சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டு : மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதாக ஆய்வு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுதல் அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது. ஆய்வு முடிவுகளின் படி, தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக கணினி அல்லது தொலைக்காட்சித் திரைகளை பார்க்கும் மாணவர்கள் அவர்களது தேர்வுகளில் குறைவான புள்ளிகள் பெறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஒரு மணி நேரம் படிப்பு தொடர்பான வீட்டுவேலை (ஹோம்வேர்க்) அல்லது வாசித்தலில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி அதை செய்யாத அவர்களது சக மாணவர்களின் தேர்ச்சியைவிட அதிகமாக இருக்கின்றது. விளையாட்டு போன்…
-
- 0 replies
- 284 views
-
-
தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும் 68 Views தகவல் தொடர்பாடல் சாதனம் என்பது ஒரு கருத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்யும் கருவியாகும். அவற்றில் இன்று உலகையே ஒரு சட்டைப் பையினுள் சுருக்கி வைத்திருக்கும் ஒரு கருவியாக கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. தொலைபேசி, சமூகத்தில் உள்ள அனைத்து நபர்களிடமும் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, மாணவ சமூகத்தில் இது பாரிய மாற்றத்தினைப் கொண்டுவருகிறது. இன்றைய மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளையும் மறந்து தொலைபேசியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் தங்களைச் சுற்றி நடப்பவை யாது? ஏன புரியாத அளவிற்கு அதன் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றனர். தங்…
-
- 0 replies
- 9.4k views
-
-
வாழ்க்கை வரலாறுகள் வெறும் அனுபவங்களின் தொகுப்பு அல்ல, மாபெரும் மனிதர்கள் உங்கள் கைவிரல்களை அழுந்தப்பிடித்து அழைத்துப்போகும் வாழ்க்கைப் பயண ஒத்திகை; தங்கள் தோள்களில் உட்காரவைத்து உங்களுக்குக் காட்டும் புதிய உலகம்; தங்கள் வெற்றி ரகசியங்களையும், செய்த தவறுகளையும் பகிர்ந்துகொண்டு உங்களைப் பட்டை தீட்டும் பாசறை. அவர்கள் ஜெயித்திருந்தாலும், தோற்றிருந்தாலும், எழுந்திருந்தாலும், விழுந்திருந்தாலும், ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு பாடம். - ப்ரையன் ட்ரேசி, அமெரிக்கச் சுய முன்னேற்றப் பயிற்சியாளர் வாருங்கள். இந்தியாவின் சில பிசினஸ் பிரபலங்களைச் சந்திப்போம். குஜராத் கிராமத்தின் ஒரு குக்கிராமத்தில் பள்ளி ஆசிரியர் மகனாகப் பிறந்த திருபாய் அம்பானிக்குக் கல்லூரிப் படிப்பைத்…
-
- 2 replies
- 2.5k views
-
-
தொழில் வழிகாட்டல் பயிற்சிகளும் உதவித் திட்டங்களும் அவசியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-25 07:56:14| யாழ்ப்பாணம்] எதை எடுத்தாலும் நூற்று இருபது ரூபா என்று கொச்சைத் தமிழில் உரக்கக் கூறி விளையாட் டுப் பொருள்களை விற்பனை செய்யும் சிங்கள இளைஞரை நல்லூர்த் திருவிழாவின்போது கண்டோம்.றம்புட்டான் பழத்தை வாகனத்தில் எடுத்து வந்து அதை விற்பனை செய்யும் தென்பகுதி வியாபாரிகளை யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்திகளில் அவதானித்தோம். ஆரியகுளத்தில் சோளம் விற்பனை, யாழ். ஆஸ்பத்திரி வீதியில் செவ்விளநீர், பழ நாற்றுக் கள், தென்னங்கன்றுகள் என நீண்டு செல்லும் விற்பனைகளை தினசரி பார்த்துச் செல்கிறோம். இதற்கு மேலாக தெருவோர வியாபாரத்திலும் தென்பகுதி மக்களின் முயற்சிகளைக் காண முடிகின்றது. …
-
- 0 replies
- 968 views
-
-
ஒருவருக்குத் தொழில்ரீதியான வளர்ச்சியும் அதற்காக அவர் அவரது பணியைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதும் 90 சதவீதம் அவர் செய்கிற வேலையில்தான் நடைபெறுகிறது. வேலையின் அனுபவம் மூலமும், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்குதல் மூலமும் தனது பணிகளின் மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும்தான் ஒருவருக்குப் பணி அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக, வேலையில்தான் பெரும்பாலும் மனிதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திறன் வளர்ப்புப் பயிற்சிகளில் சுமார் 10 சதவீதம்தான் கற்றுக்கொள்ளப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மதிப்பீடுகள் கிடையாது. சிலருக்கு அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியம். அவர்கள் வார இறுதி நாட்களிலும் வேலைசெய்யும்படி இருக்கிற பணிகளை விரும்ப மாட்டார்க்ள். மன அழுத்தமுள்ள அபாயம் நிரம்பிய வேலைகள் சிலருக்…
-
- 0 replies
- 851 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தங்களது குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கைபேசி பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கவலையுறும் பெற்றோர், குழந்தைகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுவதாக சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,000 பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 43 சதவீத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் அதிகரித்து வரும் தொழில்நுட்ப சாதன பயன்பட்டால் அவர்களது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 963 views
-
-
தோடுடைய செவியர்காள்! உங்கள் இலட்சியம்தான் என்ன? நாளுக்கு நாள் எங்கள் கலாசாரக் கோலங்கள் மாறிவருகின்றன. வெளிநாட்டு கலாசாரம் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையின் தாக்கமும் எங்கள் மீது மோதிக் கொள்வதை உணர முடியும். எதுவாயினும் எங்கள் தமிழினம் ஒன்று தான் தனது உயர்ந்த கலாசாரத்தை மிக எளிதாக மறந்துவிடக் கூடியது என்பது நிரூபணமாகி விட்டது. எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் ஆடை அலங்காரங்களை நினைக்கும் போது இலவசக் கல்வியின் பயன்பாடு தமிழர்களுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஒரு இனத்தின் எதிர்காலம் என்பது அந்த இனத்தின் இளம் சமூகத்தின் கையில் உள்ளது என்பது பொதுவான முடிபு. இந்த முடிபு சரியானது என நாம் நினைத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் அந்த …
-
- 0 replies
- 880 views
-
-
சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையிலே மக்களின் மணவாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இளைய சமுதாயத்தினரின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர் பார்ப்புகள் மாறி வருகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நாள்தோறும் நிகழ்கின்ற வியத்தகு நிகழ்ச்சிகளும், எழுச்சிகளும் அவர்களது சிந்தனை ஓட்டத்தை பாதிக்கின்றன. தாங்கள் கற்ற கல…
-
- 1 reply
- 800 views
-
-
தோல் நிற அரசியலும்;( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும் – மேமன்கவி தோல் நிற வேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும் இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும் மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் நவீன யுகத்தில் ஒரு பகுதியாக தெரிந்த வரலாறாக ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின மக்கள் எதிர் கொண்ட அவலமும் துயரமும் அவர்தம் விடுதலை போராட்டமும் மாறிய பொழுதும், உலகளாவிய ரீதியாக, தம்மை வெள்ளையர்கள் என சொல்லிக் கொண்ட மேற்கத்திய காலனியங்கள், தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்களை பின்காலனியச் சூழல் வரை வெள்ளையர் அல்லாத கறுப்பர்கள் என்று ஒதுக்கும் ம…
-
- 0 replies
- 923 views
-
-
தோல்வி என்பதே இல்லை வெற்றி வெளிச்சம் - இயகோகா சுப்ரமணியம் உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள் நமது பூமியில் எதுவுமில்லை; உணர்ந்து தெளிந்து முனைந்தவர் தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை. ” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் அத்தனைபேருமே தோல்விகளை பல முனையில் சந்தித்து, அதையும் மீறி வந்தவர்கள்தாம். ”என்னதான் இருந்தாலும் உங்க சாதனை அற்புதம் சார்” என்று பாராட்டும் போது, ”அய்யோ. அதெல்லாம் இல்லீங்க. கூட்டு முயற்சி. ஆண்டவன் செயல்” என்று அவர்கள் சொல்லும்போது, ”ஆஹா. என்ன ஒரு அடக்கம், பெருந்தன்மை” என்று மேலும் அவரைப் பாராட்டுவோ…
-
- 0 replies
- 881 views
-
-
உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும். தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை. தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம். தோல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பேசினாலும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந…
-
- 8 replies
- 1.4k views
-
-
நகம் கடித்தல் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை,மனப்பதட்டம், ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்…
-
- 19 replies
- 3.9k views
-
-
வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள். கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவ…
-
- 17 replies
- 3.8k views
-
-
எந்தமொழி எனக்கு சோறு போடுகின்றதோ....... அதைத்தான் நான் படிக்க முடியும்...
-
- 12 replies
- 2.1k views
-
-
அவர் பிரபலமானவர், கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட இளைஞர். தன்னைவிட அதிக வயதுள்ள, கலைத்துறையை சேர்ந்த பெண்மணி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்மணி விவாகரத்தானவர். அவருக்கு முதல் கணவர் மூலம் வாரிசு இருக்கிறது. அவர்கள் இருவரையும் பார்த்தால் அதிக வயது வித்தியாசம் தெரியாது. பொருத்தமான ஜோடியாகவே தோன்றி னார்கள். ஆனால் மிகுந்த வருத்தத்தோடு காணப்பட்டார்கள். “நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் பலரது பார்வையும் எங்கள் மீது விழுகிறது. நாங்கள் முதலில் நட்பு ரீதியாக மட்டுமே பழகினோம். ஆனால் எங்கள் நட்பை பலரும் பலவிதமாக பேசினார்கள். நாங்கள் சேர்ந்து வாழ்வதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கட்டுக்கதைகளை கிளப்பி விட்டார்கள். அதன் பின்புதான் ‘மற்றவர்கள் கூறுவதுப…
-
- 0 replies
- 1.3k views
-
-
நட்பு அல்லது தோழமை என்டால் என்ன?...நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?...நட்பு என்டால் விட்டுக் கொடுத்தல் என்டு நான் கருதுகிறேன்...பரஸ்பரம் புரிந்துணர்வு,ரகசியம் காத்தல்,விட்டுக் கொடுத்தல் இல்லாமல் இருவர் அல்லது பலர் நண்பர்களாக இருக்க முடியாது...நண்பர்கள் இரு வகைப்படும்1)நண்பர்கள் நாங்கள் பாடசாலையில் படிக்கும் போதோ,அலுவலகத்திலோ அல்லது பக்கத்து வீட்டிலோ வசிக்கும் எம் வயதை ஒத்தவர்கள்...சில விடயங்களில் எமக்கு உதவி இருப்பார்கள்...எமக்குப் பிடித்தது சில இவர்களுக்கும் பிடித்திருக்கும் 2)உயிர் நண்பர் இவர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவீர்கள்...எதையும் மறைக்க மாட்டார்கள்...ரகசியம் காப்பார்கள்...இருவரது ரசனையும் பல விடயங்களில் ஒத்துப் போகும்...அவர்க…
-
- 13 replies
- 6.8k views
-
-
சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் ஏற்படுவது இயல்புதான். அதை தகுந்த தருணம் பார்த்து தெரிவித்தால் வெற்றியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன். என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஒரு ரசாயான மாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி மிக அருகருகே இருக்க நேரிடுவதால் நட்பானது காதலாக கனியும். உடனே சட்டென்று காதலை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் பார்த்து எதிராளிக்கும் அந்த உணர்வ…
-
- 0 replies
- 705 views
-
-
நட்பென்ன உறவென்ன ! - சுப. சோமசுந்தரம் எனது இந்த அறுபதாம் அகவையில் சமூக விலங்காக எல்லோரையும் போல் நான் வாழ்ந்ததைத் திருப்பிப் பார்க்கிறேன். எத்தனை உறவுகள் எத்தகைய நட்புகள், அத்தனையும் ஒரு பெரிய புத்தகமாக எழுதித் தள்ளும் அளவிற்கு என் மனத்திரையில் ஓடுகின்றன. வாசிப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு என்னால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை, ஏன் இறுமாப்பே உண்டு என வைத்துக் கொள்ளலாம். புத்தக அளவிற்கு எழுத வேண்டியதை ஒரு கட்டுரையில் சுருக்க நினைக்கும் பேராசை இப்போது. உறவோ நட்போ, நம் வாழ்வில் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் (படுத்தும் பாடுகளும்) அளப்பரியன. உறவுக்கும் நட்புக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுண்டு. நட்பு நமது …
-
- 7 replies
- 2.3k views
- 1 follower
-
-
வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில ஓர் இழவுப்படம் போச்சிது. நான் படத்தை முழுமையாக பார்க்க இல்லை என்றாலும் சில காட்சிகளை பார்த்து இருந்தன். எனது அக்கா படத்தை முழுமையாக பார்த்து இருந்தா. படத்தின் சாரம்சம் என்ன எண்டால்.. இரு உயிர்நண்பிகள். அதில ஒருத்தியிண்ட காதலனை இன்னொருத்தி கொத்துகின்றாள். மற்றவள் கடைசியில தன்னை ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று நண்பியுக்கு வாழ்த்தி தன்ர காதலனோட தனது நண்பி சந்தோசமாய் கலியாணம் கட்டி சேர்ந்துவாழ வழி அமைச்சுகொடுத்து ஆசீர்வாதமும் செய்துபோட்டு.. அவளை நீண்டகாலமாக கலியாணம் கட்ட ஆசைப்படுகிற ஒருத்தனையும் புறக்கணிச்சுப்போட்டு தனது காதலனை நினைச்சு உருகிக்கொண்டு தனது வாழ்க்கையை தொடர்கிறா. நண்பனின் அல்ல…
-
- 65 replies
- 11k views
-
-
மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும். அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்.. ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..! ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது. ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று த…
-
- 22 replies
- 2.6k views
-
-
முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான். கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே, உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான். போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே, உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான். பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே, தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும், பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும் தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான். நன்றி; தென்றல்
-
- 0 replies
- 400 views
-
-
சமீபத்தில் மேலைநாட்டு பெண்களிடம் நீங்கள் உங்கள் நண்பரை காதலனாக ஏற்றுகொள்வீர்களா? என்று ஒரு சர்வே நடத்தபட்டது. அதில் பங்கு எடுத்த பல பெண்கள், 'முடியவே முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை எல்லை' என்று பதில் தந்தனர். ஏன் அப்படி சொல்கிறீர்? என்று திருப்பி கேட்டதுக்கு அவர்கள் அத்தனைப் பேரும் கோரசாக சொன்ன பதில் 'ஷெல்லி வொயிட் ஹெட்'. சமீபத்தில் ஷெல்லியிடம் அவரது பால்ய தோழன் இவான் 'உன்னுடன் வாழ்ந்த ஏழு வருட திருமண வாழ்க்கையை இதோடு முடித்து கொள்வோம்' என்று விலகியிருக்கிறார். அவர் விலகிய பின் ஷெல்லிவிட்ட அறிக்கைதான் பெண்களை, இனிமேல் நண்பர்களை நண்பர்களாகவே பார்ப்போம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இதைப் பற்றி ஷெல்லி பேசுகையில் "நானும் இவானும் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடம் ஆகிறது. எ…
-
- 12 replies
- 1.8k views
-
-
முதற்கண் பாசம் உள்ள யாழ்கள் உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின் என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில் உங்கள் ப வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும் இடையில் நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது வாசிக்க ( சுவாசிக்க) வருவதுண்டு... என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல உள்ளார் ...அவரது தயார் தனது நோய் வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார்…
-
- 8 replies
- 4.1k views
-
-
அன்புள்ள நண்பிக்கு, ஆண்கள் எளிமையானவர்கள்,பெரும்பாலும் பெண்களை போன்று சிக்கல் இல்லாத பொதுப்படையான நடத்தையை கொண்டவர்கள்.ஆண்களை நாம் கவர்வதற்கு சில தந்திரோபாயங்களை கையாளுதல் அவசியம் என்றுநீ நினைக்கலாம் .உன் நினைப்பு சரியானதே. எனது அப்பா கூறுவார், "தான் எப்போதும் தன் நிலையிலிருந்து மாறமாட்டான் என்ற நினைப்பிலேயே ஒரு ஆண் திருமணம் செயக்கிறான் ஆனால் ஆண்களை தங்களால் மாற்றமுடியும் என்ற நினைப்பிலேயே பெண்கள் திருமணம் செய்கின்றனர்." ஆனால் இந்த இரண்டுமே தவறாகிறது. ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை கொண்டிருக்கும் பெண் இலகுவாக ஆண்களை கவர்ந்துவிடுகிறாள்.அவற்றில் சிலவற்றை உனக்கு தருகிறேன்: 1 .விளையாட்டுக்களில்,பொது வ…
-
- 11 replies
- 1.3k views
-