Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அழுவதற்காகவா தமிழினம் பிறந்தோம்....??? இமயங்கள் இமயங்கள் இடிந்தே வீழ்குது இன்றேன் தமிழுக்கு இத்தனை துயரம்...??? கண்ணீர் ஆறுகள் கடலென ஓடுது நெஞ்சத்தில் ரணங்கள் ஏனின்று கூடுது....??? விடுதலை ஊற்றுக்கள் விரைவாய் அடையுது காலனுக்கேன் இத்தனை கடுகதி அவசரம்...??? ஒளியென உதித்த உதயங்கள் எல்லாம் இருளதை அளித்து இறப்பதால் சோகம்.... புயலென எழுந்த விடுதலை வீரர்கள் பகையதை சருகாக்கி அழித்ததால் மகிழ்ந்தோம்... அருகில் இருந்ததால் அடைந்தோம் ஆனந்தம் அவரை இழந்ததால் அடைகிறோம் சோகம்... தீயென எழுந்த தீர வீரர்கள் தீயினில் எரிந்ததால் தேம்பியே அழுதோம்... மார்கழி வந்தாலே மரணத்தின் ஓலம் அழு…

    • 4 replies
    • 1.2k views
  2. இரத்தத்தில் தோய்ந்த இளம் மல்லிகைகள் கவிதை - இளங்கவி அதிகாலைச் சூரியனின் அழகு வெளிச்சத்திலே பனித்துளிகள் தாங்கி பூத்திருந்த மல்லிகைகள் இன்று அதே சூரியன் அதே ஒளிக்கீற்று ஆனால் பனித்துளிகள் இல்லை மலர்ந்திடும் மல்லிகையும் செங்குருதித் துளிதாங்கி சிவந்து மலர்கிறது..... ஆனாலும் கார்த்திகைப் பூ மட்டும் கலங்காது நிற்கிறது...! மனதெல்லாம் மகிழ்விக்கும் நம் மண்ணின் செல்வங்கள் சிதறிவிட்ட முத்துக்களாய் தெருக்களிலே கிடக்கிறது தாங்கள் சிந்திவிட்ட இரத்தத்திலே தம் வாய்மூடி கிடக்கிறது...! எமது பிய்ந்த மழலைகளின் பிணக்கோலம் காட்டி போரை நிறுத்தச் சொன்னால் மேற்குலகுலகின் பதில் நமக்கு காட்டாதே ..! காட்டாதே...! மேற்குலகுச் சிறு…

  3. மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன், மாவீரன் மேஜர் சிட்டு! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றாறுகளின் சிரிப்பொலியில், சங்கீதம் படித்தவன்! ஓயாத அலைகளின் காலத்தில், வெற்றி நடை பயின்ற, வேங்கைகளின் படை நடையில், ‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்! கலைப் பண்பாட்டுக் கழகத்தின். காவலனாய் வாழ்ந்தவன்! கறையாக நிலைத்து விட்ட கண்ணீரால் காவியங்களும், சிதறிப் போன சொந்தங்களின், செந்நீரால் ஓவியங்…

  4. Started by அபராஜிதன்,

    தந்தை ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம் ஈரைந்து மாதங்கள் எனை சுமந்த அன்னைக்கு பின் இது வரைக்கும் என் வாழ்வை தோள் சுமந்த தோழன் என்னை கருவாக்க சில நேரம் இன்பம் கண்டார் .. என்னை உருவாக்க இன்று வரை எல்லாம் துறந்தார் இரவெல்லாம் கண்ணீர் இதழ் எல்லாம் உமிழ் நீர் அன்று மாடியில் தூங்கும் போது நிலவை ரசிதேன் _ அவர் மடியிலே தூங்கிய பின் நிலவை மறந்தேன் நான் கண்மூடி படுக்கும் வரை தூக்கம் இழந்தார் _ நான் கால் எடுத்து நடக்கும் வரை தோளில் சுமந்தார் மாலையில் கைபிடித்து மலையோரம் நட ப்போம் அவர் கை பிடித்து போனது வெறும் பாதை அல்ல நான் கால் வைத்த முதல் பள்ளிக்கூடம் அதுவே நிலவிலே மனிதன் போன கதைகள் சொன்…

  5. [size=5]குரலிழந்த குயில்கள்.[/size] கூடித் திரிந்த குயில்கள் குதுகலமாய் பறந்த குயில்கள் பார்த்துச் சிரித்த குயில்கள் பாசமாய்ப் பழகிய குயில்கள் வீறுநடைபோட நாங்கள் வியப்பாகப் பார்த்த குயில்கள் காடுமேடெல்லாம் கம்பீரமாய் திரிந்து வீட்டுக்கும் நாட்டு;க்கும் வியத்தகு சேவை செய்து சுதந்திரதாகம் பற்றி சுருதிமாறாமல் பாடியகுயில்கள்;. வல்லாதிக்க வஞ்சகர்கள் வலைவிரித்து வீழ்த்தியதால் வாழ்விழந்து வலுவிழந்து வனப்புமிகு சிறகிழந்து காலிழந்து கருத்துமிழந்து கனத்த மனத்துடனே கூவும் குரலும் இழந்து கூட்டுக்குள் அடைபட்டு வாடித் தவிக்கின்றனவே வதைமுகாம் நடுவினிலே… பார்ப்பாரும் இ;லை கேட்பாரும் இல்லை தேசியச் சொத்துக்கொண்டோர் கூட திரும்பியும் பார…

  6. நான்... வானில் பறந்து மேகமாய் ஓட வேண்டும்! நான்... நிலவில் விழுந்து வின்மினாய் விழ வேண்டும்! நான்... தென்றலில் புகுந்து புயலாய் மாற வேண்டும்! நான்... மலரில் நுழைந்து தேனாய் சிந்த வேண்டும்! நான்... கடலில் அலைந்து கரையாய் ஒதுங்க வேண்டும்! நான்... பகலில் பட்டாம் பூச்சியாய் பறக்க வேண்டும்! நான்... இரவில் மின்மினி பூச்சியாய் திரிய வேண்டும்! நான்... தாமரை இலையில் பனித்துளியாய் தூங்க வேண்டும்! நான்... மரத்து கிளையில் இலையாய் தொங்க வேண்டும்! என்றும் நான் இயற்கை உடன் வாழ வேண்டும்...

    • 4 replies
    • 1.1k views
  7. மனங்களிலே பல ......நிறம் ....கண்டேன் உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம் தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம் முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம். அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ... விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் . மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் , நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் . .புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு .... .இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம் .அது கண்ணீரில் நீராடி .கரையாமல் காப்பது ஒரு மனது . போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

  8. . எல்லாம் நிறைந்ததே வாழ்க்கை வாழ்க்கையின் எல்லா மணித்துளிகளும் சந்தோசமானவையல்ல எவன் ஒருவன் துன்பத்தை எதிர்த்து போராடுகிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான் இறக்கும் திகதி தெரிந்து யாரும் பிறப்பதில்லை பிறந்த எல்லோரும் சாதனை படைத்து இறப்பதில்லை எதைக் கண்டும் அஞ்சாதே எதை செய்வதாக இருந்தாலும் ஆழமாய் யோசி யோசித்தது சரியா என்று இன்னொரு முறை யோசி உன்னை நீ நம்பு யாரலும் முடியாததைக்கூட முயற்சித்தால் உன்னால் முடியும் என்று நம்பு வாழத் தெரியாதவன் தற்கொலை செய்து இறந்து போகிறான் …

  9. வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் ஏட்டுக்கொரு புலிகளாய் எழுந்த எம் கூட்டங்கள் நாட்டுக்காக என்றும் கொஞ்ச நாள் குறித்துகொள்ளட்டும் பாட்டுக்கொரு புலவர்கள் பாடிநின்ற தேசத்தை மீட்டெடுக்க வீரர்கள் விரைவாக வரவேண்டும் கிழக்குபக்க சிகரத்திலே சிங்கக்கொடி ஏறினாலும் வடக்குபக்க வீதியாலே வெற்றிசேதி வரவேண்டும் எனவே வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் கிளித்தட்டோ கிறிக்கற்றோ நாட்டுக்காக நாமும் விளையாட வரவேண்டும்

  10. முத்துக்குமரன் எனும் மாவீரன்..... கவிதை அஞ்சலி.... தமிழ் நாட்டின் செல்வமே நம் முத்துக்குமரனே முத்தான உன் உயிர்தந்து நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்.... காலையில் செய்திகேட்டோம் கண்ணீரால் நம் உடல் நனைந்தோம் உன் உடலைக் கருக்கிய உன் உறுதி கண்டு மனதளவில் உருக்குலைந்தோம் ..... உயிர்பிரியும் நேரத்திலும் பிரபாகரன் என்றாய் பின்னர் உயிரையே போக்கிவிட்டு தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்... முத்துக் குழிக்கும் ஊரிலே பிறந்தவனே...... தமிழன் மனங்களிலே முத்தாக உன் உயிர் தந்தவனே..... தமிழ் நாட்டிலே விதையாகி தமிழர் மனங்களிலே முளைத்து விட்டாய்...... உன் மூச்சு அடங்கமுதல் உன் கொள்கைகளை எரியவைத்தாய்.... …

  11. மணிக்கூட்டுக் கோபுர வளைவில் மெதுவாக தலை நிமித்தும் என் சைக்கிள் உச்சி பிழக்கும் வெய்யில் நாற்பது நிமிடம் விடாமல் வலித்த‌ களைப்பு நாக்கு வறண்ட‌ ‌ தாகம் அத்தனையும் முற்ற வெளியில் பஞ்சாய் பறக்கிது உன் தரிசனம் கிடைக்கும் என்ற அந்த ஒரு நினைப்பில் மாத்திரம் விடுதியை விட்டு புறப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவை தாண்டிவிட்டாயா பொல்லாத பௌதிகம் என்று லைபிரரி வாசிப்பறையிலேயே படுத்துவிட்டாயா படித்தது பத்தாது என்று முனியப்பரின் சன்னதியில் வரம் கேட்டு நிற்கின்றாயா எல்லாம் முடித்தாச்சு என்று றீகலில் நண்பிகளுடன் ஆங்கில சினிமாவிலா என்ன நடந்தது இன்று வளைவில் வந்தவுடனே கண்ணுறும் உனை இன்று என் …

  12. ஈழம் வரும் வேளையென்றே நினைத்திருந்தோம்..அண்ணா... பேரிடியாய்.. உன் பிரிவை உள்வாங்கிக்கொண்டோம்.. வேதனையில்.. விழுந்த நெஞ்சங்களை காணுகின்றோம்.. தமிழ்ச் செல்வன் அண்ணா உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்.. பூத்திருக்கும் புன்னகையில் ஒளி தருவாய்..நம் தலைவரவர் கரமிணைந்து செயல் புரிவாய்.. நெஞ்சமெல்லாம் வாடி நிற்க எங்கு சென்றாயோ.. நேசமெல்லாம் கண்டு கொள்ள ஒளிந்து கொண்டாயோ.. அழுதுவிடவேண்டாமென்று.. விழிகளிடம் சொன்னேன்.. இதயம் கிடந்து அழுகிறதே யாரிடம் சொல்வேன்.. புலிகள் பலம் குறையுமென்று. எதிரிகள் நகைப்பார்.... உன்னை விதைத்த இடம்.. செழிக்கும் அதை வீணர்கள் அறியார்.. வீரப்புலித் தலைவரரவர்.. சோர்வது இல்லை.. அவர் கரங்களிலே.. உறுதி சேர்ப்…

  13. ஊருக்கு தாண்டி நான் கில்லாடி என் மனச உடைச்சது நீதாண்டி பொய்யாச்சு எல்லாம் பொய்யாச்சு என்னை விட்டு எல்லாம் போயாச்சு கண்ணதாசனும் கம்பன் கவிஞனும் பொம்பள மனச எவனும் புரியல கவிஞர் வாலியும் வைரமுத்துவும் பொம்பள மனச எவனும் அறியல உன்னை நினைச்சதால நான் மறக்கல உன்னை மறக்க நினைச்சாலும் முடியல மனச மனசுக்குள் புதைச்சதல பிரிக்க முடியல மனசல உறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அது கிடைக்கவேணும் உன் மடியில என்னை பார்த்தும் பார்க்காம போகிற உன்னால முடியுது என்னால முடியல...

    • 4 replies
    • 1.3k views
  14. பாலைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா? உன் மனசிலும் நானா? இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் குயிலையும் துயில் எழுப்புமடி. நாளை விழா மேடையில் இடியாய்ப் பறை அதிர கொடி மின்னலாய் படருவாய் என் முகில் வண்ணத் தேவதை. உன் பறையின் சொற்படிக்கு பிரபஞ்சத் தட்டாமாலையாய் சிவ நடனம் தொடரும். காத்தவரா…

    • 4 replies
    • 1.7k views
  15. உன்னை என் ஞாபகப் பிரதேசத்தில் இருந்து அழிக்க முயற்சித்தவர்கள் அழிக்க முடியாமல் தோற்றுப் போய் விழிக்கிறார்கள் ஏனென்றால் நீ என் இதயத்தில் READ ONLY MEMORY யாக அல்லவா பதிவாகி இருக்கிறாய்! பவர்கட்! கொஞ்சம் சிரி...மெழுகுவர்த்தியை தேட வெளிச்சம் வேண்டும். என் இதயத்தை திருடிய குற்றத்திற்காக என் மனச் சிறையில் உன்னை ஆயுள் கைதியாக்க சம்மன் அனுப்புகிறேன் தயவு செய்து முன் ஜாமீன் கேட்டு விடாதே! எங்கேயோ,எப்பவோ படித்து சுவைத்தது...சகாறா அக்கா எழுதினது யார் எனக் கேட்டு அடிக்க வரக் கூடாது

    • 4 replies
    • 1.1k views
  16. நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்…

  17. சில நிகழ்வுகளும்! நிஜங்களும் எப்படித்தான் பார்த்து பார்த்து எடுத்துவைத்தாலும் மறந்து போய் விடுகின்றது பயணத்தின் போது ஏதோ ஒன்று! அள்ளி அள்ளிக் குளித்தாலும் சில நேரங்களில் நனைவதேயில்லை புறங்கால்கள்!. எப்படித் தேடியும் அகப்படுவதில்லை பிச்சை போடும்போது மட்டும் சில்லறைகள்! மிகக் கவனத்தோடு கையாண்டாலும்!. சதையோடு சேர்த்தே வெட்டுப்படுகின்றது விரல் நகங்கள்!. எழுந்து போய் நிறுத்த வேண்டும் தொலைக்காட்சியை நினைத்தும் தேடுகின்றது மனது ரிமோல்ட்டை! இப்படியே நகர்கின்றது! என் வாழ்வில்! சில நிஜங்களும் நிகழ்வுகளும்!.

  18. Started by nedukkalapoovan,

    எழுத்தில் நிலைக்க முன் படத்தில் பதிய முன் எழுந்த வேகத்தில் கரைந்திடும் மன அலைகளே..! கலியாணம் கட்டி காண வேண்டியதை கண நேரத்தில் காட்டி மறைகிறீர்.. மனததை தவிக்க விடுகிறீர்..! காதலிக்க நினைப்பவரை கட்டியணைக்க வைக்கிறீர் மீண்டும் தவிக்கையில் தலையணையை தருகிறீர்...! நடந்ததை மறந்தாலும் நினைவுக் கிடங்கதை கிண்டிக் கிளறி விடுகிறீர் நன்றும் தீதும் இரட்டையராய் தருகிறீர்..! கலரா.. கறுப்பு வெள்ளையா வகை வகையாய் போகாத காட்டிலும் போக விடுகிறீர் ராக்கெட் இல்லாமலே எட்டாத வெளியிலும் பறக்க விடுகிறீர் விழுந்து சாகவும் செய்கிறீர்..!! அலறி அடிக்கும் கணங்கள் போக அடித்து வீழ்த்த நினைக்கும் எதிரியை அடிக்க வைக்கிறீர் அலைகள் கடந்து நடுக்கடலில் நிறுத்தியும்…

  19. பூக்கள் கூட உன்னைப் ப்போல் புன்னகையால் முகம் மலர்ந்ததில்லை சமாதான புறா கூட உன்னைப்போல் சமாதானம் பேச உலகம் சுற்றியதில்லை உலக பேச்சுவார்த்தை மேசைகளுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த சமாதான புறா நீயல்லவா உன்னோடு ஆயுதம் குழந்தையாய் உறங்கியபோதும் அழகு தமிழ் சொல்லெடுத்து செல்வன் நீ அற்புதமாய் போரடினாயே வழிகாட்டி பலகைகூட காட்டிவிட்டு இருந்துவிடும் தளபதியாய் நீ இருந்தபோதும் கூடவே கைபிடித்து கூட்டி வந்து விட்ட தாயல்லவா நீ தேசத்தின் குரலோடு ஈழத்தின் விடிவிற்காய் அகிலம் சுற்றி வந்த ஈழத்தின் குயிலே கூட்டைவிட்டு நீ வாரக்கணக்கில் அல்லவா உலகம் சுற்றி வந்தாய் ஏன் ஏன் எங்கள் கூட்டில் இருந்தபடியே நீ நிரந்…

  20. உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி! இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது …

    • 4 replies
    • 3k views
  21. Started by kavi_ruban,

    சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போரா…

    • 4 replies
    • 1.1k views
  22. நெடுந்தீவு ஆச்சிக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் கண் நிறம் பற்றியும் ஒன்றும் பேசாதே அவர்கள் போத்துக்கீசரே எந்த அன்னியருக்கும் நிலை இல்லை எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன். நா…

    • 4 replies
    • 1.6k views
  23. காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா? எதிர்பார்ப்புடன்... இக்கவிதை... பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் த…

  24. உங்களை நீங்கள் மன்னிப்பீர்களா?...... உலக நாடுகளே............... உறுதியாகச் சொல்கின்றோம் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஒதுங்கி எதிரி போல் நிற்கும் தமிழர்களே........ ஒட்டுக்குழுக்களே............... ஒருபோதும் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஐநாவே.................. ஐயம் இன்றிச் சொல்கின்றோம் உன்னை நாங்கள் என்றும் மன்னிக்க மாட்டோம் பாரதமே..............மகாத்மாவா.?!!!!!!!!!!! யாரவர்...? என்பது போல் நடக்கின்றாயே பார்த்திரு உன்னை இந்த பாருள்ள வரை (பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு?????) மன்னிக்க மாட்டோம் கடவுளரே...........கருணையின்றி கல்லாய் நீரிருந்தால் உங்களையும் தான் நாங்கள் மன்னிக்க மாட்டோம் முதல் உங்களை நீங்கள…

  25. மாவீரர்நாளை முன்னிட்டு தமிழ்காற்று வானொலியினால் எனது குரலில் வெளியிடப்பட்ட மாவீரர் கவிதையின் ஒலி ஒளி வடிவம்.

    • 4 replies
    • 874 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.