உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது. நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது. உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன. இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது. மூன்று நாடுகளும…
-
- 19 replies
- 1.8k views
-
-
வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர். லிபியா…
-
- 7 replies
- 1.8k views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்தது. தங்கள் கண்முன்னே தோழிக்கு குழந்தை பிறந்ததைப் பார்த்த விடுதி மாணவிகள் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்...’ இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும் ‘சுளீர்’ என்று இதயத்தைத் தைத்தது போன்ற உணர்வு. என்ன கொடுமை இது...? இதனை விசாரிக்க களத்தில் இறங்கியபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தலித் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள்தான் இந்த அரசு மாணவியர் விடுதி இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகள் சுமார் 740 பேர் இந்த விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். விடுதியில் மாணவிகளுக்கான ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு.. கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம். - ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது. கருணா : சொக்கத்தங்கம் சோனியா. - தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்? கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம். - ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!! இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான். சோனியா : இலங்கைத் தமிழர்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau concentration camp) சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல் 75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள் இன்று நினைவு கூர்ந்தனர் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன் வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும். போலந்தின் தென்பகுதியில் உள்ளது. செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதி…
-
- 16 replies
- 1.8k views
-
-
இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. ......... காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு… கைராட்டை கதருன்னு சொன்னே வெள்ளக்காரனின் …
-
- 0 replies
- 1.8k views
-
-
சக.. அப்பாவி மனித உயிர்களின் நூற்றுக்கணக்கான அழிவுக்கும்.. பொருள் சொத்தழிவு என்று பேரழிவுகளுக்கும்... மனிதரில் இன்னொரு தரப்பு செய்யும் செலவை பாருங்கள்.. அதுவும் பிரிட்டன் போன்ற பொருளாதார வளர்ச்சி (கடந்த காலாண்டில்) பூச்சியத்துக்கு கீழே நிற்கும் நாடுகள்.. பொதுமக்கள் மீது பல பொருண்மிய அழுத்தங்களை திணிக்கும் நேரத்தில் குண்டுகளுக்கு கொட்டும் செலவோ மிகப் பெரியது. ஒரு தடவை ஒரு Tornado போர் விமானத்தை லிபியா மீது செலுத்த ஆகும் எரிபொருள் செலவு மட்டும் 30,000 பவுன்கள். ஒரு cruise ஏவுகணையின் விலை 500,000 பவுன்கள். இதுவரை 150 ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் லிபியா மீது ஏவியுள்ளன. ஒரு Tornado சுட்டு வீழ்த்தப்பட்டால் அதை பிரதியீடு செய்ய ஆகும் செலவு 50 மில்லியன் …
-
- 7 replies
- 1.8k views
-
-
img: en.wikipedia.org கடும் போக்கு சோசலிசச் சீனாவில் Tiananmen சதுக்கத்தில் 1989 இல் ஜனநாயக அரசியல் மாற்றம் வேண்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை சீன அரசு, அரச பயங்கரவாதத்தை ஏவி 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று அடக்கியதன் 20ம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். இன்றும் (2009) கூட Tiananmen சதுக்கத்தில் சீன அரசபயங்கரவாதத்தின் கொடூரக் கொலை வெறிக்குப் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் அவ்விடத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனா மீது அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகள் எப்போதும் கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதும் காத்திரமான நடவடி…
-
- 5 replies
- 1.8k views
-
-
ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்! கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வரு…
-
- 2 replies
- 1.8k views
-
-
13 ஆண்டுகளுக்குப் பின் பேரவையில் முதல் கணக்கை தொடங்கிய ம.தி.மு.க. சென்னை, மே 11: கட்சி தொடங்கி 13 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப் பேரவையில் நுழைந்திருக்கிறது வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.க. 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்கட்சி முதல் முறையாக 1996-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின்னர் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அத் தேர்தலிலும் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. வெற்றி பெற்று, 6 இடங்களைப் பிடித்துள்ளது. அக்கட்சி உருவாகி 13 ஆண்டுகள் கழி…
-
- 6 replies
- 1.8k views
-
-
துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன? படத்தின் காப்புரிமைA. VINE/DAILY EXPRESS/GETTY IMAGES அண்மையில் கத்தார் மற்றும் செளதி அரேபியாவுக்கான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பல இந்திய தொழிலாளர்கள் வேலையின…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி! - தனியாா் வைத்தியசாலையில் அனுமதி! [saturday 2014-09-27 21:00] பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவிற்கான அதிகாரபூர்வ எழுத்து ஆவணம் இதுவரையில் சிறைச்சாலைக்கு செல்லாமையினால், அவர் பெங்களுர் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இன்னும் சிறிது நேரத்தில் இந்த ஆவணம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்குமெனவும், அதனைத் தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்றும் குறிப்பிடப்படுகின்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக இணங்கா…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஈராக்கின் அமெரிக்க தளம் மீது 6 ரொக்கட்டுகள் வந்து வீழ்ந்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது. News > World > Middle East Related: US defence secretary questioned on Iran tensions Iran crisis: Tehran launches missile attack on US-Iraqi Ain al-Asad air base Republican Guard fires 'tens' of warheads, state TV reports say Jon Sharman, Andrew Buncombe @AndrewBuncombe 18 minutes ago Iran has claimed res…
-
- 19 replies
- 1.8k views
-
-
என்னமா எல்லாம் 'திங்க்' பண்ணி தொலைக்கிறாங்கப்பா.. கக்கூசு ஒண்டு தான் காலல இன்பமா தொந்தரவில்லாம காலக்கடன் கழிக்க உதவிய ஒரே இடம்...அதுவும் போச்சா.. :angry: ஆமாங்க சார், கூகுள் புதிதான தொழிநுட்பமொன்றை அறிமுகப்படுத்துகிறது. அது எப்படி வேலை செய்யும் என்று விலாவாரியா கழிந்து வைத்திருக்கிறார்கள்- மூக்கைப் பொத்திக்கொண்டு பார்க்கவும்... http://www.google.com/tisp/install.html அப்ப இனி யாழில் போஸ்ட் பண்ற 'கக்கூஸ் இணைய அங்கத்தவர்களின்' பதிவுகள் ஒரே நாற்றமாகத்தான் இருக்க போகிறது. பார்வையாளர்கள் சென்ற்'ஐ கணணிக்கு அடித்து விட்டுத்தான் வாசிக்க தொடங்கும் துர்ப்பாக்கிய நிலையா போச்சுப்பா.. அது சரி- தூய்மையாக கருதப்படும் திருப்பதி கோயிலில்- ஒன்லைன் - அர்ச்சனைக்கு ஓட…
-
- 18 replies
- 1.8k views
-
-
டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் குற்றம் சாட்டப்பட்டார், இந்த விஷயத்தை நன்கு அறிந்த பல ஆதாரங்களின்படி - அமெரிக்க வரலாற்றில் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. முத்திரையுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வரும் நாட்களில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறியப்படவில்லை, ஒரு ஆதாரம் CNN இடம் கூறினார். மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கின் அலுவலகம் டிரம்பின் வழக்கறிஞர்களை அணுகி, அவர் சரணடைவதைப் பற்றி விவாதிக்கும். https://www.cnn.com/2023/03/30/politics/donald-trump-indictment/index.html
-
- 21 replies
- 1.8k views
- 2 followers
-
-
http://www.calgaryherald.com/news/Toronto+Mayor+Ford+future+office+decided+court+today/7610030/story.html
-
- 21 replies
- 1.8k views
-
-
சோம்பல் முறித்துக் கொண்டிருந்த தமிழக அரசியல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்தி இடைத்தேர்தலின் காரணமாக நாலு கால் பாய்ச்சலில் வேகம் எடுக்கத் துவங்கியிருக்கிறது. கலைஞர், அம்மா, விஜயகாந்த் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தங்கள் கழகங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். எந்த அரசியல் கட்சித் தலைவர் என்ன குற்றச்சாட்டை சொன்னாலும் அது தன்னைத் தான் சொல்லுவதாக கூறி ஆவேசப்படுகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலின் போது "லஞ்சத்தை ஒழிப்பேன்" என்று காட்டுக் கத்தல் கத்தியவரின் குரல் இந்த உள்ளாட்சித் தேர்தலின் போது "கொசுவை ஒழிப்பேன்" என்ற அளவுக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. தன்னைத் தானே பிரபலப் படுத…
-
- 7 replies
- 1.8k views
-
-
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த சவப்பெட்டியில் டெல்லியில் இறந்த மாணவியின் உடல் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது பிஸியோதெரபி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மாணவி முதலில் டெல்லியில் உள்ள சப்தர் ஜங் மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் போராட்டம் [சனிக்கிழமை, 20 மே 2006, 05:24 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்க்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தினது மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டமைப்பு, அமைதிக்கும் நீதிக்குமான திராவிடர் அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 13 பேர் சிறிலங்கா கடற்படையினரால் படுக…
-
- 7 replies
- 1.8k views
-
-
நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்வின்போது, டென்மார்க் நாட்டுப் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில், சோகமான சூழ்நிலையில், அப்படியாக மூவரும் ஒட்டிக்கொண்டு தமது கைபேசியிலேயே படம்பிடித்துக்கொண்டது, பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. பெண்ணான டென்மார்க் பிரதமருடன் ஒபாமாவும், கேமரெனும் ஒட்டிக்கொண்டு படம் பிடிப்பதை, ஒமாபாவின் மனைவியான மிஷேல் ஒபாமா கோபத்துடன் பார்ப்பது போன்ற பாவனையில் ஒரு படத்தை வெளியிட்ட சில பத்திரிகைகள் அதிபர் ஒபாமா தனது மனைவ…
-
- 21 replies
- 1.8k views
-
-
சிரிப்புப்பகுதியில் இணைக்க வேண்டிய செய்தி. பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - இளங்கோவன் சென்னை: பேனா முனையை விட எதுவும் வலிமையானதல்ல. எனவே பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த 20 பத்திரிக்கையாளர்கள், இதழியல் படிப்பில் 6 மாத டிப்ளமோவை முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஈழப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும். தமிழகத்தில் சிலர் இதை …
-
- 5 replies
- 1.8k views
-
-
சிங்கப்பூரில் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி! ( வீடியோ) சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபலமான இந்திய ஹோட்டலான, கோமளவிலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று இரவு விருந்தளித்தார். இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான். பிரதமர் மோடி மசால்தோசை, வடை போன்றவற்றை விரும்பி உண்டார். இந்த ஹோட்டலை ராஜ்குமார் என்பவர் நிர்வகித்து வருகிறார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” “எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை உலுப்பிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. அண்மையில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறியிருந்தார். இப்போது இன்னொரு பெண் தனது தொடர்புபற்றி தெரிவித்திருக்கிறார். பிளேபோய் இதழின் முன்னாள் மொடல் அழகியான நியூயார்க்கைச் சேர்ந்த கரேன் ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
அமெரிக்கா மீது போர் தொடுப்போம் - வடகொரியா எச்சரிக்கை முந்தா நாள் வரை அவ்வளவாகப் பேசப்படாத நாடாக இருந்த வடகொரியாவைப் பற்றித்தான், இன்று அத்தனை நாடுகளும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனானப்பட்ட அமெரிக்காவே கதிகலங்கிப் போய், கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறது என்றால் சும்மாவா? நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால், நடந்திருப்பது இதுதான். ‘நீயா, நானா ஒரு கை பார்த்துவிடுவோம்!’ என்று புஷ்ஷின் மூக்குக்கு நேராக தனது ஆள்காட்டி விரலை உயர்த்திச் சவால் விட்டிருக்கிறார் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தை, இப்படி படு கேஷ§வலாக வட கொரியா செய்திருக்கிறது. ஆனால், எதற்காக அமெரிக்…
-
- 5 replies
- 1.8k views
-
-
பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர். http://thamiram.blogspot.com/2011/11/blog-post.html ஓ…
-
- 9 replies
- 1.8k views
-