கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி! இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது …
-
- 4 replies
- 3k views
-
-
"எந்த நாளோ?' -கவிஞர் கோ. கலைவேந்தர் போரினை நிறுத்த வேண்டிப் புலம்பினோம் உலகி னோடும்! வீதிகள் எங்கும் உணாது வாடினோம் உறவி னோடும்! போர்வெறிக் கண்ணோட் டத்தில் புலமிழந்த இராச பக்சே ஓநாயின் இழவ றிந்தே உவக்குநாள் எந்த நாளோ? போர்க் களத்தின் அழுகை வெள்ளம் வடியுநாள் எந்த நாளோ? போர்க்களத்தின் உள்கா யங்கள் ஆறுநாள் எந்த நாளோ? போர் வெறி வல்லாட் சிக்குள் மீளுநாள் எந்த நாளோ? பேரொழிந்த இராச பக்சே புதையுநாள் எந்த நாளோ? மண்வெறி கொண்டார் தாமும் பிடிசாம்பல் ஆவார்! - சென்ற உயிரினைப் பொருத்து வாரும் ஒழியுநாட் கொள்வார்! - ஞாலத் தண்பரப்பில் உன்னைப் போற்றித் தொழுவாரும் யாவர்? - மீண்ட கண்பரப்பை …
-
- 0 replies
- 1.5k views
-
-
பிறப்பால் இவன் செய்த குற்றம் ஏதும் இல்லை. இருந்தும் பெற்ற தாய் நிராகரிக்க.. மனிதக் கருவி துணை இருக்க.. வளர்ந்தவன் Knut எனும் பெயர் தாங்கி.. தன் அழகால் குறும்பு செய்யும் நடத்தையால் உலகையே கவர்ந்தான். பாவம்.... 30 ஆண்டுகள் நீண்ட ஆயுள் வழக்கிருந்தும்.. மானுட உலகில்.. அவன் இருப்பு வெறும் நான்கு ஆண்டுகள் தான். விடைபெற்று விட்டான்.. போதும் பூமிப் பந்தில் இந்த வாழ்க்கை... வேண்டாம் எனியும் மனிதரோடு கொண்ட சகவாசம் என்று. இன்று கண்ணீரோடு அவன் நினைவில் இவன்..! http://www.bbc.co.uk/news/magazine-12805534
-
- 4 replies
- 2.9k views
-
-
என்னை கருவறையில் சுமந்த போது தினம் தினம் என்னை தடவி உன் வாழ்க்கை எப்போதும் இருட்டறையில் தான் என சொல்லி வந்ததின் அர்த்தம் புரிந்தது............ கருவறையின் வெளியில் இருந்து ; வந்த என்னை அரை உயிராக புதைகுழிக்குள் புதைத்த போது.........
-
- 3 replies
- 1.5k views
-
-
மாறும் உலகில் மாற உன் உறவே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை நிரந்தரம் நான் மாண்டபின்னும் உன்னில் உயிர்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு நிரந்தரம் நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம அதன் விலையாக என்னை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
-
- 4 replies
- 1.9k views
-
-
-
மையவாதச் சகதிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகள் அரிப்பெடுக்கும் முதுகை சொறிய எவன் வருவான் என தேடுகின்றது உலகின் எந்த மூலைக்குள் போனாலும் ஊர்க்காரனே சொறிந்துவிடவேண்டும் நாலுபேராவது சொறிந்தால் தான் வாழ்வுக்கு அர்த்தம்கிடைக்கின்றது இருந்தும் நாற்பதுபேர் சாட்டையுடன் நிற்பதை என்னும் உணர்ந்துகொள்ளவில்லை. எதிர்பார்த்தபடி அரிப்பு வழமைபோல விரைவில் கூடிவிட்டது தங்களுக்குள் சொறிய ஆரம்பித்துவிட்டார்கள் இம்முறை உங்களுக்குள் சொறிந்து விழையாடும் கோமாளி ஆட்டத்தில் மக்களுக்கு ஆர்வமில்லை ஏனெனில் துப்பாக்கிகளால் எமக்குள் சொறிந்துவிழையாடிய ஆயிரமாயிரம் விழையாட்டை கண்டு சலித்தவர்கள் கள்ளன் பொலீஸ் விழையாட்டு எமக்கு உயிரை எடுத்து விழையாடும் துரோகி த…
-
- 17 replies
- 3.4k views
-
-
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்: மனுஷ்ய புத்திரன் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் சதா முணுமுணுத்துக்கொண்டு எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு எதையாவது சுத்தம் செய்துகொண்டு யாரையாவது சபித்துக்கொண்டு எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு …
-
- 4 replies
- 3.5k views
-
-
பிடித்தமாதிரி நடந்துக்கோ பிரியமாய்ப் பேசு கழுத்தளவு கவலையென்றாலும் கண்ணில் அதைக் காட்டாதே... ஆளப்பிறந்தவன் அவன் பேணப் பிறந்தவள் நீ காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால் கல்லானாலும் கணவன்... விதவிதமாய் உடுத்திக்கொள் வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு வயிற்றின் வாயிலாக அவன் மனசுக்குள் நுழையப்பார்... ஆணென்றால் அவன் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், கட்டிய கணவனையும் குழந்தைபோல நினைத்துக்கொள்... சிரித்த முகமென்றால் சீதேவி சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி பொறுமையின் சிகரமென்றால் பூதேவி பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி... கல்யாணம் பேசியதிலிருந்து கணக்கில்லாத அறிவுரைகள்; எல்லாவற்றையும் கேட்டவள் இறுதியாய்ச் சொன்னாள்... வ…
-
- 10 replies
- 2.5k views
-
-
இருக்கிறானா? இல்லையா? வாலி வெடித்த வெந்நீர் கவிதை சொல்லைக் கல்லாக்கி... கவிதையைக் கவண் ஆக்கி... வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை... இல்லை... வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது... கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு கண்ணீர் அஞ்சலி... ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி பேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ... மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது; உன் - பன்னீர்க் குடம் உடைத்து…
-
- 3 replies
- 2.1k views
-
-
அன்னையே போய்வா! ---------------------------------- அன்னையே போய்வா தமிழுக்குத் தாயகனைத் தந்த அன்னையே போய்வா! இது விடை பெறும் நேரமென்று விதியெழுதிப் போகிறது வென்று வரும் காலமதில் விண்ணிருந்து போற்றுகையில் மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! காலவெளியறுத்துத் தேசமதை மீட்டு பாசமுடன் தழுவுகின்ற வேளையொன்றில் உந்தனுக்கு ஆலயங்கள் அங்கிருக்கும் அந்தக் காலம் வரை எம் நெஞ்சமதே ஆலயமாய் வீற்றிருக்கும் வீரருடன் வந்திருப்பாய் எம் தாயே! குமுறியழுகின்ற தாய்மாரை தேற்றுதற்கு முடியாது தேசமது துடிக்கிறது எம் தெருவெங்கும் பகை சூழ்ந்து எம்மினத்தை அழிக்கிறது பகை மீண்டு தலைநிமிரும் காலம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய தமிழச்சியின் கண்ணீர்வாக்குமூலம் அம்மா.. உன் கடைசிப்பயணத்தில் என் கண்ணீர் வாக்குமூலம். என்னை மன்னித்துவிடு. நான் விரும்பினாலும் நான் விரும்பாவிட்டாலும் என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தியன் என்ற அடையாளத்தினை கிழித்து எறியும் எந்த ஆயுதங்களும் இல்லாமல் நிராயுதப்பாணியாக களத்தில் நிற்கும் என்னை.. அம்மா மன்னித்துவிடு. கசாப்புக்கு கூட உயர்நீதிமன்றம உச்ச நீதிமன்றம் கதவுகள் திறந்திருக்கின்றன பலகோடியில் பராமரிப்பு செலவு இத்தனையும் செய்து இந்திய முகத்தைக் காப்பாற்றத் தெரிந்த எங்கள் நீதிதேவதைக்கு அன்னையே.. சக்கரநாற்காலியில் நீ சாய்ந்தக்கோலத்தில் மருத்துவம் நாடி வந்தப்போது மட்டும் கறுப்புத்துணியால் கண்களை…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடியலின் பாதை அனு தினமானது. கொடியரின் பாதை அது மாதிரியே நாளும்,பொழுதும் கொலை,கடத்தல் இந்த சம்பவம் இல்லையெனில்-அது சிறீலங்காவே இல்லையென ஆச்சு. இணையத்தை பார்த்தால் ஆளாளிற்கு தனது கற்பனையால் இன்னமும் எரிகின்ற நெருப்பில் பிடுங்கிய வரை லாபமென ஏதேதோ எழுதுகின்றார். வீரம் மெளனித்தால் ஈரமுள்ள நெஞ்சகம் என் செய்யும்? நிலைமை ஒன்றும் சீராக இல்லை. இதற்குள் எத்தனை சீரழிவை இன்னமும் செருகுவர்? தூற்றுவதே சிலரது பொழுதாக தேற்றும் உள்ளகச் செழிப்பகற்ற ஊற்றுக் கண் இருந்தும் இல்லாததாய் இழவுகள் சேதி எழுதும். மாற்றம் தேடும் மனிதங்களை கறைப்படுத்தும் காகிதங்கள் வரையின்றி ---- குழப்பம் ஏற்படுத்துவதில் குறியாக சில துன் மார்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
அன்னையின் ஆஸ்தி போராட்டம் என்பது சோத்துக்கல்ல நாம் போராட்டப்புறப்பட்டது படிப்புக்கும் அல்ல தொழில் வாய்ப்பு, மொழிப்பற்று ......இவைக்குமல்ல மனிதனாக வாழவிடாமை என்னை, என் குடும்பத்தை, என் உறவுகளை,... உயிர்வதை செய்தமை சிங்களம் அப்படியேதான் உள்ளது அதற்கு மனிதமொழி புரியாது தர்மவழி தெரியாது கடைசி சாட்சி எனது அன்னையின் இறுதி ஆஸ்தி இது போதும் நாம் ஒன்றாகி புறப்பட.......
-
- 1 reply
- 960 views
-
-
உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை அழித்தெழுதிய ஆற்றல் வீரன் பிரபாகரனைப் பெற்றதால் பார்போற்ற நின்றாளா..? வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா தியாகத்தை எழுதிய புலிகள் பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால் புகழ்பெற நின்றாளா… ? அன்று.. தாயிறந்த செய்தி கேட்டு துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே துடிதுடித்து ஓடிவந்தார் தாய் படுத்த சுடலைக்கு.. நீ பெற்ற பிள்ளை.. மானமுள்ள தமிழனுக்கெல்லாம் நீயே தாயென்று போற்றி.. இன்று உன் பிள்ளைகள் உலக முழுதும் உன் சவக்கட்டில் ஏந்தி ஊர்வலமாய் போகக் கண்டான் போய் வா தாயே.. தன்மானம் குலையா தலைமகன் வேலுப்பிள்ள…
-
- 0 replies
- 813 views
-
-
பாரில் சிறந்த மகன் பாரறிந்த மன்னவனை பார்வதியப் பாரில் தந்தாய் - பெரும் காரில் திளைத்து – கண்ணின் வேரில் கரித்து இன்று கோலம் கலைத்துக் கொண்டாய் - தாயே மனக்கோயில் புகுந்து கொண்டாய். பாயிற் கிடந்தபோதும் பகைவர் உனைத் தொழுதர்- பெரும் நோயிற் கிடந்தபோதும் ஊர் உறவு அன்பு செய்தர். – எல்லா வாயிற் பிறந்தமொழி “அம்மா” என்பதுதான் கோயிற் சிறப்பதுவே கொள்கைமகன் பெற்றவளே. தாயிற் பெருஞ்சிறப்பு மானச்சிறையிருப்பு ஊரின் திருமடியில் உன்னுறக்கம் ஒன்று காணும் - மானத்திருமகனின் மனதிற்கு அதுபோதும். ஆரிராரோ பாடிவிட ஆருமில்லை… உண்மையில்லை அவணியே பாடுமம்மா ஆத்மார்த்தத் தாலாட்டு ஆழக்கடல் நாயகனின் அன்னையே என் அன்னையே அமைதியாய் தூங்கம்மா - இது ஆனந்தத் தூ…
-
- 8 replies
- 2.1k views
-
-
தாயே நீ உறங்கு...... பார்வதி அம்மாவின் அஞ்சலிக் கவிதை..... தாயே கண்ணுறங்கு..... தமிழர் மானம் காத்த சிசுவைத் தந்தவளே நீயுறங்கு....... உன் ஓரணுவில் தமிழை நிமிர வைத்தவளே நீயுறங்கு..... நீ இறந்தாலும் எம் மனதில் ஒலிக்குதம்மா தாலாட்டு....... நீ இறக்கவில்லை எம் மனதில் பிறக்கின்றாய் இப்போது....... பிற நானூற்றுக கதையெல்லாம் நம் பிடரியில் உறைக்கவில்லை...... நீ பெற்ற வரலாற்றுக் காவியம் தான் தமிழர் மனங்களையே வென்றது....... நீயோர் வீரத்தாய்..... வீரனைப் பெற்றெடுத்தாய்........ வாழ்வைத் துறந்தாலும் உன் வல்வை மண்ணில் விதையாய் விழுந்துவிட்டாய்....... நீ எரிந்து மறைந்தாலும் உன் நினைவு எம்மனதில் என்றும் கொழுந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்மா! நினைவினைப் பிழிந்து கொஞ்சம் நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம். தீயின் தீ கூட கசிந்து மெல்ல கண்ணீராய் வழியுதம்மா..!! தடம் மாறிப்போன தமிழை இடம் நோக்கி இழுத்து வர ஒரு பிள்ளை பெற்றாயம்மா! இன்று பாரின் திசையிருந்து அழுவோர்க்கெல்லாம் என்றும் நீயே அம்மா! மானத் தமிழன் தாயே அம்மா! இதமான மழையின் ஈரம் பலமான அலையின் ஓரம் கால் பட்ட தடங்கள் அழிய ஈமங்கள் முடியும் அங்கே! நாமங்கள் முடிவதில்லை! அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில் ஈழப்போர் ஓய்வின்றித் தொடரும்..!
-
- 2 replies
- 2k views
-
-
-
- 89 replies
- 12.6k views
-
-
-
- 8 replies
- 4.1k views
-
-
காதலித்துப் பாரேன்...... கவிதை - இளங்கவி நேற்றைய காதலர் தினத்தில் காதலில் திழைத்திருந்தோருக்கும், காதலி / காதலனுக்காய் கலைத்திருப்போருக்கும், காதலித்துக் களைத்திருப்போருக்கும் மற்றும் காதலித்து வாழ்க்கை வெறுத்திருப்போருக்ககும் இது சமர்ப்பணம்..... காதலிக்க கலைத்திருப்போர்...... அவனோ..... கனவு காண்பான் திரிஷா பக்கத்தில் தினுசாய் கிடப்பதாய்..... தமண்ணா கைபிடித்து அவளுக்கு துணையாய் நடப்பதாய்.... படிப்பின்றி சுற்றுவான் பெட்டை வளைச்சலுக்காய் பள்ளி செல்வான்...... ஏண்டா இப்படியென்றால் இதுதான் இளவயசு என்பான்..... அவளுக்கு...... சிம்பு வேணுமென்பாள்... மீசை வைத்த பெடியன் பார்த்தால் முறைத்திடுவாள்... தோடுபோட்ட பெடி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேசக் காதல் யூலியட் இறக்கவில்லை நடித்திருந்தாள். ரோமியோ அறியவில்லை இறந்துவிட்டான். யூலியட் அறிந்துபின் இறந்துவிட்டாள். “இருவரும் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்கள்” எழுதிவைத்தார்கள் காதலுக்காய் உயிரைவிடுதல் காவியம் என்று. ரோமியோ! யூலியட்! உருகி வழிகிறது உலகம் முழுதும் ஒன்றுக்கு பதிலாய் பல நூறாயிரமாய் நாமும் காதலித்தோம். இதயச்சுவர்களில் ஈரமாய் எழுதினோம். ஊர்காற்று முழுதும் ஓலை அனுப்பினோம். காது மடல்களில் கானம் இசைத்தோம். மூக்கு முட்டிச் சுவாசித்தோம். இதழ்களால் இறுகப் பற்றினோம். கண்கள் முழுதும் நிறைத்தோம். ஒரு கோப்பையில் உண்டோம். காலடிச் சுவடுகளில் கால்வைத்து நடந்தோம். அவள் ஒளியில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
சருகானவர்கள்..... எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு காலங்கள் தொலைந்ததனால் காய்ந்து சருகாவதற்காய் வேர்களை நோக்கி உதிர்ந்துவிழும் இலைகள் நினைவு படுத்துகின்றன பனிமர தேசத்தில் பிடுங்கி நடப்பட்ட ஈழத்துத் தமிழர்களை.... அந்நியன்.... பைன்மரத்தை தீண்டிவரும் மாலைநேரக் குளிர்காற்றில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நின்றபோது ஓடி வழிந்தோடி ஒருகால்ப் பாதணியை ஊடுருவி உள்ளங்காலூடு புகுந்து உச்சி மண்டையில் சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில் சில்லென்று குத்திய மழைத்துளி சொல்லியது நான் அந்நியன் என்று.... சுதந்திரம்.... நிமிர்வற்கும் குனிவற்கும் நீட்டிநிமிர்ந்து படுப்பதற்கும் வீட்டில் மூச்சுவிடவும் …
-
- 7 replies
- 1.6k views
-
-
காதலர் தினம் கொண்டாடும் அதேவேளை காதலால் வீழ்ந்த மக்களையும் நினைவு கூற வேண்டாமோ. அதுதான். காதல் செய்யுங்க வேணாம் என்றல்ல.. ஆனால் மற்றவர்களை ஏமாற்றனும் என்ற குறிக்கோளை நினைப்பில வைச்சுக் கொண்டு காதலை செய்யாதீங்க. நன்றி பேஸ்புக்.
-
- 9 replies
- 1.8k views
-
-
காதலியே... காதலியே... கண்களுக்கு இன்று வரை தென்படாத காதலியே.. என்று வருவாய் என் வாழ்கையில் வசந்தம் வீச.. அதிகம் பேசியவன் அல்ல நான் பெண்களிட்ம். அது குறித்து கவலையும் இல்லை என்னிடம்.. அனால் என்னை நம்பி வந்த என்னுடைய உயிர் என்று காக்கும் திற்மை உள்ளது என்னிடம்... குடும்பம என்ற கூடாரத்துக்குள் வர.. உனக்க்காக என்ன செய்யவேண்டும் உனக்க்காக என்ன செய்ய கூடாது.. அன்பே நீ வெங்காயத்தையும் நறுக்கவேண்டாம்.. வெள்ளை பூண்டையும் உரிக்கவேண்டாம் அனைத்தையும் நான் பார்த்து கொள்வன். கடவுளை நம்புபவனில்லை நான்.. இயற்கையை நம்புபவன்.. எகிறிய பந்து மீண்டும் வரும் என்ற புவியீர்ப்பு விசை உண்மையெனில்... இந்த உலகத்தில் நியமிக்கபட்ட பிறப்ப…
-
- 12 replies
- 2.1k views
-