கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இரத்தத்தில் தோய்ந்த இளம் மல்லிகைகள் கவிதை - இளங்கவி அதிகாலைச் சூரியனின் அழகு வெளிச்சத்திலே பனித்துளிகள் தாங்கி பூத்திருந்த மல்லிகைகள் இன்று அதே சூரியன் அதே ஒளிக்கீற்று ஆனால் பனித்துளிகள் இல்லை மலர்ந்திடும் மல்லிகையும் செங்குருதித் துளிதாங்கி சிவந்து மலர்கிறது..... ஆனாலும் கார்த்திகைப் பூ மட்டும் கலங்காது நிற்கிறது...! மனதெல்லாம் மகிழ்விக்கும் நம் மண்ணின் செல்வங்கள் சிதறிவிட்ட முத்துக்களாய் தெருக்களிலே கிடக்கிறது தாங்கள் சிந்திவிட்ட இரத்தத்திலே தம் வாய்மூடி கிடக்கிறது...! எமது பிய்ந்த மழலைகளின் பிணக்கோலம் காட்டி போரை நிறுத்தச் சொன்னால் மேற்குலகுலகின் பதில் நமக்கு காட்டாதே ..! காட்டாதே...! மேற்குலகுச் சிறு…
-
- 4 replies
- 1.2k views
-
-
தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன் தொப்புள் கொடியில் உயிர்க் கொடி ஏற்றிய தோழா ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா! இணையத்திலே உன் அழகிய முகம் பார்த்தோம் இதயத்திலே கருகிப் போனது எங்கள் மனம்! எவ்வளவு இளகிய மனம் கொண்டவன் நீ எங்களுக்காய்... ஏன் கருகிப் போனாய்? தூத்துக்குடியில் முத்துக் குளித்தவன் நீ சாஸ்திரி பவனில் ஏனையா தீக்குளித்தாய்? குடம் குடமாய் நாங்கள் அழுது வடித்த எங்கள் கண்ணீரில் உன் முகமே பூக்கிறது! எம் தமிழ்மீது நீ கொண்ட பற்றுக்கு எல்லையே இல்லை என்பதை இப்படியா உணர்த்துவது! தமிழினத் தலைவர்கள் என்று சொல்லத் துடிக்கும் எங்கள் தலைவர்களின் நாக்கை அறுத்தாய் நீ! கையாலாகாத பரம்பரை என …
-
- 1 reply
- 1.2k views
-
-
வித்து காசு பாத்துறாதண்ணே எம்புட்டு நேரம் நிற்கிறது சீக்கிரமா படமெடுண்ணே அம்மாக்கு ஒத்தாசையா செங்கல் தூக்கனும் அழுக்குத் துணி மாத்தி கலைஞ்ச முடியை வாரி பூச்சுடி அழகா போஸ் கொடுக்க வருச பொறப்புக்கு வாண்ணே இந்த படத்தை எங்கயும் வித்து காசு பாத்துறாதண்ணே பள்ளிக்கூட போற வயசில்ல பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் குழந்தைத் தொழிலாளினு சொல்லி பொழப்பை கெடுத்துராதண்ணே உழைச்சாத்தான் பசிக்கிற வயிறும் சந்தோசப்படும் இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே! http://www.greatestdreams.com/2010/03/blog-post_04.html
-
- 5 replies
- 1.2k views
-
-
நிர்வாண மரங்கள் கிளைகள் தளிர் நிறைக்க இலையாடை அணிந்து தம்மை அழகாக்க ஆயத்தமாகின்றன பூமியின் காதலன் நிதம் கதிர் பரப்பி தூங்கிக் கிடக்கும் வேர்களைத் தட்டி எழுப்ப கிளைகள் எங்கணும் மகிழ்வின் துடிப்பில் மொட்டுக்கள் பூக்களாகி மாலை கட்டி நிற்கிறது மரம் மறைந்து வாழ்ந்த பறவைகள் மரங்களில் அமர்ந்து மகிழ்வாய்க் காதல் செய்ய மன நிறைவாய் தளிர்கள் நாளும் பொழுதும் விரிந்து நாட்டியமாடும் மங்கையராய் நடை பரப்பி நிதம் நகைக்க வைக்கின்றன பார்க்கும் இடம் எங்கும் பச்சை வண்ணம் காண பசுமை கொண்ட மாந்தமனம் மனதெங்கும் மகிழ்வோடு துன்பங்களைத் தூர வைத்து இயற்கை எழிலை எல்லையின்றி எங்கும் நிரப்பிக்கொள்ள போதும் இன்று என எண்ணித் கதிர்க் குடை சுருக்கக் கதிரவன் காலம…
-
- 12 replies
- 1.2k views
-
-
Dedicated to the farmers of India 🇮🇳 எங்கள் துயர் நீங்க வேண்டும்-பா.உதயன் எம் துயர் நீங்குமோ எம் துன்பம் நீங்குமோ எங்கள் நிலம் வாழ அந்த மழை தூவுமோ இப்போ உன் பசி தீரவில்லை உதவுவார் யாருமில்லை பச்சை போல் வயல்வெளியில் உன் பாடல் இசைக்கவில்லை வானம் இன்னும் இரங்கவில்லை வந்து மழை நனைக்கவில்லை தேனருவி பாயவில்லை பேச ஒன்றும் வார்த்தையில்லை உழுதுண்ட உன் வாழ்வு தொழுதுண்டு போவதுவோ உனையே நம்பி வாழும் உயிர்கள் எங்கு போவதுவோ காலம் எல்லாம் மாற வேண்டும் கடந்து இது போகவேண்டும் எங்கள் கண்ணீர் மழையாய் தூவ வேண்டும் வானம் பொழிய வேண்டும் வயல்கள் சிரிக்க வேண்டும் விதைகள் முளைக்க வேண்டும் இனி விடிவு பிற…
-
- 3 replies
- 1.2k views
-
-
கொடுமை வெடிக்கிறதே வெடிக்கிறதே கண்ட இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றதே மாறிக்கொண்டிருக்கிறதே மாறிக்கொண்டிருக்கிறதே தமிழ் ஈழம் இரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதே தொலைகிறதே தொலைகிறதே தமிழர்கள் காணாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்களே வதைகிறார்களே வதைப்படுகிறார்களே உன் இனத்தால் நம் அப்பாவித் தமிழர்கள் சித்திரைவதைப் பட்டுக்கொண்டிருக்கிறார்களே சிந்தித்துப்பாரேன் சிந்தித்துப்பாரேன் நீ அரசமரத்திற்கு கொடுக்கும் மரியாதையைக்கூட நம் இன உயிர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டாயே என்று கொஞ்சம் சிந்தித்துப்பாரேன் வேண்டாமே வேண்டாமே இந்த மனித வேட்டை இனியும் வேண்டாமே
-
- 4 replies
- 1.2k views
-
-
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது காலங்காலமாய் தமிழனை எதிர்த்த கண்ணாடிக்கர னொருவன் கலந்தே இருந்த இன்னொருவன் கடிதென விலகி கரைமாறி நின்றவன். காட்டி கொடுத்தே கலைத்தமிழை கயவர் அழிக்க கருத்தோடு உதவினர் கருக் குழந்தை முதல் கட்டிளம் காளையர் கன்னியர் கனவான்கள் வயோதிபர் பெண்கள் வயது வேறுபாடின்றி வகை தொகையுமின்றி வளைத்து வைத்து கொண் றோழித்தனர் வழக்க மில்லா குண்டுகள் கொண்டே வஞ்சக மான உதவிகள் கொண்டே போர் விதிமுறை எல்லாம் போக்கியே வீணர் வென்றனர் கொண்டாடினர் போதி மரத்தவன் நாமம் புகன்றே போதித்த தருமத்தை புத்தியில் கொள்ளாதோர் இன மானம் உள்ளோ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆக்கிரமிப்புப் பூதம் எல்லையின்றி ஊதித் தள்ளிய கந்தகப் புயலில் சிக்கி குருதியில் குளித்து கறுத்துப் போன பூமியே.. ஆடவன் என்றும் மகளிர் என்றும் குழந்தை என்றும் வேற்றுமை உணரா உருக்குத் துகள்களுக்கு உடலைப் படையல் செய்த பூமியே.. விடுதலைக்காய் எழுந்த ஓயாத அலைகளின் தொடக்கப் புள்ளியே முடிவுப் புள்ளியுமானது கண்டு இரத்தம் வடித்த தாயே... ஆடை மறைப்புக்குக் கூட அருகதையற்ற நிலையில் எதிரிமுன் அம்மணமாய் நின்ற தமிழர் தேகம் சுமந்து வேதனையில் வெந்த தேசப் பூமியே.. சிங்களச் சாத்தானின் இனவெறி வெற்றி இச்சைக்கு உன்னையே தந்திட்டு வெறித்துக் கிடக்கும் தேசமே.. தமிழ் தாயிவள் சேயை இரும்புக் கவசம் அல்ல தேகக் கவசம் தந்து காக்க உறுதுணையாய் நின்ற தீரமே... …
-
- 6 replies
- 1.2k views
-
-
கிடைக்குமா உன் நிஜங்கள் உதிராது என்றுமே மலர்ந்திருக்கும் அழகிய ரோஜாக்கள் போல் என்றுமேயான உன் நினைவுகள் மீண்டும் மீண்டும் நான் தான் உணர்கிறேன் உன் பிரசன்னத்தை என் உள்ளத்திலே இன்று நீ என்னிடம் இல்லாதிருப்பினும் உன் காதலில் எச்சசொச்சங்கள் என்னில்... என் உள்ளத்தைக் கொத்திக்காயப்படுத்தி கடித்து முறித்துச் சுவைத்து பார்த்த நீ பறந்து சென்றுவிட்டாய்... உன் எண்ணங்களின் நிழல்கள் தாங்கி நான் இன்று உன் நிஜத்தினை தேடிக்கொண்டிருக்கின்றேன் கிடைக்குமா எனக்கான உன் நிஜங்கள்....
-
- 5 replies
- 1.2k views
-
-
கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள் உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும் * உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில் யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள் காதலியை கண்டுபிடித்தவர்கள் * என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான் ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...? * என்னைப்போல் யாரும் உன் அமைதியை விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய் நீ மாறும்போதும் உன் மேல் உதடாய் நான் மாறும் வரையிலும் * இன்றுவரை காதலோடு வரும் எந்த பெண்களுடனும் நான் உரையாடியதில்லை காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம் செ ய்யக் கூடாது என்பதால் * முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன் நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் வென்றிடப் போகுது..! வெல்லத் தமிழினி வெல்லும் எனும்படிச் சொல்லத் தகுமொரு சூழல் வருகுது! மெல்லத் தமிழனை மெல்லத் துணிகிற புல்லர்ப் படைமிசை பூசல் பெருகுது! உள்ளத் துணிவொடு நிற்கும் தெளிநிலை கொள்ளத் தமிழினம் எங்கும் திரளுது! கள்ளத் தனமொடு காடைத் தனமதும் தள்ளப் படுமெனக் காலம் புகலுது! கொல்லைப் புறவழி வந்தனர் என்பதும் கொள்ளைச் செயல் புரிகின்றனர் என்பதும் கிள்ளுக் கீரைகள் நாமிலம் என்பதும் வெள்ளிடைக் குன்றென நன்கு விளங்குது! குள்ள நரிகளும் கூலிப் படைகளும் கள்ளிச் செடிநிகர் காவிப் பிக்குகளும் எல்லை மிகக்கடந்(து) ஈனம் புரிவது சொல்லுந் தரமின்றிச் சோகம் தருகுது! துள்ளித் திரிந்திடும் பள்ளிப் பருவத்துக் கொள்ளை அழகுக் குழந்தைகள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
அம்மா நீ எங்கன இருக்கா? *************************************** எனே,... அம்மா எங்கன இருக்கிறா? கையில் ஒரு பூக்கூடை பையில் ஒரு படையல் என முந்தி மாதம் தவறா உன் விழி மழையின் வீழ்ச்சியில் குளிப்பாட்டி மகிழ்வித்து முத்தம் தந்து குளிர்விப்பவளே நீ எங்கன இருக்கிறா? நீ அறிவியான நான் சாகா வரம் பெற்றவன் யார் சொன்னார் என்னை இறந்ததென்று? மண்ணின் சுவாசத்துக்காக மண்ணில் வாசகம் செய்கிறேன். சாவுக்குள் கண்மூடி உறங்கி உயிர்த்தெழுகிறேன் திக்கெட்டும் தேடுகிறேன் என் உயிர் உறவுகளின் தாயை தேடும் ஓலம் மட்டும் காதில் ஒலிக்கிறதே உன்னை மட்டும் காணவில்லை நீ எங்கன இருக்கிறா? கைகள் மரத்து போய் விறகு விற்று நீ ஊட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மழை - கிரிதரன் ஊரே வேண்டி நிற்க எனக்குமட்டும் மழை விருப்பமில்லை ஏனென்றா கேட்டாய் தோழி? காலடியில் நீரோடையும் சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும் அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ? வா வந்துபார் எம் குடிசையில்!! அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும் ஒற்றையறைக் குடிசைக்குள் பார்! கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும் எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை! ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும் காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி! ஒருநாள் இல்லை ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க இருட்டுமுதல் இருட்டும்வரை ஓடவேணும் நாங்கள் ஓரிடம் முடங்கினால் உண்டியேது? கையூன்றிக் கர…
-
- 3 replies
- 1.2k views
-
-
இனிய நண்பர்களே! என் மனதில் நட்பின் வலியில் பிறந்த ஒரு கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அன்றொருநாள் ஒரு சின்னப் பையன் மாலைப்பொழுதின் மயக்கும் இசையில் உள்ளம் மகிழ்ந்து ஓடி வந்தான் தென்றல் ஒன்று தவழ்ந்து வந்தது முல்லைச் செடியும் அணைத்துக் கொண்டது எத்தனை வண்ணம், எத்தனை வாசம் தன்னை மறந்து ஒவ்வொரு பூவாய் கட்டி அணைத்து முகர்ந்து கொண்டான் முல்லைச் செடியும் அன்பை பொழிந்தது காலைப் பொழுதில் கண்கள் திறந்து முல்லைப் பூவை கண்டு மகிழ்வான் மதிய நேரம் முல்லை இல்லா உணவும் உண்ணான் அடம் பிடிப்பான் அந்திப் பொழுதில் முல்லை பூவுடன் காதல் பேசி கண்கள் சிமிட்டி நடுநிசி தன்னில் முல்லை செடியுடன் ரகசியம் பேசி தூங்கி போவான் …
-
- 3 replies
- 1.2k views
-
-
கூட்டினோம் பெருக்கினோம் கழித்தலையும் துடைத்திட்டோம் எட்டு மணி வேலை என்பதை எழுத்திலும் நாம் அறியோம் இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள் அதை நாம் என்றுமே பார்த்ததில்லை சுமந்தோம் பெற்றோரை உடன் பிறந்தோரை அவரது பிள்ளைகளை உற்றார் உறவினரை தாயகத்தை......... வீட்டுக்கு கலோ என்றால் கிலோ எவரானாலும் அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ வயிற்றைக்கட்டினாலும் வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை வாய்திறந்து சொல்லோம் களவெடுக்கவில்லை கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும் வாய்ச்சொல் தவறியதில்லை எவன் வயிற்றிலும் என்றுமே அடித்ததில்லை மூழ்கும் நிலைவந்தால் அடுத்தவேலை எடுப்பதுண்டு அதற்கு அடுத்தவேலையும் பார…
-
- 11 replies
- 1.2k views
-
-
சொல்லடுக்குகளில் பின்னிக்கிடக்கும் எது நீயென்று அறியமுடியவில்லை எப்படி நிராகரிப்பது. அலையும் நரம்புகளில் எந்த நரம்பில் நீ எப்படித்தான் நிறுத்துவது. சகி இந்தக் கவிதையில் எந்த இடத்தில் நிறைகிறாய். எந்த வார்த்தைகளில் வெளியேறுகிறாய் புரியவில்லை. முகிலிடை வெட்டும் மின்னல் மிதந்தலைந்துவரும் வாசம் பெருந்துயரொன்றின் மெல்லிய நீட்சி எதிர்பாராமல் மனதுக்குள் அவிழும் பாடலின் மெட்டு எழுதென்று கலைக்குமுணர்வு மீறி நிற்கும் சோம்பல் நீயும் இவைப்போல அல்லது இவையும் உன்னைப்போல. பேரன்பே, யுகஅழிவின் இறுதிக் கணத்தில் கிடைத்த பேழை நீ. ஆதியிலிருந்து சுமந்திருந்த பிரியத்தை இறக்கிவைத்து இளைப்பாறுகிறாய். வா ஓய்வெடு. யுகமீட்சியின் பரிபூரணத்துவம் அன்பாலே நிகழு…
-
- 8 replies
- 1.2k views
-
-
நீ எனக்கு வேண்டாமடி சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப் பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக்கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்! அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான் அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை! அவளை விட்ட…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே! ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான இன்முகத் தமிழ் எழிலே! பார் சுற்றி தாய் முற்றக் கதை சொல்லிப் பயணித்த பண்புநிறை தமிழ்செல்வா! உலகின்....... தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா, நீ தூங்கிப் போய்விட்டாய்? ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா, நீ உறங்கி ஓய்வெடுத்தாய்? நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா, நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள் நாயகனின் தோளான நல்லதொரு தோழனே! நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்? யார் குற்றம் செய்தோம்? விழிநீர் முட்டிக் காயாத விதி வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உனக்கு எதிரி இருக்க வே…
-
- 2 replies
- 1.2k views
-
-
இது தான் இறுதி தாக்குதல்.....[/color] நேற்று தான் உன் வீட்டில் வெடித்தது குண்டு சிதறின உன் உடலில் பல துண்டு... ஓடிய குருதி காய முன்னே ஓடி வருவாயா எல்லையில் நீ என்ன...??? வேதனை தான் உனக்கு அதற்க்காய் ஏன் புலம்புகின்றாய் பொன்சேகா...??? வாகரை என்ன உன் வாசல் படியா....??? எங்கள் வீட்டுக்கு ஏறி நீ வருவாயா வா... பந்தி வைக்கின்றோம் உனக்கு நீ முந்தி வா.... முறிந்து விழுந்த உன் முதுகெலும்பு எங்கே..?? சிதறிய உன் சதை துண்டெங்கே...?? தேடி எடுக்க இங்கு வாராயா வா.... சுற்று மதில் காவலுற்குள் சுற்றி நீ இருக்க சுற்றி வந்துன்னை சுழன்றடித்தோம் அதற்குள் மறந்தாயோ...??? அகந்தை கொண்டாயோ...??…
-
- 2 replies
- 1.2k views
-
-
எல்லாம் இனிதே நடக்கிறது. இன்னும் சில மணிகளில் முற்றிலும் மயானமாகிவிடும் புகை மண்டலத்தினுள்ளிருந்து சிங்கக் கொடி உயரும் நிலத்தில் வீழ்ந்து இறந்துகொண்டிருப்பவர்கள் ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
-
- 4 replies
- 1.2k views
-
-
-
எப்போதோ நீ எழுதிய கடிதம் இப்போதுதான் எனக்குக் கிடைத்தது ஊர் எப்படி? உறவினர் எப்படி? உருக்கமுடன் கேட்டிருந்தாய் தோழனே நீயும் நானும் அப்போது பார்த்ததுபோல் இப்போது நம் கிராமம் இல்லை விமானத்தாக்குதல்களால் ஊரார் வீடெல்லாம் ஊனமாகிப்போய்விட்டது உன் வீடும் தப்பவில்லை எழில் மிக்க எமது கிராமம் எழிலுக்கு எழிலூட்டிய அம்மன் ஆலயம் கூட ஆக்கிரமிப்பாளரின் அராஜகத்தால் அடியோடு சாய்ந்து விட்டது தோழா வடை கடித்து தேனீர் அருந்தி வகைவகையாய் வம்புக்கதை வாய் வலிக்க கதைத்து சிரித்த வல்லிபுரத்தாரின் கடையும் பொல்லாத தக்குதலால் பொழிவிழந்து போய்விட்டது நீயும் நானும் பத்திரிகை படித்து நாட்டு நடப்பு எல்லாம் அலசி ஆராந்த் அந்த வாசிகசாலை இருந்த் இடம…
-
- 5 replies
- 1.2k views
-
-
"அலைமுறியும் கடற்காற்றில்" நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள். நட்சத்திரன் செவ்விந்தியன் செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது. * ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெ…
-
- 0 replies
- 1.2k views
-