கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
UNSUNG EULOGY பாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறு…
-
- 0 replies
- 1.4k views
-
-
தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சால…
-
- 10 replies
- 2.5k views
-
-
-
:arrow: இங்கே கிலிக் >>> பாசம் என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவர் அடுத்த முகம்...? ----பா-ச-ம்........ பாசத்தை காட்டி என்னை கொல்லாதே செல்ஷ் வார்த்தை ஒன்றை சொல்லி..... பூமியின் பந்தையே சுற்றி விட்டாய் ஏன்டா பாசம் வளர்த்தேனோ உன் மேல்........ புரியுமுன்......... ... சுடும் இதையத்தில் முள் தைத்தாய் இன்று உன் நினைவை புதைத்து விட்டேன் ........சாம்பலாய் சொல்லிவிட்டு பிரிந்து போகிறேன்...... :cry: :cry: விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-
-
----விலைமாது விடுத்த கோரிக்கை----- ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். ... பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போ…
-
- 11 replies
- 2.9k views
-
-
நாற்றோடு காற்றுவந்து மோதும் - - கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- - பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- - பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து வாயிலை அலங்கரி! இராவென்ன பகல் என்ன சொல்லு? நீ இரவுக்குள் பகலாகி நில்லு! மழையென்ன வெய்யில் என்ன -சீ போ! வாழ்வென்ன பலமுறை வருமா? உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி அதை உனக்கு திருப்பி தருமா? வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி? வானம் குடைபிடிக்கிறது பார்-பார்! அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- - வாழ்ந்து பார்ப்போமே?- வா வா! வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்? உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்? புன்னகைக்க…
-
- 6 replies
- 2.3k views
-
-
;;மகிந்தாவிற்கு எச்சரிக்கை ..;; எங்கள் புலி வானமதை ஏளனங்கள் செய்தவரே கையேந்தி உலகமதில் கை பிச்சை எடுக்கிறீரோ...?? வேண்டி வந்த போர் கருவி வேளையின்றி கிடைக்கையிலே எங்கள் புலி வானமதை எட்ட நின்று முடிப்பீரோ....??? கம்பெடுத்து நாங்கள் வந்தால் களைந்தோடும் படைகளய்யா உங்களது கோட்டைகளை இன்றுயிவை காக்குமாய்யா....??? பகலிரவாய் வானமேறி பாவி உயிர் பறித்தவரே உந்தன் உயிர் காவெடுக்கா உறுமும் புலி அடங்கிடுமோ...?? எங்கள் புலி வீரரை என்னவென்று நீ நினைத்தாய்...? காத்திருந்தோம் உனையழிக்க கள முனைகள் திறந்து விட்டோம்... ஏற்றமுடன் நாம் நிமிர்வோம்- இனி ஏழரையே உனக்கு காண்- உன் கோட்டைகளே இனி சரியும் உனக்கு கோவணமும் இல்லை போ... …
-
- 3 replies
- 1.1k views
-
-
கடவுளே அங்கே இருந்து இங்கே ஓட்டுபவர்களையும் தெரியவில்லை. இங்கேயிருந்து அங்கே ஓட்டுபவர்களையும் புரியவில்லை அடுத்த பிறப்பிலாவது ஆறறிவைக் கொடு
-
- 7 replies
- 1.2k views
-
-
பொய்மையும் கயமையும் கூடிக் கொக்கரிக்க , ஒட்டிய வயிறும் பஞ்சடைத்த கண்களும், உங்களை நோக்கியே ............. நீங்கள் சொல்கின்ற ஒரு இசங்களும் என்செவியில் எட்டவேயில்லை . நீங்கள் உல்லாசமாய் உங்கிருக்க , குடும்பமாய் உறுமினோம் . ஊழிக்காற்றில் உக்கியே போனோம் . எச்சங்களாய் நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக , இருப்பதற்கு வக்கற்றவர்களாக இரைப்பையை நிரப்ப கருப்பையை விற்கவே துணிந்தோம் . முன்பு நான் உறுமிய புலி . இன்று நான் சருகு புலி . உங்கள் உல்லாசத்தில் ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் , நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ...... எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........
-
- 23 replies
- 2.8k views
-
-
கல்லறைகளைத் தின்னும் பேய்கள் அல்ல நாங்கள்! செத்தவன் மேல் வன்மம் தீர்க்கும் நாய்கள் அல்லவே நாங்கள்! கல்லறைகளை கிண்டும் பன்றிகள் அல்லவே நாங்கள்! கற்பை தின்றதும்... கழுத்தை வெட்டியதும்.... சுட்டுக்கொன்றதும்.... குழந்தையை பிய்த்து எறிந்ததும்... ஆசுப்பத்திரியில் அடிச்சுக்கொன்றதும்.. "புள்டோசரால்" ஏத்திக்கொண்டதும்... நீங்கள் மறந்திருப்பியள் நாங்கள் மறக்கவில்லை! அடிச்ச அடியின் தழும்புகள் மாறவில்லை. வலிச்ச வலிகளும் மறக்கவும் முடியவில்லை! நாங்கள் கல்லறை தின்னும் பேய்கள் அல்ல! கல்லறைகள் மீது போர்தொடுக்கும் மோடையர்களும் அல்லர்! உங்கள் கல்லறைகள் எங்கள் மண்ணில் பத்திரமாகவே இருந்தது! இனியும் இருக்கும்! …
-
- 0 replies
- 452 views
-
-
எதேச்சையாய் ஒரு காகத்தைக் கவனிக்க நேர்ந்ததுஇ எனது பள்ளி வளாகத்தில். உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகள் சிந்திய உணவுப் பருக்கைகளை தமது அலகால் கொத்தி அவ்விடத்தையே சுத்தம் செய்துவிட்டது காகம். இப்படி காகம் எத்தனையோ வகையில் ஒரு சாதாரண பறவையை விடவும் உயர்ந்த குணங்கள் கொண்டதாய் எனக்குத் தோன்றிற்று. ஆனால் அது் ஏனோ ஒரு பறவையாயக் கூட மதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அதன் நிறமோஇ வடிவோ அல்லது அபரிமிதமோ தெரியவில்லை. எனது ஆதங்கம் ஒரு கவிதையாக இங்கு வெளிப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 775 views
-
-
.......'கலையாத கனவுகள்' கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 4 replies
- 1.8k views
-
-
நீண்ட இரவின் முடிவில் காத்திருக்கின்றது நேற்றைய வாழ்வில் உதிர்ந்து போன ஒரு பூவின் இதழ் காட்டு வழிப் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றது வற்றிப் போன நதியின் சுவடு தூரப் பயணம் ஒன்றின் கடைசித் தரிப்பிடத்தில் அழிந்து போனது ஆரம்பித்த இடமும் இறுதி புள்ளியும் எங்கு சென்று தேடுவேன் காணாமல் போன என் உயிர் தொங்கிய பெரு விருட்சத்தை அடர்ந்து பெரிதாக நின்றிருந்த பெரு விருட்சத்தின் கிளையில் தொங்கிய பறவைகள் அனைத்தையும் பெரும் பூதம் தின்றுகொழுத்த கதையையும் அந்த பூதத்தை என் தோழர்களே வளர்த்து பறவைகளை தின்னக் கொடுத்த கதையையும் எப்படிச் சொல்வேன் என் பிள்ளைக்கும் அவன் பேரனுக்கும் என் வரலாறு முழ…
-
- 13 replies
- 2.5k views
- 1 follower
-
-
என் செல்லத்துக்கு ஒரு மடல் ......ஒரு தாயின் கண்ணீர் ... காலங்களுக்கு தான் எத்தனை வேகம் . மழலையாய் , தவழ்ந்து ,எழுந்து ,நடந்து , நின்று , ஓடி , துள்ளி விளையாடி ,என் செல்ல மகளாகி (மகனாகி ) படித்து ,பல்கலை புகுந்து ,பட்டம் பெற்று.... இன்று மேற் படிப்புக்காய் ,வெளி நாடு செல்கிறான் (செல்கிறாள் ).பிரிவு என்றும் துன்பம் தான் நீ மேலே வர வேண்டும் என்று நான்,,,,, கீழே ......,பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன் .நானும் ஒரு மகளாய் ,மேல் படிக்க சென்றபோது , என் தாய் என kகு சொன்னதை நான் இன்று....... தாயaக உனக்கு சொன்ன போது... நெகிழ்ந்து தான் போனேன் . கண்மணி கவனமடி , கல்லூரி வாழ்க்கை , மலர்கள் உள்ள தோட்டம் மணம் உண்டு ,அழகு உண்டு ,முள…
-
- 3 replies
- 2.6k views
-
-
வெட்டடா வெட்டடா பகைவனே வெட்டடா பதுங்கிட நீயின்று பங்கரை வெட்டடா... நின்மதி தொலைத்து நித்திரை முழியடா- உன் கோட்டைகள் மீதிலே குண்டுகள் விழுமடா... ஆகயம் அதனையே அண்ணாந்து பாரடா புலியது பறவைகள் புயலென வருமடா... எண்ணெய் குதங்கள் எங்கினும் எரியுமே கடற் படை தளங்களும் கடுகதி சரியுமே... சட்டங்கள் போட்டா சாகவே அடித்தாய் வட்டீயும் முதலுமாய் வலிந்தே தருகிறோம்.... எத்தனை இன்னலை எமக்கது அழித்தாய் இந்தோ தருகிறோம் இன்னலை ஏரடா.... வல்ல அரசென்று வாயது அடித்தவா பிடரியில் கால் படா எங்கட ஓடினாய்...??? - வன்னி மைந்தன்
-
- 1 reply
- 1.1k views
-
-
'' அஞ்சி வாழேன்..'' சிங்கள கூட்டு வைத்து சில காலம் வாழ வந்து சேர்த்து வைத்த பணமதையும் தெருவில் போட்ட கதை காணய்.... மாடாக இங்குழைத்து மாளிகைகள் வேண்டிவிட்டு தான் வாழ முடியாமல் தவிக்கின்ற நிலை பாராய்..... பகலிரவு தான் பாரா பட்டினிகள் தான்கிடந்து ஊன் உருகி உழைத்த பணம் யாருக்கு போகுது காண்... காட்டி கொடுப்பவர்கள் கரியாராய் இவராக்கி- இவர் வாய்க்கரிசியிட்டு - அவர் வாழ்கின்ற காலம் காண்... கொழும்பினில் வாழ்வதாய் கொழுப்பாக பேசிநின்ற எம் தமிழர் வாழ்வியலில் எறி வந்த இன்னல் கேள்... ஏறி வந்து வீதியிலே ஏற்றமுடன் உலவிடதான் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை காணாய்.. முக மூடியணிந்தவர்கள் முன்னாடி தலையாட்டி …
-
- 1 reply
- 1.1k views
-
-
நீயும் நானும் எதிரியடா- உனை நீண்டு வளர விட மாட்டேண்டா அல்லும் பகலும் அறுப்பேண்டா- உன் அத்தி வாரம் உடைப்பேண்டா... பாட்டன் ஆண்ட தேசமதை பறிக்க நீயும் வந்தாயோ...?? வெட்டி பயல்கள் நாமோட - உன்னை வெட்டி எறியாமல் விடுவேமோ...?? இல்லை நெஞ்சில் துணிவென்றோ எண்ணியே நீயும் வந்தாயோ அன்னியா உன்னை ஆண்டிடவே அகில தமிழர் விடுவாரோ...?? கொள்ளி கட்டை ஏந்தியே- எங்கள் கோட்டையை எரிக்க வந்தாயோ...?? இத்தனை துணிவு உனக்கென்றால் இனியும் உன்னை விடுவோமோ...?? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
'' உடன்பிறப்பு '' ~~~~~~~~~~~~~ நம் தானைத்தலைவனின் நெஞ்சத்தில் இடம்பிடித்த எம் உடன்பிறப்பே ....... ! நம் தேசத்தின் விடியலுக்காய் வழிகாட்டிய எம் உடன்பிறப்பே .......! நம் விடுதலை தேசம் வரவில்லையோ என்று ஏங்கி தவிக்கும் எம் உடன்பிறப்பே .........! நம் எதிர்காலச்சந்ததிக்காய் உயிரை நீத்த எம் உடன்பிறப்பே .........! நம் தேசத்துக்கான உறவுகளை தலை சாய்த்து வணங்குகின்றோம் எம் உடன்பிப்புகளே !!!!!!!!!
-
- 0 replies
- 672 views
-
-
அன்னியத்து சிங்களங்கள் அரியாசனம் ஏறி விட்டு எம் தமிழை அழிக்கின்ற இன்னலதை காணலயோ...??? வந்தேறு குடிகளென்று- பகை வாய் விட்டு சொல்லையிலே எங்களது தமிழ் நாடு ஏனென்று கேட்கலயே.... உண்மையதை கண்ட பின்னும் ஊமையாகி நிற்கையிலே தன் மானம் உள்ளயவன் தலை நிமிர்தி கேட்கையிலே... குற்ற வாளி யென்றவனை கூண்டிலேற்ற முனையலாமோ...?? சட்டங்கள் என்று வந்து சங்கடங்கள் கொட்டலாமோ....?? கதிரையது ஏறிவிட கட்சி மாறும் கூட்டங்களே மனு நீதி விற்று விட்டு மன்றிலேறி என்ன செயவீர்....?? கொல்லர்கள் ஆழ்கின்ற கோட்டையது போலும்...??- அங்கு தமிழர்கள் அழிகையிலே தம்பட்டம் அடிக்கின்றீர்.... ''பாரதத்தின் மந்திரிக்கு பாதையிலே அடித்தவனை தூக்கி வைத்து தாளாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
'' நான் யாவும் அறிந்தவன்'' நீச்சல் அறியாமல் நீந்த முணைகிறீர் பாவம் தம்பி கரையேற மாட்டீர்.... அலையின் வேகத்திற்கு அசைந்தாட வேண்டும் இல்லையேல் அமிழ்ந்திடுவாய்.... கற்று தர வந்தேன் கடிந்து கொண்டீர் பார்த்தீரோ இப்போ....?? ஆழ கடல் மீது அநாதையாய் காலூன்ற முடியாது கரையேற முடியாது திக்கு திசை தெரியா திசையொன்றில் நீர்.... அண்ட சமுத்திரத்தில் ஆடி வந்தவன் ''பாக்கு நீரினையில் பாய் போட்டு படுத்தவன்.....'' என்னையா எதிர்த்தீர்....?? ஏளனம் செய்தீர்... பார்த்தீரா இப்போ கரையேற முடியாமல் கங்கையில் தவிகின்றீர்... என்னை பகைத்தால் இதுவே நிலமை ''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல) -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 925 views
-
-
'' போராட புறப்பட்டது பிழையா....???'' கட்டிவைத்த என் வீட்டை கயவன் வந்து இடிக்கின்றான்.... அவனை தட்டிகேட்க துணிவின்றி கை கட்டி நிற்கின்றேன்... துப்பாக்கி முன் நிற்க துணிவு வரும் எப்படி....??? தட்டி கேட்க நிற்பேனா...?? தப்பிக்க நிற்பேனா....??? முரண்டு பிடித்தால் முண்டமாய் நான் கிடப்பேன்.... அடங்கித்தானே போக வேண்டும் சிறு பாண்மை என்ன செய்யும்....??? சீற வா முடியும்..?? சினக்கவா முடியும்..??? இன்றிங்கு இப்படித்தான் நடக்கிறது.... யார் தட்டி கேட்டார்...?? யாரால் முடியும்....??? தட்டி கேட்டால் பதில் என்ன வரும் - நீ பலியாய் போவாய்.... இது என்ன...?? இது தானே அடக்கு முறை... இப்போ சொல் உலகே ந…
-
- 3 replies
- 1.3k views
-
-
'' போரை தொடங்கும் புலிகள்..'' உள்நுழைந்து உளவெடுத்து ஊந்துகணை தாக்குது பகையரனின் காவலரன் பலிகளமாயாகுது..... முன்னேற வந்த பகை முதுகுடைந்து சாயுது கண்ணு முன்னே தளபதிகள் களப்பலிகள் ஆகுது... எங்கள் புலி வீரமின்று ஏறியங்கு ஆடுது உலகத் தமிலெல் லாமின்று கை கொட்டி பாடுது.... வானமேறி வந்த பகை வானமது காவுது பாதி வழி போகுமுன்னே படை உயிர்கள் போகுது... நான்கு முனை திறந்தடிக்க நம்ம படை கூடுது வேண்டி கட்டி வந்தபடை வெளியேற போகுது... பரிட்சாத்த தாக்குதல்கள் பரவலாக நடக்குது பறையடித்து புலிகளணி போரை தொடுக்க போகுது....! ' -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-
-
''அச்சத்தில் நடுங்கும் சிங்களம்.....'' பகை ஏற்றியே வந்தது பேருந்து.... இன்று போனது வெடி குண்டில் அது சிதைந்து.... கூடியே வந்தது பகை நூறு... இன்று போனது குருதியில் அவை நூறு... காவியே வந்த கனரகங்கள் கொடுத்தது காவு அவை நூறு.... துகழ்களாய் பகை உடல் அவை நூறு.... தூரவே விழுந்தின்று அவை நாறு.... காகங்கள் கழுககுள் அணி வகுத்து கொத்தியே உண்ணுது அதை பாரு..... இனம் காண முடியா இவர் வேறு.... போனார் இன்றங்கு தடுமாறி.... அட அடிக்குது பிணமது அது வாடை.... இவர் கூடவே துப்புறார் அதில் காறி... தன் படை மீதினில் தான் காறி... துப்புர நிலையாச்சு இன…
-
- 0 replies
- 727 views
-
-
''அதிரடி தாக்குதல் நடக்குது விடுதலை ஈழம் பிறக்குது....|| தீயாய் எழுந்து தீங்குகள் எரி கயவர் என அறிந்தால் காவு எடு... ஈழத் தாய் ஈன்ற- நீ ஈழ மகனென்றால் இன்னல் துடை இரும்பு கரம் அறு.... போர் வாளெடுத்து போருக்காய் வந்த பகை வாளை பந்தாடு..... நீ காவிய தாய் மகனெ;னறால் கலங்கம் துடை ''புலம் பெயர்ந்து வந்தாயாயினும் புலியாகி எழு.......'' சிறும் பம்பாகி - பகை சீறி வந்தால் சிரச் சேதம் செய்..... உன் தமிழை உரையாடி உன்னோடு உறவாடி உள்ளிருந்து உளவெடுத்து உன்னை உதைப்பானாயின்- அவனை வெட்டி எறி- உலகிருந்து வெற்றிட மாக்கு..... போலியென நீ அறிந்தால் பொறுக்கியாய் இரு கயவன் அவனே தான் களுத்தை அறு..... ''வந்த நாடதுவ…
-
- 1 reply
- 1k views
-
-
''அதுவரை எம்தேசம் உனக்காய் அழுதிடட்டும்'' தேசத்தின் தாய் மகளே தெரு நாய்கள் உன் உடலை கடித்து குதறி உன் உயிரை காவு எடுத்ததுவோ...? சுதந்திரத்தின் வீரர்களாம் சுடுகாட்டு நரிகள் - உன்னுடலை கண்ட துண்டமாய் வெட்டி காட்டுக்குள் எறிந்ததுவோ.... என்ன நீ நினைத்து என் பாடு நீ பட்டாய்.. யாரறிவார் இன்றம்மா யான் அழுகிறேன் உனக்காய்... தொண்டுகள் செய்திடவே தொண்டனாகி நீ வந்தாய்- இன்று காம குண்டர்களால்- உன்னுயிர் காவு போனதுவே.... நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வெடிக்குதம்மா கைகள் துப்பாக்கி காவிடவே துடிக்குதம்மா... உன்னை வெட்டி கொன்றவரை சுட்டு தள்ளிடவே சுடு கலனை தேடுதம்மா... சிரித்த மலருன்னை சிதை;தானே சிந்துயனே தானுண்டு…
-
- 1 reply
- 965 views
-