி வரும் கணேஷ் தர்மலிங்கம். இத்தள்ளுவண்டித் தொழிலில் ஈடுபடும் நாட்டாமைகளுக்கு ஆரம்ப காலத்தில் நாடார் வர்த்தகர்களே கொழும்பில் வண்டிகளை நாளாந்த வாடகைக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர். முன்னர் இவ்வண்டிகளின் சக்கரங்கள் லண்டன் யுத்த டாங்கியின் சக்கரங்களை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
அவுஸ்திரேலியாவில் பாலி தீவுப் பாணியிலமைக்கப்பட்ட தனது தீவை ஓர் இரவிற்கு 17,000 டொலர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார் சேர் றிச்சாட் பிரான்சன். ஆனால் இதிலுள்ள விசேடம் என்னவெனில் இங்கு வரும் விருந்தினர்கள் அதிகளவு சத்தமிடாமல் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்படுகின்றனர். மேக்ஸ்பேஸ் தீவு எனப்படும் சிறிய, இதய வடிவான தீவில் 500,000லீ. குளமும் 15 பேருக்கான குளியல் தொட்டிகளும் வெளிப்புறத் திரையரங்கு ஒன்றும் 22 பேருக்கான அறைகளும் உள்ளன. இதன் எல்லாக் கட்டடங்களும் மரம் மற்றும் வைக்கோலாலான குடிசைகளும் பாலி மற்றும் ஜாவாத் தீவுகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளன. இத்தீவிற்குச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படுகின்றது. 8 பேருக்கு ஓர் இரவில் 7,990 டொலர்களும் விடுமுறைக் காலங்க…
-
- 0 replies
- 515 views
-
-
பொதுவாகவே 'பாசம்" அப்பிடி என்றால்........எல்லோருக்கும் நினைவில் வருவது அம்மா..............ஆனால்....தன்னுடைய பாசங்களை எல்லாம் நெஞ்ஞங்களில் சுமந்து குடும்பத்துக்காக ஒடி ஒடி உழைத்து சற்று கண்டிப்பு...சற்று பாசம்..என்று குடும்பத்தை கொண்டு இயக்குவது தந்தை என்னும் இந்த மாபெரும் உறவு......தன்னுடைய பாசத்தை நேரடியாக காட்டா விட்டாலும் மறைமுகமாக பிள்ளைக்கு ஒன்றென்றால்..துடிக்கும் அந்த துடிப்பு தந்தைக்கே உரித்தான ஒன்று.................. அந்த வகையில்...பல அம்மா சென்டிமென்ட் திரைப்படங்கள் தமிழ் திரையுலகை ஆண்டிருந்தாலும்...தந்தையினுடைய பாசத்தை சொல்லும்...திரைப்படமாக வெளிவந்தது..1987 இல் வெளிவந்..'அன்புள்ள அப்பா" திரைப்படம்......இதில் அப்பாவாக சிவாஜியும்...மகளாக..நதியாவும் நடித்திர…
-
- 8 replies
- 2.3k views
-
-
மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள் “உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம். தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன. பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் அவளுக்கு வேலை. மிகப் பெரிய தொகை சம்பளம். சென்னையைச் சுற்றியுள்ள பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் உண்டு. நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் அவளால் கார், பங்களா என்று வாழ்க்கையை அனுபவித்ததால், அவளாக சொன்னால் திருமணம் பற்றி யோசிக் கலாம் என்றுவிட்டு விட்டனர். அம்மா வற்புறுத்தும்வரை சுதந்திரமாக இருக்கலாம் என்று அவளும் கருதியதால் திருமண சிந்தனையே எழவில்லை. இந்த நிலையில் 28 வயதில் அவளிடம் காதல் எட்டிப்பார்த்தது. மகளின் காதலுக்கு பெற்றோரும் பச்சைக் கொடி காட்டினர். காதலரும் வசதியான பார்ட்டிதான். இரண்டு குடும்பத்திலும் பரஸ்பரம் பேச்சு வார்த்தை களோடு... `ஒப்பந்த தட்டு`களும் பரிமாறப்பட்டன. ஆடம்பரத்துக்கு பஞ்சமின்றி... அன…
-
- 9 replies
- 4.2k views
-
-
த்தியானந்த குருவும் சீடர்களும் ஆர்.அபிலாஷ் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை - இந்தியன் ஐந்து வருடங்களுக்கு முன் சத்யசாயி பாபாவை விமர்சனம் செய்யும் ஜி.ஆர்.ஆர். பாபுவின் “Sex,Lies, and Video Tape” என்கிற கட்டுரையை புதியகாற்று என்கிற பத்திரி கைக்காகத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அது பற்றிக் குறிப்பிட்ட போது என் காதலி “தயவுசெஞ்சு அதைப் பண்ணாதே” என்று கெஞ்சினாள். அதனால் ஏதேனும் கேடு நேரும் என்று அவள் அஞ்சினாள். எனக்கு விநோதமாக இருந்தது. அவள் தீவிர சாய் பக்தை ஒன்ற…
-
- 3 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 686 views
-
-
திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா? திருமணத்திற்கு பிறகு எனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் பல பிரச்சனைகள்.எனக்கு இல்லை; என்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு. படத்தின் காப்புரிமைHELEN CAROLIN என் சேலை முந்தானையின் வண்ணம்.. என் குட்டைபாவாடையின் நீளம்.. என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி.. என் சட்டையின் பாக்கெட்.. நான் உடுத்தும் உடைகளை வைத்து என்னை ஏன் எடைபோடுகிறீர்கள்? எனக்கு பிடித்தவற்றை அணிவது உங்கள் கண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? என அவர்களை கேட்கவேண்டும் போல இருக்கும்.. ஆனால் எப்போதும் போல மௌனம்தான் என் பதில்.. படத்தின் காப்புரிமைHELEN CAROLINA நான் பாலூட்டும் தாயாக இருப்பதால், வீட்டில் இருக்கும…
-
- 8 replies
- 1.8k views
-
-
பத்திக் ஆடைகள் தயாரிக்கும் குடும்பம் (நேர்காணல்: ஜெயா தயா) 'வேலையில்லாத இளைஞர் யுவதிகள் வேலை தேடி அலைவதை விட்டு விட்டு ஒரு சுய தொழிலைச் செய்வதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். தனியார் நிறுவனமோ அல்லது அரசதுறையோ, எத்துறை என்றாலும் நிம்மதியாக வேலை செய்து மாதச் சம்பளத்தை பெற வேண்டும் என்பது தான் இன்றைய இளைஞர்களின் மனோநிலையாக இருக்கிறது. இருப்பினும், எப்படியாவது சொந்தமாகத் தொழில் தொடங்கி நாம் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக உயர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவாக நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பது நல…
-
- 0 replies
- 833 views
-
-
கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? ஒரு பிசினஸ் கூட்டம் அல்லது ஏதோ ஒரு கூட்டம் நடக்கிறது, அதில் பலர் கலந்து கொள்வார்கள், இதில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என கண்டுபிடிக்க வேண்டும். யார் என்ன பொசிஷன் என்று கூட்டத்தில் வெளிப்படையாக சொல்லாத நேரத்தில் யாரை தமது பேச்சால் திருப்தி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாரி அல்லது முடிவெடுப்பவர் வருவார், கூடவே சில அல்லக்கைகள் கூட வருவார்கள், கூட வருகின்ற கைகள் பல கேள்வி கேட்பார்கள், அதிகாரி அமைதியாக இருப்பார், அல்லது அதிகாரி நூறு கேள்வி கேட்பார் அல்லக்கைகள் அமைதியாக இருப்பார்கள். ஒரு கூட்டத்தில் ஒருவர் 100 கேள்வி கேட்பார், இன்னொருவர் ஒரே ஒரு கேள்வி கேட்டிருப்பார், நூறு கேள்விக்கு பதில் அளித்து…
-
- 2 replies
- 930 views
-
-
செவ்வாய் தோசம் உங்களுக்கு உண்டா? https://www.facebook.com/photo.php?v=775071935837629
-
- 0 replies
- 954 views
-
-
பொதுபோக்குவரத்து ஊடகங்களில் பயணம் செய்யும் போது வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு மற்றும் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிக்கும் மற்றவர்கள் விட்டுக்கொடுப்பது வழமை. இன்னும் சிலர் மேற்கண்டவர்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களாக இருந்தாலும் ஒரு நல்லெண்ண அடிப்படையில் தங்கள் இடங்களை விட்டுக் கொடுப்பது வழமை. வயதானவர்களை, மாற்றுத்திறனாளிகளை மற்றும் குழந்தைகளோடு வருபவர்களை இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவது போல்... பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களை அவ்வளவு இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவதில்லை. இது எமக்கு மட்டுமல்ல.. பலருக்கும் பிரச்சனையாக இருப்பதால் பிபிசி வரை விடயம் வந்துவிட்டது. குறிப்பாக …
-
- 24 replies
- 2.7k views
-
-
கணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது! - காரணங்கள் தீர்வுகள் அவள் ஸ்பெஷல் ஸ்டோரிஉறவுகள்... உணர்வுகள்...வி.எஸ்.சரவணன் அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ... உலகில் எந்த மூலையில் இருப்பவருடனும் அரை நிமிடத்தில் பேசிவிடலாம் என்று சொல்கிற தகவல் தொழில்நுட்ப புரட்சிக்காலத் தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நமக்கு மிக முக்கியமான ஒருவர் நம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டிருக்கிறார். அவர், வாழ்க்கைத்துணை. ஆம்... கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, இருவரின் வேலை நேரம் முன் பின் அமைந்துவிடுவது, சோஷியல் மீடியாவில் நேரம் விரயம் செய்வது எனப் பல காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளும் நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்பது இ…
-
- 0 replies
- 2.1k views
-