சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-? காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள், காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி.............................................................. .................நீண்டு கொண்டே போகும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
-
- 54 replies
- 12.1k views
-
-
திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் திருமணமானவர்களில் 5-ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை. அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியின…
-
- 1 reply
- 1k views
-
-
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" பகுதி 02 மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகமும் சிந்து வெளி நாகரிகமும் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது .அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்…
-
- 0 replies
- 406 views
-
-
உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்.. ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.. 1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது. அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு. ஆ: திருமணம். இதில் நீங்கள் எதனை தெரிவு செய்வீகள்.. ஏன்..??! 2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டி…
-
- 16 replies
- 1.7k views
-
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ! - சுப. சோமசுந்தரம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எத்துணையோ நல்ல விடயங்கள் அமைவதுண்டு. பொதுவாக நாம் அமையாதவற்றை நினைந்து ஏங்குவதும், அவற்றின் தேடலுக்கான முயற்சிகளில் இறங்குவதுமாக எப்போதும் எதையாவது விரட்டிக் கொண்டே வாழ்வைத் தொலைப்போம். இந்த விரட்டுதலை நியாயப்படுத்த ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை என்று நம்மில் சிலர் வள்ளுவனை வேறு துணைக்கு அழைப்பதுண்டு. இவ்வாறெல்லாம் இவற்றைப் பயன்படுத்துவோம் என்று தெரிந்திருந்தால் வள்ளுவன் இவ்வதிகாரங்களை அமைத்தே இருக்க மாட்டானோ, என்னவோ ! எனது இந்த பீடிகையைப் பார்த்து நான் ஏதோ பெட்ரன்ட் ரஸலைப் பின்பற்றி ‘சோம்பலுக்குப் புகழ்மாலை’ (‘In Praise of Idleness’ by Bertrand Russell) பாடப்…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள் சந்திரலேகா கிங்ஸ்லி -இலங்கை மலையகம் ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும் பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள் சுயங்கள் நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன.பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக காணப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக பெண் ஆளுமைகள் விழிப்புறும் தோரணையிலும்…
-
- 3 replies
- 10.3k views
-
-
பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா?'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை அழைத்துச் செல்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கி…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறப்புக் கட்டுரை: சைவம் புனித உணவா? மின்னம்பலம் அ.முத்துக்கிருஷ்ணன் இந்தியர்களின் பெரும்பான்மையானவர்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்கிற தொழில்முறை வதந்தி தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உண்மை அல்ல என்பதையும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஒரு பயணம் செய்தால் நகரங்களின் தெருக்களில் மனத்தை மயக்கும் உணவின் மனம் இந்த தேசத்தின் உணவுப் பழக்கத்தை சொல்லிவிடும். இந்தியா சைவ உணவு நாடா? இருப்பினும் நீங்கள் எல்லோருமே அசைவம் சாப்பிட்டாலும் இந்த தேசம் சைவ உணவுப்பழக்கம் என்கிற கட்டுக்கதையை நாங்கள் பரப்புவோம். ஏனெனில், நாங்கள் சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இந்த தேசத்தில் பெரும்பான்மையானவர்கள் எங்களைப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
குட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்! படத்தின் காப்புரிமைAFP/GETTY உகாண்டாவில் அரசு ஊழியர்கள் எந்தவிதமான உடையை அணியலாம் என்று கொண்டுவரப்பட்டுள்ள வரைமுறைகள், ஆடைகள், பெண்கள் உரிமை மற்றும் நெறி சார்ந்த கடுமையான விவாதத்தை பற்றவைத்துள்ளது. ஒழுங்காக ஆடை அணிவதற்கான புதிய வரைமுறைகளை இந்த புதிய உத்தரவு விளக்குகிறது. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டவை : முழங்காலுக்கு மேலாக இருக்கும் பாவாடை அல்லது ஆடை அணிவது ஸ்லீவ்லெஸ், வெளிப்படையாக அல்லது ஊடுருவக்கூடிய மேலாடைகள் மார்பு, தொடை, முழங்கால் மற்றும் பின்புறம் தெரிவது போன்ற உடைகள் பிரகாசமாக சாயமேற்றப்பட்ட முடி …
-
- 2 replies
- 1.2k views
-
-
முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம் பகிர்க பொது வெளியில் நிர்வாணத்தைத் தடை செய்த ஓர் நாட்டில், ஒரு நிர்வாண விரும்பியின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்தோனீசிய நாட்டில் உள்ள நிர்வாண சங்கத்தின் சில உறுப்பினர்களை பிபிசி இந்தோனீசிய சேவையை சேர்ந்த க்ளாரா ரோண்டான் சந்தித்தார். ஆதித்யாவின் உடலில் துணி என்ன... ஒரு நூல் கூட இல்லை. அவர் என்னிடம் பேசும்போது, நண்டு, முட்டை, சீன முட்டைக்கோஸ் ஆகியற்றை வாணலில் வதக்கினார். அந்தப் பெரிய வாணலில் இருந்து சூடான எண்ணெய் துளிகள் அவரது வெறும் வயிற்றுப் பகுதியில் தெறித்தது. "எனக்கான உணவைச் சமைப்பது உள்ளிட்ட தினசரி வேலைகளைச் செல்வதில் எனக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
"மே" தினம். தினமும்... 16, 18 மணித்தியாலம் என்று, முழுக்க கடுமையாக உழைக்கும், தொழிலாளர்களுக்காக.... போராடி.. எட்டு மணித்தியால வேலை செய்வதை உறுதிப்படுத்திய தினம் இது. இந்தப் போராட்டம்... ஒரு கம்யூனிச நாட்டில் நடந்திருந்தால், ஆச்சரியப் பட்டிருக்க மாட்டேன். இது, அமெரிக்காவில் நடந்தது. மருத்துவர், தாதியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு லீவு இல்லை. சரித்திரத்தை கதைத்தால்.... உங்களுக்கு, பிடிக்காது என்று எனக்கு வடிவாய்த் தெரியும். ஆன படியால்... நிகழ்காலத்துக்கு வருவோம். நாளைக்கு யாருக்கு லீவு, யார் வேலைக்குப் போக வேணும்? என்ன காரணத்தால்... வேலைக்குப் போக வேண்டும், என்பதை.... கூறுங்களேன்.
-
- 9 replies
- 921 views
-
-
ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும் ப்ரதீப் குணரட்ணம் படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும். “Little deeds of kindness Little words of love Make our earth an eaden Like the heaven above” என்று அமையும் வரிகளை கடக்கும்போது ஒரு பெடியன் அண்ணை, ஏடன் தோட்டம் எண்டா என்ன? எண்டு கேட்டான். (இருந்த மாணவர்கள் அனைவரும் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள்) கிறிஸ்தவ படி கடவுளின் மூத்த சிருஷ்டிப்புகள் பற்றியும்…
-
- 0 replies
- 616 views
-
-
அவளே தேர்வு செய்யட்டுமே அட்வகேட் ஹன்ஸா சிவப்பழகு க்ரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இன்ன அளவு சிவப்பாகலாம் எனச் சொல்வதன் ஊடேயே சிவப்புதான் அழகு எனும் கருத்தை லாபி செய்வதே போல… வெள்ளை அல்லது இள நீல நிற இறுக்கிய பேண்ட் அணிந்து, மாடிப்படிகளில் எந்தப் பெண்ணாவது ஏறினாலோ, கேமிரா படிகளின் கீழ் இருந்து அவளின் ப்ருஷ்டபாகம் முன்னிறுத்தித் தெரியும்படி இருந்தாலோ, அவள் அளவுக்கதிகமாகத் துள்ளிக்கொண்டிருந்தாலோ அது பெண்களுக்கான நேப்கின் விளம்பரமேதான். அந்த நேப்கின் பயன்படுத்தினால் அப்படித் துள்ளித் திரிய முடியும் எனச்சொல்வதோடு மட்டுமல்லாமல் வாருங்கள் சந்தோஷமாக வாழ்வை அனுபவியுங்கள் டைப் வாசகங்களின் மூலம் ரெஸ்ட் தேவை இல்லை என்கின்றன இந்த விளம்பரங்கள். இதைப் பார்த்…
-
- 0 replies
- 600 views
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்தது வீட்ல எல்லோருக்கும் அந்த பையனை பிடித்து இருந்தது. பெண்ணுக்கு பிடிக்கவில்லை காரணம் வயசு பெண்ணுக்கு 21 வயசு தான் பையனுக்கு 30 வயசு பையன் engineer வெளிநாடொன்றில வேலை பார்க்கிறான் வீட்ல எல்லோருக்கும் பிடிச்சதால எப்பிடியும் அவளுக்கு கட்டி வைச்சிடுவார்கள் என்று நினைக்கிறன் காரணம் பெண்ணுக்கு ஜாதகத்தில ஏதோ குற்றம் (செவ்வாய்) இருக்குது இதை தவிர்க்க விட்டால் பிறகு மாப்ளை தேடுவது (பொருத்தமான) கஷ்டம் என்பதால எப்பிடியும் செய்து வைத்துடுவார்கள் .இதே மாதிரி கடந்தவருடம் இன்னொரு தெரிஞ்ச பெண்ணுக்கும் அவள் a /l படிச்சு கொண்டிருக்கும் போதே கனடா மாப்பிளை எண்டவுடனே கட்டி வைச்சிடார்கள் மாப்ளைக்கு 31 வயசு பெண்ணுக்…
-
- 10 replies
- 3.3k views
-
-
அதிகாரம் என்பது நல்ல சொல் ஆர். அபிலாஷ் வேதியலில் சில வாயு அல்லது அமிலங்களை நிறமும் குணமும் அற்றது என்பார்களே அப்படி ஒரு வஸ்து தான் அதிகாரம். இதை புரிந்து கொள்ள எனக்கு வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி தேவைப்பட்டது. இதை சரியாக அறிந்து கொள்ளாததனாலே எனக்கு அதிகாரத்தில் எனக்கு மேலேயும் கீழேயும் உள்ளவர்களோடு உறவை தக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இது என்னை நிம்மதியற்றவனாக, உலகத்தை, மனிதர்களை வெறுப்பவனாக என்னை மாற்றியது. என்னுடைய நிலைக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் அப்பா. அவர் எப்போதும் அதீதமான இரட்டை நிலைகளில் இருப்பார். ஒன்று அதிகாரத்தை பொழிவார். அல்லது அன்பை பொழிவார். இரண்டிலும் திக்குமுக்காட செய்வார். பன்னிரெண்டு வயதில் இருந்தே அப்பாவுடனான உறவு எனக்கு சிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
காதலர்தினம் ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவ…
-
- 3 replies
- 781 views
-
-
வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை . "நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்." பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமி…
-
- 15 replies
- 3.7k views
- 2 followers
-
-
http://www.youtube.com/watch?v=t0Atg6abckw&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lq1deJ17uZQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=g6RodFbC1Ws&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=JxG_1z2v8Wc&feature=player_embedded#!
-
- 1 reply
- 663 views
-
-
அம்மா அப்பா. ஜேர்மனிய தமிழ் கலப்புத்திருமண விவரணப்பட முன்னோட்டம். http://www.kino-zeit.de/filme/amma-appa# http://www.kino-zeit.de/filme/trailer/amma-appa http://www.ammaandappa.com/#!homeeng/c14zq
-
- 3 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 45 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில், இத்தாலியின் வடக்கு நகரமான பாவியாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர், தனது மகன்களை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மகன்களில் ஒருவரது வயது 40, மற்றவருக்கு வயது 42. தனித்தனியாக வாழுமாறு தனது மகன்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரு மகன்களும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை வழங்கும்போது, "குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் பொறுப்பு என்பதால் ஆரம்பத்தில் மகன்கள் தங்கியிருக்கலாம். ஆனால், இப்போது அவர்கள் 40 வயதுக…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்ற…
-
-
- 1 reply
- 1.1k views
-
-
சமூகவயமாதலின் தாக்கங்கள்... ஆக்கம்: எஸ். கண்ணன் தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அதிகரித்து வரும் விவாகரத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் 25 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இடையிலான திருமண உறவில், விரிசல்கள் அதிகரித்து வருவதாக நாளிதழ்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தன. கவலையும் அதிர்ச்சியும் மட்டும் மேற்படிப் பிரச்னையைத் தீர்த்து விடுவதில்லை. அதற்கான மூலகாரணத்தை அறிந்து கொள்ளாமல் தீர்வை எட்ட முயற்சிப்பது பலவீனமான சிந்தனையின் வெளிப்பாடு என்பதையும் கணக்கில்கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இந்தச் சமூகப் பிரச்னைக்கு இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்கு காரணமாக இருப்பதைக் கணக்கில் எடுப்பதும் அவசியம். ஒன்று, குடும்ப அமைப்பு முறைக்கும், திருமண…
-
- 0 replies
- 559 views
-
-
-
ஒழுகு... (சர்வதேச சிறுவர் தினம்) குழல் இனிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்... சிறுவர்கள் உலகில் சஞ்சரிப்பது என்பது மிகவும் மகத்தானதொரு செயல். இந்தச் சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சர்வதேச சிறுவர் தினம், 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தினமான ஒக்டோபர், 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. (முதியோர் தினமும் இன்றைய நாளிலேயே கொண்டாடப்படுகின்றது) எனினும், இச்சிறுவர்கள் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் வௌ;வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்நாளில் நினைவுகூறப்படுக…
-
- 1 reply
- 3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு ஆராய்ச்சி: "எமக்கு காதல் ஏற்படுவதற்கு காரணம் என்ன?" ... இதுபற்றிய ஒரு கலந்துரையாடல்.. எமக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது? எமக்கு ஏற்படும் காதலும், ஏனைய விலங்குகளிற்கு ஏற்படும் காதலும் அடிப்படையில் ஒரே மாதிரியானதா? காதல் உணர்வு எமக்குள்ளேயே இருக்கின்றதா அல்லது வெளியில் இருந்து ஏற்படுகின்றதா? காதல் வயதுடன் சம்மந்தப்பட்ட ஓர் தற்காலிக உணர்வா? காதல் தெய்வீகமானது எண்டு சிலர் சொல்லிறீனம். தெய்வம் எமக்குள்ள இருக்கிறதாலதான் காதல் ஏற்படுகிதா? பதில் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. இன்னும் கேள்விகள் நிறைய இருக்கிது. தொடர்ந்து கேட்கிறம். காதல் நாங்கள் விரும்பியபடி அமைஞ்சால் சந்தோசமாக இருக்கும…
-
- 27 replies
- 6.1k views
-