Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nirubhaa,

    சத்தம் ... உற்றுக் கேட்டால் உனக்கும் எனக்கும் புரியும்... உலகம் முழுவதும் இடையறாது ஒலிக்கும் .... ஓம் எனும் சத்தம் .....! இதனை இயற்கையின் இரைச்சல் என்கிறார் சிலர் ....!-மற்றும் சிலரோ ஓம்கார மந்திரம் என்றனர்....! சத்தமில்லா உலகமும் இல்லை- மனித உள்ளமும் இல்லை....! நித்தமும் ஒரு சத்த யுத்தம் மனங்களுக்குள் சத்தமின்றியே நடக்கும்...! வாய் திறந்தால் சத்தமும் -திறக்காத போது மௌன யுத்தமும் நடக்கிறது...! மலர்கள் அசையும் போதும் - பட்டாம் பூச்சி பறக்கும் போதும் சத்தம் வருகிறது - மலர்களின் அசைவிற்கு ஒலி அளவுண்டு, விஞ்ஞானம் சொல்கிறது...! மனிதன் தான் கேட்பதில்லை மலர்கள் பேசும் போது ...! நம் வாழ்க்கையில் .. மனிதன் அழுவது சத்தம் ! அவன் சிரிப்பது சத்தம்...! பேசுவது சத்தம்!…

  2. சத்திய சோதனை-பா.உதயன் கொடிய இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டு இருந்தது முள்ளிவாய்க்கால் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவை பார்த்தோம் இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் எங்களின் வீட்டில் யூதர்கள் வந்தனர் ஜேசுவை கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் உயிர்த்து இருந்தவர்களை இன்னும் ஒரு முறை புதைத்தனர் கனவுகள் உடைந்து கல் அறைக்குள் ஒழித்து கொண்டன முள்ளிவாய்க்கால் முழுமையாக மூச்சு இழந்தது மிஞ்சி கிடக்கும் சாம்பலில் இருந்து எலும்பை எண்ண அங்கு யாரும் சாட்சிக்கு இல்லை …

    • 2 replies
    • 646 views
  3. சத்தியம் செய்வோம் இந்த நாளிலே! ------------------------------------------------------ சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவே துயரம் நிறைந்த இந்த நாட்களை எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்! மனிதாபிமானம் பேசிடும் உலகோ மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது தமிழர் குருதியில் கைகளை நனைத்து விருந்தினையுண்டு சிரித்து மகிழுது ! சிறுமை நிறைந்த சீரற்ற உலகை நம்பியதாலே எம் தாயகமிழந்தோம் தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம் உலகை நம்புதல் நன்மையல்லவே என்பதையல்லவா உலகு சொன்னது எம்மை நம்புவோம் தாயகம் மீட்க தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே ! கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !…

    • 3 replies
    • 1.1k views
  4. செந்தமிழ் தாயின் சந்தன மேனியர் ஆந்திர எல்லையில் சரிந்தே வீழ்ந்தனர் மரக்கட்டைகள் நடுவே செம்மரக்கட்டைகளாய்..! கிரந்த மொழி பேசும் திராவிட வாரிசுகளாம் தெலுங்கர்கள் பட்சாதாபமின்றி வேட்டையாடி மகிழ்ந்தனர் செந்தமிழன் பிணம் வீழ்த்தி...! சிங்களப் பேய்கள்.. ஹிந்தியப் பிசாசுகள் குடித்த ஈழத்தமிழ் இரத்தம் காய முதல்.. கடலில் கரைந்த தமிழகத் தமிழனின் குருதி நிறம் மாற முன்.. நடந்தது சம்பவம்..! சந்தனக் கடத்தலை சாட்டி முதலைகள் வேட்டையாடி முடித்தன.. மீண்டும் ஓர் இனப்படுகொலையின் நினைவை மனதின் ஓரத்தில் இருத்தி..! புலிக்கொடி நடுவே படை நடத்திய சோழ தேசம் இன்று வீழ்ந்து மடிகிறது..! காரணம் தான் என்ன.. தமிழனை தமிழன் ஆள வழியின்றி போனதே..! மீட்போம் எம…

  5. உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? வருக புத்தாண்டே. அழைத்தாலும், விட்டாலும் அகலக்தடம் விரித்து - எங்கள் வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய். அழைத்தென்ன? விட்டென்ன? அனுமதி கேட்டா வருகின்றாய்? வந்தது வந்துவிட்டாய் வலிய வந்த சீதேவியே! எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு. நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள். ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி, கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள். எங்களுக்கென்று பத்திரப்படுத்த, செல் விழுந்த சிதைவிடையே உயிர் காவி …

  6. சந்தர்ப்பம்………………! எப்போதும் அரசியல்வாதிகள் தமக்கான சந்தர்ப்பம் குறித்தே கூவுவதேன்! மக்களுக்கான தேவைகளைச் சந்தர்ப்பாதவாதம் விழுங்கிவிடுமதேன்(?) குரல்வளை நெரிபட்டு குற்றுயிராய் கிடந்த தமிழினமோ நம்பிக்கை மைந்தன் கை காட்டிய திசையில் நல்லது நடக்குமென்று நம்பியதன் விளைவாக அரச சபைகளில் புதிதாய் புதிய பிதாமகர்கள்(?) தமது சட்டவலு மூளையைக்கசக்கி சலவையைத் தொடங்கினர்.. சிங்கத்தை வீழ்த்தவல்ல தமிழைத் தாழ்த்த தட்டிக் கேட்போரை… மக்களை மகுடியாக்கி ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்கத் துடிக்கிறது! உருவேறி உருவேற்றி நிற்கிறது ஒரு கூட்டம் இல்லாத புலிபற்றி எப்போதும் சிலாகிப்பு பொல்லாத புலியாம்! புலியுறுமல் ஓய்ந்து பல்லாண…

    • 0 replies
    • 698 views
  7. சந்தியா ரசித்தவை நீங்களும் ரசிக்க

  8. சித்தப்பா அன்பின் உருவானவரே! பாசத்தின் உறைவிடமானவரே! தந்தைக்கு நிகர் அற்றவரே! தாய் போன்று எமை வளர்த்தவரே! தந்தையின் உடன் பிறப்பே!- தந்தை போன்றே எமை காத்தவரே! அறியா வயதில் அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என் அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால் தந்தையுடன் வாழ்ந்தாலும் தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை அன்னை மடி தேடியதில்லை அன்னை உருவில் உங்கள் அன்பு ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள் தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள் வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாக…

  9. -உமா- ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது. இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன. …

  10. மாவீரர்கள் காவியங்கள் பல படைத்திட வங்கக் கடல்தனிலே வேங்கைகளாகப் புறப்பட்ட மாசற்ற மறவர்கள் அண்ணன் வழி சென்றே அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள் தாய் தந்தை மறந்தார்கள் தாய் நாட்டை நேசித்தார்கள் தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள் தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் காத்திடவே கரும் புலியாய்! கடற் புலியாய்! பல்வேறு வடிவங்களில் புயலாகப் புறப்பட்டு - இன்று எல்லோர் மனதிலும் வாழுகின்ற உன்னதப் புருசர்கள் மாவீரர்கள்

  11. வணக்கம் சகோதரரே சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைச்சதிலை இருந்து நாங்கள் படுற பாட்டை ஒரு கவிதையா எழுதுவம் எண்டு வெளிக்கிட்டனான். ஒரேயடியா எழுதினா நீங்களெல்லாம் கூடிப் போச்சுது எண்டு சண்டைக்கு வருவியள் எண்டபடியாலை கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி வாசிச்சுப் போட்டு உங்கடை கருத்துக்களைக் கட்டாயம் எழுதுங்கோ. அப்ப தானே எனக்கும் உசார் வரும். (அடுத்த பாகம் எழுதினதும் தலையங்கத்தை நான் இரண்டாம் பாகம் எண்டு மாத்திறன் . அப்ப உங்களுக்கு வாசிக்க லேசா இருக்கும். வரலாற்றை மறப்போமா? (முதலாம் பாகம்) போர் ஓய்ந்து விட்டதனால் போராட்டம் முடிந்ததென்று புளகாங்கிதம் கொண்ட புதல்வர்களே கேட்டிடுவீர் சாமான்கள் போவதனால் சமாதானம் வந்ததென்று சந்த…

  12. சந்தையின் மாலை வெறுமை. விலைபேசல்களும் விற்பனைகளும் முடிந்்தபின் சந்தைகனளும் சலனங்களும் கலைந்தபின் எந்த வியாபாரிக்கு என்ன ஆதாயம் கிடைத்திருக்குமென்பது பற்றிய அக்கறையெதுவுமின்றி சந்தைச் சதுக்கம் வெறுமையுற்றிருக்கிறது எந்தத் தராசு எதை நிறுத்தது ? எந்தக் கணக்கீடுகளின்படி விலைகள் நிர்ணயமாயின ? யார் யார் வந்தார்கள் ? எவற்றையெல்லாம் வாங்கினார்கள் ? எவற்றையெல்லாம் விற்றார்கள் ? தோட்டக்காரர்கள் யார் ? தோற்றங்கள் பெற்ற மதிப்பீடுகள் என்னவாயிருந்தன ? உள்ளீடுகளின் பெறுமதிகள் எங்கேனும் உள்வாங்கப்பட்டதா ? ஆதாயமற்ற கேள்விகள் வழங்கக்கூடிய ஊகப்பதில்களின் பயனின்மைபற்றிய தன் முன்னனுமானங்களைக் கூட்டிவாரிக் குப்பைக் கூடையில் கொட்டியப…

    • 4 replies
    • 1.3k views
  13. வருடங்கள் நான்காகி, உருண்டு செல்கின்றது, காலம்! வறண்டு போன வனாந்திரத்தில், ஆழப்புதைந்திருக்கும் நீராக, அவலங்களின் நினைவுகள், பாதாளத்தை நோக்கிச் செல்கின்றன! புதைக்கப் பட்ட மனித எச்சங்களின் மீது, மனதாபிமானத்தின் முலாம் பூசிய உதவிகள், கட்டிடங்களாக உருவாகின்றன! பரம்பரை, பரம்பரையாய், வரம்பு கட்டி வளம் படுத்தியவர்கள், போரின் வடுக்கள் தந்த வலிகளில், புதைந்து போய் விட்டார்கள். சொந்தமென்று நம்பியிருந்த மண்ணில், வந்தேறு குடிகளாய்க், காடைகளும், காவாலிகளும், கலிகாலத்தின் சான்றுகளாய், களவாகக் குடியேறுகின்றன! தூக்கணாங்குருவிகளின், வாசல்கள் வளைக்கப் பட்ட, தொங்கும் குருவிக் கூடுகளாய்க், கவனமாகப் பின்னப்பபட்ட, கொலைக்கூட்டினுள், எமது மரணங்கள் நிகழ்த்தப் பட்டன! எட…

  14. Started by vaithegi,

    சபதம் பாராளுமன்றங்களே................ பாராமுகமேனோ?????? உதவாமல் நீரிருந்தால், எம் உணர்வென்ன மடிந்துபோகுமோ? கையிழந்து காலிழந்து தலையிழந்து உடல் சிதறி உயிரிழந்த போதும் உணர்விழந்து உரிமையிழந்து, சிங்களவன் அடிபணிந்து வாழமாட்டோம் சபதமிது.....

    • 3 replies
    • 1.2k views
  15. Started by Theventhi,

    சபதம் |||| ||||| சிங்கள விகாரையில் எரிந்தன விளக்குகள் தமிழர் வீடுகளில் அணைந்தன உயிர்கள் சமாதானம் உயிர்க்கும் என்றனர் மக்கள் எதிரியின் கரங்களில் கந்தகக் குழாய்கள் வேள்விக்குக் கிடைத்தோ பச்சிளம் பிஞ்சுகள் சயனத்தில் கருக்கினர் சிங்கள வெறியர்கள் குருதியில் எம்விதி எழுதத்திரண்டனர் தமிழர் ஈழமே தீர்வென பூண்டனர் சபதம்.

  16. இன்று கருணாகரனின் புல்வெளி இணையத்தில் உள்ள கவிதைகளைப் படித்தேன்...நினைவுகளை துளைத்தெடுக்கும் வார்த்தைகளை கொண்டு வடித்தெடுத்த கவிதைகளை ஒரே தடவையில் நீண்ட பெருமூச்சுடன் வாசித்து முடித்தேன்...அதில் உள்ள "காதலும் கனவும் நிரம்பிய நகரம்" என்ற கவிதையின் தாக்கத்தில் என்னை நானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டபோது பிறந்தது இது.... சபிக்கப்பட்ட சந்ததி... தன்னைக் கடந்து போன தலைமுறைகளின் இளமைகள் தொலைந்து போன கதைகளை சுமந்தபடி தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்... என் பாட்டி தன் பருவ காலங்களை என் பாட்டன் தன் இளமைகளை என் தந்தை தன் பால்யகாலங்களை தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்.. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அது சிறுவயதுகளில் …

  17. எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன. நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன. பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன. கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் பு…

    • 10 replies
    • 853 views
  18. Started by kavi_ruban,

    சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போரா…

    • 4 replies
    • 1.1k views
  19. சமாதானத்தின் பெயரால்.. முந்தியெல்லாம் நாங்கள் விழிநீர் சிந்தியதே இல்லை தந்தனத்தோம் பாடி கெந்தித்தொட்டு ஆடி தெரு மந்திகளைப் போல வாழ்ந்திருந்தோம் முந்திய வாழ்க்கை எல்லாம் நாம் சந்தித்த எதிரியாலே பந்தி விட்டு ஓடியது சந்தி கூடிச் சிரித்தது... வந்தவன் ஆட்டி வைக்க சொந்த மண் விட்டு வெந்த புண் மனத்தோடு சொந்த பந்தமதைப் பிரிந்து குந்தியிருந்த நிலத்தையும் இழந்து மரம் விட்டு மரம் தாவும் மந்திகளைப் போல ஊர் விட்டு ஊரோடினோம் கூடு பிரிந்த வாழ்க்கையது தேடி வந்தது எம்மை கேடென்று நினைக்கலாமோ நாமதனை..? நாடற்ற நமக்கு வீடெதற்கு ? வீண் வம்பெதற்கென பாடித் திரிந்த பண்பட்ட குயிலொன்…

    • 3 replies
    • 1.1k views
  20. Started by வானவில்,

    சமாதானமே எங்கே புதைந்து போனய்......? கல்லறைக்குள்ளா.....? எங்கே புதைந்து கொண்டிருக்கிண்றாய்....? அரசியல் வாதிகளிடமா....? நீ........ இல்லாத வெற்றிடம் நரகமாக கிடக்கிண்றது எங்கள் உயிரே நீ வா.........!

  21. போய்விடு! அடேய் கருணா துரோகியே! தமிழீழத்தை விட்டு விரைவில் ஓடிவிடு! கருணையின் பொருள் தெரியாத உனக்கு யாரடா கருணா என்று பெயர் வைத்தது? சொறி நாயயென நானுனை நாமமிடுவேன்! மனிதனுக்கே மனிதாபிமானம்! மனுதர்மம்! உனைப் போன்ற மிருகங்களிற்கு சட்டத்தில் கிடைப்பது சாட்டையடிகளே! பாரினில் நீயொரு படு பாதகனென்று ஹியூமன்ரைட்ஸ் வோட்சும் சொல்லுது! இனியும் உனக்கேனிந்த கேணல்பட்டம்? "கோணல் சொறிநாய்" நீயென்றறிந்திடு! நேற்றுவரை வாய்மூடிப்பால் குடித்தநீயுன் அன்னைக்கே எதிராகவா மார்தட்டுகிறாய்? இரத்தவாந்தி நீ எடுக்குமுன்னர் இலங்கையைவிட்டு வேறிடம் ஓடிடு! பற்றைக்குள் கக்கூசு இருந்த உன்னை பிளேனில் ஏற்றி பேச்சுக்கு அனுப்பிட ஒற்றர் கூட்டத்து பிச…

  22. சமாதிகோவிலடியும் சாகாத நினைவுகளும். பெஞ்சன் வடலி பெரிய இலுப்பை பிள்ளையார் வாசல் பிரியமான நாவல்... பேச்சியம்மன் கோவில் பேய் வருமென்றாலும் போய்வர விரும்பிய இலந்தைக் கூடல்.... பசுமையாய் பச்சையம் உலராப் பத்துமணியிரவு. பாலூறும் இரவுப் பெளர்ணமி ஒளி. விசாகப்படையலுக்கு வீடுவீடாய் பொருள் சேர்த்து விரித்த பாயில் பரப்பிய தானிய வகைகள் பரந்த சமாதிகோவில் மடம். பாடலபாடம் படித்த வீட்டு முற்றம் பலா மா பழவகை தந்த தோட்டம் துரவுகள் பகலிலும் கொள்ளையடித்த பலட்டன் பனைவெளிப் பனங்காயின் இனிப்பு...... பால் தந்தே எமை வளர்த்த பசுவும் அதன் சிசுவும் பால்யகாலப் பலகதை நினைவும் பாதிவாழ்வில் பயணம் முடிந்தும் பசுமையின் இனிப்ப…

  23. ஈரமாக இருந்த நிலம் .... வறண்டு வருவதுபோல் .... விவசாயியின் மனமும் .... வறண்டு வருகிறது .....!!! கடனை கொடுக்கமுடியாமல் ..... உயிரை கொடுகிறார்கள் .... உலக மயமாக்கலின் ..... ஈர்ப்பு உலக முதலீட்டை .... அதிகரிக்க செய்கிறது ..... உணவளிப்பவனை.... உதறி தள்ளி விடுகிறது .....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்

  24. நல்ல பழங்களை ..... தட்டில் அடுக்கி வைத்து ..... நலிந்த பழங்களை....... கொடையாய் கொடுக்கும் ..... கலியுக தர்மவான்கள்.......!!! பகட்டுக்கு பிறந்தநாள் ..... பலவிதமான அறுசுவை ..... உணவுகள் - நாலுபேர் ....... புகழாரம் ....... விடிந்த பின் பழைய சாதம் ..... ஏழைகளுக்கு அள்ளி.... கொடுக்கும் ....... கலியுக தர்மவான்கள்.......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

  25. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் ”நிவர் புயல்” பற்றிய கவிதை நிவர் புயல் உருவாகியதில் இருந்தே அது விவாதப் பொருளாகவே இருக்கிறது. இருக்கையின் நுணியிலேயே இருக்க வைக்கும் நிவர் புயல் பற்றி பொதுமக்கள் பேசாத நேரம் கிடையாது என்று சொல்லலாம். பொதுவாக மழைக்காலங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த காலமே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடுவதாக இருக்கும். ஆனால் நிவர் புயல் உருவெடுத்த பின்பு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதுதொடர்பான மீம்ஸ்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. அந்தவகையில் நிவர் புயல் பற்றிய அடுக்குமொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது வலைதளவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த கவிதை வருமாறு:- …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.