கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கவிதைகள் இசை - ஓவியங்கள்: செந்தில் சிறுமீ சிறுமி ஆட்ட குமரி அடக்க சிறுமி ஆட்ட குமரி அடக்க சமீபத்தில் சமைந்த ஒருத்தியின் சமைப்புடன் விளையாடிப் பார்க்கிறது ஒரு தப்பட்டைக் குச்சி. நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை உன் குளத்துப் பொற்றாமரையாக ஒரு கணம் இருக்கக் கேட்டேன் ஒரே ஒரு கணம்தான். அதுவும் இல்லையென்றான நாளில்தான் குழாயடியின் நீண்ட வரிசையில் எல்லா குடங்களையும் இடித்துத் தள்ளிவிட்டு ``ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்'' என்று கத்தினேன். ஈருருளி ஓட்டுனன் - கவிதை கார்த்திக் திலகன் - ஓவியம்: செந்தில் நண்பர்களின் சீழ்க்கை ஒலிகளில் களைகட்டுகிறது மகிழுந்துப் பயணம் திடீரென…
-
- 212 replies
- 55.3k views
-
-
காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் சீ அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால்... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்து பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா என்றால் அவள்... …
-
- 0 replies
- 1k views
-
-
பார்த்தீபன் அன்று பசியோடு உந்தன் வாசலில் படுத்திருந்தானே முருகா! அவன் தேசப் பசி போக்க கண் திறந்து நீ அன்றுபார்த்திருந்தால்..., தனை வருத்தும் எவருக்கும் நீயருள்வாய் என்றவர்கள் உணர்ந்திருப்பர். குண்டுமழை பொழிகையில் குடியிருந்த வீடுவிட்டு எஞ்சிய உயிர் காக்க ஏதிலியாய் அவர் தன்னிலம் நீங்கி உன்னையும் தான் விட்டு ஓடோடிப்போகையிலும் கந்தனே நீயுமோ எம்மை கைவிட்டாய் என்றுதான் கண்ணீர் உகுத்து கரம்கூப்பினர் அன்று அசுரனை அழித்த உன் ஆறுமுகம் காட்டி அபயம் அளித்திருந்தால்..., கூப்பிட்ட குரலுக்கும் குவித்த கரங்களுக்கும் செவிசாய்த்து நீ அவர் துயர் துடைப்பாய் என்றவர்கள் நம்பியிருப்பர். ஈற்றில் முள்ளிவாய்க்கால் தன்னில் முடிவற்று செத்தொழ…
-
- 0 replies
- 739 views
-
-
காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்… ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகாவலி – தீபச்செல்வன்… உடலெங்கும் சிங்கக் கோடுகளில் இராட்சத பாம்புபோல காவி நிறத்துடன் நுழையுமொரு நதி மென்று விழுங்கியது என் காடுகளை நதியின் பெயரால் துடைக்கப்படும் தேசத்தில் முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள் தெற்கிலிருந்து பண்டாவையும் புத்தனையும் யுத்த டாங்கிகளையும் அள்ளி வரும் நதி எம் தலைநகரிலிருந்து ஒரு வார்த்தையேனும் எடுத்துச் சென்றதில்லை எம்மீது நதியின் ஒரு துளியும் பட்டதில்லை பீரங்கியிலிருந்து பாயும் குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே சிவந்த கண்களுடனிருக்கும் மாவிலாறு போலொரு சிறுவனும் முகம் மறைக்கப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
. எப்போது கிடைக்கும் சுதந்திரம்..! "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது..! "ஆ"தரவற்றோர்கள் அரவணைக்கப் படும்போது..! "இ"ல்லாதவனுக்கு இருப்பிடம் கிடைக்கும்போது..! "ஈ"கைப்பண்பு பணம் படைத்தவன் நெஞ்சில் துளிர்விடும்போது..! "உ"ணவில்லா ஏழையின் பசி ஆரும்போது..! "ஊ"ருக்குப்பாடுபட உள்ளம் முன்வரும்போது..! "எ"ழில் பொங்கும் இயற்கை அழிக்கப்படாதபோது..! "ஏ"ழைகளுக்கும் படிப்பு ஏமாற்றமில்லாமல் கிடைக்கும்போது..! "ஐ"ந்தாண்டு ஆட்சியும் மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும்போது..! "ஒ"துக்கப்பட்ட மக்கள் ஒருபடியாவது முன்னேற்றப்படும்போது..! …
-
- 0 replies
- 842 views
-
-
திருக்கேதீச்சரம்! தீபச்செல்வன்… பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம் கொன்று மறைக்கபட்டவர் எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட மாபெரும் சவக்குழியை உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச் சொல்பவனின் பல்லிடுக்குகளில் சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள் உறக்கமற்ற மரணத்தோடு மாபெரும் வதையோடு சரிந்துபோய்க் கிடப்பவர்கள் உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை நான் கண்டேன் …
-
- 0 replies
- 961 views
-
-
இரு கவிதைகள் – தீபச்செல்வன்… தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு இல்லை என்பேன்! நீதி செத்த கோபத்தால் பாண்டியன் நாடெரித்து மனம் ஆறாமல் பாம்பாகி எங்கள் ஈழநிலம் அடைந்தாய் இங்கும் செட்டிச்சி பெண் தெய்வமாவது எப்படி என உருமாற்றியவர் நாண உருக்குலையாது நீ நிம…
-
- 0 replies
- 1.1k views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய …
-
- 2 replies
- 1.6k views
-
-
'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கி…
-
- 6 replies
- 1.8k views
-
-
சொல்லத் தெரியவில்லை சுடர் போல எரிகிறது மனம் விம்மி வெடித்து நேற்றைய வானம் போல் பொழிந்து தள்ளிட விழிகள் இரண்டும் முட்டிக் கிடக்கின்றன அழுவதற்கான நாள் இது அல்ல எழுவதற்கான நாள் இது என்று உள்மனம் உறுதியாய் சொன்னாலும் விழி உடைத்து விழி நீர் சொரிகிறது... #ஈழத்துப்பித்தன் #மே18 2016
-
- 3 replies
- 2.9k views
-
-
ஒரு உறவை இழந்தாலே ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில் கொத்துக்கொத்தாய் ஆயிரமாயிரமாய் கொடுத்துக்கொண்டிருந்ததை கேட்டு பார்த்து அழுது புரண்டு காப்பாற்றும்படி மன்றாடி தோற்று இன்றும் எழும்பமுடியாமல் நித்திரை தொலைத்து நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம் தொலைத்தவை கொஞ்சமா? காவலுக்கு நின்ற தம்பிகளை தங்கைகளை பறி கொடுத்து தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி தலை குனிந்து நிற்கும் எம் இனம் மீண்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
இறந்த காலத்தை மறப்பதற்கான கருவி கவிதை: தமிழ்நதி - ஓவியம்: ரமணன் அரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி அம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது துருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது மண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த உடுப்புகளும் உக்கிப்போயின துருப்பிடித்த தகரத்தால் தொப்பூள்கொடி அறுக்கப்பட்ட குழந்தை ஒன்பது வயதுச் சிறுவனாகி மீண்டும் பள்ளிக்கூடமாகிவிட்ட அகதி முகாமில் படிக்கச் செல்கிறான் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த கடற்கரையில் சூள்விளக்குகள் மினுமினுக்க மீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன இன்னமும் செப்பனிடப்படாத வீடுகளுள் தங்கள் …
-
- 0 replies
- 976 views
-
-
தேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்? உன் பிறப்புச் சான்றிதழ் உன் பெற்றோர் வாங்குவர். உன் இறப்புச் சான்றிதழ் உனக்குப் பின்னால் இருப்பவர் வாங்குவர். நீ என்ன வாங்குவாய்? **** பகல் வந்துபோனதற்கு நட்சத்திரங்கள் அடையாளம் இரவு வந்து போனதற்கு விடியலே அடையாளம் நீ வந்து போனதற்கு என்ன அடையாளம்? **** அகராதியில் ஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும் அதற்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேநீர் கவிதை: ரசாயன அடிமைகள் பின் தொடர்ந்து வருகிறார்கள் குடிநோயாளியை ஒரு தாயோ தங்கையோ மனைவியோ மகளோ அடிப்பதற்கு விரட்டுகிறான் ஞானமற்ற பாதகன். சுவர் முட்டி நிற்கிறான் குடிநோயாளி குடத்துக்குள் தலை மாட்டிய நாய். தப்பிக்க நினைத்து ஓடுபவனை விரட்டி களைத்து விட்டு விடுகிறது மதுமிருகம். வாழ்க்கையிடம் கற்றுக்கொள்பவன் குடிநோயாளி... …
-
- 0 replies
- 1.4k views
-
-
தேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய …
-
- 0 replies
- 2.6k views
-
-
காலமெல்லாம் கடும் பனியிலும் ஓடி ஓடி உழைத்தவன் - இன்று உறங்கு நிலையில் ஓய்வெடுக்கின்றான் நெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று வீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான் மனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று அசையா மனிதனாக மருத்துவ மனையில் எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில். ஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
-
- 12 replies
- 1.6k views
-
-
விறைத்த குறிகளில் மதப்பாசிசம்! ரூபன் சிவராஜா கருவறை முடி பிஞ்சுடலின் தசை திறந்து சிதைத்திருக்கிறது பாசிசப் பூமி புத்திரரின் காமவெறி ஆசிஃபா நேற்றுவரை அவள் நாடோடிகளின் செல்ல மகள் குதூகலித்து குதிரை மேய்த்துத் திரிந்தவள் காடு மலை மேடுகளில் சுதந்திரமாய் காற்றோடு நடந்தவள் இன்று அவள் என் மகள் இனி அவள் உலகக் குழந்தை எப்படித் துடித்திருப்பாள் ஐயோ மிருகங்கள்கூட அவளை இப்படிக் குதறியிருக்காது நேற்று நர்பயா இன்று ஆசிஃபா விறைத்த குறிகளில் மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது காவிக்கூட்டம் காமவெறியும் பெண்ணுடலைக் கிழிக்கிறது இனவெறியும் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேநீர் கவிதை: வலிக்கிறது! உயரத் துடிக்கும் முடவன் நான். அடிக்கு ஒருமுறை வழுக்கியோ திறனின்றியோ விழுகிறேன். எப்படியோ கை ஊன்றி எழுந்து விடுகிறேன் யார் தயவும் இல்லாமல். மீண்டும் விழுந்தால் மாண்டுவிடாமல் எழ மனதில் உறுதிகொண்டு. ஒவ்வொரு முறையும் உறுதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைகிறது. தத்தளிக்கும் என்னை தூக்கிவிட்டு துயர் துடைக்கும் தாயுள்ளம் எதிர்பார்க்கும் தற்குறி இல்லை நா…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆ…
-
- 3 replies
- 1.2k views
-
-
உன் தோள் சாய ஆசைதான்...... அன்பே... உன் தோள் சாய நான் தூங்காமல் கத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டும்தான் நீ வருவயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக் கிடக்கிறாய் நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே விழிப்பதும் சேர்ந்தே நடப்பதும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் முடிகிறது உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதுக்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இல்லை இருந்தும் ஏகாந்தத்தை ரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்கமானவை ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
”எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த அந்தக் குருவியைப் போல் காணாமல் போனதடி காலங்கள்.” . எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். . வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர்…
-
- 2 replies
- 2.2k views
-
-