Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொடி வணக்கம்! கவிதை: வாலி thanks-vikatan.com

    • 4 replies
    • 2.8k views
  2. (இராஜரட்டையின்) கொடு வனம் புகு படலம். காரிருள் சாமம் ஒன்றிற் கரு வரியுடை தரித்த தமிழ் மறவர் படையணி ஒன்று, கரந்து, கானகம் நடுவே எதிரி வானகப் பாசறை புகுந்து, வானிடை ஏகி வல்ஈய எச்சமிடும் கொடிய எந்திரப் பறவைகள் வாழும் கூட்டினைச் சிதைத்து எரித்துத், தாமும் அக் களமிடை ஆகுதி ஆகியே, தம் மக்கள் இடர்தனைக் களைந்து வீரகாவியம் ஆகினர். (நினைவுகள்) -------------------------------------- அருண்டனர், பகைவரெல்லாம் மெய் விதிர்த்திட அஞ்சியேயோடி ஒளிந்தனர் நிலவறை தேடிக் கண்ணுறு இடமெலாம் மண்தூர் நிறைய மாண்டதம் மாந்தர் யாக்கை நில வரை பழித்து நிறைய நாலிரு திக்கும் அதிரக் கானகக் காவல் தகரக் கருவரியுடை கண்ணிடை தெரிய. ஊடுடிடைப் புகுந்த புலியோ உறுமியே எழுந்து பாய்ந்து வானிடையேக…

    • 0 replies
    • 1.8k views
  3. Started by Kaviipriyai(Ziya),

    கொடுமை வெடிக்கிறதே வெடிக்கிறதே கண்ட இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றதே மாறிக்கொண்டிருக்கிறதே மாறிக்கொண்டிருக்கிறதே தமிழ் ஈழம் இரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதே தொலைகிறதே தொலைகிறதே தமிழர்கள் காணாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்களே வதைகிறார்களே வதைப்படுகிறார்களே உன் இனத்தால் நம் அப்பாவித் தமிழர்கள் சித்திரைவதைப் பட்டுக்கொண்டிருக்கிறார்களே சிந்தித்துப்பாரேன் சிந்தித்துப்பாரேன் நீ அரசமரத்திற்கு கொடுக்கும் மரியாதையைக்கூட நம் இன உயிர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டாயே என்று கொஞ்சம் சிந்தித்துப்பாரேன் வேண்டாமே வேண்டாமே இந்த மனித வேட்டை இனியும் வேண்டாமே

  4. கொடூர முகங்கள் கவிதை - இளங்கவி புலியாய் பாய்ந்தவள் பிணமாகிய பின்னும் அவளின் அம்மணத்தை ரசிக்கும் கொடூர முகங்கள்..... தமிழ் மானம் காக்க தன்னுயிர் தர நினைத்தவள் என்றோ நினைத்திருப்பாள் தன் உயிர்தான் முதலில் போகுமென்று.... உயிர் போனபின்னும் பிணம் தின்னிக் கழுகுகள் சுற்றி நின்று தன் பிணத்திலும் பெண்மையை ரசிக்கும் கூட்டத்தின் நடுவே தன் குருதி ஈழமண்ணை நனைக்க கருகிய பூக்களாய் கிடப்பாளென்று கனவிலும் நினைத்திருக்காள்......! மாவீரர் கல்லறையில் மரியாதையாய் துயில்கொள்ள நினைத்தவளுக்கு மானமில்லா கொடூர முகங்களின் கையடக்க தொலைபேசியில் புகைப்படமாய் கிடப்பாளென்று நினைத்திருக்கவே மாட்டாள் தான்....... பூப்படைந்த நாள…

  5. கொண்டாடும் மனசு ............. நாம் பிறந்த மண்ணிலே , நாள்தோறும் குண்டு மழை போதாதென்று மழை வெள்ளம் அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் , தசை பிளந்து ரத்த வெள்ளம் , இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம் எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும் இவை எல்லாம் நம் சனத்தை ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா பட்டியல் நீளும் ,பாதை போன்று அப்பாவை காணவில்லை , அண்ணாவை காணவில்லை , பள்ளி சென்ற அக்காவையும் காணவில்லை ,தகவல் இல்லை இந்நிலையில் கொண்டாட மனம் வருமா தினசரியைபார்த்தால் தினம் தோறும் இணைய தளத்திலும் துயர செய்தி தான். இத்தனையும் நடக்கும் போது கொண்டாட மனம் வருமா ? அமைதியின் ஏசுவை ,தரிசிக்க கோவிலிலும் குண்டு மழை , கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான் இந…

  6. இனவெறி கொண்ட சிங்களவன் கொலைவெறிதாண்டி மதவெறி தாண்டி ஏதுமறியாப் பிஞ்சு பிறந்தபின் கொன்ற காலம் போய் கருவிலிருந்ததை மட்டும் கலைத்தழித்தது போய் தாயொடு சேய் சேர்த்துக் கொல்லும் காலமடா தண்ணீர்சிந்திய தேசத்தில் இன்றுகண்ணீர் சிந்தியே வெள்ளபெருக்கோடுதடா கொதிக்கும் சட்டிக்கும் தண்ணீர் படக்கூடாது வெடிக்கும் அடிக்கும் திண்ணையில் என்னை விடக்கூடாது ஒடிக்கும் அந்த நொடிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் துடிக்கும் அப்போது வந்தவர் மனமெல்லாம் துடிக்கும் அதைப்பார்த்து நாலஞ்சு நன்றாக இங்கே நடிக்கும் என்றெண்ணி கொடிக்கும் வளரும் இடும்பை கூட மடிக்கும் தன் கொடி நிலம் நோக்கி வெடிக்கும் என் நெஞ்சு கொடுக்கும் அவர்களுக்கு விளக்கம் மூலப் பிரதியைக் காண இங்கே ச…

  7. கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…

  8. கொதிக்கும் பாலைத்திங்கள் சொல்ல முடியாத சொல்லுக்குள் அடங்காத வில்லங்க வேதனைகள் வீதியுலா வந்ததெல்லாம் 83 இன் யுூலைக்கே தெரியும்! தென்னிலங்கையில் தமிழன் தோலை உரித்துத் தொங்க விட்ட வேளைகளைச் சுமந்த பாலைத் திங்களிது! கோர நினைவுகள், கொடுமைச் சாவுகள், அப்பப்பா!.......... . ஈர மனங்களைத் தீப்பிழம்பாய் ஆக்கிய அன்றைய நாட்கள்! தமிழச்சி என்பதனால் கொங்கைகள் அறுத்தும், கொப்பழிக்கும் தாரினுள் எம் பிஞ்சுகளை முக்கி எடுத்தும், செங்களங்கள் ஆடாத சிறுமைக் காடையர்கள் செந்தமிழர் உயிர்க்குலையில் வெந்தணலை இட்டதெல்லாம் நேற்றைய நாட்கனவாக நினைவுக்கிப் போய் விடுமா? அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சு…

  9. கொத்தணிக் குண்டுகள் -Cluster bombs உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தோம் சிறிலங்கா வந்து மீட்டெடுத்து தமிழர்களின் தலைவாசலில் கட்டிவைத்து விளையாடுகிறது. ஈழத் தமிழருக்காக உலகத் தமிழர்கள் மட்டுமில்லை நாங்களும்தான் கொத்துக் கொத்தாய் கண்ணீர் வடிக்கிறோம்! நாம் என்ன செய்வது? எம்மை உருவாக்கியவனும் பயங்கரமானவன் நாமோ அவனைவிடப் பயங்கரமானவர்கள் எம்மை இலகுவில் அழித்துவிட முடியாது ஒருமுறையல்ல இருமுறையல்ல…

  10. படித்ததில் மனதை நெருடியது... ஆழியாள் அவுஸ்ரேலியா என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள். பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா. சேகர் சித்தப்பா காணாமல் போனார். …

  11. சனங்கள் புத்தகங்களைப் போட்டு விட்டு ஓடித் தப்புகிறார்கள். எங்கும் தீவிரமாய் பரவுகிறது இலக்கிய வித்துவக் காய்ச்சல்கள். மாறி மாறி முட்டுப்படுகின்றன எழுத்தாளர்களின் கொம்பு முளைத்த பேனாக்கள். மேடைக்கு அலையும் வசனங்களோடு இடம் தேடித் திரிகின்றன வசைபாட ஆசைப்படும் வாய்கள். அதிகார ஆசனங்களின் கால்களைத் தடவத் தொடங்குகின்றன விருதுக்காய் உழைக்கத் தொடங்கியிருக்கும் விரல்கள். பார்த்துக் கொண்டிருக்க கண்முன்னே வாடிக் கொண்டிருக்கிறது எழுதப்படாத வரலாற்றுப் பூ. தீபிகா தீப .பேஸ்புக் .

  12. இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும், பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்! அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!! அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!! அவர்களை நினைத்தாலே போதும் ... ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும். அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!! அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான். அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான். வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு. வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும். என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா? பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் , காலையிலெழுதலும் காலைக…

  13. நோய் எதிப்பு சக்தி குறைகிறது விலை விண்ணை தொடுகிறது மஞ்சள் ......................... வியக்க வைக்கும் சிகிக்சைகள் மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர் சிரிக்கிறது கொரோனா .......................... மறந்த வாழ்வியல் முறை தண்டனை கொடுத்து வருகிறது கொரோனா .......................... உயிர் கொல்லி நோய் சற்று நம்பிக்கை தருகிறது மிளகு ரசம் @ கவிப்புயல் இனியவன்

    • 7 replies
    • 978 views
  14. நான் தான் கொரோனா கொல்லுறன் என்று நாடுகளை எல்லாம் நாசம் செய்கிறேன் என்று வீட்டுக்குள்ள பூட்டி இருந்து போட்டு ஊசியை போட்டு என்னை ஓட வச்சுப் போட்டு சத்தம் இல்லாமல் கிடந்த நீங்கள் இப்போ யுத்தத்தை கொண்டு வந்திட்டியள் பேயை விரட்டிறம் என்று இப்போ பிசாசை எல்லா கொண்டு வந்திட்டியள் என்ன செய்வது எனக்கே சிரிப்பாய் கிடக்கு எட என்னை விட பெரிய கொரோனாக்கள் இருக்குது உலகத்தில என்னைப்போலவே இதுகும் கொல்லும் என்னைப்போலவே எல்லாத்தையும் அழிக்கும் சொல்லப்போனால் சும்மா விடாது சுய நலன்கள் கொண்ட கொரோனாக்கள் நான் இனம் மதம் சாதி சமயம் எந்த நாடு என் நலன் என்று பார்க்காமல் எல்லோரையும் கொன்றே…

    • 9 replies
    • 748 views
  15. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதை இதோ! "உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே!" உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே! #coronavirusindia #CoronaVirusUpdate — வைரமுத்து (…

    • 16 replies
    • 2.6k views
  16. கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் 😂 —————————————————————- இஞ்சியும் உள்ளியும் ————————— இஞ்சியும் உள்ளியும் தன்னையா கொல்லுமாம் கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. பயம் ——- மனிதரை கண்டு மனிதர் பயந்ததை பார்க்க கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. முகம் தொலைந்த மனிதன் ———————————- முகத்தை எல்லாம் மூடிப் போகும் மனிதரை பார்த்து கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கடுகு சிறிது காரம் பெரிது ———————————- கண்ணுக்கே தெரியாத என்னைக் கண்டு வீட்டுக்க ஒழிக்கும் மனிதனைக் கண்டு கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கொல்ல முடியல்ல ————————- எத்தினை யுத்தம் செய்தீர் எவ்வளவு மனிதரை கொண்டீர் என்னை மட்டும் கொல்லவா முடி…

  17. கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…

  18. கொலைக் களத்தில் கோல மயில்..... கவிதை - இளங்கவி.... மாஞ்சோலை ஒன்றிலே மாமர நிழலின் கீழ் மன்னவனின் மடியிலே மயிலொன்று படுத்திருக்கு..... மாங்கனிகள் பாரத்தில் கிளைகள் எல்லாம் நிலம் தடவ.... மயக்கும் விரல் கணையால் மடி கிடந்த பொன்மயிலின் மென் ஸ்பரிசம் அவன் தடவ... ச்சீ.. வேணான்டா.... கையை எடு.... நான் வீட்டை போப்போறன்.... இல்லை..இல்லை நாளைக்கு வயல் வேலை நான் வர மாட்டேன்டி.. அதனாலே இன்று உன்னை தொட்டுவிடப் போறேன்டி..... இல்லையடா... செல்லம் இது வேண்டான்டா... இப்போ நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால் நாம் வீட்டைபோவோம் இப்போ... சரியடி போவோம்.... காலையிலே எனக்கு என்ன சாப்பாடு கொண்டருவாய் நான் மண்வெட்டி பிடிக்கம…

  19. o தீபச்செல்வன் 01 கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின் சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலில் எல்லோரையும் கைது செய்தனர் சிலரது கண்களை கட்டினர் சிலரது கைகளை கட்டினர் இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன வரிசையாக இருத்தப்பட்டனர் புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும் வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர் மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில் குருதியின் மேலாய் பூக்களை தூவ தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள் மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது உருக்கிக் கொட்டுகிறது சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன துப்ப…

    • 5 replies
    • 2.1k views
  20. கொள்ளிடம் கதி கலங்கும்! ஊற்றுவாய் பிளந்து பொங்கிப் பரவும் காட்டாறுகள். கூற்றுவனோடு கை குலுக்கி கலகலக்கும் ஞானிகள். ஈழம் காக்கும் கந்தகப் புயல்கள். எதிரியை ஒடுக்கும் எரிமலைகள். போரின் வெற்றியை நிர்ணயிக்கும் கூரிய முனைகள். பாரியைப் புறம் தள்ளி - ஈழத் தாயவள் வலிமைக்காய் தம்... உயிர்,மெய் உவந்து ஊட்டி - அவள் வீரியத் திசுக்களின் வேதியப் பொருளிவர். பற்றுகள் அற்றவரா?.... பற்றுகள் உற்றவர்! தமிழ் ஈழம் கசக்கும் வேற்றுவர் அகற்ற இகத்தைத் துறந்த இளைய துறவிகள். இறுதிப் பயணம் இன்றி உறுதி புூண்ட உன்னத வேங்கையர். உயிரைக் குடைந்து, உருக்கிப் பிழிந்து, உதிரத் துளியும் காற்றில் கரைய காவியம் படைக்கும் வீரியத் திரிகள…

    • 6 replies
    • 1.4k views
  21. கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!! என் நிம்மதி எங்கே என்று உன்னிடமே கேட்டேன் பார், கொள்ளை அடித்தவனிடமே போய் புகார் செய்தமாதிரி என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........ உன் நினைவுகளோ என்னை மூழ்கடித்து விட்டது ஒரு ஆறு கட்டுமரத்தில் ஏறி இருந்தது போல !!!!!!!! என்னைக் கொள்ளை கொண்டவனே நான் சுதந்திரமாய் சிரித்து கனகாலமாகி விட்டதடா . நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன் நீயோ , ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய் நான் அழமுயற்சி செய்தாலோ , ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய் நீ என்னதான் சொல்லவருகின்றாய் ????????? நான் சுகமாக இருக்கின்றேன் என்று ஒருவரிடமே சொல்வதில்லை....... ஏதோ இருக்கின்றேன் என்றுதான் சொல்கின்றேன் . நான் விரைவாக அமைதியா…

  22. கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன் March 29, 2020 - மனுஷ்ய புத்திரன் · இலக்கியம் கவிதை கொரோனோ கொள்ளை நோய் அகதிகள் மனுஷ்ய புத்திரன் அங்கு கைவிடப்பட்டவர்களின் மிகப்பெரிய ஊர்வலமொன்று சென்றுகொண்டிருக்கிறது போர்கள் வருவதற்கு முன்பு அகதிகள் வந்து விடுகிறார்கள் கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள் பெரியவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் சுமந்துகொண்டு அவர்கள் கடக்க முடியாத விதியின் தொலைவொன்றைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும் தட்டு முட்டுச் சாமான்களை சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள் கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு …

  23. Started by nunavilan,

    கொழும்பு எனது காயங்களை ஆற்றக்கூடிய எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர் ஒருவரை இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன் தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன் காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும் பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும் கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும் சொல்லக்கூடிய ஒருவரை இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன் யாவற்றின் பிறகும் எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை எனத…

  24. கொழும்பு நகர (நரக) வாழ்க்கை... மனிதம் என்பதே இங்கு இல்லை மனிதரோ கோர உணர்வுகளுடன் மண்ணில் வாழ முடியா தமிழர் மரத்துப்போய் இங்கு வருகின்றனர் மரணத்துக்கு தள்ளும் வண்ணம் மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர் செல்லும் இடங்களிலெல்லாம் செல்லாத சோதனை செய்வர் செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள் சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர் செருப்பாக கூட இருந்து உதவுவார்கள் செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன் சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள் சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும் சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை சிதறடிக்க வைக்கின்றது இங்கே சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள் பொருளுக்கு ஏற்ப விலையில்லை …

    • 7 replies
    • 1.9k views
  25. தொலைவே இல்லாத பின்னிரவொன்றில், விடிகாலைப் பொழுதினைத் தொலைத்துவிட்டு, நிரந்தரமாகிப்போன கும்மிருட்டில், சத்தமே இல்லாமல், சந்தம் பாடுகின்ற குயில்களின் குரல்வளைகளை அறுத்தெறிந்து, கோட்டான்களைக் கூப்பிடுவோம் வாருங்கள்! முகவரி இல்லாமலே பூபாளம் பாட! 10/dec2014

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.