Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாரதியே! உனக்கு பெண் சுதந்திரத்தில் நம்ம்பிக்கை இல்லை போலும்! 'புதுமைப் பெண் ' படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் ! வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் ! அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்! சேவல் கூவும் வேளையில் எழுந்து எறும்பாய் தினமுழைத்து மாடாய் குடும்பபாரத்தை இழுத்து கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை பாரதியே! உன் கவிச் சாவியால் தானே சிறையினைத் திறந்தாய்! சுதந்திரப் பறவையாய் பறக்க வழி செய்தாய்! கோலங்கள் போட அவள் தான் சுடுநீர் சாப்பா…

    • 0 replies
    • 661 views
  2. மனமேடை ஊஞ்சலிலே நடனமிடும் இசையசுரா உனதோடு சொன்னதையே உதையாக ஏன் நினைத்தாய்? நினைவிடையே தினவெடுக்கும் நீஎந்தன் நட்பென்று எனையா நீஎண்ணிவிட்டாய் உனையிகழும் பிறப்பென்று? பணமேதும் பகைக்கவில்லை பிணமாக மணக்கவில்லை குணமாக்கும் சிறுவார்த்தை பாசாணம் ஆனதுவோ எழுத்தின் எதிர்வீச்சால் என்னெண்ணம் கன்றியதோ வழுக்கிய வார்த்தையில் அழுக்கும்வந்து அணைத்ததுவோ?! துரும்பும் தூணாகும் காற்று கனத்திடுமா புகையும் நெருப்பாகும் படத்தில் எரிந்திடுமா திசைகள் மாறிடுமா பசைகள் விலத்திடுமா விதிகள் இதுவென்றால் விலத்தல் எவ்வாறு?!

  3. ஏன்டா என்னை கொண்டீங்க....??????? பத்தவைச்சா பத்தவைச்சா என்னை ஏண்டா பத்த வைச்சா...??? பாவி புள்ள என்னில் ஏண்டா தீயை வந்து பத்த வைச்சா...??? மூணு புள்ள பெத்த என்னை முளுசாய் ஏண்டா எரிச்சுப் புட்டா...??? உயிர் வதங்கி உடல் கருகி இறக்கும் படி ஏண்டா வைச்சா...?? என்ன பாவம் செய்தேன் என்று என்னை வந்து கொளுத்தி புட்ட....?? கூட்டத்தோடு கூட்டமாக கூடியங்கு நானும் வந்தேன்.... ஜயோ பாவி ஏனோ வந்து என்னை அங்கு கொளுத்தி புட்ட....??? தீக்குளித்து மடிந்தான் என்று ஏண்டா வந்து அறிக்கை விட்ட....??? ஓலம் இட்டு கத்தையிலே ஓடி வந்து அணைக்க வில்லை... கூட எண்ணை ஊற்றி நீயும் ஏண்ட…

  4. அலாரச்'சேவலின் அலறல் கேட்டு அல[ரு]றும் எனது பொழுதுகள். 'ஷவர்'ச்சாரலின் தூரலில் நனைகையில் கரைந்து போகும் கனவுகள் திண்று போட்ட உறக்கத்தின் எச்சங்கள். நேற்றய இரவும்..... அலுப்புடன் சலித்துக்கொண்டே களட்டி எறிந்த இலட்சியச்சட்டைகளை மாட்டிக்கொண்டே காலையின் சாலையில் கலந்து போகிறேன். இதோ.... …

  5. எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் எட்டானதோ? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர்வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார்வையில் இவரின் உறக்கம் சாவு எனச் சொல்லப்படலாம் ஆனால், உலகத்தமிழர் உளங்களில்- இவர் என்றும் வாழ்ந்திருக்கும்; மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர். பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பத…

  6. Started by vanni mainthan,

    '' போராட போ'....'' எம் தமிழா ஏனழுதாய் என்று கொஞ்சம் எண்ணு விளங்கி விட்டால் எம் படையில் வந்துயின்று நில்லு... உந்தன் முன்னால் நிக்கும்- பகை வந்துயின்று கொல்லு- எங்கள் உரிமை போரில் வந்து நீயும் பங்கெடுத்து நில்லு.... அன்னை மண்ணை ஆளவந்தான் அடித்தவனை கொல்லு அந்த பகையை அழித்திடவே போர்களமே செல்லு.... துரத்தி வந்த பகையவனை துரத்தி நீயும் கொல்லு- நீ ஈழ மண்ணின் மைந்தனென்றால் இன்று அதை செய்யு.... பாத்திருந்த போதும் நீயும் பங்கெடுத்து நில்லு - அந்த பல்லிழித்த காலமதை இன்றுடனே வில்லு.... உன்னடிமை நீ உடைக்க உரிமையுடன்; செல்லு அந்த புனித போரில் பங்கெடுத்து இன்று நீயும் வெல்லு.... அன்னை மண்ணை ஆள வந்தான் அடித்தவனை…

  7. களத்துக்கு புதிதாக வந்திருக்கும் பிரம்மம் இணைத்திருக்கும் இணையத்தளங்களுக்குள் உலா வந்த போது சமுதாயத்தைச் சாடிய ஒரு பாடல் அடிக்கடி என் மனதில் ஞாபகம் வந்தது. அந்தப் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். http://www.myspace.com/sujeethgs அதுசரி பிரம்மத்திடம் ஒரு கேள்வி நீர் தான் சுஜித்ஜியா? அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவரா?

  8. சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.... சிவன் வந்தான் சிவனோடு அவன் மகன் குகனும் வந்தான் மூத்தவன் கணபதியும் அன்னை பார்வதியும் பிறிதொரு நாள் வருவதாக சேதியும் வந்தது! "என்ன திடீர் விஜயம்...?" என்றேன் "நாட்டில் சமாதானமாமே... அது தான் சும்மா சுற்றிப் பார்க்க வந்தோம்" என்றான் குகன் மயலிறகால் காது குடைந்த வண்ணம்... "கழுத்தில் நஞ்சு கட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடலாமாமே... அதுதான் நானும் வந்தேன்" என்றான் நீலக் கழுத்தை தடவிய வண்ணம் சிவன்...! பாம்பு பல்லிளித்தது மயில் தோகைவிரித்து அழகு க…

    • 4 replies
    • 2k views
  9. « ம் அனைவரின் சொந்தம் கறுப்பு நாய் கறுப்பு நாய்க்கு அனைவரும் சொந்தம் அது சதா அலைகிறது. சர்க்கஸ் உலகம் கூடாரத்துள் மயிர்கூச்செறியும் சாகச வித்தைகள் காட்சிக் கேற்ப மாறும் பின்னணி இசை பசிதாகம் விற்பனையும் நடுவே இடையிடையே யாவற்றையும் நையாண்டி செய்கிற கோமாளிக் குள்ளர்கள் ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது அதன் முகம் கண்களில் தீக் கங்குகள் ஏதேன் தோட்டத்தில் பிறந்தவை அதனுடைய வார்த்தைகள் கருநாகங்கள் படமெடுத் தாடுகின்றன கழுத்திலிருந்து புதைத் தழுத்துகிறது அதனுள் கடைசிச் சொட்டு மிழந்து வெளிர்ந்து பொங்கி யதனைத்தையும் உறிஞ்ச பிய்த்து எறிந்த சதை கூரையிலிருந்து ஒழுகுகிறது …

  10. Started by shanthy,

    (நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்) என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி நான்.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் , உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவி…

    • 16 replies
    • 1.2k views
  11. பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள் செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின் செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..? வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள் வண்ணப் பூக்களை வந்து பாருங்கள் யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்! உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள தமிழனின் குருதியென்ன மதுபானமா? பிணவெறி பிடித்த இனவெறிகளே! எங்கள் வலிகளைக் சேமிக்கும் இதயங்கள் இனியும் தாங்காது வலிகளைச் செலவு செய்ய வருவோம்! எங்கள் குருதியால் எழுதப்படும் சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்! எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும் எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!; கனத்த நெஞ்சுட…

  12. அம்மா....!!!நடை பழகும்போது ...கை கொடுத்தாயம்மா .....இடறி விழும்போது ...இடுப்பில் சுமந்தாயம்மா ....பள்ளி செல்லும் போது ....கால் வலிக்க நடந்தாயம்மா ....புத்தகப்பையுடன் என்னையும் ...தோள் சுமந்தாயம்மா ....!!!அம்மா ....!!!கருவறை சுமைமட்டும் ....நீ சுமக்கவில்லை ....உன் உடலின் அத்தனை ....உறுப்புகளிலும் என்னை ....சுமந்தாய் ...........!!!அம்மா .....!!!மடியில் வைத்து பாடம் ....தந்தாய் இப்போ நான்....பலபடிகள் தாண்டி பலநாடு ....சென்றேன் - புரிந்தேன் ...அன்னையின் மடியைவிட ....எந்த ஒரு பல்கலை கழகமும் ...இல்லவே இல்லை ......!!!அம்மா ....!!!கவிதை எழுத முனைவேன் ....வார்த்தைகள் வந்து தடுக்கும் ....அம்மா என்றவுடன் அத்துணை ...சிந்தனையும் வெற்றிடமாய் ....மாறிவிடும் - தாயே உம்மை ...எதனோடு ஒப்பிட…

  13. மேக விசும்பலால் கண்ணயற, கடைவானைப் பார்த்தேன். துருத்திய மூக்கின் நுனி குருதி பட்டு சிவந்தது இடி மீறும் குண்டொலியால் செவிபிளந்து ஊன் கதறியது நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது. "ஏ! கடவுளே! பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் அண்ட மீன்களை ஒருமுறை இவ்வேழை நோக்கவியலாதா? நாளுமோர் மீன் முளையும் நானும் போய் நுழையவியலாதா?" நீட்டிய உயிர்க்கிளை மீதொரு நாட்டிய விழி புதைய விண்ணுலகன் நாவில் பிரிந்து எச்சில் ஊறியது என்னுள் செவிப் பறைகள் அறைந்து கொண்டது. செல்க! செல்க! மானிடனே செல்கவே! புவிக் கோளம் தாண்டி அக்கினியில்லா மீன்களைத் துண்டிக்கச் சென்றேன் என்னில்லப் புறாவின் சிறகெடுத்து. சாந்தமில்லா மீன்கள் வீணி…

    • 2 replies
    • 1.1k views
  14. இதயம் மட்டும் பேசட்டும் இசை மழைதனில் இன்பமாய் நனைந்து பசை கொண்ட மனிதருடன் பாங்காய் அசைந்து ஆடும் ஆட்டத்தின் உச்சம் இசைந்திடும் மனதின் ஆதாரம் என்றிருந்தேன் இதழுடன் இதழ் ஒன்றாய் இணைந்து பின்னிக் கொள்வதில் அந்த இன்பமான பிணைப்பே இணைப்பாய் அதுவே பேரின்பம் தரும் போதை என்றிருந்தேன் புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம் புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய் புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன் இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும் இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது இதயத்து சுகங்கள் இமைவழி மறைந்தோடிட இடையறா பங்களிப்பு இரட்டிப்ப…

  15. மூன்றாம் காதல் -------------------------------------------------------------------------------- - நெப்போலியன் பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் ! வேலைக்குச் செல்கையில் ரயில் வண்டியில் எதிர் இருக்கையில் இரண்டு வருடத்திற்கும் மேலாய் அடைகாத்து ? சொந்த வாகனம் உடையவன் அறிமுகம் கிடைத்ததும் பரிதவிக்க விட்டுப் பறந்துபோன இரண்டாம் காதல் ! மூத்தவன் வலது கையிலும் இளையவன் இடது கையிலும் என் விரல்களைக் கோர்த்தபடி நடந்துகொண்டிருக்க... கடைக்குட்டியை அவள் வயிற்றில் சுமந்தபடி முற்றுப்பெற்ற மூன்றாம் காதல். சுட்டது...இ…

  16. அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே...! அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்... உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..! வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்...! அசுர வதம்...! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..! வதம் முடிந்து ஆண்டுகள் 3 ஆகின்ற இப் பொன்னான வேளையில்... தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்கள…

  17. நம் தமிழீழ மண் வீரம் விழைந்த மண் வீரம் விழைந்த மண்ணிது வீரமறவரும் வாழ்ந்த மண்ணிது அம் வீர மன்னர்களின் வீர சாம்ராச்சியம் அன்னியன் சதியினால் வீழ்ந்த போது எம் வீரச்சரித்திரம் சாய்ந்த மண்ணிது. ஆங்கிலேயர் நம் மண்ணைவிட்டு அகன்ற போது ஆட்சி உள்ளூர் எதிரிக்கு மாறிய மண்ணிது. ஐம்பது வருட அடக்கு முறைக்கு அப்பாவி உயிர்கள் பலியான மண்ணிது. எம் அடிமைச் சரித்திரம் மாற்றி எழுதிட சூரியத்தேவன் தோன்றிய மண்ணிது. சூரியத்தேவன் தோன்றியததனால் சாய்ந்த வீரமும் நிமிர்ந்த மண்ணிது. எதிரியின் பிடியிலுள்ள் எம் சரித்திரம் மீட்டிட வேங்கைகள் பாய நம் எதிரியும் வீழ நம் வீரமும் உலகின் கண்களில் தெரிய உலகமே பார்த்து வியந்த மண்ணிது. …

  18. தைத்திருநாள் இல்லம் எல்லாம் தழைத்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் கூவியழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்

  19. Started by theeya,

    காதலின் வலி நீண்டிருந்த கடற்கரை மணல் வந்து கரையை தொட்டு விட்டு மீளும் அலை கடலை அள்ளி தின்று ஏப்பம் விடத் துடிக்கும் வானம் கடலுடன் கைகோர்த்தபடி கட்டித் தழுவியது நடுக்கடலில் தவிக்குது துடுப்பிழந்த ஒரு படகு கரைசேரும் ஆவலுடன் காதலில் விழுந்த என் இதயம் போல - தியா -

    • 11 replies
    • 2.9k views
  20. அடிமை வாழ்வு வாழ்வதற்கு அகதியாதல் மேலதாம் அறிவு மெல்ல உந்தி நிற்க அணியணியாய்ப் பறந்தவர் அனைத்தையுமே துறந்து இங்கு அன்னியராய் நிற்கையில் அணைத்துச் செல்ல இணையவழி தந்தவரை நினைக்கிறேன். திசை தெரியாப் பயணம் தந்த திகில் நிறைந்த வேளையில் தவித்த எங்கள் தாகம் தீர்க்க தரணியிலே ஓர் களம் தமிழால் மட்டும் சேர்ந்து நிற்க தனித்துவாய் யாழ் களம் தந்த எங்கள் மோகன் அண்ணா விருட்சமாகத் தெரிகிறார் யாவரையும் அரவணைத்து கருத்துகளைப் பகிர்ந்திட யாழ்களத்தை அமைத்து எம்மை உணர்வினாலே இணைத்தவர் யாருமில்லை என்ற எங்கள் மனக்கிலேசம் தகர்த்தவர் யாதுமாகி நின்று களத்தை வழிநடத்தி வந்தவர் ஆண்டு பல சென்று விட்ட அகாலமான போதிலே அறிவுடனே ஆட்சிசெய்த அதிசயத்தை வியக்கிறேன் அடுத்தவரை நொந்திடாமல் …

  21. அகிம்சைக்கு கதவடைப்பு வரலாற்றுப்பதிவுகள் பரமேஷ்வரா.................எனக்கு உன் முகம் தெரியவில்லை அண்ணா திலீபன் முகம் தான் தெரிகிறது அன்று நல்லூரின் வீதியில் இன்று லண்டனின் வீதியில் அகிம்சைக்கு கதவடைப்பு, சிங்களவன் அக்கிரமத்துக்கு வரவேற்பு மேற்குலக நாடுகளே வெற்கித் தலை குனியுங்கள் வரலாறு சொல்லட்டும் அதர்மத்தின் பக்கம் நின்று தமிழர்க்கு இழைத்தீர்கள் அநீதி என்று...

    • 0 replies
    • 690 views
  22. அன்பின் நன்பர்களே, இது தோல்வியல்ல, சிறிய பின்னடைவு மட்டுமே, இது முடிவல்ல, ஒரு விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமே, நாங்கள் விழுந்தோம், ஆனால் மீண்டும் எழுவோம், நாங்கள் ஒன்றுபடுவோம், போராட்டத்தைத் தொடருவோம், களத்திற் சிந்திய ஈழத்தமிழர்களின் இரத்தத் துளிகளைக், கயவர்கள் கண்களில் இருந்து வழிய வைப்போம். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.

    • 0 replies
    • 1.1k views
  23. எழிதிட எழிதிட ஆசை வர்னங்கள் நிறைந்த எண்னங்களை எழித்தில் வடித்திட ஆசை பொய்கள் நிறைந்த கவிதைகளை எழிதிட ஆசை உன் அழகை முத்தமிழில் வடித்திட ஆசை உன் புன்முறுவலை முத்தமிலில் எழிதிட ஆசை உன் மீதுள்ள காமத்தை கன்னியத்துடன் கதை கதையாய் எழுதிட ஆசை வழமை போல் எழிதிய கிறுக்கலை கிழித்திட நினைத்தேன் என்றாலும் இந்த ஒரு தடவை என் கிறுக்கலுக்காய் நிந்தை அடைந்திட துணிந்தேன்

  24. Started by Sembagan,

    மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். ஏன் இந்த நிலையென்று ஏக்கமாய் நான் பார்த்தபோது வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற காலம் கைகொடுக்கும் அதுவரை காத்திருப்போம் என்றார்கள். செண்பகன் 23.10.13

    • 11 replies
    • 1.2k views
  25. http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiNwz-JI/AAAAAAAAFAc/ft_g-a6Ut8Y/s1600-h/image001-728569.jpg http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiWfivZI/AAAAAAAAFAk/d0PWZLF74GI/s1600-h/image002-729153.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.